ஏழு அடுக்குகள் பற்றிய சில உண்மைகள்!
பழைய கிரேக்க கண்டு பிடிப்புகளின் படி பூமியின் விட்டத்தின் அளவு 12750 கிலோ மீட்டர் என்று தோராயமாக குறிப்பிட்டுள்ளனர். 20 ஆம் நூற்றாண்டில்தான் பூமியைப் பற்றிய ஆராய்ச்சிகள் அதிகரித்து மேலும் பல உண்மைகள் தெரிய வந்தன. பூமியின் மத்திய கோட்டிலிருந்து நீளம் சுமார் 40,030.2 கிலோமீட்டர் (24,873.6 மைல்) என்று தற்போதுதான் கண்டு பிடித்துள்ளார்கள்.
ஒரு முட்டை எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளதோ அத்தகைய கட்டமைப்பில் பூமியின் கட்டுமானம் சீர் செய்யப்பட்டுள்ளது. பூமியை மூன்று பெரும் பிரிவாக பிரித்து அவற்றில் சிறு பிரிவுகளும் சேர்ந்து மொத்தம் ஏழு பிரிவுகளாக விஞ்ஞானிகள் பிரிக்கின்றனர். சில விஞ்ஞானிகள் பூமியை ஐந்து பாகமாகவும் பிரித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பிரிவுகள் ஒவ்வொன்றிலும் அதன் அடர்த்தி வித்தியாசப்படுகிறது.
பூமியின் உள் அமைப்பை நேரிடையான கருவி கொண்டு மனிதனால் இன்று வரை ஆய்வு செய்ய முடியவில்லை.! மாறாக பூமிக்குள் எப்போதாவது ஏற்படும் பூகம்ப நடுக்கத்தின் அதிர்ச்சி அலைகளே (Earthquake Shock Waves) பூமியின் உள்ளமைப்பை மறைமுகமாக நமக்கு அறிவிக்கின்றன ! மனிதரின் நேரிடை அறிவு பூமியின் மேற்தட்டை 5 மைல் (8 கி.மீ.) ஆழத் துளையிட்டுக் கண்டறிந்தவையே ! நிலவையும், செவ்வாய்க் கோளையும் தெரிந்துள்ள அளவு மனிதன் பூமிக்குக் கீழ் 20 மைல் (33 கி.மீ) ஆழத்தில் உள்ள அமைப்பை அறியக் கூடிய நேரிடைக் கருவிகளை இதுவரை கண்டு பிடிக்கவில்லை.!
பூமியின் மேல் ஓடும், இடைப் பகுதியும், நடுப்பகுதியும் அடர்த்தியில் மிகுந்த வித்தியாசப் படுகிறது. அதே போன்று கடல்கள் மலைகள் உள்ள பகுதிகளிலும் இந்த அடர்த்தியானது இடத்துக்குத் தக்கவாறு மாறுபடுகிறது. பூமியின் கீழ் ஐந்து கிலோ மீட்டரில் உள்ள அடர்த்தியும், 30 கிலோ மீட்டரில் உள்ள அடர்த்தியும், 100 கிலோ மீட்டர் ஆழத்திலும் உள்ள அடர்த்தியிலும் பல வித்தியாசங்களைக் காண முடிகிறது. 2900 கிலோ மீட்டர் ஆழத்தில் வெப்பத்தினால் ஆன அடுக்குகள் சூழப்பட்டுள்ளன. லார்வா போன்ற நெருப்புக் குழம்புகளை எல்லாம் நாம் பார்த்திருப்போம்.
http://en.wikipedia.org/wiki/Structure_of_the_Earth
பூமியின் மேல் ஓடுகளானது இரும்பு, மெக்னீஷியம், கால்சியம் போன்ற தனிமங்களால் நிரப்பப்பட்டுள்ளது. கீழே செல்ல செல்ல அடர்த்தி அதிகரிப்பினால் வெப்பமயமானதாக மாறி விடுகின்றது. மனிதன் வாழ்வதற்கு தகுதியாக மேல் பரப்பை குளிராக்கி கீழ் பரப்பை வெப்பமாக்கி அதிலும் மனிதனுக்கு பல நன்மைகளை இறைவன் வழங்கிக் கொண்டிருக்கிறான்.
விஞ்ஞானிகளுக்கு இன்றும் விடுவிக்க முடியாத ஒரு பெரும் புதிராக இருந்து வருவது பூகோளத்தின் கொந்தளிக்கும் விந்தையான உட்புற அமைப்பு ! ஆழமாய்த் துளையிட்டுப் பூமியின் மையத்தைக் கண்ணாலும், கருவியாலும் நோக்க முடியாது ! பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி பிறந்த காலம் முதல் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.
இதுவரை மனிதன் முதல் வானத்தைத்தான் பார்த்திருக்கிறான். மற்ற ஆறு வானங்கள் மனிதனால் நெருங்க முடியாத தொலைவில் உள்ளது. ஆனால் அதன் அமைப்பு பூமியின் ஏழு அடுக்குகளைப் போன்று அமைந்துள்ளதாக குர்ஆனின் வசனத்திலிருந்து அறிகிறோம். மேல் வானத்தைப் பற்றிய ஆராய்ச்சி நமக்கு தற்போது தேவையில்லை என்றாலும் ஒரு தகவலுக்காக தெரிந்து கொள்வோம்.
வானங்களை ஏழு அடுக்குகளாக படைத்ததாக இறைவன் இங்கு கூறுகிறான். மற்றொரு வசனத்தில் வானத்தை போன்று பூமியையும் ஏழு அடுக்குகளாக படைத்திருப்பதாக குர்ஆன் கூறுகிறது. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆச்சரியமாக பூமியின் உள் கட்டமைப்பு ஏழு அடுக்குகள் என்று கூறுகிறது. இதனை இந்த படம் சிறப்பாக விளக்குவதைப் பார்க்கலாம்.
'அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்த முரண்பாடுகளையும் நீர் காண மாட்டீர். மீண்டும் பார்ப்பீராக! ஏதேனும் குறையைக் காண்கிறீரா?'
-குர்ஆன் 67:3
'அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அலலாஹ்வே ஏழு வானங்களையும் பூமியில் அது போன்றதையும் படைத்தான். அவற்றிற்கிடையே கட்டளைகள் இறங்குகின்றன.'
-குர்ஆன் 65:12
"அவற்றிற்கிடையே கட்டளைகள் இறங்குகின்றன"
உயிரற்ற பொருட்களுக்கு கட்டளைகள் எவ்வாறு இறங்குகின்றன என்ற கேள்வி நமக்கு எழுவது இயல்பே! இறைவனுடைய ஆற்றல் எப்படிப்பட்டது என்றோ அல்லது அவனது ஆற்றல் எதை எல்லாம் உள்ளடக்கியது என்றோ நம்மால் ஒருக்காலும் விளங்க முடியாததாகும். அவன் அனைத்து சார்பியல் நிலைகளையும் ஒப்பீடுகளையும் கடந்து தமக்குத் தாமே சம்பூரணமானவன். எனவே அவனது அறிவாற்றலுக்கு முன்னால் உயிருள்ளவை உயிரற்றவை என்ற பாகுபாடு கிடையாது.
காய்ந்து இறந்து விட்டதாக நினைக்கும் ஒரு விதையை பல வருடங்களுக்குப் பிறகும் மண்ணில் போட்டு கொஞ்சம் தண்ணீரையும் ஊற்றினால் பூமியை பிளந்து கொண்டு செடி வெளி வருவதைப் பார்க்கிறோம். இது எவ்வாறு நிகழ்கிறது? அந்த மண்ணுக்கு இந்த கட்டளையை அளித்தது யார்? என்ற கேள்வி வருகிறதல்லவா?
மனிதர்களாகிய நாம் கூட உயிரற்ற பொருட்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்வதைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு விண்வெளிக்கு செலுத்தப்படும் ராக்கெட்டை எடுத்துக் கொள்வோம். அதை விண்ணில் செலுத்தவதற்கும் அது விண்வெளியில் செய்யப்படக் கூடிய வேலைகளையும் நாம் பூமியில் இருந்து கொண்டே கட்டளைகளை அதற்கு பிறப்பிக்கிறோம். அவைகள் நமது கட்டளைகளை உடன் நிறைவேற்றுகின்றன. (சம்பள உயர்வு கேட்பதில்லை: வேலை நிறுத்தமும் செய்வதில்லை.:-)) இயக்கத்தில் சில குறைபாடுகள் இருந்தால் அதையும் சரி செய்ய சொல்லி அவை சமிக்ஞை தருகிறது. பொறியாளர்கள் சரி செய்தவுடன். அவை தங்களின் வேலைகளை சரி வர செய்கின்றன. இந்த பொருட்களுடன் நாம் உரையாட மனித மொழிகளை உபயோகிக்காமல் மின் அணு மொழியில் இயந்திரங்களோடு உரையாடுவதால் அவற்றின் வேலைகளை நம்மால் வாங்க முடிகிறது. எனவே உயிரற்ற பொருட்கள் விளங்கும் மொழியில் நமது பரிமாற்றம் இருந்தால் அத்தகைய அறிவு நமக்கு கொடுக்கப்பட்டிருந்தால் எவற்றுடனும் நம்மால் சம்பாஷனை நடத்த முடியும் என்று அறிகிறோம். அற்பனான மனிதன் ராக்கெட்டுகளோடு உரையாடும் போது நம்மை படைத்த இறைவன் மலைகளோடும், காற்றோடும் நதிகளோடும் மண்களோடும் உரையாட கருத்துப் பரிமாற்றம் செய்ய வல்லமை உடையவனே என்றும் நாம் நம்புவோம்.
-------------------------------------------------------
இந்து மத புராணங்களில் ஒன்றான ஸ்ரீமத் பாகவதம் இந்த பூமியானது ஏழு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது.
This earth planet is divided into seven dvīpas by seven oceans, and the central dvīpa, called Jambūdvīpa, is divided into nine varṣas, or parts, by eight huge mountains. Bhārata-varṣa is one of the above-mentioned nine varṣas, and Ketumāla is also described as one of the above varṣas. It is said that in Ketumāla varṣa, women are the most beautiful. This varṣa was conquered by Arjuna also. A description of this part of the world is available in the Mahābhārata (Sabhā 28.6).
உலக மக்கள் அனைவருக்கும் இறைவன் வேதங்களை அருளியதாக கூறுகிறான். அந்த மாற்றப்படாத வேதங்களில் சொல்லப்பட்ட செய்திகளை உள்வாங்கி இது போன்ற புராணங்களில் ஆங்காங்கே கோடிட்டுக் காட்டியுள்ளனர் இதனை இயற்றியவர்கள்.
ஆய்வுக்கு உதவிய தளங்கள்:
/wiki/This_earth_planet_is_divided_into_seven_dvipas_by_seven_oceans,_and_the_central_dvipa,_called_Jambudvipa,_is_divided_into_nine_varsas,_or_parts,_by_eight_huge_mountains._Bharata-varsa_is_one_of_the_above-mentioned_nine_varsas
http://vaniquotes.org
http://en.wikipedia.org/wiki/Structure_of_the_Earth
http://pubs.usgs.gov/gip/dynamic/inside.html


