Followers

Showing posts with label இயற்கை பேரிடர். Show all posts
Showing posts with label இயற்கை பேரிடர். Show all posts

Saturday, September 06, 2014

மத்திய பிரதேசத்தில் இஸ்லாத்தை ஏற்ற நான்கு பேர் கைது!





மத்திய பிரதேசம் போபால்: இங்குள்ள சிவபுரி கிராமத்தில் துலாராம் ஜாதவ், மணிராம் ஜாதவ்,கேஷவ், மக்குபாய் ஜாதவ் என்ற பெயர்களுடைய நான்கு தலித்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டனர். இதில் மணிராம் ஜாதவ் தனது பெயரை அப்துல்லா என்று மாற்றிக் கொண்டுள்ளார். இவர்களின் மனைவிகளும் இஸ்லாத்தை ஏற்க பரிபூரண சம்மதம் தெரிவித்துள்ளனர். தீண்டாமைக் கொடுமை, கூட்டு பாலியல் வன் புணர்வு, கொலை என்று தினமும் தீண்டாமையால் அவதிப்படும் இந்த மக்கள் விடிவு தேடி இஸ்லாத்தை நோக்கி செல்கின்றனர். இது பொறுக்குமா இந்துத்வாவாதிகளுக்கு?

காவல் துறையில் சென்று கட்டாய மத மாற்றம் நடக்கிறது என்று புகார் கொடுத்துள்ளனர். மத்தியிலும் மாநிலத்திலும் காவிகளே ஆட்சி செய்வதால் காவல் துறை அந்த நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அதன் பிறகு நீதி மன்றத்தில் நடந்த விசாரணையில் நான்கு பேருமே "நாங்கள் எவராலும் நிர்பந்திக்கப்படவில்லை. எங்களின் சுய சிந்தனையோடு இந்த முடிவை எடுத்துள்ளோம். குர்ஆனின் சட்டங்களை படித்து விளங்கியே இந்த மாற்றத்தை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்" என்று ஆணித்தரமாக சொன்னார்கள். வேறு வழியின்றி இவர்கள் அனைவரையும் விடுதலை செய்தது நீதி மன்றம்.

மதம் மாறுதல் சம்பந்தமான கோர்ட் ஆணை 1968ன் படி ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாறினால் அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்து அதன் பிறகே மாற முடியும். இதனை மீறுபவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனைக் கூட அரசால் கொடுக்க முடியுமாம். நேற்று இது சம்பந்தமாக கோர்ட்டில் கையெழுத்திட நால்வரும் வந்த போது விஎச்பி, பஜ்ரங்தள் போன்ற இந்துத்வாவாதியினர் இந்த நால்வருக்கு எதிராக ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பிக் கொண்டு வந்தனர். இஸ்லாத்துக்கு இவர்கள் சென்று விட்டால் அடிமைகள் நமக்கு எங்கிருந்து கிடைப்பார்கள் என்ற ஆற்றாமை இந்துத்வாவாதியினரான உயர்ஜாதி இந்துக்களுக்கு இருந்திருக்கலாம். ஆதிக்க சாதியினர் தலித்களை சமமாக நடத்தவும் மாட்டார்கள்! சமத்துவம் இஸ்லாத்தில் கிடைக்கிறது என்று அங்கு சென்றால் அங்கும் காவல்துறையையும், நீதி மன்றத்தையும் அவர்களிடம் காட்டி பயமுறுத்தினால் அவர்களுக்கு என்னதான் வழி என்றாவது இந்துத்வாவாதிகள் சொல்லட்டுமே!

மத்தியிலும் மாநிலத்திலும் இந்துத்வா ஆட்சி நடக்கிறது. அப்பாவி முஸ்லிம்கள் பலர் பொய் வழக்குகளில் சிக்க வைக்கப்படுகின்றனர். இஸ்லாமியர்களின் எதிர்காலம் இந்தியாவில் கேள்விக்குறியாக இருக்கிறது. இத்தனை இடர்பாடுகள் இருந்தும் இந்த மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி ஏன் வருகிறார்கள்? தவறு எங்கிருக்கிறது? என்று இனிமேலாவது இந்துத்வாவாதியினர் சிந்திக்க மாட்டார்களா?

சிந்திப்பீர்களா? இனி நீங்கள் சிந்திப்பீர்களா? தலித்களை சமமாக நடத்துவீர்களா?

தகவல் உதவி
என்டிடிவி
04-09-2014

Thursday, November 08, 2012

இணைய தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியமா?


இணைய தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியமா?



தற்போது ரவி ஸ்ரீவாசனின் கைது பிரதானமாக பேசப்படுகிறது. கார்த்திக் சிதம்பரத்தைப் பற்றி ட்விட்டரில் அவதூறு பிரசாரம் செய்ததாக இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். முதலில் நாட்டின் பிரதம மந்திரியின் அடுத்த ஸ்தானத்தில் வைத்து பார்க்கப்படுபவரான ப.சிதம்பரத்தின் மகனை பற்றி ட்விட்டரில் ஒரு விஷயத்தைப் பதியும் போது அது உண்மைதானா என்று தெரிந்து கொண்டல்லவா பதிந்திருக்க வேண்டும்? நாட்டின் மிக முக்கியமான குடும்ப உறுப்பினரைப் பற்றி அவதூறாக ஒரு செய்தி வெளியிடும் முன் யோசித்திருக்க வேண்டாமா?. தற்போது பிபிசி எந்த ஆதாரத்தை வைத்து இப்படி ஒரு ட்விட்டை பகிர்ந்தீர்கள் என்று கேட்கும் போது அவரால் நேரிடையான பதிலை சொல்ல முடியாது தடுமாறுகிறார்.

எனக்கு ட்விட்டரில் 16 ஃபாலோயர்தான் அப்போது இருந்தனர். இந்த பிரச்னைக்கு பிறகு 800க்கு மேல் ஃபாலோயர்கள் வந்துள்ளதாக சொல்கிறார். பிளாக்கரிலும் கூட ஹிட்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல அவதூறு செய்திகளை தெரிந்தே வெளியிடும் பல பதிவர்களைப் பார்க்கிறோம். இதனால் அந்த தளத்தின் நம்பகத் தன்மையையும் இழக்கின்றனர் என்பதை ஏனோ இவர்கள் உணர்வதில்லை. சம்பந்தப் பட்டவர்களும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எந்த ஒரு செய்தியையும் பதியும் போது அதற்குரிய ஆதாரத்தை வைத்துக் கொண்டு நாம் செய்தி வெளியிட்டால் பின்னால் வரக் கூடிய பிரச்னைகளிலிருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.

சுப்ரமணியம் சுவாமி தனது தம்பியோடு பேசி 'கவலைபடாதீர்கள் நாங்கள் இருக்கிறோம்' என்று சொன்னதாக வேறு சொல்கிறார். ஆக செய்த தவறை ஒத்துக் கொண்டு இனி அவ்வாறு நடைபெறாது என்று சொல்வதற்கு பதில் அந்த தவறை எப்படியாவது பூசி மெழுகவே பார்க்கிறார்.

அதேபோல் பல பதிவர்களும் ஆபாச படங்களை வெளியிடுவது, ஆபாச கதைகளை வெளியிடுவது என்று சகட்டு மேனிக்கு எழுதிக் குவிக்கிறார்கள். இந்த இணையத்தை பல வயதுடையவர்கள் சிறுவர்கள், குடும்பத்து பெண்கள் என்று அனைவரும் வலம் வருகிறோம். இதை உணர்ந்து நமது பதிவர்கள் ஆபாசமாக எழுதுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

அதே போல் மத சம்பந்தமாக அவதூறுகளையும் எழுதுவதில் பலர் தயங்குவதில்லை. சுப்ரீம் கோர்ட்டே தலையிட்டு ஒரு குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நமது ஊடகங்களின் நிலை இருக்கிறது. இணைய எழுத்தாளர்கள் சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டு தங்களின் கருத்துக்களை பதிய வேண்டும்.

