Followers

Tuesday, June 02, 2026

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள கோடா (Khoda) காலனியில்

 





உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள கோடா (Khoda) காலனியில் சூர்யா பிரதாப் சௌகான் என்ற 17 வயது இளைஞர், அசத் என்ற நபருடனான தனிப்பட்ட வாக்குவாதத்தின் காரணமாகக் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

 

இந்தச் சம்பவம் இரு நபர்களுக்கும் இடையேயான தனிப்பட்ட பகையின் உச்சகட்டமே தவிர, இதற்கு எந்தவிதமான மதக் காரணங்களும் இல்லை என்பது காவல்துறை விசாரணையில் தெளிவாகியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக உடனடியாகச் செயல்பட்ட காவல்துறை, குற்றவாளியான அசத்தை என்கவுண்டர் செய்து சுட்டுக் கொன்றதுடன், அவனது தந்தை நவாப் உள்ளிட்ட தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளது.

 

இவ்வளவு தெளிவான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னரும், சில மதவாத அமைப்பினர் இந்தக் கொலையை மத ரீதியானதாகச் சித்தரித்து, காசியாபாத் வீதிகளில் திரண்டு "ஜிகாதிகளைச் சுட்டுக் கொல்லுங்கள்" போன்ற வெறுப்புமிக்க முழக்கங்களை எழுப்பி அமைதியான சூழலைப் பதற்றமாக்க முயற்சித்து வருகின்றனர்.

 

தனிப்பட்ட குற்றத்திற்காக ஒரு குறிப்பிட்ட மதத்தையே ஒட்டுமொத்தமாகச் சாடுவதும், வன்முறையைத் தூண்டும் வகையில் வெறுப்புப் பேச்சுகளைப் பரப்புவதும் சமுதாய நல்லிணக்கத்தைக் குலைக்கும் செயலாகும். குற்றவாளிகள் மீது சட்டம் தனது கடமையைச் செய்துவிட்ட நிலையில், தனிப்பட்ட நபர்களின் மோதலை மதக் கலவரமாக மாற்றத் துடிக்கும் மதவாத அமைப்புகளின் சூழ்ச்சியையும் வெறுப்பு அரசியலையும் பொதுமக்கள் உணர்ந்து அமைதியைக் காக்க வேண்டும்.

 

கொலை செய்தவர் முஸ்லிம் என்ற காரணத்திற்காக உடனடியாகவே போலீசாரால் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இதுவே இந்துவாக இருந்தால் என்ன நடந்திருக்கும் அதுவும் உத்தர பிரதேசத்தில்.... முஸ்லிம் என்றால் ஒரு நியாயம் இந்து என்றால் ஒரு நியாயமா? என்று சமூக வலைத்தளங்களில் இது பற்றி பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது....

 


 

No comments: