Followers

Tuesday, October 30, 2012

நிலம் புயல் நீர்த்துப் போக வேண்டும்!


அமெரிக்காவை நேற்று போட்டு புரட்டி எடுத்த புயலின் வேகம் அடங்குவதற்குள் நம் தமிழகத்தை நிலம் புயல் நாளை தாக்கப் போகிறதாம். ஏற்கெனவே வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை கொட்டித் தீர்க்கிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் ஏற்கெனவே மழையினால் அனைத்து இடங்களும் தண்ணீரில் மிதக்கின்றன. வடிகால் வசதி இல்லாததால் 70, 80 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் வசிக்கும் இந்த நகரம் இன்று செய்வதறியாது தவிக்கிறது. ஒவ்வொரு மழைக் காலங்களிலும் இதே நிலைதான்.

ஏரிகள் நகரமான செங்கல் பட்டில் அநேக ஏரிகளை ரோடுகளாகவும் குடியிருப்பு இடங்களாகவும் மாற்றி விட்டனர். அந்த இடங்கள் எல்லாம் தூர் வாரப்பட்டு ஏரிகளாக முறையாக பராமரிக்கப்பட்டால் இந்த தொல்லையே இருக்காது. தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் நமது அரசாங்கம் தண்ணீர் தேங்கும் என்று எதிர் பார்க்கப்படும் இடங்களில் எல்லாம் இயந்திரங்களைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளதாம். இது ரெட்டிப்பு செலவு இல்லையா? மேலும் இது நிரந்தர தீர்வும் கிடையாது. இயந்திரங்கள் எடுக்கும் தண்ணீரும் வீணாக கடலில் போய்தான் கலக்கும். தண்ணீர் பிரச்னையில் எத்தனையோ கிராமங்கள் அல்லல் பட்டுக் கொண்டிருக்க நாமோ வரும் மழை நீரை சேகரிக்காமல் கடலில் வீணாக கலக்க விடுகிறோம். தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 12 டி எம் சி தண்ணீர் நமக்கு கிடைக்கிறது. இந்த கிருஷ்ணா நீரோடு மழை நீரும் சேர்ந்து கொண்டால் அனைத்தையும் சேமிக்க ஏரிகள் ஒழுங்கான முறையில் இல்லாததால் அனைத்து உபரி நீரும் வீணாக கடலில் கலக்கிறது. பாலாறு வழியாக ஆண்டுக்கு, 7 டி.எம்.சி.,யும், அடையாறு மூலம், 2 டி.எம்.சி.,யும் மழை நீர் கடலில் சேர்கிறது. பள்ளிக்கரணை படுகையில் உள்ள, 33 ஏரிகளில் இருந்து ஆண்டுக்கு ஒரு டி.எம்.சி., மழை நீர் கடலுக்கு செல்கிறது. இதை தடுக்க ஆட்சியாளர்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்?..

சென்னை கடலூரை இப்புயல் நாளை மதியம் கடக்கும் போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை துறைமுகம் பகுதியில் ஏழாம் நம்பர் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது மேலும் பீதியைக் கிளப்புகிறது. ஒரு மீட்டர் உயரத்துக்கு அலைகள் சீறுமாம். தமிழகத்தின் 11 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. அரசு மிக துரித நடவடிக்கை எடுத்து உயிர்ப் பலிகளும் பொருள் சேதமும் ஏற்படாமல் முடிந்த வரை காக்க வேண்டும். அரசே அனைத்தும் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் இல்லாமல் தற்போதே தடுப்புகளை ஏற்படுத்தி வெள்ளம் வீடுகளுக்குள் செல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

----------------------------------------------------------


குரு பூஜையில் கொலை!

தமிழகம் முழுவதும் நிலம் புயல் பயத்தால் உறைந்து போயிருக்க நேற்று பசும் பொன் கிராமத்தில் 105 வது தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டுள்ளது. அது சமயம் அங்கு நடந்த சாதி மோதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது அதிர்ச்சியை தருகிறது. ஒரு வேனில் குரு பூஜைக்கு சென்றவர்களை ஒரு கும்பல் மறித்ததாகவும் எனவே வேறு பாதையில் சென்று அங்கும் கலவரம் ஏற்பட்டு டிரைவரை வெட்டியுள்ளார்கள். சிவகுமார், வீரமணி, மலைக் கள்ளன் என்ற மூன்று பேரும் இறந்ததாக போலீசாரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் பரமக்குடியில் தலித் மக்களின் தலைவராகக் கருதப்படுகிற மறைந்த இமானுவேல் சேகரனின் அஞ்சலிக்காக குழுமிய தலித்துக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியதில் ஆறு பேர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது..

ஒவ்வொரு முறையும் இது போல் சாதி தலைவர்களால் பிரச்னை வருகிறது. ஒன்று இதற்கு தடை விதிக்க வேண்டும். அல்லது பலத்த போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். இப்படி வருடா வருடம் வெளியூர்களில் இருந்து ஆட்கள் வந்து பூஜை செய்தால்தான் தேவரின் பெருமை அல்லது இமானுவேலுவின் பெருமை பறை சாற்றப்படுமா?

இன்று மூன்று இளைஞர்களின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. எத்தனை கனவுகளோடு வாழ்ந்தார்களோ இன்று அநியாயமாக சாதிக் கொடுமையால் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளார்கள். இதற்கு பதிலடியாக இனி எதிர் தரப்பு களத்தில் இறங்கும். ஏன் இந்த வெறி? எதைக் கொண்டு போகப் போகிறோம்?

முஹர்ரம் ஊர்வலம், மீலாது ஊர்வலம், விநாயக சதுர்த்தி ஊர்வலம், சாதி தலைவர்களின் ஊர்வலம் நினைவு நாட்கள், தலைவர்களின் சிலைகள் என்று அனைத்தையும் தடை செய்து சட்டம் இயற்றினால் இது போன்ற விஷமிகளின் செயல் கட்டுக்குள் கொண்டு வரப்படும். ஆனால் ஓட்டுக்களை எதிர் பார்த்து இதை செய்ய அரசுகள் தயங்குகின்றன. எந்த அரசியல் கட்சி தலைவர்களும் யாரையும் கண்டித்து அறிக்கையும் விட மாட்டார்கள். ஏனெனில் அப்படி அறிக்கை விட்டால் அவர்களுக்கு ஓட்டு போய் விடுமே என்ற பயம். அரசாங்கமும் இரண்டு லட்சத்தை கொடுத்து தனது கடமையை செய்ததாக சொல்லிக் கொள்ளும். நாடு போகும் பாதையை நினைத்தால் பயமாக இருக்கிறது. அனைத்து மக்களும் அமைதியாக வாழக் கூடிய சூழலை உண்டாக்க பிரார்ததிப்போம்..

-----------------------------------------------------------

நேற்றைய புயலுக்குப் பிறகு அமெரிக்கா!








12 comments:

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

நீலம் புயல் கரையை எந்த வித சேதமும் இல்லாமல் எல்லாம் நலமோடு இருக்க அந்த இறைவனை பிராத்திக்கிறேன்.

சாதி, மத ஊர்வலத்தை நிறுத்தினாலே இதை போன்ற கொலைகள் நடக்காமல் இருக்கும் ஆனால் சாதி, மத அரசியல் செய்யும் கட்சிகள் இருக்கும் வரை இந்த ஊர்வலங்கள் ஒழியாது மாறாக இது போன்ற கொலைகள் நடந்து கொண்டு தான் இருக்கும்.

//இப்படி வருடா வருடம் வெளியூர்களில் இருந்து ஆட்கள் வந்து பூஜை செய்தால்தான் தேவரின் பெருமை அல்லது இமானுவேலுவின் பறை சாற்றப்படுமா?//

நச் கேள்வி.

NKS.ஹாஜா மைதீன் said...

நிலம் புயல் தென்றலாக வீசி சேதாரங்கள் இல்லாமல் கரையை கடக்க இறைவன் உதவி செய்ய வேண்டும்.....

suvanappiriyan said...

