Followers

Thursday, June 18, 2026

தாஜ்மஹால், ஆக்ரா ஆண்டு வருமானம்

 

தாஜ்மஹால், ஆக்ரா

தாஜ்மஹால், முகலாயப் பேரரசர் ஷாஜகான் தனது மனைவியான மும்தாஜ் நினைவாக கட்டியதாகும். நாட்டின் மிகப் பெரிய வருவாய் ஈட்டும் நினைவுச் சின்னமாக தாஜ்மஹால் உள்ளது.

ஆண்டு வருமானம்

2013-2014 வருவாய்: ரூ. 21,84,88,950 உள்ளது

2019-2020 ஆம் ஆண்டில், தாஜ்மஹாலில் இருந்து கிடைத்த வருவாய் ரூ. 97.5 கோடி. அதேபோல், 2021-22ல் ரூ. 26.61 கோடி வருவாய் கிடைத்தது.

 

குதுப் மினார் ,டெல்லி

குதுப் மினார் 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. இது இந்தியாவின் இரண்டாவது மிக உயரமான கோபுரமாகும். இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமாக உள்ளது.

இதன் வருமானம்

2013-2014 வருமானம் - ரூ 10,16,05,890

2019-20-ம் ஆண்டு குதுப்மினாரில் நுழைவு சீட்டு விற்பனை மூலம் ரூ.20.17 கோடி வருமானம் கிடைத்தது.

2021-2022 ஆண்டில் குதுப்மினார் ரூ.5.07 கோடி வருமானம் ஈட்டியது.

 

ஆக்ரா கோட்டை

யுனெஸ்கோவின் மற்றொரு உலக பாரம்பரிய தலமான ஆக்ரா கோட்டை, மூன்றாவது முகலாய பேரரசர் அக்பரால் கட்டப்பட்டது

இதன் வருமானம்

2013-2014 வருமானம் - ரூ10,22,56,790

 

ஹுமாயூன் கல்லறை, டெல்லி

முகலாய பேரரசர் ஹுமாயூனின் கல்லறை 1572 இல் அவரது மனைவியான பேகா பேகத்தால் கட்டப்பட்டதாகும்

இதன் வருமானம்

2013-2014 - ரூ 7,12,88,110

 

செங்கோட்டை டெல்லி

ஷாஜகானின் ஆட்சியின் போது செங்கோட்டை ஷாஜஹானாபாத்தின் அரண்மனையாக இருந்தது. இதன் கட்டமைப்பின் எட்டு பக்கங்களிலும் உள்ள சிவப்பு மணற்கல்லில் இருப்பதால் இதற்கு செங்கோட்டை என பெயர் வந்தது.

இதன் வருமானம்

2013-2014 - ரூ.6,15,89,750

 

 

 

No comments: