Followers

Wednesday, September 17, 2014

மாணவர்களின் மூடப் பழக்கத்தால் கைகளில் காயம்!



பணத்தை திருடியது யார்? கையில் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்த மாணவர்களுக்கு தீக்காயம்!

சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி மும்முடியில் ஆதி திராவிடர் மாணவர் விடுதி உள்ளது. இங்கு 6 முதல் 12–ம் வகுப்பு வரை சுமார் 65 மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இந்த விடுதியில் மொத்தம் 7 அறைகள் உள்ளன. ஒரு அறையில் 7–ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஜெயபிரகாசின் 110 ரூபாய் அவனது பெட்டியில் இருந்து திடீரென திருட்டு போனதாக தெரிகிறது.

பணம் காணாமல் போனது பற்றி தன்னுடன் அறையில் தங்கியிருந்த சக மாணவர்களிடம் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளான். அதன்பிறகு தன்னுடன் தங்கியிருந்த 12 மாணவர்களையும் கற்பூரத்தை கையில் ஏற்றி சத்தியம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது. அதன்படி முதலில் என்னுடைய பணத்தை நான் எடுக்கவில்லை என்று மாணவர் ஜெயபிரகாஷ் தனது கையில் கற்பூரத்தை ஏற்றி சத்தியம் செய்துள்ளான்.

இதையடுத்து அறையில் உடன் தங்கியிருந்த மாணவர்கள் தனசேகர், ராம்கி, கண்ணன், கார்த்தி, பிரகாஷ், ராமமூர்த்தி, பிரபு, கலையரசன் உள்பட 12 மாணவர்களும் அடுத்தடுத்து தங்களது கையில் கற்பூரத்தை ஏற்றி பணத்தை நாங்கள் எடுக்கவில்லை என்று சத்தியம் செய்தனர். இதனால் கையில் கற்பூரம் ஏற்றிய 12 மாணவர்களின் கையிலும் தீக்காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தங்களது பெற்றோர்களுக்கு மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அரசு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கெங்கவல்லி தொகுதி எம்.எல்.ஏ., சுபா, ஆத்தூர் உதவி கலெக்டர் ஜெய்ராம், தாசில்தார் தேன்மொழி, கிராம நிர்வாக அலுவலர் சாந்தி ஆகியோர் நேற்று சம்பந்தப்பட்ட அரசு மாணவர் விடுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு மாணவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரி பூவேந்திரன் (பொறுப்பு) தலைமையில் அதிகாரிகளும் தலைவாசல் அரசு விடுதிக்கு சென்று விடுதி காப்பாளர் தங்கமாரியப்பன், சமையலர்கள் செல்வராஜ், அம்பாயிரம், துப்புரவு பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் 12 பேரையும் அதிகாரிகள் உடனடியாக சிகிச்சைக்காக தலைவாசல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரி பூவேந்திரன் கூறுகையில், விடுதியில் உள்ள ஒரு அறையில் பணம் திருட்டு போயுள்ளது. இதனால் பணத்தை எடுத்தது யார்? என்று மாணவர்களிடையே கண்டுபிடிக்க கையில் கற்பூரத்தை ஏற்றி சத்தியம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கையில் கற்பூரம் ஏற்றி தீக்காயம் அடைந்த மாணவர்களிடமும், அவர்களது பெற்றோர்களிடமும் நேரில் விசாரணை நடத்தினோம். இது தொடர்பான அறிக்கை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

நன்றி: நக்கீரன்
09-09-2014

http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=128491

3 comments:

UNMAIKAL said...

குழந்தையை உயிருடன் புதைத்து வழிபட்ட பெற்றோர்

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் கும்கெர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி ஸ்ரீமதி. இவர்களுக்கு 2 1/2 வயதில் குஷ்பு என்ற பெண் குழந்தை உள்ளது. பிறந்ததில் இருந்து குஷ்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் சிறுமியை டாக்டர் மற்றும் மாந்தீரிகரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். அப்படி இருந்தும் உடல் நலம் சரியாகவில்லை.

தங்களது மகளுக்கு தெய்வ அருள் இருப்பதாக வும், உயிருடன் புதைத்தால் சரியாகிவிடும் என்று அவர்கள் கருதினர். இதை தொடர்ந்து சிறுமி குஷ்புவை உயிரோடு புதைத்தனர். அதோடு அவர் புதைக்கப்பட்ட இடத்தில் வழிபாடு செய்தனர்.

அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் அங்கு குவிந்து சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் வழிபாடு செய்தனர். அவர்கள் பழங்கள், பூக்கள், பணங்களை வைத்து பிரார்த்தனை செய்தனர். இதனால் அந்த கிராமம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு வந்தனர். சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி உடலை எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த சிறுமி கடுமையான வயிற்று போக்கால் பாதிக் கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இந்த சம்பவம் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=129070

UNMAIKAL said...

மாணவர்களை பாத பூஜைக்கு கட்டாயப்படுத்துகிறாரா?

புதிய நெருக்கடியில் நித்தியானந்தா


கர்நாடகத்தில் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இயங்கி வரும் பள்ளிகளில் படித்துவரும் மாணவர்களை பாத பூஜை செய்ய கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

நித்யானந்தாவின் தியானபீடம் ஆசிரமம் பெங்களூரை அடுத்த பிடதியில் இயங்கி வருகிறது. இந்த ஆசிரமத்தில் 'நித்யானந்தா குருகுல உண்டு உறைவிட‌ப் பள்ளி' செயல்பட்டு வருகிறது. வார இறுதிநாட்களில் யோகா பயிற்சிப்பள்ளியும் இயங்குகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிய‌ர் படித்து வருகின்றனர்.

ஆசிரமத்திற்கு வெளியே 'நித்யானந்தா வித்யாலயா' என்ற ஆங்கில வழி பள்ளியை அவருடைய பக்தர்கள் நடத்தி வருகின்றனர். சுமார் 500 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளிகளுக்கு நித்யானந்தா அடிக்கடி வந்து, மாணவர்களுக்கு ஆன்மீக வகுப்புகள் நடத்துவது வழக்கம் என்கிறார்கள்.


பிடதி ஆசிரமத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மாதந்தோறும் பவுர்ணமி அன்று, இதர திருவிழா நாட்களின் போதும் நித்யானந்தாவிற்கு பாத பூஜை செய்கிறார்கள்.

சில நேரங்களில் நித்யானந்தாவிற்கு பாத பூஜை செய்யும்படி மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். கன்னட குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள அவலநிலையை உடனடியாக தடுக்க வேண்டும் என அந்த அமைப்பினர் கர்நாடக மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கு மனு அளித்துள்ளனர்.

http://www.nakkheeran.in

Wanderer said...

ஒன்னும் சொல்றதுகில்ல. நம்ம ஏதாவது சொன்ன அப்புறம் நம்ம மேல பான்சுருவாங்க.