சகோ ஹாஜா மைதீன்!

//நீலம் புயல் கரையை எந்த வித சேதமும் இல்லாமல் எல்லாம் நலமோடு இருக்க அந்த இறைவனை பிராத்திக்கிறேன்.//

உங்களோடு சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்.

suvanappiriyan said...

சகோ என்எஸ்கே ஹாஜா மைதீன்!

//நிலம் புயல் தென்றலாக வீசி சேதாரங்கள் இல்லாமல் கரையை கடக்க இறைவன் உதவி செய்ய வேண்டும்.....//

உங்களோடு சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்.

UNMAIKAL said...

ஹைதராபாத் : முஸ்லிம் கடைகளுக்கு தீ வைப்பு; 144 தடை உத்தரவு அமல்!

Tuesday, 30 October 2012 14:24 MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்


OCT 30, ஹைதராபாத்தை அடுத்த "தப்ப சபூத்தரா" காவல் நிலைய எல்லைக்குட்பட்ட "சப்ஸி மண்டி" பகுதியில்,

நேற்று மாலை முஸ்லிம்களின் கடைகள் "தீ" வைத்துக்கொளுத்தப்பட்டன.

கடந்த 10 தினங்களாகவே "குர்பானி"க்கு கொண்டு வரப்படும் மாடுகளை அபகரித்தும், சிறு சிறு சண்டை சச்சரவுகளிலும் ஈடுபட்டு வந்தனர், ஹிந்துத்துவ ஆதிக்க சக்திகள்.

பக்ரீத் பெருநாள் முடிந்த பிறகும், கடந்த 28 ந்தேதி அன்று "சப்ஸி மண்டி" பகுதியில் உள்ள "தர்கா"வை சேதப்படுத்திய கும்பல் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

இதற்கிடையில், போலீஸ் பாதுகாப்பையும் மீறி நேற்று ஒரு கும்பல், முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைத்தது.

கலவரக்காரர்கள் "கன்னடம்" மற்றும் "மராட்டிய" மொழிகளில் குரல் கொடுத்த வண்ணம் ரவுடித்தனம் செய்ததாக, உள்ளூர் மக்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

நிலமையின் கடுமையை உணர்ந்த, மேற்கு மண்டல டி.ஸி.பி., ஸ்டீபன் ரவீந்தர், ஏ.ஸி.பி.டி., ஸ்ரீனிவாஸ், ஆகியோர் தலைமையில், ஏ.ஸி.பி.டி., நாகராஜ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கிரண்குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், சம்பவ இடத்தில் முகாமிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

காயமடைந்தவர்கள் குறித்து இதுவரை தகவல் இல்லை.

என்றாலும், கலவரம் பரவாமல் தடுக்க நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

"கன்னடம்" மற்றும் "மராட்டிய" மொழி பேசக்கூடிய கலவரக்காரர்கள் எங்கிருந்து வந்தனர்?

அவர்களை யார் அழைத்து வந்தனர்?


போன்ற கேள்விகளுக்கு, பதில் தெரியாமல் முஸ்லிம்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.


http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/583--144-

UNMAIKAL said...

அக்பராபாதி பள்ளிவாசலை இடிக்க "உச்சநீதிமன்றம்" இடைக்கால தடை!

Wednesday, 31 October 2012 06:10 MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்


OCT 31, டெல்லி செங்கோட்டை அருகே உள்ள "அக்பராபாதி" பள்ளிவாசலை இடிக்கும்,

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு,

உச்சநீதிமன்றம் நேற்று இடைக்கால தடை வித்தித்தது.

டெல்லி செங்கோட்டை அருகே "முகலாயர்" காலத்தில் கட்டப்பட்டு,

வெள்ளையர் ஆட்சியின் போது இடிக்கப்பட்டு,

மீண்டும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு "ஜும்மா" உள்ளிட்ட 5 நேர தொழுகையும் நடந்து வந்த "வரலாற்று சிறப்பு மிக்க அக்பராபாதி பள்ளிவாசலை" இடித்து தரைமட்டமாக்க,

இந்தாண்டு ஜூலை 30 அன்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பள்ளிவாசலை இடிப்பது, சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் செயலாக அமைந்துவிடும், எனக்கூறி டெல்லி போலீஸ், அதே நீதிமன்றத்தில் முறையிட்டது.

வேக-வேகமாக விசாரித்த நீதிபதி, டெல்லி போலீஸ் தரப்பில் தொடர்ந்த வழக்கை, அக்டோபர் 19ல் (2மாதத்துக்குள்) தள்ளுபடி செய்துவிட்டார்.

அத்துடன், வினோதமான ஒரு தீர்ப்பையும் வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம்.

அது, "பாபர் மசூதி" வழக்கில் சொல்லப்பட்ட தீர்ப்புக்கு எந்த வகையிலும் சளைத்த தீர்ப்பல்ல.

அதாவது, தாங்கள் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், 15 நாட்களுக்குள் மசூதியை இடித்து தரைமட்டமாக்கி விடவேண்டும்.

அதன் பிறகு, அந்த இடத்தில் "முகலாயர்" காலத்தில் மசூதி இருந்தது உண்மையா? என ஆய்வு செய்து, தொல்லியல் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும், என்று வினோதமான ஒரு தீர்ப்பை வழங்கியது.


பள்ளிவாசலை எதிர்த்து, எவரும் வழக்கு தொடுக்காத நிலையில், டெல்லி ஹைகோர்ட், தானே முன்வந்து எடுத்துக்கொண்ட வழக்கு இது, என்பதையும் இப்போது நினைத்து பார்க்க கடமை பட்டுள்ளோம்.

உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு, டெல்லி மாநகராட்சியை, தன் வசம் வைத்துள்ள "பா.ஜ.க." முழு ஆதரவளித்து வருகிறது.

உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடிகளுக்கு எதிராக, முஸ்லிம்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

வழக்கை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்த்மாஸ் கபீர், நீதியரசர்கள் சுரேந்தர் சிங், ஜே.செலமேஷ்வர் ஆகியோர் கொண்ட அமர்வு, அக்பராபாதி பள்ளிவாசல் இடிப்புக்கு வரும் வியாழக்கிழமை வரை தடை வித்தது தீர்ப்பு கூறியுள்ளனர்.

மேலும், இந்த வழக்கு சம்மந்தமாக மத்திய அரசு, டெல்லி மாநில அரசு, தொல்லியல் துறை, உள்ளிட்ட எல்லா தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்க விரும்புவதாகவும், நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/584--q-q-

UNMAIKAL said...

வரலாற்றுக் கருவூலங்கள் காப்பற்றப்படுமா?


1857 ஆம் ஆண்டு நடந்த முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது

முகலாயச் சக்கரவர்த்தி பகதூர்ஷா ஜாஃபரின் தலைமமையிலான புரட்சிப் படையினரிடமிருந்து டெல்லியைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் டெல்லி முழுவதையும் அழித்துவிட எண்ணினர்.

அக்பராபாதி பள்ளிவாசல் மட்டுமல்லாது காஜ்மீரிகத்ரா மஸ்ஜித் மற்றும் ஜாமிஆ மஸ்ஜிதின் சுற்றுப்புற பகுதிகளும் தரைமட்டமாக்கப்பட்டன.

வணிகர்கள் மற்றும் வழிப்போக்கர்கள் தங்குவதற்காக முகலாய மன்னர் ஷாஜகானின் மகள் திவானி ஜஹானராவால் கட்டமைக்கப்பட்ட கரவன்சேரையும் அழிக்கப்பட்டது.

சோட்டாரங் மஹால், ஹயாத் பக்ஷ்பாக், மெஹ்தப்பாக் போன்றவையும், அரண்மனைத் தோட்டங்களும்கூட அழிவிலிருந்து தப்பவில்லை.

பேரரசர் ஔரங்கசீப் முடிசூட்டிய இடமான சாலிமர்பாக்கும் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டது.

முகலாய மாமன்னா; ஷாஜகானால் உருவாக்கப்பட்ட முகலாயத் தலைநகரான டெல்லியை முற்றிலுமாக அழித்து,

முகலாயர்கள் டெல்லியை தலைநகராகக் கொண்டு இந்தியாவை ஆண்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லாமல் செய்திட வேண்டும்

என்று ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களை அழித்துக் கொண்டிருந்த சமயத்தில்

1858 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி மாநகரம் ஜான் லாரன்ஸ் என்னும் ஆங்கிலேய தலைமை ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜான் லாரன்ஸின் கட்டுப்பாட்டின் கீழ் டெல்லி வந்ததும் அவர் ஓரளவிற்கு டெல்லியை அழிவிலிருந்து காப்பாற்றினார்.

வெள்ளையர்கள் டெல்லி ஜிம்மா மஸ்ஜித் மற்றும் அரண்மனைச் சுவர்களையும் அழிப்பதற்கு திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் இத்திட்டத்தை ஜான் லாரன்ஸ் தடுத்து நிறத்தி புகழ்பெற்ற ஜிம்மா மஸ்ஜிதை அழிவிலிருந்து காப்பாற்றினார்.

உலகிற்கு இந்தியாவை அடையாளம் காட்டியது ஆக்ரா மற்றும் டெல்லியில் உள்ள முகலாயர்களால் கட்டப்பட்ட, கலை நுணுக்கங்கள் மிகுந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைகளும், கட்டிடங்களும், மஸ்ஜித்களும் தான்.

ஆனால் இன்று எஞ்சி இருப்பது முகலாயர்களால் கட்டப்பட்டவைகளில் இருபது சதவிகிதமே.

மீதி எண்பது சதவிகித கட்டிடங்கள் வெள்ளையர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.


முகலாயர்களிடமிருந்து டெல்லி ஆங்கிலேயர்களின் வசமானதும் பெரும் மாற்றத்தைச் சந்தித்தது.

ஆங்கிலேயத் தளபதி வில்ஸன் தலைமை முகாமை டெல்லி செங்கோட்டையில் உள்ள அரண்மனைக்கு மாற்றினார்.

செங்கோட்டை வெள்ளையர்களின் இராணுவக் குடியிருப்பாக மாற்றப்பட்டது.

பேகம்பாக் என்ற தோட்டம் குயின்ஸ் கார்டன் என்றும், லாகூர் தர்வேஸா என்ற நுழைவாயில் விக்டோரியா கேட் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1857 புரட்சியில் முஸ்லிம்கள் அதிக அளவில் பங்கேற்றதால் முஸ்லிம் விரோதப் போக்கை கையாண்ட வெள்ளையர்கள்

முஸ்லிம்களை டெல்லியை விட்டு வெளியேற்றி அவர்களின் சொத்துக்களை ஏலம் விட்டனர்.

1857 புரட்சியில் முஸ்லிம்களின் மகத்தான பங்களிப்பைக் கண்டு அதிர்ந்த வெள்ளையர்கள் இந்தியாவில் இந்து மற்றும் முஸ்லிம்களிடத்தில் பிளவை உண்டு பண்ணவும்,

முஸ்லிம்களின் தியாகத்தையும், இந்தியாவிற்கான பங்களிப்பையும் மறைக்கும் பொருட்டு வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களை இடித்ததோடு மட்டுமல்லாமல், வரலாற்றில் கைவைக்க ஆரம்பித்தனர்.

1857ஆம் ஆண்டிற்கு பிறகு வெளிவந்த பெரும்பாலான புத்தகங்கள் முகலாய மன்னர்களை மதவாதிகளாகவும்,

வன்மையாளர்களாகவும் முஸ்லிம்களை அந்நியராகவும் சித்தரித்து எழுதப்பட்டவையே.


இந்நிலை சுதந்திரத்திற்குப் பின்பும் தொடர்வது வாய்ப்புக்கேடானது.

