Followers

Showing posts with label சூரியன். Show all posts
Showing posts with label சூரியன். Show all posts

Thursday, March 01, 2012

சூரியன் தனக்குரிய பாதையில் நகர்கிறதா?

இரவும் பகலும் மாறி மாறிவருவதைக் கண்ட மனிதன், இதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினான். அறிவியல் அறிஞர் அரிஸ்டாட்டில் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 'புவி மையக் கோட்பாட்டை உருவாக்கினார். அதாவது பூமியைச் சுற்றியே சூரியன், சந்திரன் போன்ற மற்ற கோள்கள் சுற்றுவதாகவும் இதனாலேயே இரவு பகல் ஏற்படுவதாகவும் தனது ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார். அரிஸ்டாட்டில் சொன்னதால் உலகமும் ஒத்துக் கொண்டது.



ஆனால் இவரின் ஆராய்ச்சி தவறு என்றும் சூரியனைச் சுற்றியே மற்ற கோள்கள் இயங்குகின்றன என்ற உண்மையை குர்ஆன் வெளியிடுகிறது. ஆனால் அறிவியல் உலகம் குர்ஆன் இறங்கி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே இந்த உண்மையை ஒத்துக் கொள்கிறது. அறிவியல் அறிஞர் கோபர் நிக்கஸ்(1473-1543), ஜோஹன்னஸ் கெப்ளர்(1571-1630) போன்றோர் குர்ஆன் இறங்கி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே இந்த உண்மையை உணருகின்றனர்.



உலகம் கோள வடிவமானது என்ற உண்மையை நாம் கடலில் கப்பலின் வரவை வைத்தே எளிதாக கண்டு கொள்ளலாம். அந்த காலத்தில் பூமியின் வடிவத்தை காண இது ஒன்றுதான் வழியாக இருந்தது. அறிவியல் வளர்ந்த இந்த காலத்தில் வேண்டுமானால் கப்பலின் உதாரணம் தேவைப்படாமல் இருக்கலாம். அந்த காலத்திய மக்களுக்கு உண்மையை உணர்த்துவதற்க்கு குர்ஆன் கப்பலையே உதாரணமாக எடுத்துக் கொள்கிறது.

இனி குர்ஆன் வசனத்தைப் பார்ப்போம்.

'அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான வெளியில் நீந்துகின்றன.'
-குர்ஆன் (21:33)

'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும் .......விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.'
-குர்ஆன் 2:164


மேற்கண்ட குர்ஆன் வசனம் வானில் எதுவும் ஓய்ந்திருக்கவில்லை என்றும் விண்ணகப் பொருட்கள் யாவும் விண்ணில் நீந்துகின்றன என்றும் பறை சாற்றுகிறது. இதன் மூலம் பூமி நிலைத்திருக்கவில்லை அதுவும் நீந்துகிறது என்ற உண்மையை கூறி புவி மையக் கோட்பாட்டை நிராகரிக்கிறது குர்ஆன்.



'அடுத்து சூரியன் ஒரு இடத்திலேயே நிலை பெற்றிருக்கிறது. அது நகரவில்லை என்றுதான் சமீபகாலம் வரை அறிவியல் அறிஞர்கள் நம்பி வந்தனர். கோபர் நிகஸ், கெப்ளர், கலிலியோ போன்ற தலை சிறந்த அறிவியல் அறிஞர்கள் கூட சூரியன் நகரவில்லை. அது ஒரே இடத்தில் நிற்கிறது என்றே கூறி வந்தனர். அரை நூற்றாண்டு காலம் தமது மொட்டை மாடியில் வானத்தை ஆராய்ந்து 1783 ஆம் அண்டு விஞ்ஞானி ஹெர்ஷல் சூரியனும் நகர்கிறது என்ற உண்மையை கண்டு பிடித்தார். இதே கருத்தை 'சூரியனும் நீந்துகிறது' என்று அழகான வார்த்தைகளைப் போட்டு கூறிய குர்ஆனை நினைத்து பிரமிக்கிறோம்.

