Followers

Monday, April 03, 2023

வரலாற்று குறிப்பில் ஒரு பகுதி... - ஔரங்சேப் - Aurangzeb

 

வரலாற்று குறிப்பில் ஒரு பகுதி...

 

சிவனின் இருப்பிடமான கைலாஷ் மானசரோவர் சீனாவின் ஆதிக்கத்தில் உள்ளது..

நம் நாட்டு விடுதலைக்குப் பிறகு, சீனா கைலாஷ் பர்வத் (கைலாசமலை) அல்லது கைலாஷ் மானசரோவர் மற்றும் அருணாசலப் பிரதேசத்தின் பெரும்பகுதியை ஆக்ரமித்ததால் அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு ஐநா அவைக்குச் சென்று, "சீனா எங்கள் பகுதியை வலுக் கட்டாயமாக ஆக்ரமித்துள்ளது, எங்கள் பகுதியை மீண்டும் எங்களுக்குப் பெற்றுத் தாருங்கள்" என்றார்.

 

இதற்குச் சீனா தரப்பிடமிருந்து வந்த பதில்: "நாங்கள் இந்தியாவின் பகுதியை ஆக்ரமிக்கவில்லை. எங்கள் நாட்டின் பகுதியை 1680ல் இந்தியாவை ஆண்ட பேரரசர் பிடுங்கியதை நாங்கள் திரும்ப எடுத்துக் கொண்டோம்".

 

இந்த பதில் இன்றும் ஐநா அவையின் அதிகாரபூர்வ ஆவணங்களில் உள்ளது.

சீனா எந்த இந்தியப் பேரரசரின் பெயரை குறிப்பிட்டது தெரியுமா?

"ஔரங்சேப் - Aurangzeb".

 

உண்மையில் ஔரங்சேப் காலத்திலும் சீனாதான் இந்தியப் பகுதியை ஆக்ரமித்தது. இதைக் குறித்து பேரரசர் ஔரங்சேப், அப்போதைய சீன நாட்டின் சிங் வம்ச (Ching dynasty) மன்னர் முதலாம் ஷுன்ஜிக்கு (Shunji I) எழுதிய கடிதத்தில், "கைலாஷ் மானசரோவர் இந்தியாவின் ஒரு பகுதி. அது மட்டுமின்றி, அது எங்கள் இந்து சகோதரர்களுக்கு புனிதமான இடம். எனவே, அந்த இடத்தை விட்டுவிலகுங்கள்" என எழுதினார்.

 

கடிதம் எழுதி ஒன்றரை மாதமாகியும் சீன தரப்பிடமிருந்து பதில் இல்லாததால் குமாவோன் பகுதி அரசர் பாஜ் பஹதூர் சந்த் அவர்களின் படையுடன் இணைந்து குமாவோன் வழியாக மலையேறிச் சென்று சீனாவைத் தாக்கி, கைலாஷ் மானசரோவர் பகுதியை இந்தியாவுடன் மீண்டும் இணைத்தார்.

 

எந்த பேரரசர் ஔரங்சேப் அவர்களை தீவிர இஸ்லாமிய அரசர் என்றும், இந்துக்களுக்கு எதிரானவர் என்றும் பரப்புரை செய்யப்படுகிறதோ அதே பேரரசர்தான். அவர்தான் இந்தியாவின் முதல் உண்மையான 'சர்ஜிகல் ஸ்டிரைக்' நடத்தியவர்.

 

வரலாற்றின் இந்த பக்கங்கள், இந்தியா விடுதலை அடைந்த காலத்து ஐநா அவையின் ஆவணங்களில் உள்ளன. அது மட்டுமின்றி அந்த ஆவணங்கள் நாடாளுமன்றத்திலும் பாதுகாப்பாக உள்ளன.

 

அந்த வரலாற்றுச் சம்பவங்களை நீங்கள் கீழ்க்கண்ட புத்தகங்களிலும் காணலாம்..

ஹிஸ்டரி ஆஃப் உத்தராஞ்சல் - உத்தராஞ்சல் வரலாறு.

 

ஆசிரியர்: .சி. ஹாண்டா

மற்றும்

டிராஜிடி ஆஃப் திபத் - திபத்தின் துயரம் (அல்லது சோகமுடிவு).

ஆசிரியர்: மன்மோஹன் ஷர்மா.

 

பதிவு: Meenakshi Sundaram

நன்றி: Asalamone Syed




 

1 comment:

Dr.Anburaj said...

கொண்டாடும் அளவிற்கு ஔரங்கசீப் நல்லவன் அல்ல.குரான் படித்த முஹம்மதுவை குருவாக ஏற்றுக்கொண்ட எவனும் காபீா்களுக்கு (இந்துக்களுக்கு) நன்மை செய்ய மாட்டான்.

கேஸ் சிலிண்டரை ஒரு சக்தி வாய்ந்த நாசகாரி குண்டாக மாற்ற முயன்ற கோயமுத்தூா் அண்ணன் முபின் அதற்கு ஆதாரம்.

மன்னராக இருந்த காரணத்தால் பொது நிா்வாக நடைமுறையில் இந்துக்களும் வாழ்ந்து வந்துள்ளனா்.