Followers

Showing posts with label அரபி. Show all posts
Showing posts with label அரபி. Show all posts

Tuesday, November 27, 2018

அரபு மொழிப்பாடம் தமிழில் - பாகம் - 1 , பாடம் - 4

அரபு மொழிப்பாடம் தமிழில் - பாகம் - 1 , பாடம் - 4
Arabic Lesson in Tamil - Part-1 , Lesson-4
வீடியோ வடிவில் அரபி மொழி பயிற்சி பாடங்கள்!!
வழங்குவது இஸ்லாமிய கல்லூரியில் பயிலும் மாணவர்கள்.
அரபு மொழி ஓரளவு தெரிந்தவர்கள் இந்த தொடரை தொடர்ந்து பார்த்தும் எழுதியும் பழகி வாருங்கள். சில நாட்களிலேயே அரபு மொழியில் அறிஞர் ஆகலாம் இறைவன் நாடினால்...
Islamic college TNTJ


Sunday, November 18, 2018

அரபு மொழிப்பாடம் தமிழில் - பாகம் - 1 , பாடம் - 3

அரபு மொழிப்பாடம் தமிழில் - பாகம் - 1 , பாடம் - 3
Arabic Lesson in Tamil - Part-1 , Lesson-3
வீடியோ வடிவில் அரபி மொழி பயிற்சி பாடங்கள்!!
வழங்குவது இஸ்லாமிய கல்லூரியில் பயிலும் மாணவர்கள்.
அரபு மொழி ஓரளவு தெரிந்தவர்கள் இந்த தொடரை தொடர்ந்து பார்த்தும் எழுதியும் பழகி வாருங்கள். சில நாட்களிலேயே அரபு மொழியில் அறிஞர் ஆகலாம் இறைவன் நாடினால்...
Islamic college TNTJ


Tuesday, November 13, 2018

அரபு மொழிப்பாடம் தமிழில் - பாகம் - 1 , பாடம் - 2

அரபு மொழிப்பாடம் தமிழில் - பாகம் - 1 , பாடம் - 1
Arabic Lesson in Tamil - Part-1 , Lesson-1
வீடியோ வடிவில் அரபி மொழி பயிற்சி பாடங்கள்!!
வழங்குவது இஸ்லாமிய கல்லூரியில் பயிலும் மாணவர்கள்.
அரபு மொழி ஓரளவு தெரிந்தவர்கள் இந்த தொடரை தொடர்ந்து பார்த்தும் எழுதியும் பழகி வாருங்கள். சில நாட்களிலேயே அரபு மொழியில் அறிஞர் ஆகலாம் இறைவன் நாடினால்...


Monday, November 12, 2018

அரபு மொழிப்பாடம் தமிழில் - பாகம் - 1 , பாடம் - 1

அரபு மொழிப்பாடம் தமிழில் - பாகம் - 1 , பாடம் - 1
Arabic Lesson in Tamil - Part-1 , Lesson-1
வீடியோ வடிவில் அரபி மொழி பயிற்சி பாடங்கள்!!
வழங்குவது இஸ்லாமிய கல்லூரியில் பயிலும் மாணவர்கள்.
அரபு மொழி ஓரளவு தெரிந்தவர்கள் இந்த தொடரை தொடர்ந்து பார்த்தும் எழுதியும் பழகி வாருங்கள். சில நாட்களிலேயே அரபு மொழியில் அறிஞர் ஆகலாம் இறைவன் நாடினால்...



Sunday, September 24, 2017

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 25

'வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.' - குர்ஆன் 30 :22

மேற்கண்ட வசனத்தின் மூலம் மொழிகள் வேறுபட்டிருப்பதையும், மனிதனின் நிறங்கள் வேறுபட்டிருப்பதையும் தன்னுடைய அத்தாட்சிகளில் ஒன்றாக இறைவன் கூறுகிறான். இதன் மூலம் நிறங்களை வைத்து மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வை கற்பிப்பதும், மொழிகளை வைத்து ஏற்றத் தாழ்வு கற்ப்பிப்பதும் கூடாது என்பது விளங்குகிறது.

குர்ஆன் அரபி மொழியில் இருக்கிறது. எனவே அது தேவ பாஷை என்ற அந்தஸ்த்தைப் பெறுமா? கண்டிப்பாக இல்லை. முகமது நபி அரபுகள் மத்தியில் தோன்றுகிறார். அவருக்கு தெரிந்த ஒரே மொழி அரபு மட்டுமே! எனவே குர்ஆன் அரபு மொழியில் இறங்கியது. முகமது நபி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் குர்ஆன் தமிழ் மொழியிலேயே அருளப் பட்டிருக்கும்.உலக மக்களுக்கு இறை செய்தியை சொல்லுவதற்கு உலக வழக்கில் உள்ள ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தாக வேண்டும்.

உலக மொழிகள் அனைத்தும் ஒரே தரத்தில் வைத்து பார்க்கப்பட வேண்டும். அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டவையே.... தாய் மொழிப் பற்று அனைவருக்கும் இருக்கும். அது கூட வெறியாக மாறி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மொகலாயர்கள் நமது நாட்டை 800 வருடங்களுக்கு மேல் ஆண்டதால் இந்திய மொழிகளில் அரபி மொழி நிறைய கலந்துள்ளது. வாட்ஸ் அப்பில் நண்பர் அனுப்பிய செய்தியை சில மாற்றங்களோடு பதிவாக்கியுள்ளேன்.   தமிழ் மொழியில் கலந்து விட்ட ஒரு சில அரபி வார்த்தைகளை இந்த பாடத்தில் பார்போம்.

அசல் -  أصل -  மூலம்

மாஜி -  ماضي - முந்தைய

அத்து - حد - வரம்பு

முகாம் -    مقام -     - தங்குமிடம்

அத்தர் - عطر  - மணப்பொருள்

முலாம் -   ملام  -   மேற்பூச்சு

அமுல் - عمل - நடைமுறை

ரத்து -  رد  - விலக்கு/நீக்கம்

அனாமத் -  أنعمت  - கேட்பாரற்ற

ரசீது  -  رصيد - ஒப்புப் படிவம்

அல்வா -  حلوه  -  இனிப்பு

ராஜி -  راضي - உடன்பாடு

ஆஜர் -  حاضر  -  வருகை

ருஜு  -   رجوع  - உறுதிப்பாடு

ஆபத்து -   آفت    -துன்பம்

ருமால் -  رمال  -   கைக்குட்டை

இனாம் -   انعام  - நன்கொடை

லாயக் -  لائق  - தகுதி

இலாகா  -   علاقة  - துறை

வக்கீல் - وكيل - வழக்குரைஞர்

கஜானா -    خزانة -  கருவூலம்

வக்காலத்து -   وكالة - பரிந்துரை

காலி  -   خالي - வெற்றிடம்

வகையறா  -  وغيره - முதலான

காய்தா -  قاعدة - தலைமை/வரம்பு

வசூல் - وصول  - திரட்டு

காஜி -  قاضي - நீதிபதி

வாய்தா  -  وعده  - தவணை

கைதி  - قيد  - சிறையாளி

வாரிசு  - وارث - உரியவர்

சவால் -  سوال - அறைகூவல்/கேள்வி

சர்பத் -   شربة  -  குளிர்பானம்

ஜாமீன் -  ضمان - பிணை

சரத்து  -  شرط - நிபந்தனை

ஜில்லா -   ضلعة  - மாவட்டம்

தகராறு   -  تكرار  - வம்பு

தாவா  -  دعوة - வழக்கு

திவான் -  ديوان  -   அமைச்சர்

பதில் -  بدل -   மறுமொழி

பாக்கி -    باقي  - நிலுவை

மஹால் - محل - மாளிகை

மகசூல் -  محصول - அறுவடை

மாமூல் - معمول - வழக்கம்


Tuesday, August 15, 2017

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 24



Liability – مسؤولية - மஸூலிய – பொறுப்புதாரி

the state of being responsible for something, especially by law the partners accept unlimited liability for any risks they undertake

------------------------------------------------
current – تيار - தயார் – தற்போது...

belonging to the present time; happening or being used or done now.

Current, current account, current assets, current page, current asset, current situation, the current, electric current, current liabilities, current ratio, current affairs

------------------------------------------------

Trade – تجارة – tijara - திஜாரா – தொழில்

the action of buying and selling goods and services
a move to ban all trade in ivory

------------------------------------------------

contract – عقد – akdh - அக்த் – ஒப்பந்தம்

a written or spoken agreement, especially one concerning employment, sales, or tenancy, that is intended to be enforceable by law.
both parties must sign employment contracts.
breach of contract, sales contract, to contract, employment contract, contract law, service contract, sign a contract, under contract, draft contract, social contract

-----------------------------------------------

tax – ضريبة – dareeba - தரீபா – வரி

a compulsory contribution to state revenue, levied by the government on workers' income and business profits or added to the cost of some goods, services, and transactions.
income tax, tax return, sales tax, tax rate, property tax, value added tax, tax credit, withholding tax, tax evasion, tax haven...





Sunday, August 06, 2017

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 23



வங்கிகள் கணக்கு சம்பந்தமாக நிறைய வார்த்தைகள் அரபியில் தெரியாமல் சிரமப்படுவோம். நானும் சிரமப்பட்டுள்ளேன். அதனை தெரிந்து கொள்ள இனி வரும் பாடங்களை பயன்படுத்திக் கொள்வோம்.

CREDITER - الدائن - addain - அத்தாயின் - பயனைக் கொடுப்பவர்
a person or company to whom money is owed.

-----------------------------------


Debter - مدين – mudin - முதின் - பயனை பெறுபவர் – கடனாளி

a person or institution that owes a sum of money.

Often a student loan is the first time a debtor has borrowed money from a financial institution.
borrower, mortgagor, bankrupt, insolvent, defaulter

------------------------------------


Borrower – مستعير – mustaeer - முஸ்தயீர் – கடனாளி

------------------------------------


Bankrupt – مفلس – muflish – முஃப்லிஸ் - வங்கிக்கு பணம் செலுத்த முடியாமல் மஞ்சள் நோட்டீஸ் கொடுக்கப்பட்டவன்

of a person or organization declared in law unable to pay outstanding debts
the company was declared bankrupt.

----------------------------------------


Wealth - ثروة, غنى – gani – thruth - செல்வம் நிறைந்தவன், பணக்காரன்

an abundance of valuable possessions or money.
wealth, fortune, treasure, resources, riches, resource.....




Thursday, August 03, 2017

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 22



أداة - எத்தா - சாதனம் - ADHA

أدواة - அதவாத் - சாதனங்கள் - ADWAAT

عصا - அஸா - குச்சி - ASA

بدلة رياضة - பதல ரியாத - விளையாட்டுக்காக உடுத்தப்படும் உடை - BADLAH RIYADHA

بدلة خاصة - பதல ஹாஸ்ஸ - சீருடை - யூனிஃபார்ம் - BADLAH KHASSAH

بركة سباحة - பிர்கத் ஸிபாஹ - நீச்சல் குளம் - BIRKAT SIBAAHAH

برنامج - பர்னாமஜ் - நிகழ்ச்சி - BARNAAMAG

فريق - ஃபரீக் - குழு - FAREEQ

حُفرة - ஹூஃப்ர - துளை - HOFFRAH

حقيبة - ஹகீப - பை - SHANTAH

حبل - ஹப்ல் - கயிறு - HABLE

جدول - ஜதோல் - அட்டவணை - JADHOLE

كٌرة - கூரா - பந்து - KOORAH

كٌرة قدم - கூரா கதம் - கால் பந்து - KOORA KADHAM

كٌرة تنس - கூரா டென்னிஸ் - டென்னிஸ் பந்து - KOORA TENNIS

Saturday, July 29, 2017

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 21



எண்கள் சம்பந்தமாக மேலும் சில தகவல்களைப் பார்போம்.....

نُص --- நுஸ் --- அரை --- 1/2 --- half

ثُلث --- துல்த் ---- முக்கால் ---- 1/3 -- third

رُبع --- ருபா ---- கால் --- 1/4 --- quarter

خُمس --- ஹூம்ஸ் --- ஐந்தில் ஒன்று --- 1/5

سُدس --- ஸூதுஸ் --- ஆறில் ஒன்று --- 1/6

سُبع --- ஸூபா ---- ஏழில் ஒன்று --- 1/7

ثُمن --- துமன் --- எட்டில் ஒன்று --- 1/8

تُسع --- துஸா --- ஒன்பதில் ஒன்று --- 1/9

عُشر --- வுஸ்ர் --- பத்தில் ஒன்று --- 1/10

-------------------------------------

இடையிடையே சிறிது இலக்கணத்தையும் பார்த்துக் கொள்வோம்.

الفعل الماضي -- AL FALUL MAADHEE - அல் ஃபஃலுல் மாதி --- இறந்த காலம்

ஒரு செயல் நடந்து முடிந்து விட்டால் அதனை 'இறந்த காலம்' என்று சொல்கிறோம்.

அதே நேரம் தன்மை, முன்னிலை, படர்க்கையில் ஒரு செயல் இறந்த காலத்தில் நடந்தால் அது எவ்வாறு மாறுபடும் என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் பார்போம்.

سافرتُ ---- ஸாஃபர்து --- நான் பயணித்தேன்

'நான் பயணித்தேன்' என்ற வார்த்தையானது 'தன்மை' யில் வரும். செயலை செய்தவரே சொல்வதால் இது 'தன்மை' என்பது நமக்கு தெரியும்.

நமக்கு முன்னால் உள்ள ஒருவரை பார்த்து சொன்னால் அதனை 'முன்னிலை' என்கிறோம். இதே வார்த்தையை 'முன்னிலையில்' பயன்படுத்தும் போது அரபியில் அந்த வார்த்தை எவ்வாறு மாறுகிறது என்று பாருங்கள்.

