Followers

Monday, April 03, 2023

பாரத தர்மம் கெட்டால் இந்திய அரசியல் சட்டமே இருக்காது

 ''பாரத தர்மம் கெட்டால்

இந்திய அரசியல் சட்டமே இருக்காது!''

- நீதிபதி GR.சுவாமிநாதன் சர்ச்சைப் பேச்சு

ஒரு நீதிபதி பேசக் கூடிய பேச்சா இது? 

எது பாரத தர்மம்?

தலித்களை சூத்திரர்கள் என்று கூறி கோவிலுக்கு வெளியே நிறுத்தியது பண்டைய பாரத தர்மம்.

கோவில்கள் தோறும் பிற்படுத்தப்பட்ட பெண்களை தேவதாசிகள் என்று கூறி பார்பனர்கள் சுகம் அனுபவிக்க கடவுளின் பெயரை பயன்படுத்திக் கொண்டது பண்டைய பாரத தர்மம்.

பெண்களின் மார்பின் அளவுக்கு ஏற்ப அளந்து வரி விதித்து கொண்டாடியது பண்டைய பாரத தர்மம்.

சூத்திரர்கள் வேதம் ஓதினால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என்று எழுதி வைத்து பார்பனர்களுக்கு மட்டுமே கல்வி கொடுத்தது அன்றைய பாரத தர்மம்.

காலில் செருப்பு அணியவும் தோளில் துண்டு அணியவும் அக்ரஹாரத்துக்குள் தலித்கள் நுழைய தடை விதித்தும் அழகு பார்த்தது அன்றைய பாரத தர்மம்.

கணவன் இறந்தால் மனைவியை அதே நெருப்பில் இட்டு பொசுக்கி அழகு பார்த்தது அன்றைய பாரத தர்மம்.

நான்கு வர்ணங்களை உண்டாக்கி அதில் பார்பனர்கள் மட்டுமே மேலானவர்கள் என்று எழுதி அதனை இன்று வரை நடைமுறைபடுத்தியும் வருவது அன்றைய பாரத தர்மம்.

கடவுளை கும்பிடக் கூட ஒவ்வொரு சாதிக்கும் ஒரு எல்லையை வகுத்தளித்தது அன்றைய பாரத தர்மம்.

இது போன்று சொல்லாதது எத்தனையோ? இதில் எந்த பாரத தர்மத்தை சுவாமி நாதன் கொண்டு வர துடிக்கிறார்? இவர் எழுதிய தீர்ப்புகள் எந்த லட்சணத்தில் இருக்கும்?




No comments: