'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, September 07, 2014
'இந்திய மகள் சானியா மிர்ஸா' - ஆம் ஆத்மி புகழாரம்
Congratulations, Indian Daughter Sania Mirza won US Open Mixed Doubles !
भारत की बेटी सानिया मिर्ज़ा की इस जीत पर सभी को ढेर सारी बधाइयाँ |
கலப்பு இரட்டையர் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் பதக்கத்தை வென்ற சானியா மிர்ஸாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். (இனிமேலாவது குட்டை பாவாடையை குறைத்து கண்ணியமான உடையை உடுத்த முயற்சிக்கவும் சகோதரி.) :-)
ஆம் ஆத்மி பார்டி தனது இணைய தளத்தில் 'இந்திய மகள் சானியா மிர்ஸா' என்ற அடை மொழியோடு தனது பாராட்டை தெரிவித்துள்ளது. சில மாதங்கள் முன்பு தெலுங்கானா தூதுவராக சானியா மிர்ஸாவை நியமித்ததற்கு போலி தேச பக்தியால் பொங்கி வழிந்த காவிகள் எதிர்ப்பு தெரிவித்ததை நாம் மறந்திருக்க மாட்டோம். பாகிஸ்தானியை திருமணம் முடித்ததால் இந்த பெண் பாகிஸ்தானியாக மாறி விட்டார் என்று கோஷம் எழுப்பியதையும் நாம் மறந்து விடவில்லை. ராமாயண கதை நடந்ததாக கூறப்படும் பல சரித்திர இடங்கள் இன்று ஆப்கானிஸ்தானத்தில் உள்ள தாலிபான்களின் கைப்பிடியில் உள்ளது. எனவே இங்குள்ள இந்துத்வாவாதிகளை ஆப்கானிஸ்தானத்துக்கு அனுப்பி விடலாம் என்று யாராவது சொன்னால் அவனை கிறுக்கன் என்றுதான் சொல்லுவோம். அதே வாதத்தைத்தான் இந்துத்வாவாதிகளும் வைக்கின்றனர்.
இந்துத்வாவாதிகளுக்கு பதிலளிக்கும் முகமாகவே 'இந்திய மகள் சானியா மிர்ஸா' என்று கூறி பெருமைபடுத்தியுள்ளது ஆம் ஆத்மி பார்ட்டி. இவர் பெற்ற வெற்றி ஒட்டு மொத்த இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி. இனி வருங்காலங்களிலும் தான் இந்தியனாகவே இருப்பேன் என்றும் இந்தியாவுக்காகவே விளையாடுவேன் என்றும் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
தயிர்சாத பார்ட்டிகளுக்காகவே கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்டு விட்ட சோம்பேறிகளின் ஆட்டமான கிரிக்கெட்டுக்கு உள்ள முக்கியத்துவத்தை குறைத்து டென்னிஸ், வாலிபால், பேஸ்கட் பால், கால் பந்து, கபடி போன்ற உடல் உழைப்பு சார்ந்த விளையாட்டுக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க அரசும் மக்களும் முயல வேண்டும். முன்னேறிய நாடுகளான ஐரோப்பிய ஒன்றியம், சைனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற செல்வந்த நாடுகள் இந்த கிரிக்கெட்டைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கவில்லை.
காவிகளே! நேற்று முளைத்த ஆம் ஆத்மி பார்ட்டியிடமிருந்தாவது எவ்வாறு அரசியல் செய்வது என்று பாடம் எடுத்துக் கொள்ளுங்கள். இன்னும் ஆயிரம் முறை நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இந்தியா மத சார்பற்ற நாடாகவே மிளிரும். இந்துத்வாவாதிகளான உங்களை அரிசியலில் இருந்து முற்றாக ஓரங்கட்டும் நாளையும் இந்து மக்களே தீர்மானிப்பர். கூடிய விரைவிலேயே அதுவும் நடந்தேறும். அது வரை சற்று பொறுமையாக இருப்பீர்களாக! :-)
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
பார்பானீயம் தன் இருப்பை இந்தியாவில் தக்க வைத்துக்கொள்ள வரலாற்று திரிபுகளை செய்து இஸ்லாமிற்கு எதிரான பொய்யான கருத்தியலை ஏற்படுத்தி அதை நன்றாக பயன்படுத்திக்கொள்கிறது.