سافرتَ --- ஸாஃபர்த --- நீ பயணம் செய்தாய் (ஆண்பால்)

வார்த்தையின் கடைசி எழுத்தான ت என்ற எழுத்தின் குறி மாறியுள்ளதை கவனியுங்கள். 'து' 'த' வாக மாறியுள்ளது....

-----------------

அதே வார்த்தையை ஒரு பெண்ணைப் பார்த்துக் கூறுகிறோம். அப்போது அந்த வார்த்தையில் ஏற்படும் மாற்றத்தை கவனியுங்கள்.

سافرتِ --- ஸாஃபர்தி --- நீ பயணம் செய்தாய் (பெண்பால்)

ت என்ற எழுத்தானது تِ யாக மாறியுள்ளதை கவனியுங்கள்.

---------------

பலபேர் பயணித்தால் கடைசி எழுத்து 'தும்' என்று மாறும்.

سافرتم --- ஸாஃபர்தும் --- நீங்கள் பயணம் செய்தீர்கள்.

--------------

தன்மையில் பல பேர் பயணித்தால் அங்கு வார்த்தையானது எவ்வாறு மாறும் என்பதை கவனியுங்கள்...

سافرنا --- ஸாஃபர்னா ---- நாங்கள் பயணித்தோம்.

-------------

முன்னிலை ஆண்பாலில் அதே வார்த்தையானது எவ்வாறு மாறுகிறது பாருங்கள்.

سافرَ --- ஸாஃப்ர --- அவன் பயணித்தான்

முன்னிலை பெண்பாலில் அதே வார்த்தையானது எவ்வாறு மாறுகிறது பாருங்கள்.

سافرت --- ஸாஃபர்த் ---- அவள் பயணித்தாள்

முன்னிலை பன்மையில் அதே வார்த்தையானது எவ்வாறு மாறுகிறது பாருங்கள்.

سافروا ---- ஸாஃப்ரூ --- அவர்கள் பயணித்தார்கள்.

இது வரை நாம் இறந்த காலத்தில் தனமை முன்னிலை படர்க்கை போன்ற இடங்களில் வார்த்தையானது எவ்வாறு மாறுபடுகிறது என்பதை பார்தோம்.

என்ன ..... ஒரே குழப்பமாக இருக்கிறதா? :-)

இறந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் என்ற இந்த மூன்று காலங்களையும் சற்று சிரமம் எடுத்து படித்துக் கொண்டால் அரபு மொழியை மிக இலகுவாக கையாளலாம். குர்ஆனும் மிக இலகுவாக நமக்கு மொழி பெயர்பு இல்லாமலேயே புரியும்.

ஒரு முறைக்கு இரு முறை எழுதி வாருங்கள். எந்த ஒரு பாடமும் புரிந்து கொண்டு படித்தால் வாழ்நாள் முழுக்க மறக்காமல் இருக்கும்.

இறைவன் நாடினால் அடுத்த பாடங்களில் மேலும் சில இலக்கணங்களை பார்போம்.

Tuesday, July 25, 2017

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 19

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் -  19



41 என்ற எண்ணை நாம் உச்சரிக்கும் போது 'நாற்பத்து ஒன்று' என்று உச்சரிப்போம். ஆனால் அரபியில் 'ஒன்று நாற்பது' என்று உல்டாவாக உச்சரிக்க வேண்டும். எழுதுவதும் உல்டா.... உச்சரிப்பதும் உல்டா.... :-)

இனி பாடத்தை தொடர்வோம்....

واحد وأربعين ---- வாஹித் வஅர்பஈன் --- நாற்பத்து ஒன்று --- 41

اثنان وأبعين ---- தினின் வஅர்பஈன் --- நாற்பத்து இரண்டு --- 42

خمسين --- ஹம்ஸீன் - ஐம்பது - 50

ستين ---- ஸித்தீன் --- அறுபது -- 60

سبعين --- ஸப்ஈன் ---- எழுபது -- 70

ثمانين --- தமானீன் ---- என்பது --- 80

تسعين ---- திஸ்ஈன் ---- தொன்னூறு -- 90

مئة --- மியா --- நூறு ---- 100

مئة وواحد ---- மியா வாஹித் ---- நூற்று ஒன்று -- 101

مئة واثنان --- மியா வதினீன் --- நூற்று இரண்டு --- 102.....

ميتان --- மீத்தேன் --- இரு நூறு -- 200

ثلاث مئة --- தலாத் மியா --- முன்நூறு

أربع مئة --- அர்பஅ மியா --- நானூறு

خمس مئة ---- ஹம்ஸ மியா ---- ஐநூறு

ست مئة ----- ஸித் மியா --- அறு நூறு

سبع مئة --- ஸப்அ மியா --- எழுநூறு

ثمان مئة --- தமான் மியா --- எட்நூறு

تسع مئة ---- திஸ்அ மியா --- தொள்ளாயிரம் --- 900

أتف --- அல்ஃப் ----- ஆயிரம் ---- 1000

ألفين ---- அல்ஃபேன் --- இரண்டாயிரம் --- 2000

ثلاثة ألاف ----- தலாத அல்ஃப் ---- மூவாயிரம்

أربعة ألاف --- அர்பஅ அல்ஃப் ---- நான்காயிரம்

خمسة آلاف ---- ஹம்ஸ அல்ஃப் --- ஐந்தாயிரம் --- 5000

ستة آلاف ---- ஸித்த அல்ஃப் --- ஆறாயிரம் -- 6000

سبعة آلاف ---- ஸப்அ அல்ஃப் --- ஏழாயிரம் -- 7000

ثمانية آلاف --- தமானிய அல்ஃப் --- எட்டாயிரம் -- 8000

تسعة آلاف --- திஸ்அ அல்ஃப் --- தொள்ளாயிரம் -- 9000

عشرة آلاف --- அஸர அல்ஃப் --- பத்தாயிரம் --- 10000

مئة ألف --- மீத் அல்ஃப் --- ஒரு லட்சம் --- 100000

مئتان آلاف --- மீதேன் அல்ஃப் --- இரண்டு லட்சம் -- 200000

ثلاثة مئة آلاف --- தலாத் மியா அல்ஃப் --- மூன்று லட்சம் -- 300000

أربعة مئة ألف --- அர்பஅ மியா அல்ஃப் --- நான்கு லட்சம் --- 400000

خمسة مئة ألف --- ஹம்ஸமியா அல்ஃப் --- ஐந்து லட்சம் --- 500000

ستمائة ألف -- ஸித்மியத் அல்ஃப் - ஆறு லட்சம் --- 600000

سبعة مئة ألف -- ஸப்அமியத் அல்ஃப் --- ஏழு லட்சம் --- 700000

ثمانية مئة ألف --- தமானிய மியத் அல்ஃப் --- எட்டு லட்சம் --- 800000

تسع مئة ألف ----- திஸ்அ மியத் அல்ஃப் --- ஒன்பது லட்சம் --- 900000

مليون ---- மில்லியோன் ----- பத்து லட்சம் --- 1000000

مليونين --- மில்யோனைன் --- இருபது லட்சம் --- 2000000

இவ்வாறு எண்கள் கூட கூட அதனை எவ்வாறு உபயோகிப்பது என்பது தெரிந்திருக்கும். இனி அடுத்த பாடத்தில் மேலும் புதிய வார்த்தைகளை பார்போம்.......





அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 20

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் -  20



எண்கள் சம்பந்தமாக மேலும் சில புதிய வார்த்தைகளை இந்த பாடத்தில் பார்போம்.....

الأول --- அல் அவ்வல் --- முதலாவது -- THE FIRST

الثاني --- அத்தானி --- இரண்டாவது --- THE SECOND

الثالث --- அத்தாலத் --- மூன்றாவது --- THE THIRD

الرابع --- அர்ராபஅ --- நான்காவது --- THE FOURTH

الخامس --- அல் ஹாமிஸ் -- ஐந்தாவது -- THE FIFTH

السادس -- அஸ்ஸாதஸ் ---- ஆறாவது -- THE SIXTH

السابع --- அஸ்ஸாபஅ ---- ஏழாவது -- THE SEVENTH

الثامن --- அத்தாமன் ---- எட்டாவது -- THE EIGHTH

التاسع --- அத்தாஸ்ய --- ஒன்பதாவது --- THE NINETH

العاشر --- அல் ஆஸர் -- பத்தாவது -- THE TENTH

الحادي عشر --- அல் ஹாதி அஸ்ர் -- பதினொன்றாவது -- THE ELEVENTH

الثاني عشر ---- அத்தானி அஸ்ர் --- பன்னிரண்டாவது -- THE TWELTH

الثالث عشر --- அத்தாலத் அஸ்ர் --- பதின் மூன்றாவது -- THE THIRTEENTH

الرابع عشر -- அர்ராபிஅ அஸ்ர் --- பதினான்காவது -- THE FOURTEENTH

الخامس عشر -- அல் ஹாமிஸ் அஸ்ர் --- பதினைந்தாவது --- THE FIFTEENTH

السادس عشر --- அஸ்ஸாதஸ் அஸ்ர் --- பதினாறாவது --- THE SIXTEENTH

السابع عشر ---- அஸ் ஸாபிஅ அஸ்ர் -- பதினேழாவது --- THE SEVENTEENTH

الثامن عشر ---- அத் தாமன் அஸ்ர் --- பதினெட்டாவது --- THE EIGHTEENTH

التاسع عشر --- அத் தாஸிய அஸ்ர் --- பத்தொன்பதாவது -- THE NINETEENTH

العشرون ---- அல் இஸ்ரூன் --- இருபதாவது..... THE TWNTEETH

இனி மேலும் சில புதிய வார்த்தைகளை அடுத்த பாடங்களில் பார்கலாம் இறைவன் நாடினால்....

Saturday, July 22, 2017

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 18

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - பகுதி 18



ஒரு மொழிக்கு எண்கள் மிக மிக அவசியம். அந்த எண்களைப் பற்றியும் அரபியில் அதனை எவ்வாறு உச்சரிப்பது என்பது பற்றியும் இந்த பாடத்தில் பார்போம்....

صفر --- ஸிஃபர் --- சைபர் ---- 0

واحد --- வாஹித் --- ஒன்று --- 1

اثنان ---- அத்னான்(தினீன்) --- இரண்டு ---- 2

ثلاثة ---- தலாத --- மூன்று --- 3

أربعة --- அர்பஅ --- நான்கு --- 4

خمسة ---- ஹம்ஸ -- ஐந்து ---- 5

ستة ----- ஸித்த --- ஆறு --- 6

سبعة ---- ஸ(B)ப்அ ---- ஏழு --- 7

ثمانية ----- தமானிய --- எட்டு ---- 8

تسعة ----- திஸ்அ ---- ஒன்பது ---- 9

عشرة ---- அஸரஅ ----- பத்து --- 10

اٍحدى عشر ---- இஹ்தா அஸர் --- பதினொன்று --- 11

إثنا عشر ----- இத்னா அஸர் ---- பன்னிரண்டு -- 12

ثلاثة عشر ---- தலாதஸ்ர் ----- பதிமூன்று --- 13

أربعة عشر ---- அர்பஅதஸ்ர் --- பதினான்கு --- 14

خمسة عشر ----- ஹம்ஸதஅஸ்ர் --- பதினைந்து – 15

ستة عشر ----- ஸித்தஸ்ர் ---- பதினாறு --- 16

سبعة عشر ---- ஸபஅதஸ்ர் --- பதினேழு --- 17

ثمانية عشر --- தமானியதஅஸர் -- பதினெட்டு --- 18

تسعة عشر ---- திஸ்அதஸ்ர் --- பத்தொன்பது ---- 19

عشرون ---- இஸ்ரூன் ---- இருபது ---- 20

واحد وعشرون --- வாஹித் வஇஸ்ரூன் --- இருபத்தொன்று --- 21

اثنان وعشرون --- தினீன் வஇஸ்ரூன் ---- இருபத்தி இரண்டு -- 22

ثلاثة وعشرون --- தலாதா வஇஸ்ரூன் --- இருபத்து மூன்று -- 23

இவ்வாறு இருபது, முப்பது, நாற்பது பக்கத்தில் ஒன்று இரண்டு மூன்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ثلاثين --- தலாதீன் ----- முப்பது --- 30

واحد وثلاثين --- வாஹிது வதலாதீன் --- முப்பத்து ஒன்று --- 31

اثنان وثلاثين ---- தினீன் வதலாதீன் --- முப்பத்து இரண்டு --- 32

أربعين --- அர்பஈன் --- நாற்பது --- 40

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பார்க்கலாம் இறைவன் நாடினால்........

Sunday, July 16, 2017

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 14



இந்த பாடத்தில் اَلْ - அல் என்ற வார்த்தையானது எவ்வாறு எழுதும் போது மாறுபடுகிறது என்பதை பார்போம்......

ஒரு வார்த்தையின் ஆரம்பத்தில் اَلْ - அல் வருவது என்பது குறிப்பு பெயர்ச்சொல்லின் அடையாளம் ஆகும். ஒரு வார்த்தையின் கடைசியில் தன்வீன் வருவது என்பது பொது பெயர்ச்சொல்லின் அடையாளம் ஆகும். ஆகவே இவை இரண்டும் ஒரே வார்த்தையில் வருவதற்கு சாத்தியம் இல்லை. ஒரு வார்தையின் முன்னால் அல்( اَلْ) வந்தால் கடைசியில் உள்ள தன்வீன் போய்விடும். கடைசியில் தன்வீன் வந்ததால் முன்னால் உள்ள அல்( اَلْ) போய்விடும்.

இதனை சில உதாரணங்கள் மூலம் பார்போம்....

بَيْتٌ - பைதுன் - ஏதோ ஒரு வீடு,

الْبَيْتُ - அல் பைது - குறிப்பிட்ட அந்த வீடு.

