Followers

Tuesday, September 02, 2014

பாகிஸ்தானிகள் தமிழில் சொற்பொழிவுகளை கேட்கலாமோ!



இலங்கையில் கிரிக்கெட் விளையாட பாகிஸ்தானிய அணிகள் வந்தபோது வெள்ளிக் கிழமை தொழுகை நேரமாகி விட்டது. உடனே பாகிஸ்தானிய அணிகள் அங்கிருந்த ஒரு ஜூம்ஆ பள்ளிக்கு தொழுகைக்காக சென்றனர். அந்த பள்ளியும் தமிழ் முஸ்லிம்களின் பள்ளி. மார்க்க சொற்பொழிவும் தமிழிலேயே சொல்லப்படும் பள்ளி.

இங்கு தொழுகைக்கு வந்த பாகிஸ்தானிகள் உர்து மொழியையும், பஞ்சாப் மற்றும் புஷ்து மொழிகளை பேசக் கூடியவர்கள். நமது தமிழ் மொழிக்கு சற்றும் சம்பந்தமில்லாதவர்கள்: நமது கலாசாரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லாதவர்கள். இப்படி பல மொழி பல கலாசாரம் கொண்ட அந்த மக்களை இந்த பள்ளியின் பக்கம் ஈர்தது இஸ்லாம். மொழி புரியாவிட்டாலும் தொழுகை, மற்றும் அந்த தொழுகையில் ஓதப்படும் குர்ஆன் வசனங்களும் அரபியிலேயே இருப்பதால் இவர்களுக்கு எந்த சிரமத்தையும் இங்கு எதிர் கொள்ள வாய்ப்பில்லை. எனவே தான் இஸ்லாம் தொழுகையில் மட்டும் உலகம் முழுவதற்கும் ஒற்றுமைக்காக அரபு மொழியை வைத்தது. அதே பள்ளியில் அந்த குர்ஆன் வசனங்களுக்கான மொழி பெயர்ப்புகளை பள்ளியின் உள்ளேயே தாய் மொழியான தமிழில் பிரசிங்கிக்கப்படுகிறது. குர்ஆன் அந்த மனிதனிடம் என்ன பேசுகிறது என்பதை அந்த மனிதன் அறிய வேண்டுமல்லவா? எனவேதான் தமிழில் பிரசிங்கிக்கப்படுகிறது. அதே போல் தொழுகைக்கான அழைப்பொலியும் அரபு இல்லாமல் தமிழில் இருந்திருந்தால் அந்த பாகிஸ்தானிகளும் 'ஏதோ பஜனை பாடுகிறார்கள்' என்று நினைத்திருக்கக் கூடும்.

தேவ மொழி அரபி என்றிருந்தால் பள்ளியின் உள்ளே தமிழ் நுழைந்திருக்க முடியாது. அந்த பாகிஸ்தானிகளும் தமிழில் தானே சொல்லப்படுகிறது நாம் ஏன் கேட்க வேண்டும் என்று வெளியில் காத்திருக்கவில்லை. சொல்லப்படுவது நம் அனைவரையும் படைத்த இறைவனின் வார்த்தை. நமக்கு புரியாவிட்டாலும் அதற்கு மரியாதை கொடுத்து நாம் அமர்ந்து செவி தாழ்த்தி கேட்போம் என்று அவர்களை உட்கார வைத்தது இஸ்லாம். இஸ்லாத்தைப் பொருத்த வரை உலக மொழிகள் அனைத்தையும் ஒரே தரத்தில் வைத்து பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. தாய் மொழிப் பற்று ஒருவனுக்கு இருக்கலாம். ஆனால் அந்த மொழிப் பற்று வெறியாக மாறிவிடக் கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. இதை நாம் சரியாக உள் வாங்கிக் கொண்டால் மொழியால் இனத்தால் நடக்கும் பல மோதல்களை தடுத்து விட முடியும்.

ஒரு முறை புசைலா என்ற சஹாபி பெண்மணி நபி அவர்களிடம் வந்து "இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா" என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் "தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இன வெறி அல்ல. மாறாக தன் சமூகத்தை சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி" என்றார்கள்.

- நூல்: அஹ்மத்

3 comments:

UNMAIKAL said...

யார் இந்த துலுக்கன் ? - ரவி சங்கர் இந்து தமிழன்


தற்போது இங்கு FB யில நடந்துவரும் சில விவாதங்களுக்கு பதில் சொல்லவே இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

நாம் நம்முடைய நெருங்கிய இஸ்லாமிய நண்பரையே " டேய் துலுக்க பையா " என்றுதான் அழைக்கிறோம். துலுக்கன் என்று கூறி அவர்களை கிண்டல் செய்வதாக நினைக்கிறோம். இந்த பெயர் காரணத்தை நான் பிறகு கூறுகிறேன்.

உங்களில் எத்தனை பேருக்கு இஸ்லாமிய நண்பர்கள் உள்ளனர்.

எனக்கு நிறைய இஸ்லாமிய
நண்பர்களை தெரியும்.

என் அனுபவத்தில் அந்த இளம் வயதில் அவர்கள் கடைபிடிக்கும் ஒழுக்க நெறிகள் நம்மில் ஒரு சிலர் கூட கடைபிடிப்பதில்லை.

அப்படி யாராவது ஒரு சிலர்
கடைபிடித்து விட்டால் " அப்பா , அவர் ரொம்ப நேர்மையானவர்பா ", என்று கூறும் அளவிற்குதான் நாம் உள்ளோம்.

அவர்களுடைய பொருளாதார, கல்வி, நிலையை பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? தாழ்த்தப்பட்ட , மலைவாசி மக்களை விட மிக மோசமாக இருக்கிறார்கள்.

மதம் அவர்களை பல
வழிகளில் தடுப்பதால் மிக நேர்மையாக பொருளீட்ட வேண்டிய
கட்டாயத்தில் உள்ளனர்.

அவர்களுக்கு வீடு வாடைகைக்குகூட
நம்மில் யாரும் கொடுப்பதில்லை. கேட்டால் அவர்கள் மதவெறி பிடித்தவர்கள் என்போம்.

அவர்கள் மத வெறி பிடித்தவர்கள் அல்ல. மார்க்க நெறியை பின்பற்றுபவர்கள். அவர்களுடைய மார்க்க நெறியை நம்மால் ஒருநாள் கூட கடைபிடிக்க முடியாது.

அடுத்தது தீவிரவாதம்.
தீவிரவாதம் எங்கு இல்லை? ஒரு புழுகூட தாக்கபட்டால் சற்று நெளிந்து தன் எதிர்ப்பை காட்டும்.

பா.ம.க எப்படி வளர்ந்தது?

வாண்டையார்கள் எப்படி வளர்ந்தார்கள்?

மூப்பனார்கள் எப்படி வளர்ந்தார்கள் ?

தேவர்கள் மற்றும் முக்குலத்தோர் எப்படி வளர்ந்தார்கள்?

விடுதலை சிறுத்தைகள்
எப்படி வளர்ந்தார்கள் ?

இதெல்லாம் தீவிரவாதம் இல்லையா?

எங்கோ ரேஷன் கடையில் கடைசியில் நிற்கும்
ஒரு இஸ்லாமியரை நாம் தீவிரவாதியாக பார்க்கிறோம். இவர்கள் மட்டும் யார்? சில தலைமுறைகளுக்கு முன் நம் உறவினர்களாக இருந்தவர்கள்தான். இதைத்தான் மானுடவியலும் அறிவியல் பூர்வமாக சொல்கிறது.

நிச்சியமாக இங்கே இருக்கும் இந்த தினகரனின் ஜீனும், எங்கோ உள்ள அப்துல்லாவின் ஜீனும் ஒன்றாகவே இருக்கும்.

என்னுடன் பழகும் இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் மனதார தீவிரவாதத்தையும், கொலை செயலையும் மிக கடுமையாக எதிர்கிறார்கள். சகோதரத்துவத்தை­ அவர்கள் விரும்புகிறார்கள்.