அக்பராபாதி மஸ்ஜித் மீதான பார்வை இன்று அதிகரித்திருக்கும் நிலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அப்பள்ளியை மீண்டும் கட்டமைத்து வரலாற்றை புதுப்பிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

அக்பராபாதி மஸ்ஜிதை அரசு மதக் கண்ணோட்டத்தோடு பார்க்காமல் இந்திய நாட்டு வீர வரலாற்றின் சாட்சியாகவும்,

கலை நுணுக்க பொக்கிஷமாகவும்,

இந்திய தேசத்தின் சொத்தாகவும் பார்த்து அதனை மீண்டும் கட்டமைக்க ஆவன செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

நன்றி: சமரசம் 1-15 செப்பம்பர் 2012

UNMAIKAL said...

புகைப்பிடிக்கும் கணவரை விவாகரத்து பெறும் உரிமை பெண்களுக்கு உண்டு! – சவூதி நீதிபதி அதிரடி!

18 Jul 2012

புகைப்பிடிக்கும் கணவரை விவாகரத்து பெறும் உரிமை பெண்களுக்கு உண்டு! - சவூதி நீதிபதி அதிரடி!

ரியாத்:புகைப்பிடிக்கும் கணவரிடமிருந்து விவாகரத்து பெறும் உரிமை பெண்களுக்கு உண்டு என்று சவூதி அரேபியாவின் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

சவூதி பத்திரிகையான அல் வத்வான் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

கணவன்மார்களின் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் அவதியுற்ற பெண்கள் அளித்த மனுவின் மீதான விசாரணையின் இறுதியில் காழி(நீதிபதி) டாக்டர் இப்ராஹீம் குழைரி,

இஸ்லாமிய ஷரீஅத்(சட்டத்திட்டம்) நிச்சயித்துள்ள(கணவனுக்கான) குறைபாடுகளில் புகைத்தலும் அடங்கும்.

எனவே பெண்களுக்கு புகைப்பிடித்தல் மூலம் கணவர் மீது அதிருப்தி ஏற்பட்டால் விவகாரத்து செய்யலாம் என தீர்ப்பளித்தார்.

SOURCE: http://www.thoothuonline.com/

UNMAIKAL said...

இஸ்லாம் எனக்கு மகிழ்ச்சியையும், அன்பையும் தந்தது:

இஸ்லாத்தை தழுவிய முன்னாள் நடன மங்கை ஹீதர் மாத்யூஸ்!


30 Oct 2012 islam is the solution

லண்டன்:அரைக்குறை ஆடையுடன் இரவு விடுதிகளில் நடனமாடிய பிரிட்டனைச் சார்ந்த ஹீதர் மாத்யூஸ் என்ற 27 வயது பெண்மணி,

இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட பின் அதன் மூலம் கிடைத்துவரும் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.

இதுவரை கிடைக்காத மகிழ்ச்சியும், பாதுகாப்பும், அன்பும்

முஸ்லிமாக மாறி பர்தா அணிந்து தலையை மறைக்க துவங்கியவுடன் கிடைப்பதாக பிரிஸ்டன் நகரைச் சார்ந்த மாத்யூஸ் கூறுகிறார்.

2 பெண் குழந்தைகளுக்கு அன்னையான ஹீதர் மாத்யூஸ், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இஸ்லாத்தை தழுவியிருந்தார்.

முன்னர் மாத்யூஸின் கணவர் இஸ்லாத்தை தழுவியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தனது கணவரை எதிர்ப்பதற்காக குறைகளை கண்டுபிடிக்கும் நோக்கில் இஸ்லாத்தை ஆராயத் துவங்கினார்.

கடந்த ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.

இருப்பினும், ஹீதர் மாத்யூஸ் தனது ஆய்வை தொடர்ந்தார்.

குறைகளை ஆராயத்துவங்கிய ஹீதர் மாத்யூஸின் உள்ளத்தில் இறைவன் ஹிதாயத் என்னும் நேர்வழியை விதைத்தான்.

விளைவு, தனது பாவக்கறைகளை கழுவிவிட்டு இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்கும் முடிவுக்கு வந்தார் அவர்.