பொதுவான ஒரு வீட்டை பற்றி பேசும் போது 'பைதுன்' என்று எழுதினோம். அதே நேரம் 'குறிப்பிட்ட அந்த வீடு' என்று ஒரு வீட்டை சுட்டிக் காட்டிப் பேசும் போது அங்கு 'அல்' - اَلْ - அதிகமாக சேருகிறது. அடுத்து வார்த்தையின் முடிவில் 'துன்' என்று முடிந்தது 'து' என்று முடிவதை பாருங்கள். அதாவது 'பைதுன்' என்று முடிந்தது 'அல்' சேர்ந்தவுடன் 'பைது' என்று முடிவதைப் பார்த்தோம். மேலும் சில உதாரணங்கள் மூலம் இதனை தெரிந்து கொள்வோம்.

مَسْجِدٌ - மஸ்ஜிதுன் - பள்ளி வாசல்

الْمَسجِدُ - அல் மஸ்ஜிது - அந்த பள்ளி வாசல்

அல் சேர்ந்தவுடன் 'துன்' 'து' வாக மாறியுள்ளது.

-----------------------

مَاءٌ - மாவுன் - தண்ணீர்

الْمَاءُ - அல் மாவு - அந்த தண்ணீர்

அல் சேர்ந்தவுடன் 'வுன்' 'வு' வாக மாறியுள்ளது.

-----------------------

قَلَمٌ - கலமுன் - எழுது கோல்

الْقَلَمُ - அல் கலமு - அந்த எழுது கோல்

'அல்' சேர்ந்தவுடன் 'முன்' 'மு' வாக மாறியுள்ளது.

--------------------------

كِتَابٌ - கிதாபுன் - புத்தகம்

الكِتاَبُ - அல் கிதாபு - அந்த புத்தகம்

'அல்' சேர்ந்தவுடன் 'புன்' 'பு' வாக மாறியுள்ளது.

-------------------------

مِفْتَاحٌ - - மிஃப்தாஹூன் - சாவி

المِفْتاَحْ - அல் மிஃப்தாஹ் - அந்த சாவி

'அல்' சேர்ந்ததால் 'ஹூன்' 'ஹ்' ஆக மாறியுள்ளது.

-------------------------

مَكْتَبٌ - மக்தபுன் - மேசை

المَكْتَبْ - அல் மக்தப் - அந்த மேசை

'அல்' சேர்ந்ததால் 'புன்' 'ப்' ஆக மாறியுள்ளது.

--------------------------

قَمِيْصٌ - - கமீஸூன் - சட்டை

القَمِيسُ - அல் கமீஸூ - அந்த சட்டை

'அல்' சேர்ந்ததால் 'ஸூன்' 'ஸூ' வாக மாறியுள்ளது.

அல் சேர்வதனால் எழுத்துக்கள் எப்படி மாறுகிறது என்பதனை பார்தோம். இனி மேலும் சில விளக்கங்களை இறைவன் நாடினால் அடுத்த பாடத்தில் பார்போம்.

Saturday, July 01, 2017

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 10

இந்த பாடத்தில்  'சுட்டுச் சொற்கள்'  சிலவற்றைப் பார்போம்:

ஒரு பொருளை காட்டி பேசுவதற்கு நாம் 'இது' 'இந்த' என்ற வார்த்தைகளை பயன்படுத்துவோம். அது போல் அரபியில் ஆண் பாலுக்கும் பெண் பாலுக்கும் தனித் தனியாக வார்த்தை உள்ளது.

ஆண் பாலில் இது, இந்த என்பதற்கு "هذا" 'ஹாதா' என்ற வார்த்தையை பயன் படுத்த வேண்டும்.

ஆண் பாலில் அது, அந்த என்பதற்கு 'ذالِكَ' 'தாலிக' என்ற வார்த்தையை பயன் படுத்த வேண்டும்.

பெண் பாலில் இது, இந்த என்பதற்கு 'هذِهِ' 'ஹாதிஹி' என்ற வார்த்தையை பயன் படுத்த வேண்டும்.

பெண் பாலில் அது, அந்த என்பதற்கு 'تِلْكَ' 'தில்க' என்ற வார்த்தையை பயன் படுத்த வேண்டும்.

இந்த சுட்டுச் சொற்களை சில வாக்கியங்களில் அமைத்து அதன் பயன்களை அறிந்து கொள்வோம்.


'هذا كِتابٌ' - 'ஹாதா கிதாபுன்' - இது ஒரு புத்தகம்.

'هذِهِ بَقَرَةٌ' - 'ஹாதிஹி பகரதுன்' - இது ஒரு பசுமாடு

'ذالِكَ حِصانٌ' - 'ஜாலிக ஹிஸானுன்' - அது ஒரு குதிரை.

'تِلْكَ مائِدةٌ' - 'தில்க மாஇததுன்' - அது ஒரு மேசை.

'هذا مَسْجدٌ' - 'ஹாதா மஸ்ஜிதுன்' - இது ஒரு பள்ளி வாசல்

'هذا مَيْدَانٌ' - 'ஹாதா மைதானுன்' - இது ஒரு மைதானம்.

'هذا سُوقْ' 'ஹாதா ஸீக்குன்' - இது ஒரு கடை வீதி

'ذالِكَ كَنِيْسَةْ' 'ஜாலிக கனீஸதுன்' - அது ஒரு கோவில்

'ذالِكَ قَبْرٌ' - 'ஜாலிக கப்ருன்' - அது ஒரு சமாதி

'هذِهِ لَيْلاَ جَمِيْلَةٌ' - 'ஹாதிஹி லைலா ஜமீலதுன்' - இந்த ஜமீலா அழகானவள்

---------------------------------

'இடைச் சொல்' என்றால் என்ன?

இரு வாக்கியங்களை ஒன்றாக இணைப்பதை 'இடைச் சொல்' என்று குறிக்கிறோம்.

இரு வாக்கியங்களை و என்ற எழுத்தைக் கொண்டு எவ்வாறு இணைப்பது என்று பார்போம்.


இது குதிரை மேலும் இது கழுதை ---- هَذَا حِصَانٌ وَ ذَلِكَ حِمَار ---- 'ஹாதா ஹிஸானுன் வ தாலிக ஹிமார்'

'இது குதிரை' என்பது ஒரு வாக்கியம்.

'இது கழுதை' என்பது ஒரு வாக்கியம்.

இந்த இரு வாக்கியங்களையும் ஒன்றாக இணைப்பது 'و' என்ற எழுத்து. இரு வாக்கியங்களை இணைப்பதால் இதற்கு "இடைச்சொல்" என்று பெயர். அரபியில் இதனை - حَرْفٌ عَطْفٌ - 'ஹர்ஃபுன் அத்ஃபுன்' என்று சொல்வர்.

மேலே சொன்ன 'சுட்டுச் சொற்கள்' மற்றும் 'இடைச் சொற்கள்' போன்றவற்றை பல முறை படித்தும் எழுதியும் வாருங்கள். சொந்தமாக நீங்களே உதாரணங்களை அமைத்து எழுதிப் பாருங்கள்.

இறைவன் நாடினால் அடுத்த பாடங்களில் சந்திப்போம்.