இப்படி ஒரு யுக்தியை அவர்கள் கையாளவில்லை என்றால் தன்னுடைய பெரும்பான்மை இந்து மக்களிடையே பார்பானியம் அம்பலப்பட்டுவிடும் என்பதை பார்பனர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள்.
ஏனென்றால் இந்திய நெடிய வரலாற்றில் பார்பானியம் இந்திய பெரும்பான்மை மக்களுக்கு வர்ணங்களாக, ஜாதிகளாக பல கொடுமைகளை காலம் காலமாக செய்து வந்திருக்கிறது. இன்றும் செய்துக்கொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் உள்ள பெரும்பான்மை இந்து மக்கள் விழித்து எழுந்து பார்பாநியத்திற்கு எதிராக திரும்பாமல் இருக்கவும், (பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற) இந்து மக்களின் தலைமை பொறுப்பை பார்பானியம் இழக்காமல் இருக்கவும் தொடர்ந்து இஸ்லாமிய எதிர்புணர்வை கச்சிதமாக இந்து மக்களிடையே விதைக்கப்படுகிறது.
சோமநாத படை எடுப்பு திரிப்பு, பாபர் மசூதி வரலாற்று திரிப்பு, இஸ்மாயில் என்ற பெயரில் ஒரு பார்பான் காந்தியை கொன்றது, நாடு முழுவதும் குண்டு வைத்து தன் மக்களையே கொன்று அந்த பலியை இஸ்லாமியர்கள் மீது சுமத்துவது, பாகிஸ்தான் கொடியை அரசு அலுவலகங்களில் ஏற்றுவது, கோயிலில் மாட்டு கறியை வீசுவது என்று இஸ்லாமியர்களுக்கு எதிரான பல பல யுக்திகள் செயல்படுத்துவதை பார்பானியம் தொடந்துக்கொண்டேதான் இருக்கிறது. - வினவு.
சிவன் மனைவி காவேரிக்கு மசக்கையாம்! பிரசவம் நடந்தது எப்பொழுது? PART 1.
18அய்க் கூட்டினால் 9. ஒன்பது என்பது நல்ல எண் என சொல்லுவாராம். ஒரு எண்ணிக்கை நிபுணர். ஆனால், பதினெட்டின் சிறப்பும், இந்த நாளில் ஆடிப்பெருக்கு கொண்டாடுவதன் காரணமும் உண்டாம்?
பார்வதிதேவி ருதுவான மாதம் ஆடி. ஆடி முதல் தேதியில் வயதுக்கு வந்ததாகச் சொல்வ துண்டு. வயதுக்கு வந்த பெண்களை இக்காலத்தில் தீட்டு என்ற காரணத்துக்காக 16 நாட்கள் வரை வீட்டிலிருந்து விலக்கி வைப்பார்கள். அக்காலத்தில் 18 நாட்கள் விலக்கி வைத்துள்ளனர்.
அதன்பிறகு சடங்கு என்ற நிகழ்ச்சியை நடத்துவர். பார்வதிதேவி வயதுக்கு வந்த பதினெட்டாவது நாளே ஆடிப் பெருக்கு ஆகும். இந்நாளில் நீர்நிலை கரைகளில் மக்கள் குடும்பத்துடன் சேர்ந்து கூட்டாஞ்சோறு சமைத்து உண்பர்.
பெண்கள் காவிரியில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்னர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர்.
பூஜையில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, காவிரி உருவாகக் காரணமான விநாயகருக்கு பூஜை செய்கின்றனர். பூஜையில் தேங்காய் பாலை பொங்க பொங்க காய்ச்சி, படைக்கப்பட்ட நைவேத்யம் மற்றும் தேங்காய், வெல்லம், புளி, தயிர் சாதனங்கள் அடங்கிய சித் ரான்னம் படைக்கின்றனர்.
