Followers

Tuesday, June 16, 2026

அமெரிக்கா எதிரி நாடாக இருந்தாலும் அதுவும் இறைவன் படைத்த பூமியே..

 அமெரிக்க மண்ணுக்குள் சலனப்படாத ஈரான் விளையாட்டு வீரர்கள்!

அமெரிக்கா எதிரி நாடாக இருந்தாலும் அதுவும் இறைவன் படைத்த பூமியே..
எனவேதான் ஈரான் வீரர் ராமின் கோல் அடித்தவுடன் அமெரிக்க மண்ணில் தனது தலையை சாய்த்து இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறார்
ஈரானுக்கும் நியூஸ்லாந்துக்குமான கால் பந்தாட்ட போட்டியை பார்க்க முடிந்தது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமான ஜென்ம பகை ஒருபுறமிருந்தபோதும் அமெரிக்கா ஈரானின் கால்பந்து அணியினர் 26 பேருக்கு மட்டுமே அமெரிக்க நுழைவு விசா வழங்கியுள்ளது.
ஈரானின் வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் யாரும் ஈரானிய இஸ்லாம் புரட்சி படையுடன் எந்த தொடர்பும் அற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற முன்னறிவித்தலுடன் கடுமையான நிபந்தனைகளுடன் நுழைவு விசா வழங்கப்பட்டது. அமெரிக்காவில் இடம்பெறும் ஒவ்வொரு போட்டியின் பின்னர் அவர்கள் மெக்சிகோவுக்கு செல்ல வேண்டும் என்பது இன்னொரு நிபந்தனையாகும். ஈரான் வீரர்கள் யாரும் அமெரிக்காவை சுற்றிப்பார்க்க அனுமதி கிடையாது.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் மிகவும் உற்சாகமாக அவர்கள் விளையாடியதை பார்க்க முடிந்தது. ஈரானின் ஊடக படப்பிடிப்பாளர்கள் மற்றும் பின்னணி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஈரான் தரப்பில் ராமின் (ராமனுக்கு உள்ள தொடர்பு) தனது முதலாவது கோலை " போட்டவுடன் மைதானத்தில் அல்லாஹ்வுக்கு நன்றி என்று சொல்லி நிலத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்ததை பார்க்க முடிந்தது. அமெரிக்க மண்ணில் உள்ள ஒரு மைதானத்தில் விளையாடுவது பற்றி எந்த நினைப்புமின்றி தனது இறை நம்பிக்கையை அவர் கைவிடவில்லை .
இறைவனுக்கு நன்றி செலுத்துவதில் நம் உசிலம்பட்டி பாயும் ஈரான் தேசத்தை சார்ந்த ராமினும் ஒரே முறையில் வணங்குவதை பார்க்கிறோம்..
வாசுதேவக குடும்பம்
யாதும் ஊரே யாவரும் கேளீர்
ஒன்றே குலம் ஒருவனே தேவன்




No comments: