Followers

Sunday, April 16, 2023

வழி நெடுக வஞ்சகத்தால் வீழ்த்தியே பழக்கப்பட்ட ஆரியம்

 

வழி நெடுக வஞ்சகத்தால் வீழ்த்தியே பழக்கப்பட்ட ஆரியம்

 

சத்திரபதி சிவாஜி ராஜ்போன்ஸ்லே 1627-இல்-பிறந்து 1680-மரித்துப்போன சூத்திர மன்னன். தன்னுடைய 15-வயதில் தொரானா கோட்டையை பிடித்த வீரனால் ஆரிய பார்ப்பனர்களிடம் சத்திரியனாக முடி சூட்டிக் கொள்ள -அரசு கஜானாவை காலிசெய்து, சிவாஜியின் மூன்றாவது மனைவி சோயிராபாய் மூலம் மெல்லக் கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டு,மெல்ல மெல்ல உடல் நலம் மோசமாகி மரித்துப்போனான் அந்த மாவீரன்.

 

இறந்ததற்கு காரணம் காகபட்டருக்கு ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்து சத்திரியனாக முடிசூட்டிக் கொண்டாலும், உடனிருந்தே கொல்வதற்கு விசையாக இருந்தவன் ராமதாஸ் என்கின்ற பார்ப்பனன். இவன் சிவாஜியின் தந்தைகாலத்திலேயே சிவாஜி வீட்டில் வேலை பார்த்தவன். அவனுக்கு பராலி கோட்டையை ஒரு அரசனுக்குள்ள மரியாதையோடு சிவாஜி கொடுத்திருந்தான்.

எனினும் சூத்திரன் நாடாள்வதா?என்ற வன்மம் பிறவிப்புத்தி அவனிடம் இருந்தது. கொல்வதற்கு அவன் தான் விசை. விசையை அழுத்தியவள் சிவாஜியின் மூன்றாம் மனைவி. 15-வயதில் தொடங்கிய சிவாஜியின் சாகசப்போர் -1674-இல் தன்னுடைய 47-ஆம் வயதில் 370-கோட்டைகள் அவன் கைவசம் இருந்தன.

 

இத்தனை வெற்றிகளைப் பெற்றிருந்தும் மொகலாய மன்னர்களுடன் சில சமரசங்களை செய்து கொண்டிருந்தாலும் அவர்கள் ஜாகிர்தாராக, ஜமின்தாராகத்தான் சிவாஜியைப் பார்த்தார்கள்.

 

உடன் இருந்தே கொன்ற பார்ப்பனன் இராமதாஸ், ''நீ சூத்திரன். இந்தியாவில் இருந்த சத்திரியர்கள் அனைவரையும் பரசுராமன் கொன்றுவிட்டார். நீ என்னைப் போன்ற பிராமணன் ஒருவனிடம் அரசாட்சியை கொடுத்து விட்டு நீ தளபதியாகத் தான் இருக்க முடியும்'' என்றான். ஒளரங்கசீப்-150000/படை வீரர்களுடன் மராட்டியத்தை முற்றுகையிட்டார். அந்தத் தாக்குதல் மட்டும் நடந்திருந்தால் மராட்டியம் இரத்தக் களரி ஆகியிருக்கும்.

 

சிவாஜி -ஓளரங்கசீப்பிடம் ஒரு ஒப்பந்தம்-அந்த காலகட்டத்தில் செய்து கொண்டான். நான்கு லட்சம் பணம் 23-கோட்டைகள் பிஜப்பூர் சுல்தானை வீழ்த்த -ஒளரங்க சீப்போடு சேர்ந்து போர் புரிய வேண்டும். சிவாஜியின் மகன் மொகலாய தர்பாரில் சர்தாராக பணிபுரிய வேண்டும். சிவாஜியின் முக்கிய தளபதி ஒளரங்க சீப்பிற்காக,ஆப்கனில் போரிட வேண்டும், இத்தனை நிபந்தனையையும் இராஜதந்திர பார்வையோடு ஒப்புக் கொண்ட சிவாஜி ஆரிய பார்ப்பனர்களின் தர்ப்பை புல்லில் கோடிகளை இழந்தான். இறுதியில் உயிரையும் இழந்தான்.

 

மாவீரனின் மகத்தான வரலாறு-எதிரிகளின் வாளுக்கும்-வேலுக்கும் பலியாகாத அவனுடைய வீரம், நீ சூத்திரன்என்ற வார்த்தைகளில் வீழ்த்தப்பட்டது வரலாற்றின் பெரிய சோகம்.

 

இப்படி வரலாற்றின் வழி நெடுக வஞ்சகத்தால் வீழ்த்தியே பழக்கப்பட்ட ஆரியம்




 

1 comment:

Dr.Anburaj said...

நான் படித்த எந்த புத்தகத்திலும் இந்த சம்பவம் இல்லை.

இதற்கு ஆதாரம் அளிக்க வேண்டும்..

முஹம்மது நபியின் பேரனை கொல்ல அவா் மனைவி உதவினாள் என்று இறையில்லா இசுலாம் வலைதளத்தில் உள்ளது.