ஒரு காலத்தில் இஸ்லாம் துருக்கியை தலைநகராக
கொண்டு இருந்தபோது துருக்கியன்
என்று அழைக்கபட்டர்கள்.
அது மருவி துலுக்கன் என்றாகிவிட்டது. இது ஒன்றும்
கேலிக்குரிய வார்த்தை அல்ல.

மகாகவி பாரதிகூட
தன்னுடைய படைப்புக்களில் "திசை பார்த்து கும்பிடும் துருக்கியன்", என்று குறிப்பிட்டுள்ளார்

ஆகவே நண்பர்களே ! பிறந்துவிட்டோம் 60 ஆண்டு காலமோ அல்லது 70 ஆண்டு காலமோ நம் வாழ்க்கை மிக சிறிய வாழ்க்கை.

ஒரு ஆமைகூட 400 ஆண்டுகள் வாழ்கிறது. அந்த வாழ்க்கைகூட நமக்கு கிடையாது. இதில் பாதி காலம் தூக்கத்திலேயே போய் விடுகின்றது. இருக்கும் சில ஆண்டுகளையாவது சகோதரத்துவத்துடன் எல்லோரையும் அரவணைத்து செல்வோம்.

ஒரு இஸ்லாமியருக்கு சலாம்
சொல்லிபாருங்கள்.
அப்புறன் தெரியும் அவர்களுடைய
அருமையும், பெருமையும் ..!!

https://www.facebook.com/ahindu.tamilan

UNMAIKAL said...

ரவி சங்கர் இந்து தமிழன்
August 28

உலகிலேயே அதிக இந்தியர்களுக்கு வேலை தரும் வெளிநாடு சவுதி அரேபியா

இந்தியாவுக்கு கிட்டும் அந்நிய செலவாணியில் அதிக சதவீதத்தை தருவதும் சவூதி தான் ,

என் சிறு வயதில் அனுபவித்த வறுமையின் கொடூரத்தை நினைத்தால் இன்னும் அழுகை வருகிறது

இக்கால இளைஞர்கள் அவற்றை அறிய வாய்ப்பு இல்லை

அணிய பின்புறத்தில் கிழிந்த ஓட்டையுடன் கூடிய ட்ரவுஸர், புதிய துணி இல்லாத தீபாவளிகள்

சாப்பிட ஒரு வேளை மட்டும் கிட்டும் கேப்பை கூழ்

நகர்ப்புறங்களில் வாழ்ந்தவர்களை விட கிராமங்களில் நிலவிய பஞ்சம் பசி இன்றைய இளைஞர்களுக்கு தெரியாது

இதனை மாற்றி இப்போது நாம் அனுபவிக்கிற ஒரளவு வறுமை இல்லாத நிலை உண்டாக அரபு நாடுகள் தந்த வேலை வாய்ப்புகள் தானே பிரதான காரணம்

அமெரிக்கா,ஐரோப்பா, இஸ்ரேல் போன்றவை டாக்டர், இன்ஜினியர், mca,mba களுக்கு மட்டுமே கைகொடுத்தன.

ஆனால் இரண்டாம் கிளாஸ் படித்த என் அப்பா போன்றவர்களுக்கு கை கொடுத்தது அரபு நாடுகளே,

என் அப்பா போன்ற படிக்காத ஏழைகள் பல லட்சம் பேரின் வாழ்க்கையின் வெற்றிக்கு திருப்புமுனைக்கும் அரபு நாடுகள் காரணம்

நானும் லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் படிப்பு படித்ததும் அரபு நாட்டு பணத்தில்

இன்று கிராமங்களில் கூட பல லட்சம் கொடுத்து மனைகள் வாங்கும் அளவுக்கு மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்க அரபு நாட்டு காசும் ஒரு முக்கிய காரணம் அல்லவா

நம் பொருளாதாரத்தின் ஆணி வேராகிய அந்நிய செலவாணி கையிருப்பு பெரும்பாலும் நமக்கு கிட்டியதும் கிட்டுவதும் இந்தியர்கள் அரபுநாட்டிலிருந்து அனுப்பும் பணம் மூலமாகவே,

துலுக்கன் கடையில் சாமான் வாங்காதே என பிரச்சாரம் செய்யும் இயக்கங்களுக்கு அதிக நன்கொடை அனுப்புவது அரபு நாட்டில் வேலை செய்யும் NREகளே

அரபு நாடுகளை, இஸ்ரேல் பூண்டோடு அழிக்க வேண்டும் என ஸ்டேட்ஸ் போடுவோர் பெரும்பாலோர் அந்த ஸ்டேடஸ் போட உபயோகித்து வரும் கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் துலுக்கன் துட்டில் வாங்கப் பட்டவைகளே,

உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கத் தூண்டிய என் தமிழ் பண்பாட்டை கொலை செய்து எம் இந்துக்களை செய் நன்றி கொன்ற மக்களாக மாற்றப் பாடுபடும் மதவெறியர்கள் புண்ணியத்தில் பழய பஞ்சம் பசி மீண்டும் வந்து விடுமோ என பயப்படுகிறார்கள் பச்சை ஹிந்துக்கள்

பரமேஷ்வரா!, உன்
பாரதத்தை இந்த
பாதகர்களிடமிருந்து
பாதுகாத்திடு பரம்பொருளே!.

https://www.facebook.com/ahindu.tamilan

UNMAIKAL said...

இந்தியாவில் உள்ள சில முட்டாள்தனமான சட்டங்களில் சில,

• கிழக்கு பஞ்சாப் விவசாய பூச்சிகள், நோய்கள் மற்றும் களைகள் சட்டம் 1949: இந்த சட்டத்தின்படி டெல்லி நகருக்குள் வெட்டுக்கிளிகள் படையெடுத்தால் மேளம் தட்டி அதை விரட்டுங்கள் என்று அரசு தெரிவித்து அதை ஏற்காவிட்டால் டெல்லிக்காரர்கள் ரூ. 50 அபராதம் செலுத்த வேண்டும்.

•இந்திய விமான சட்டம் 1934: உரிமம் இல்லாமல் பட்டம் விட்டால் கைது தான். இந்தியாவில் ஒருவர் பட்டம் செய்ய, வைத்துக் கொள்ள, விற்பனை செய்ய, பறக்க விட உரிமம் தேவை. இந்த விதிமுறை விமானத்திற்கும் பொருந்தும்.

•பொழுதுபோக்கு இடங்கள் கட்டுப்பாடு மற்றும் உரிமம் சட்டம் 1960: ஒரே இடத்தில் 10 ஜோடிகளுக்கு மேல் ஆடினால் அவர்கள் கைது செய்யப்படலாம்.

•இந்திய புதையல் சட்டம் 1878: உங்களுக்கு ரூ.10 உள்பட எந்த புதையல் கிடைத்தாலும் அதை போலீசில் தெரிவிக்காவிட்டால் சிறை தான்.


•இந்திய மெஜாரிட்டி சட்டம் 1875: எந்த ஒரு ஆணும் 21 வயதுக்கு முன்பு திருமணம் செய்ய முடியாது. ஆனால் 18 வயதில் தந்தை ஆகலாம். அதாவது 18 வயது நிரம்பிய ஆண் ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம்.

• இந்திய தண்டனை சட்டம் 1860, பிரிவு 497: திருமணமான பெண்கள் கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு எதிராக நீதித்துறை நடவடிக்கை எடுக்க முடியாது. அதே சமயம் திருமணமான ஆண் அதுவும் மாற்றான் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருமணமான ஆண்கள் கன்னிப் பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்தால் அது சட்டவிரோதம் ஆகாது.

•இந்திய தண்டனை சட்டம் 309: தற்கொலை செய்து இறந்துவிட்டால் அது சட்டவிரோதம் இல்லை. ஆனால் பிழைத்துக் கொண்டால் அது சட்ட விரோதம். அதவாது தற்கொலைக்கு முயற்சி செய்வது சட்ட விரோதம்.

http://tamil.oneindia.in/news/india/modi-s-biggest-challenge-stupid-laws-india-what-s-that-explained-210146.html