Monday, June 12, 2017

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 9

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 9

ஒரு நண்பர் இன் பாக்ஸில் வந்து 'ஜேர், ஜபர் என்றுதான் நான் குர்ஆனை மத்ரஸாவில் படித்துள்ளேன். நீங்கள் 'ஃபதஹ, கஸர' என்று எழுதுகிறீர்களே? குழப்பமாக இருக்கிறது என்கிறார். நானும் சிறு வயதில் மதரஸாவில் 'ஜேர், ஜபர்' என்றுதான் படித்தேன். அந்த காலத்தில் உருது தெரிந்த முஸ்லிம்களே பெரும்பாலும் அரபு ஆசிரியர்களாக இருந்தனர். அவர்கள் அரபு மொழியை உருது மொழியின் அடிப்படையில் நமக்கு விளக்கி வந்தார்கள். இதில் தவறொன்றுமில்லை. ஏதோ ஒரு வழியில் நாம் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். மொழிப் பற்று இருக்கலாம்: மொழி வெறி இருக்கக் கூடாது என்று இஸ்லாம் நமக்கு கட்டளையிடுகிறது. அரபு நாடுகளில் 'ஜேர், ஜபர்' என்றால் அரபுகளுக்கே விளங்காது. எனவே தான் உலகம் முழுவதும் அரபு எப்படி உச்சரிக்கப்படுகிறதோ அதனடிப்படையில் 'ஃபதஹ, கஸர' என்று விளக்கினேன். பலருக்கும் இது போன்ற சந்தேகம் இருக்கும் என்பதாலேயே இந்த விளக்கம்.

--------------------------------------------------


இனி அடுத்த பாடத்துக்குள் நுழைவோம்.

ஆங்கில மொழியில் "THE" '' என்ற சொல் குறிப்பிட்ட ஒரு பொருளையோ மனிதனையோ குறிப்பது போல் அரபி மொழியில் 'ال' 'அல்' எனும் சொல்லை உபயோகிப்பதுண்டு. 'அல்' எனும் வார்த்தையை 'பொது சுட்டுச் சொல்' என்று அரபியில் சொல்வர். 'அல்' என்ற பொது சுட்டுச் சொல்லானது 1.பெயர்ச் சொல்லுக்கும் 2.பெயர் உரிச் சொல்லுக்கும் முன்னால் வரும்.

1.
பெயர்ச் சொல்

كتاب - ஏதோ ஒரு புத்தகம்.

ال كتاب - குறிப்பிட்ட ஒரு புத்தகம்.

2.
பெயர் உரிச் சொல்

'
ولد طيب' - 'வலதுன் தய்யிபுன்' (ஏதோ ஒரு) நல்ல பையன்.

'
الولد طيب' - 'அல் வலது தய்யிபுன்' (குறிப்பிட்ட) நல்ல பையன்


இவ்வாறு ஒரு பொருளை அல்லது பொருளின் தன்மையை குறிப்பிட்டுச் சொல்ல 'அல்' என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம். தற்போது 'அல்' என்ற வார்த்தையின் பயன்பாட்டை விளங்கியிருப்பீர்கள்.

அரபு மொழியில் எழுத்துக்களை இரண்டு வகைகளாக பிரிக்கின்றனர். 1. சூரிய எழுத்துக்கள் 2. சந்திர எழுத்துக்கள்.

1.
சூரிய எழுத்துக்கள் எவை என்பதை பார்போம்:

ﺕ ﺙ ﺩ ﺫ ﺭ ﺯ ﺱ ﺵ ﺹ ﺽ ﻁ ﻅ ﻝ ﻥ

2.
சந்திர எழுத்துக்கள் எவை என்பதையும் பார்போம்.

ء ﺏ ﺝ ﺡ ﺥ ﻉ ﻍ ﻑ ﻕ ﻙ ﻡ ﻭ ﻱ ه

இதை ஏன் இவ்வாறு பிரித்தார்கள் என்பதையும் பார்போம்.

بَيْتٌ 'பைத்' என்றால் வீடு என்ற பொருளைக் பொதுவாக குறிக்கும். الْبَيْتُ 'அல் பைத்து' என்றால் 'அந்த வீடு' என்று ஒரு வீட்டை குறிப்பிட்டு சொல்கிறோம். இப்போது 'அல்' என்ற வார்த்தை இங்கு அதிகமாக சேருவதை பார்த்தோம். சேர்ந்த இந்த வார்த்தையானது பின்னால் வரும் வார்த்தையின் முதல் எழுத்தோடு ஒட்டவில்லை என்றால் அது சந்திர எழுத்து எனப்படும்.

التُّفَّاحُ 'அத்துஃப்பாகுன்' 'அந்த ஆப்பிள்' என்ற வார்த்தையில் 'அல்' என்ற வார்த்தை மறைந்து 'அத்து' என்று முதல் வார்த்தையோடு சேர்ந்து விடுகிறதல்லவா? இதனையே 'சூரிய எழுத்துக்களின் அடையாளங்களாக பார்கிறோம்.

அல் என்ற வார்த்தை தொடரும் வார்த்தையின் முதல் எழுத்தோடு சேர்ந்தால் அது சூரிய எழுத்துக்கள் என்றும் அல் என்ற வார்த்தை தொடரும் வார்த்தையின் முதல் எழுத்தோடு சேராது தனித்து நின்றால் அதனை சந்திர எழுத்துக்கள் என்றும் கூறுகிறோம்.

உதாரணங்களை படித்துப் பார்த்தாலே உங்களுக்கு தானாகவே எது சூரிய எழுத்து எது சந்திர எழுத்து என்பது விளங்கி விடும்.


a book
كتاب கிதாப் - ஒரு புத்தகம் - the book الـكتاب அல் கிதாப் - (குறிப்பிட்ட) புத்தகம்

இங்கு கிதாபோடு அல் ஒட்டவில்லை எனவே இது சந்திர எழுத்தை சார்ந்தது என்று முடிவெடுத்து விடுவோம்.


கீழே வரக் கூடிய அல் என்ற பதத்துக்கு அடுத்து வரும் வார்த்தைகளின் முதல் எழுத்துக்கள் அனைத்தும் சூரிய எழுத்துக்கள். சூரிய எழுத்துக்களை தனியாக பிரித்துக் காட்டப்பட்டுள்ளதை கவனியுங்கள்.


الحروف الشمسية - சூரிய எழுத்துக்கள்

the sun
الـشّمس sun شّمس ش 'அஸ்ஸம்ஸ்' - சூரியன்

the man
الـرّجـل man رّجـل ر 'அர்ரஜீல்' - மனிதன்

the fire
الـنّــار fire نّــار ن 'அந்நார்' - நெருப்பு

the magic
الـسّحـر magic سّحـر س 'அஸ்ஸிஹ்ர்' - சூனியம்

the weather
الـطّـقس weather طّـقس ل 'அத்தக்ஸ்' - காலநிலை

the night
الـلّـيـل night لّـيـل لّ 'அல் லைல்' - இரவு

the date (fruit)
الـتّـمـر date (fruit) تّـمـر ت 'அத்தமர்' - பேரித்தம் பழம்

the hens
الدّجاج hen دّجاج د 'அத்தஜாஜ்' - கோழி

the gold
الذّهب gold ذّهب ذ 'அத்தஹப்' - பவுன்

the giraffe
الزّرافة giraffe زّرافة ز 'அஜ்ஜூராஃபா' - ஒட்டகச் சிவிங்கி

the picture
الصّورة picture صّورة ص 'அஸ்ஸூரா' - படம்

the mud
الطّين mud طّين ط 'அத்தின்' - மண்

the back
الظّهر back ظّهر ظ 'அத்தஹ்ர்' - பின் பக்கம்

இங்கு எழுதப்பட்டுள்ள அனைத்து உதாரணங்களையும் கவனமாக படித்துப் பாருங்கள். 'அல்' என்ற வார்த்தையானது அதற்கு அடுத்து வரும் வார்த்தையோடு இணைந்து விடுகிறது. அவ்வாறு இணைவதற்கு அடுத்து வரும் வார்த்தையின் முதல் எழுத்து சூரிய எழுத்தாக இருப்பதால் இரண்டு வார்த்தைகளும் ஒரு வார்த்தையாக உச்சரிப்பில் வந்து விடுகிறது.

-------------------------------------------------

முன்பே கூறியது போல் சந்திர எழுத்துக்களில் 'அல்' என்ற வார்த்தையானது அதற்கு அடுத்து வரும் வார்த்தையோடு ஒட்டாமல் தனித்து இருப்பதை கவனியுங்கள். அதன் உதாரணங்களை கீழே பார்போம்.

(
الباب) /al-bab/ “the door”, 'அல் பாப்' - கதவு

(
الجدار) /al-jadaar/ “the wall”, 'அல் ஜிதார்' - சுவர்

(
الفارس) /al-faaris/ “the knight”, 'அல் ஃபாரிஸ்' - வீரன்

(
المطر) /al-maTar/ “the rain”, 'அல் மதார்' - மழை

(
الكلام) /al-kalaam/ “the speech”, 'அல் கலாம்' - பேச்சு

(
الورد) /al-ward/ “the rose”, 'அல் வர்த்' - பூ


'
அல்' என்ற வார்த்தையானது அடுத்து வரும் வார்த்தையின் முதல் எழுத்தில் ஒட்டாது பிரிந்திருப்பதை பார்க்கிறோம். இதனையே சந்திர எழுத்துக்கள் என்கிறோம்.

சில வார்த்தைகளை எழுதிப் பார்த்து எது சூரிய எழுத்து எது சந்திர எழுத்து என்று நீங்களே கண்டு பிடிக்க முயற்சி செய்யுங்கள்.

கீழே உள்ள அட்டவணையில் சிகப்பு நிறத்தில் உள்ள எழுத்துக்கள் சூரிய எழுத்துக்கள். கருப்பு நிறத்தில் உள்ள எழுத்துக்கள் சந்திர எழுத்துக்கள்.


இறைவன் நாடினால் மேலும் சில பாடங்களை அடுத்தடுத்த நாட்களில் பார்போம்.


Sunday, November 29, 2015

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 17

இந்த பாடத்தில் நிறங்கள் மற்றும் சில முக்கிய வார்த்தைகளை படித்துக் கொள்வோம்.

أبيض ------ அபியத் ------ வெள்ளை --WHITE

أسود ------ அஸ்வத் --- கருப்பு --- BLACK

بني ------ பொன்னி - மரக் கலர் --- BROWN

برتقالي --- பர்திகாளி (பத்ரகாளி என்று படித்து விட வேண்டாம் :-) ) - ஆரஞ்ச் --- ORANGE

أحمر ----- அஹ்மர் --- சிகப்பு --- RED

أصفر ---- அஸ்ஃபர் ------ மஞ்சள் ---YELLOW

أخضر ---- அஹ்தர் ------- பச்சை ---- GREEN

أزرق ---- அஜ்ரக் ------- ஊதா --- BLUE

زهري ---- ஜஹ்ரி -------- பிங்க் --- PINK

رمادي --- ரமாதி ------- க்ரே (சாம்பல் நிறம்) --- GREY

--------------------------------------------


جميل ----- ஜமீல் --- அழகு -- BEAUTY

طويل ----- தவீல் --- உயரம் ---- TALL

جديد ----- ஜதீத் --- புதிய -- NEW

وسخ ------ வஸஹ் ---- அழுக்கு -- DIRTY

كسول ----- கஸூல் - சோம்பல் --- LAZY

غبي ---- கபி ----- ஊமை --- DUMB

صغير --- ஸகீர் --- சிறிய --- SMALL

غني ---- கனி ----- செல்வம் --- RICH

كبير --- கபீர் --- பெரிய --- BIG

كثير ---- கதீர் --- நிறைய --- LOT

فقير ----- ஃபக்கீர் - ஏழை -- POOR

نظيف ----- நதீஃப் --- சுத்தமான -- CLEAN

لطيف ----- லதீஃப் --- அன்பான --- KIND

بخيل ---- பஹீல் --- கஞ்சத்தனம் -- MIZER

قصير ---- கஸீர் ---- குள்ளமான --- SHORT

قليل ---- கலீல் ----- அளவில் குறைந்த --- LITTLE

قبيح ---- கபீஹ் ----- அசிங்கமான --- UGLY

قديم ---- கதீம் ----- பழைய --- OLD

Friday, November 27, 2015

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - பகுதி 16

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - பகுதி 16

முந்தய பதினைந்து அடிப்படை பாடங்களை படித்தவர்கள் இனி 16 லிருந்து தொடங்கவும். உலகம் முழுக்க அரபி மொழியானது உயிர்க்குறிகள் இல்லாமல்தான் எழுதப்படுகின்றன. குர்ஆனில் மாத்திரம் தான் கஸர, ஃபதஹ குறிகள் இடப்படும். இனி வரும் பாடங்களில் உயிர்க்குறிகள் இல்லாமலேயே எழுதப் பழகுவோம். தமிழில் உச்சரிப்பையும் நான் எழுதியுள்ளதால் படிப்பவர்களுக்கு சிரமம் இருக்காது. இனி வினாச் சொற்கள் சிலவற்றைப் பார்போம்.

أين -------- ஐன? where? எங்கே?

كيف -------- கைஃப்? how? எப்படி?

كم --------- கம்? how many? எத்தனை?

كم - بكم -- கம், பி(B)கம்? how much? எவ்வளவு?

لمن ------- லிமன்? whose? யாருடைய?

لماذا ----- லிமாதா? why? ஏன்?

متى ------- மத when? எப்போது?

ماذا ------ மாதா? what? என்ன?

من -------- மன்? who, whom? யார்? யாருக்கு?

-------------------------------------

أمام --------- இமாம் --- முன்னால் --- in front of

بعد ---------- (B)பஃத் ---- பின்னால், பிறகு --- after

بين ---------- (B)பைன் ---- நடுவில் --- between

تحت ---------- தகத் --- கீழே ---- under, below

فوق ---------- ஃபோக் -- மேலே --- above, over

قبل ---- கப்ல் ----- முன்னால் ----before

قدام --- கித்தாம் ---- முன்பு ---- before

وراء --- வராஅ ------- பின்னால் -- behind

மேலும் சில வார்த்தைகளை அடுத்த பாடங்களில் பார்போம் இறைவன் நாடினால்.....

Thursday, October 15, 2015

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 15



ஒரு மொழியில் கேள்விகளும் அதற்கான பதில்களும் மிக அவசியம். மொழி பெரும்பாலும் பயன்படுவதே அதற்காகத்தான். அந்த வகையில் கேள்வி, பதில் மற்றும் அதற்கான உதாரணங்கள் சிலவற்றை இந்த பாடத்தில் பார்போம்.....

مِثَالٌ --- மிதாலுன் --- எடுத்துக்காட்டு, உதாரணம்

سُؤَالٌ --- சவாலுன் --- கேள்வி

جَوَابٌ --- ஜவாபுன் ---- பதில்

مَا هَذَا؟ ----------- மா ஹாதா? -------- இது என்ன?

هَذَا بَيْتٌ ----------- ஹாதா பைதுன் ----- இது ஒரு வீடு.

أَهَذَا بَيْتٌ؟ --------- அஹாதா பைதுன்? - இது வீடா?

نَعَمْ، هَذَا بَيْتٌ. ----- நாம்! ஹாதா பைதுன் -- ஆம், இது வீடு.

مَا هَذَا؟ ----------- மா ஹாதா? ---- இது என்ன?

هَذَا قَمِيْصٌ. --------- ஹாதா கமீஸூன் -- இது சட்டை.

أَهَذَا سَرِيْرٌ؟ ------- அஹாதா சிரிருன்? ----- இது கட்டிலா?

لَا، هَذَا كُرْسِيٌّ ------ லா! ஹாதா குர்ஸிய்யுன் -- இல்லை, இது நாற்காலி.

أَهَذَا مِفْتَاحٌ؟ ------ அஹாதா மிஃப்தாகுன்? ---- இது சாவியா?

لَا، هَذَا قَلَمٌ. ------ லா.. ஹாதா கலமுன் -- இல்லை, இது பேனா.

مَا هَذَا؟ --------- மா ஹாதா? --- இது என்ன?....

هَذَا نَجْمٌ. --------- ஹாதா நஜ்முன் --- இது நட்சத்திரம்.

நீங்களும் புதிதாக இது போன்ற உதாரணங்களை அமைத்து தனியே எழுதிப் பழகிப் பாருங்கள்.

இறைவன் நாடினால் மேலும் சில பயிற்சிகளை அடுத்த பாடத்தில் பார்போம்.

Sunday, September 27, 2015

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 13

அரபு எழுத்துக்கள் வார்த்தைகளில் முதலில், நடுவில் கடைசியில் எவ்வாறு உரு மாறுகிறது என்பதை முதல் பாடத்தில் பார்த்தோம். மற்ற எழுத்துக்களின் தொடர்ச்சியை இந்த பாடத்தில் பார்போம்.

ط

طَعاَمٌ ----------- தஆமுன் - உணவு

وَطَنٌ ------------ வதனுன் - நாடு

غَلَطٌ ------------ கலதுன் - தவறு

-----------------------------------

ظ

ظَرِيْفٌ - தரீஃபுன் - நேர்த்தியான

نَظِيْفٌ - நதீஃபுன் - சுத்தமான

حَفِظَ - ஹஃபீத - சேர்பித்தல்

----------------------------------

ع

عُمَرٌ - உமருன் - வயது

لاَعِبٌ - லாயிபுன் - விளையாட்டு

شاَرَع - ஸாரஅ - தெரு, சாலை

--------------------------------

غ

غُباَرٌ -------------- குபாருன் - தூசி

مَغْسَلَة ------------- மக்ஸல - கை கழுவும் இடம்

صاَيِغٌ -------------- ஸாயிகுன் - பொற் கொல்லன்.

-----------------------------------------

ف

فَرَعَ ---------- ஃபரஅ - கிளை

رَفِيْعٌ --------- ரஃபீவுன் - உயர்ந்த

لَطِيْفٌ --------- லதீஃபுன் - சிறந்த

------------------------------------------

ق

قَلَمٌ ------------- கலமுன் - எழுது கோல், பேனா

ياَقوْتٌ ----------- யாகூதுன் - சிகப்புக் கல்

وَرَقٌ ------------- வரகுன் - காகிதம்

------------------------------------------

ك

كَنِيْسَةٌ ----------- கனீஷதுன் - கிறித்தவ தேவாலயம்

مِكْنَسَةٌ ----------- மிக்னிஸதுன் - துடைப்பம், விளக்குமாறு

سَمَكٌ ------------- ஸமகுன் - மீன்

---------------------------------------

ل

لَيَنٌ ---------- லயனுன் - மிருதுவான

صَلْبٌ ---------- ஸல்புன் - கடினமான

نَحِيْلٌ --------- நஹீலுன் - மெல்லிய

----------------------------------

م

مُحاَمِيٌ ----------- முஹாமியுன் - வழக்கறிஞர்

نَمِيرٌ ----------- நமீருன் - புலி

أُمٌّ -------------- உம்முன் - தாய்

--------------------------------------

ن

نِشاَطٌ ------------- நிஷாதுன் - சுறுசுறுப்பு

تَنَكٌ -------------- தனகுன் - தகரம்

تَمْرِنٌ ------------ தம்ரீனுன் - பயிற்சி

-----------------------------------------

ه

هِلالٌ ---------- ஹிலாலுன் - பிறை

نَهْرٌ ---------- நஹ்ருன் - நதி

وَجْهٌ ----------- வஜ்ஹூன் - முகம்

------------------------------------

و

وَقْتٌ ----------- வக்துன் - நேரம்

قَوْمٌ ---------- கவ்முன் - மக்கள்

هُوَ ---------- ஹூவ - அவன் அது

-----------------------------------


ى

يَدٌ ----------- யதுன் - கை

طَباَشِيْرٌ ------ தபாஸிருன் - சாக்குக் கட்டி

كُرْسِىئٌ ------ குர்ஸியுன் - நாற்காலி


அரபு எழுத்துக்கள் தனித்து வரும் போது ஒரு உருவத்திலும், முதலில் வரும் போது ஒரு உருவத்திலும், நடுவிலும், கடைசியிலும் வரும் போதும் அதன் உருவங்கள் எவ்வாறு மாறுகிறது என்பதை இது வரை பார்தோம்.

12 மற்றும் 13 ஆம் பாடங்களை பல முறை எழுதி பழகுங்கள். ஏனெனில் இதில் சிறப்பாக பயிற்சி எடுத்தால்தான் மற்ற பாடங்கள் உங்களுக்கு சுலபமாக இருக்கும்.

இறைவன் நாடினால் அடுத்த பாடங்களில் சந்திப்போம். ....