இக்காலத்தில் காவிரி தாய் மசக்கையாக (கர்ப்ப காலம்) இருப்பதாக கருதி படைக்கப்படுகிறது.
வீட்டிலுள்ள மூத்த பெண் படையலுக்கும், காவிரித் தாய்க்கும் தீபாராதனை செய்து பூஜையை நிறைவு செய்வார்.
சிவனின் மனைவியாக காவிரி போற்றப்படுகிறாள்.கைலாயத்தில் சிவன்-பார்வதி திருமணத்தின் போது, வடபுலம் தாழ்ந்தது. இதனால் அகத்திய முனிவரை, தென்புலம் சென்று பூமியை சமநிலை யாக்குமாறு சிவபெருமான் பணித்தாராம். சிவனை திருமணம் செய்வதற்காக, பார்வதிதேவி ஒற்றைக் காலில் தவமிருந்தபோது, கையில் ஒரு மாலையும் வைத்திருந்தாள். அந்த மாலையை ஒரு பெண்ணாக்கி, அகத்திய முனிவரிடம் வழங்கினாள் பார்வதி.
அவரும் அந்தப் பெண்ணை தன் கமண்டலத்தில் அடக்கி தென்னகம் நோக்கி வந்தார். அவரது கமண்டலத்தில் இருந்து வழிந்த தண்ணீரே காவிரியானது.
கமண்டலத்தில் மீதமிருந்த தண்ணீரை அகத்தியர் எடுத்துச் சென்று, தான் வசித்த பொதிகை மலையில் கொண்டுவிட அது தாமிரபரணியானது. இக்காரணத்தால் சிவபெருமானின் மனைவியாக போற்றப்படுகிறாள் காவிரி.
திருச்சி மலைக்கோட்டையின் உச்சியில் மகேந்திர பல்லவன் காலத்து குடவரைக் கோயில் ஒன்றுள்ளது. இங்கு சடைமுடியில் கங்கையைத் தாங்கியபடி அமர்ந்திருக்கும் சிவபெருமானும், பக்கத்திலேயே பார்வதிதேவி நின்ற கோலத்தில் இருப்பதையும் தேவகணங்கள் சுற்றி இருப்பதும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
cONTINUED .....
Read more: http://viduthalai.in/page-5/85160.html#ixzz39o5Pifcy
http://viduthalai.in/page-5/85160.html#ixzz39Nlcer3Q
சிவன் மனைவி காவேரிக்கு மசக்கையாம்! பிரசவம் நடந்தது எப்பொழுது? PART 2.
ஏற்கெனவே சடைமுடியில் இரண்டாவது மனைவியைத் தாங்கிய சிவபெருமான், மலைக்கோட்டையின் பக்கத்திலேயே ஓடும் காவிரியின் மீதும் மோகம் கொண்டுவிடக் கூடாது என்ற கவலையில் பார்வதி தேவி நின்றபடியே காவல் இருக்கிறாராம். (கடவுளின் யோக்கியதை இதுதான்!) சிவபெருமானின் மனைவியாக கருதப்படும் காவிரியன்னை, விஷ்ணுவுக்கு தங்கையாகிறாள்.
அண்ணனின் சீர்வரிசை:
சாதாரண மக்களே காவிரியன்னைக்கு பூஜைகள் செய்யும்போது, அவளது அண்ணனான ரங்கநாதர் சும்மாயிருப்பாரா?
ரங்கத்தில் புகழ் பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கிறது.
ஆடிப்பெருக்கு நாளன்று ரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வாராம்.
அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு ஆஸ்தானமிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.
தம்பதியருக்குள் அற்ப விஷயங்களுக்காக பிரிவினை ஏற்பட்டாலும் கருத்து வேறுபாடுகளை களைந்து மீண்டும் ஒன்றுசேர வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகளை பிரிப்பதற்கான காரணமாக புராணங்கள் கூறுகின்றன.