பின்னர் அருகிலுள்ள மஸ்ஜிதின் இமாமை இஸ்லாத்தை தழுவ அணுகினார்.

தனது பிள்ளைகளை இஸ்லாத்தை தழுவ நிர்பந்திக்கமாட்டேன் என்று ஹீதர் மாத்யூஸ் கூறுகிறார்.

அவர்கள் இஸ்லாத்தை படித்து ஆய்வு செய்த பிறகு வரட்டும் என்பது மாத்யூஸின் நிலைப்பாடு.

ஆபாசமான தனது முந்தைய புகைப்படங்களை காணும்பொழுது வெட்கம் தோன்றியதாக கூறும் ஹீதர் மாத்யூஸ் மேலும் கூறியது:

”பிறருக்கு வெறுப்பை தூண்டும் ஆடைகளை அணியாதீர்கள்.

குறிப்பாக ஆண்களை தவறான வழியில் சிந்திக்க தூண்டும் வாய்ப்பை பெண்கள், அவர்கள் அணியும் ஆடை மூலமாக அளித்துவிடக்கூடாது.

இஸ்லாம் பாதுகாப்பான ஆடையை அணிய சொல்கிறது.

பைத்தியக்காரத்தனமான உணர்வு அல்ல.

அன்புதான் முக்கியம் என்பதை இஸ்லாம் எனக்கு கற்பித்தது.” இவ்வாறு ஹீதர் மாத்யூஸ் கூறியுள்ளார்.


அனைத்து மத நம்பிக்கையாளர்களும் அடங்கிய ஃபைத் மேட்டர்ஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில்,

ஹீதர் மாத்யூஸ் போன்ற இஸ்லாத்தை தழுவியவர்கள் குறித்தும்,

அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கான காரணங்கள் குறித்தும் தெரியவந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பிரிட்டனில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்.

இதில் 3-ல் 2 பேர் 27 வயதிற்கு கீழ் உள்ள பெண்கள் ஆவர்.

SOURCE: http://www.thoothuonline.com

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் ..சகோ
**முஹர்ரம் ஊர்வலம், மீலாது ஊர்வலம், விநாயக சதுர்த்தி ஊர்வலம், சாதி தலைவர்களின் ஊர்வலம் நினைவு நாட்கள், தலைவர்களின் சிலைகள் என்று அனைத்தையும் தடை செய்து சட்டம் இயற்றினால் இது போன்ற விஷமிகளின் செயல் கட்டுக்குள் கொண்டு வரப்படும். **
எண்ணம் நல்லாத்தான் இருக்கு....ஆனா தடை சட்டம் கண்டிப்பாக வராது ...இவன் இந்த ஜமாத்து காரன்,கட்சிக்காரன்,இன்ன ஜாதி காரன், இன்ன சங்கத்துகாரன் , இன்ன மதத்துக்காரன் என்று இல்லாத பொல்லாத காரணங்களை சொல்லி நிம்மதியாக இருக்கவிடமாட்டாங்க .
சேதாரம் இல்லா புயல் வரட்டும் அப்பத்தான் நல்ல மழை கொட்டும் ...

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ நாசர்!

//எண்ணம் நல்லாத்தான் இருக்கு....ஆனா தடை சட்டம் கண்டிப்பாக வராது ...இவன் இந்த ஜமாத்து காரன்,கட்சிக்காரன்,இன்ன ஜாதி காரன், இன்ன சங்கத்துகாரன் , இன்ன மதத்துக்காரன் என்று இல்லாத பொல்லாத காரணங்களை சொல்லி நிம்மதியாக இருக்கவிடமாட்டாங்க .
சேதாரம் இல்லா புயல் வரட்டும் அப்பத்தான் நல்ல மழை கொட்டும் ...//

வருங்காலங்களிலாவது இதற்கெல்லாம் முயற்சி எடுத்தால் நல்லது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//இஸ்லாம் எனக்கு மகிழ்ச்சியையும், அன்பையும் தந்தது:

இஸ்லாத்தை தழுவிய முன்னாள் நடன மங்கை ஹீதர் மாத்யூஸ்!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!