'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, September 09, 2014
தமிழ் நடிகர் அமுதன் இஸ்லாத்தை நோக்கி.......
அமுதன் என்ற இளைஞர். அழகு நிலையம், தெப்பக்குளம் போன்ற படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர். இன்று குர்ஆனின் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டுள்ளார். இனி அவர் சொல்வதைக் கேட்போம்.
'எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உண்டு. பல கேள்விகளை எனக்கு நானே கேட்டுக் கொண்டிருப்பேன். பல ஆண்டுகளாகவே இஸ்லாத்தின் கொள்கைகளில் ஒரு ஈர்ப்பு எனக்கு உண்டு. இந்த நண்பர் ஒரு நாள் எனது அறையில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்டார். நானும் அனுமதித்தேன். அப்போது ஆன்மீகம் சம்பந்தமாக பல கேள்விகளை இவரிடம் கேட்டேன். பொறுமையாக அனைத்துக்கும் பதில் சொன்னார். இந்த கேள்விகள் காலை நான்கு மணி வரை தொடர்ந்தது. அதன் பிறகு சித்த வைத்தியர் டாக்டர் ஷாஜஹானின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் சித்த வைத்தியமும் கற்றேன். அவர் மூலமாகவும் ஆன்மீக சம்பந்தமான பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. நான் சினிமா துறையில் இருப்பது எனது குடும்பத்துக்கு பிடிக்கவில்லை. கெட்டுப் பொய் விடுவேன் என்று பயந்தார்கள். எனது சமீப கால நடவடிக்கைகளைப் பார்த்த என் அம்மா 'இஸ்லாத்துக்கு மாறப் போகிறாயா?' என்று கேட்டார். அதற்கு எதிர்ப்பும் தெரிவித்தார். எனது முடிவில் நான் உறுதியாக இருப்பதாக எனது தாயாரிடம் சொன்னேன். 'இஸ்லாத்தில் நேர்ந்தால் சினிமா துறையில் உன்னால் இருக்க முடியாதே' என்று எனது தாயார் கேட்டார். 'ஆமாம். சினிமா துறையில் தொடர விருப்பமில்லை. வேறு வேலை பார்த்து கொள்வேன்' என்றேன். 'இஸ்லாத்தை ஏற்றால் எங்களின் தொடர்புகளை துண்டித்துக் கொள்வாயா?' என்று என் அம்மா கேட்டார்.
'நான் ஆன்மீகத்தில் மூழ்கியிருப்பதால் ஒரு இந்துவாக இருந்திருந்தால் சாமியாராகப் போயிருப்பேன். உங்களை எல்லாம் இழந்திருப்பேன். ஆனால் இஸ்லாத்தை ஏற்பதால் சாமியாராக போக வேண்டிய அவசியம் இல்லை. கடைசி வரை உங்களுடனேயே இருப்பேன். இஸ்லாத்தில் அதற்கு எந்தத் தடையும் இல்லை' என்றேன். என் தாயார் மௌனமாகி விட்டார்.
எம்ஏ முடித்து ஜர்னலிஷமும் படித்துள்ளேன். டெக்கான் க்ரோனிக்கல் பத்திரிக்கையில் தற்போது வேலை செய்து வருகிறேன். சினிமா துறையை ஒதுக்கி விட்டேன். அன்பையும் ஆதரவையும் எனது குடும்பமும் எனது நண்பர்களும் வழக்கம் போல் தர அந்த இறைவன் அருள் புரிய வேண்டும். நீங்களும் பிரார்தனை புரியுங்கள்' என்று முடித்துக் கொண்டார்.
பணம், புகழ், இன்பம் என்று அனைத்தும் வெகு சுலபமாக கிடைக்கும் சினிமா துறையை வெறுத்து இன்று நேர் வழியான இஸ்லாத்தை நமது தமிழர்களின் பூர்வீக வழியான ஓரிறைக் கொள்கையை வாழ்வியலாக ஏற்றுக் கொண்டிருக்கும் சகோதரர் அமுதனை வாழ்த்தி வரவேற்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
'நான் ஆன்மீகத்தில் மூழ்கியிருப்பதால் ஒரு இந்துவாக இருந்திருந்தால் சாமியாராகப் போயிருப்பேன். உங்களை எல்லாம் இழந்திருப்பேன். ஆனால் இஸ்லாத்தை ஏற்பதால் சாமியாராக போக வேண்டிய அவசியம் இல்லை. கடைசி வரை உங்களுடனேயே இருப்பேன். இஸ்லாத்தில் அதற்கு எந்தத் தடையும் இல்லை' என்றேன். என் தாயார் மௌனமாகி விட்டார்.
Post a Comment