புதிதாக திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற தனது பெண்ணை இம்மாதத்தில் தான் ஒரு தாய் சீர் செய்து தனது வீட்டுக்கு அழைத்து வருவாள். இம்மாதத்தில் தனது தாய் வீட்டில் இருக்கும் பெண் அனைத்து சாஸ்திர சம் பிரதாயங்களையும் கற்று கொள்வார்கள். கட்டுப் பாடாக குடும்பம் நடத்துவது எவ்வாறு எல்லோரையும் அனுசரித்து எவ்வாறு நடந்த கொள்வது தொடர்பில் சொல்லிக்கொடுப்பார்.
குழந்தை செல்வம், நீடித்த ஆயுள், வாழ்வில் சுபிட்சம் பெற ஆடிப்பெருக்கன்று பெண்கள் ஆற்றங்கரைக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்துவார்கள்.
சுமங்கலி பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து தாலிச்சரடை மாற்றிக்கொள்வார்கள். இந்த விழா இன்று (3.8.2014) கொண்டாடப் படுகிறது.
ஆடி பதினெட்டாம் நாள் காவிரியில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும்.
அப்போது காவிரியைப் பெண்ணாகவும், சமுத்திர ராஜனை ஆணாகவும் கருதி காவிரிப் பெண் தனது கணவரான சமுத்திர ராஜனை அடைவதை மங்கலம் பொங்கும் விழாவாக காவிரி டெல்டா மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஆடிபதினெட்டாம் நாள் காவிரிப் பெண்ணுக்கு மசக்கை என்று கூறி மக்கள் பலவகையான அன்னங்களை தயாரித்து கொண்டு போய் காவிரி கரையில் வைத்து நோன்பு நோற்பார்கள். (பிரசவம் பார்த்தவர்கள் யாராம்?)
கணவனைச் சென்றடையும் காவிரிக்கு மங்கல பொருட் களான மஞ்சள், பனை ஓலையால் செய்யப்பட்ட காதோலை, கருகுமணிமாலை, வளையல், அரிசி, வெல்லம், பழங்கள் ஆகியவற்றை வழங்கி பூஜை செய்வர்.
புதுமண இணையர்கள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து காவிரி கரைக்கு சென்று எண்ணெய் தேய்த்து தலையில் அருகம்புல், வெற்றிலைபாக்கு, வாழைப்பழம் வைத்து ஆற்றில் மூழ்கி குளிப்பார்கள். பின்னர் அவர்கள் அணிந்திருந்த ஆடையை களைந்துவிட்டு புத்தாடை அணிந்து கொள்வர். தொடர்ந்து காவிரிக் கரையோரம் உள்ள காவல் தெய்வங்களின் சன்னதிகளுக்கு சென்று வழிபடுவர்.
பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து புது தாலிக் கயிறை(மாங்கல்ய சரடு) அணிந்து கொள்வர். சிறுவர்கள் சிறிய அளவிலான மரச்சப்பரம் செய்து இழுத்துச்செல்வர்.
திருச்சி சிறீரங்கம், தஞ்சை திருவையாறு, ஒகேனக்கல் மேட்டூர், பவானி கூடுதுறை, மயிலாடுதுறை போன்ற காவிரி கரையோரம் உள்ள கோவில்களில் ஆடிப்பெருக்குவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண் டாடப்படுகிறது.
ஏற்கெனவே சாராயம் குடித்தவனை தேள் கொட்டியதைப்போல உளறுவதற்கும் ஓர் அளவேயில்லையா?
காவேரி - சிவனுக்குப் பெண்டாட்டியாம் - காவேரிக்கு மசக்கையாம்.
சிறுபிள்ளைகள் சிறுநீர் கழித்துக் கூட்டாஞ்சோறு ஆக்குவார்களே - அதே நிலைதான் இந்தப் பக்தக் கோடிகளுக்கும் போலும்!
அய்யய்ய... எழுதக் கைக் கூசுதே, வெட்கக்கேடு!
Read more: http://viduthalai.in/page-5/85160.html#ixzz39o5Pifcy
http://viduthalai.in/page-5/85160.html#ixzz39Nlcer3Q
Post a Comment