அறிவியல் அறிஞர் பி.டூயிக் அவர்கள் நட்சத்திரங்களின் நகர்வை ஒரு உதாரணத்தோடு விளக்குகிறார். ஒரு நட்சத்திரம் நமது நிலவின் அகலம் எவ்வளவோ அவ்வளவு தூரம் நகர்ந்ததாக பூமியிலிருந்து பார்க்க வேண்டுமானால் அதற்காக 190 வருடங்கள் காத்திருக்க வெண்டும் எனக் கூறுகிறார். சுருங்கக் கூறின் பூமியிலிருந்து பார்க்கும் போது நட்சத்திரங்கள் யாவும் நகராமல் ஒரே இடத்திலேயே இருப்பதாகத் தோன்றும் என்பதே இதன் பொருளாகும். நமது கண்களுக்கு நட்சத்திரங்கள் எதுவும் நகருவதாக பார்க்க முடியவில்லை. அப்படி நகருவதாக ஒரவர் 1400 வருடங்களுக்கு முன்பு சொல்வதாக இருந்தால் அவர் வானியல் விஞ்ஞானியாக இருக்க வேண்டும். அல்லது இந்த செய்தி இறைவனிடமிருந்து வந்ததாக இருக்க வேண்டும்.

The Sun orbits the center of the Milky Way galaxy at a distance of approximately 26,000 light-years from the galactic center, completing one revolution in about 225–250 million years. It's approximate orbital speed is 220 kilometers per second, plus or minus 20 km/s. This is equivalent to about one light-year every 1,400 years, and about one AU every 8 days. These measurements of galactic distance and speed are as accurate as we can get given our current knowledge, but will change as we learn more.

# ^ Kerr, F. J.; Lynden-Bell D. (1986). "Review of galactic constants" (PDF). Monthly Notices of the Royal Astronomical Society 221: 1023–1038.

இது எவ்வாறு குர்ஆனால் சாத்தியப்பட்டது? முகமது நபி என்ற ஒரு தனி மனிதரால் இத்தகைய உண்மையை எவ்வாறு குர்ஆனில் சொல்ல முடிந்தது?

'பாதைகளையுடைய வானத்தின் மீது சத்தியமாக'
-குர்ஆன் 51;7




இங்கு குர்ஆன் வானத்தில் பாதைகள் இருக்கிறது என்று கூறுகிறது. அது என்ன வானத்தில் பாதைகள்? சூரியன், சந்திரன், பூமி போன்ற எண்ணற்ற கோள்களையும் நட்சத்திரங்களையும் கும்பலாக இழுத்துக் கொண்டு ஓடினால் அதற்குரிய பாதைகள் வகுக்கப்பட்டால்தான் சாத்தியமாகும். இல்லை என்றால் ஒன்றோடொன்று மோதி பெரும் அழிவு ஏற்படும். அடுத்து மனிதர்களும் வானத்தில் பயணிக்கலாம் என்ற செய்தியையும் குர்ஆன் கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த தலைப்பை யொட்டி சூரியன் சம்பந்தமாக குர்ஆனில் வரும் வரும் வேறு பல வசனங்கள்.

36:38. இன்னும் சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய இறைவன் விதித்ததாகும்.

36:40. சூரியன் சந்திரனை நெருங்கிப் பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் தம் வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.

6:78. பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்டபோது : “இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது” என்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்” என்று கூறினார்.


----------------------------------------------

இனி அனானியின் கேள்விக்கு வருவோம்!

நாம் மேலே பார்த்த குர்ஆன் வசனங்கள் சூரியனைச் சுற்றி பூமியும் மற்ற கோள்களும் சுற்றி வருவதாகவும் சூரியன் இவை அனைத்தையும் கோர்த்துக் கொண்டு ஒரு இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதாகவும் பார்த்தோம். தற்கால அறிவியல் அறிஞர்களும் இதை மெய்ப்பிப்பதாகவும் கண்டோம்.



ஆனால் இதற்கு மாற்றமாக முகமது நபி சொன்னதாக அனானி சொல்லும் ஒரு ஹதீதை பார்ப்போம்.

//அந்த பதிவில் எப்படி சூரியன் மறைந்ததும் அல்லாவின் காலடியில் சென்று அமர்ந்துகொள்கிறது. எப்படி அடுத்த நாள் காலை வரைக்கும் அல்லாஹ்வின் காலடியில் அமர்ந்து “அல்லாஹ் அல்லாஹ் நான் அடுத்த நாள் காலையில் கிழக்கில் உதிக்கலாமா அல்லாஹ்” என்று கேட்டுகொண்டிருக்கிறது என்பதையும், அடுத்த் நாள் காலையில், சரி போய் கிழக்கில் உதிச்சிக்க்கோ என்று அல்லாஹ் சொல்வதையும் அடுத்த நாள் காலையில் சூரியன் கிழக்கில் உதிப்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபித்து இந்த நஜஸ் காபிர்களின் வாயை மூட வைக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.//

குர்ஆனானது முகமது நபி காலத்திலேயே பாதுகாக்கப்பட்டு விட்டது. ஆனால் அதற்கு விளக்க உரையாக அமைந்த முகமது நபியின் ஹதீதுகள் சிலவற்றில் யூதர்களின் கைவரிசை புக ஆரம்பித்தது. இஸ்லாத்தின் வெற்றியை பொறுக்காத ஒரு சில யூதர்களும் கிறித்தவர்களும் சிலை வணங்கிகளும் முஸ்லிம்களாக மாறுவதாக நடித்தனர். பாதினியாக்கள் என்ற இவர்கள் முதன்முதலில் தற்போதய ஈரானில் உருவானார்கள். இவர்களில் பலரை முகமது நபி காலத்திலேயே முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொண்டனர். நபியவர்களின் மரணத்திற்கு பிறகு 'நபி என்னிடம் இப்படி சொன்னார்' 'நான் நபியிடம் இப்படி ஒரு சட்டத்தைக் கேள்வியுற்றேன்.' என்று பலரும் மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டு பண்ணினர். இதன் பிறகு சுதாரித்துக் கொண்ட நபித் தோழர்கள் அதற்கு பின் வந்த மேதைகள் ஹதீதுகளை தரம் பிரிக்கின்றனர். அறிவிப்பவர் உண்மையாளரா, முகமது நபியை பார்த்தவரா?, பொய் சொல்லாதவரா? மனநலம் பாதிக்கப்படாதவரா? என்றெல்லாம் ஆராய்ந்து 'நம்பத் தகந்தவை' 'நம்பத் தகாதவை' என்ற இரு வேறு பிரிவாக நபிமொழிகள் பிரிக்கப்பட்டன.

எனவே நபி மொழிகளை தெரிந்து கொள்ள அதில் நல்ல பாண்டித்தியம் வேண்டும். இப்படி ஹதீது கலையில் தேர்ச்சி பெறாதவர் ஹதீதை அணுகுவதற்கு ஒரு இலகுவான வழி உண்டு. ஒரு ஹதீஸ் குர்ஆனை ஒத்திருந்தால் அது நம்பகமான ஹதீஸ். ஒரு நபிமொழி குர்ஆனின் கருத்துக்கு மாறுபட்டால் அது நம்பத்தக்க ஹதீது இல்லை என்று புறம் தள்ள வேண்டும்.

ஒருமுறை அன்னை ஆயிஷாவிடம் முகமது நபி அவர்களின் வாழ்வு எவ்வாறு இருந்தது என்று ஒரு நபித் தோழர் கேட்டார். அதற்கு அன்னை அவர்கள் 'அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது' என்று பதிலளித்தார்கள். எனவே குர்ஆனுக்கு மாற்றமாக ஒரு கருத்தை முகமது நபி சொல்லியிருக்க மாட்டார் என்ற முடிவுக்கு வருகிறோம்.

குர்ஆனை மக்களுக்கு இறைவனிடம் இருந்து வாங்கித் தந்தது யார்? முகமது நபி. வாங்கிக் கொடுத்த ஒரு நபர் அதற்கு விளக்க உரையாக அதற்கு நேர்மாறான விளக்கத்தை கொடுக்க முடியுமா? முடியாது. எனவே இங்கு குர்ஆன் சொல்லும் சூரியனின் ஓட்டத்தை எடுத்துக் கொள்கிறோம்.

மேலும் உலகில் அணுவும் அவனன்றி அசையாது. எனவே இறைவன் நினைத்தால் சூரியன் என்ன அனைத்து கோள்களையுமே தினமும் வந்து அனுமதி வாங்கி செல்லும்படி சொல்லலாம். அவை அனைத்தும் கீழ்படியும். இந்த நபி மொழி உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒருக்கால் இந்த அர்த்தத்திலும் அந்த நபி மொழி வந்திருக்கலாம்.

'அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன அவற்றை மக்களில் பெரும்பாலலோர் அறிய மாட்டார்கள். எனவே, சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறவர் தம் மார்க்கத்திற்கும் தம் மானம் மரியாதைகளுக்கும் களங்கம் ஏற்படுத்துவதிலிருந்து விலகி விடுகிறார். சந்தேகத்திற்கிடமானவைகளில் விழுகிறவர் வேலியோரங்களில் (கால் நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார். அவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. எச்சரிக்கை! நிச்சயம் அல்லாஹ்வின் பூமியில் அவனுடைய எல்லைகள் அவனால் தடை செய்யப்படடவையாகும். எச்சரிக்கை! உடலில் ஒருசதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம்!' என்று இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்: என நுஃமான் இப்னு பஷீர் அறிவித்தார்.

புஹாரி:52

Volume :1 Book :2



இறைவனே அறிந்தவன்.