நமது அரசு இணைய தளத்திற்கென்று சில விதி முறைகளை வகுக்க வேண்டும். கட்டற்ற சுதந்திரம் ஒரு மனிதனை எதை வேண்டுமானாலும் செய்யச் சொல்லும். எனவே தனி மனித நபர்களைப் பற்றி பிரசுரிக்கும் போது அதற்கான முக்கிய ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்ற சட்ட திருத்தத்தையும் கொண்டு வந்தால் பல அவதூறு பதிவுகள் வெளி வருவது தடுக்கப்படலாம். அதே போல் அநியாயமாக நிரபராதிகள் தண்டிக்க படுவதையும் தடுக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

ரவி ஸ்ரீநிவாசின் பிபிசி பேட்டி



http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/11/121105_twitterarrest.shtml?bw=bb&mp=wm&bbcws=1&news=1

---------------------------------------------------------------------
.
வேலூரில் கடந்த அக்டோபர் 23 ந்தேதி மருத்துவ மனைக்கு அருகில் அரவிந்த ரெட்டி என்ற பாஜக உறுப்பினர் படுகொலை செய்யப்படுகிறார். காவல் துறை 'நிலம் சம்பந்தப்படட முன் விரோதத்தில் இந்த கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளது' என்று சொல்கிறது. ஆனால் பாஜகவினரோ 'இந்த கொலை நாங்கள் வளர்வதை பொருக்காத இஸ்லாமிய இயக்கங்களால் நடத்தப் பட்டிருக்கலாம்' என்று இணையத்தில் சகட்டு மேனிக்கு எழுதுகிறார்கள். தேர்தல் வேறு நெருங்குகிறது. பாஜக வை இந்த வகையிலாவது தூக்கி நிறுத்தலாம் என்பது இவர்களின் எண்ணம்.

இந்த இந்துத்வாவினர் தாங்கள் ஆட்சிக்கு வருவதற்காக எதையும் செய்யக் கூடியவர்கள். பொய்யான காரணத்தைக் கூறி பாபரி மசூதியை இடித்து ரத்த ஆறு ஓட விட்டனர். கோத்ராவில் நடந்த ரயில் விபத்தை 'முஸ்லிம்களின் சதி' என்று கூறி ரத்த ஆறு ஓட விட்டனர். மாலேகானில் குண்டு வைத்து முஸ்லிம்களை கொன்று அதற்கு காரணம் என்று அந்த ஊர் முஸ்லிம்களையே கைது செய்தனர். பிறகு ஹேமந்த் கர்கரே வந்து உண்மையை கண்டறிந்து சாது பிரக்யாசிங்கை உள்ளே தள்ளினார்.

தற்போது அரவிந்த ரெட்டி கொலையை மத சாயம் பூசி தமிழகத்தில் ஓட்டு அரசியல் நடத்தப் பார்க்கிறது பிஜேபி. அதே போல் மேட்டுப் பாளையத்தில் ஆனந்த் என்பவர் சில சமூக விரோதிகளால் தாக்கப்பட்டுள்ளார். இவரும் பிஜேபி உறுப்பினர். இதுவும் முஸ்லிம்கள் வேலைதான் என்று பொய்யான காரணத்தை கூறி ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளனர். கடைகளை மூடச் சொன்னதோடு அல்லாமல் அரசு பஸ்ஸையும் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.




இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த வகையிலாவது கலவரத்தை உண்டு பண்ணி பிஜேபி யை வளர்க்க பார்க்கின்றனர். ஏனெனில் திராவிட இயக்கங்களினால் இந்துத்வா என்பது தமிழகத்தில் கானல் நீராக போய்க் கொண்டிருக்கிறது. மேல்சாதியினரின் ஆதிக்கம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. இழந்த அதிகாரங்களை அரசியல் மூலம் பெற இந்துத்வா துடித்துக் கொண்டிருக்கிறது. அதற்காக பிஜேபியை எப்படியாவது வளர்க்க துடித்துக் கொண்டிருக்கிறது. இது குஜராத் அல்ல. பெரியார் வாழ்ந்த தமிழகம் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள். இந்துத்வாவின் குள்ளநரித்தனங்களை தோல் உரித்துக் காட்டுவதில் முஸ்லிம்களை விட திராவிட இயக்கத்தினரே மும்முரமாக நிற்கின்றனர். நடுநிலையாளர்கள் திராவிட இயக்கத்தினரின் போராட்டங்களுக்கு உரிய ஆதரவை நல்க வேண்டும். தமிழக முதல்வரும் இந்துத்வாவின் கோர முகத்தை உணர்ந்து அவர்கள் மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Tuesday, October 30, 2012

நிலம் புயல் நீர்த்துப் போக வேண்டும்!


அமெரிக்காவை நேற்று போட்டு புரட்டி எடுத்த புயலின் வேகம் அடங்குவதற்குள் நம் தமிழகத்தை நிலம் புயல் நாளை தாக்கப் போகிறதாம். ஏற்கெனவே வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை கொட்டித் தீர்க்கிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் ஏற்கெனவே மழையினால் அனைத்து இடங்களும் தண்ணீரில் மிதக்கின்றன. வடிகால் வசதி இல்லாததால் 70, 80 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் வசிக்கும் இந்த நகரம் இன்று செய்வதறியாது தவிக்கிறது. ஒவ்வொரு மழைக் காலங்களிலும் இதே நிலைதான்.

ஏரிகள் நகரமான செங்கல் பட்டில் அநேக ஏரிகளை ரோடுகளாகவும் குடியிருப்பு இடங்களாகவும் மாற்றி விட்டனர். அந்த இடங்கள் எல்லாம் தூர் வாரப்பட்டு ஏரிகளாக முறையாக பராமரிக்கப்பட்டால் இந்த தொல்லையே இருக்காது. தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் நமது அரசாங்கம் தண்ணீர் தேங்கும் என்று எதிர் பார்க்கப்படும் இடங்களில் எல்லாம் இயந்திரங்களைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளதாம். இது ரெட்டிப்பு செலவு இல்லையா? மேலும் இது நிரந்தர தீர்வும் கிடையாது. இயந்திரங்கள் எடுக்கும் தண்ணீரும் வீணாக கடலில் போய்தான் கலக்கும். தண்ணீர் பிரச்னையில் எத்தனையோ கிராமங்கள் அல்லல் பட்டுக் கொண்டிருக்க நாமோ வரும் மழை நீரை சேகரிக்காமல் கடலில் வீணாக கலக்க விடுகிறோம். தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 12 டி எம் சி தண்ணீர் நமக்கு கிடைக்கிறது. இந்த கிருஷ்ணா நீரோடு மழை நீரும் சேர்ந்து கொண்டால் அனைத்தையும் சேமிக்க ஏரிகள் ஒழுங்கான முறையில் இல்லாததால் அனைத்து உபரி நீரும் வீணாக கடலில் கலக்கிறது. பாலாறு வழியாக ஆண்டுக்கு, 7 டி.எம்.சி.,யும், அடையாறு மூலம், 2 டி.எம்.சி.,யும் மழை நீர் கடலில் சேர்கிறது. பள்ளிக்கரணை படுகையில் உள்ள, 33 ஏரிகளில் இருந்து ஆண்டுக்கு ஒரு டி.எம்.சி., மழை நீர் கடலுக்கு செல்கிறது. இதை தடுக்க ஆட்சியாளர்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்?..

சென்னை கடலூரை இப்புயல் நாளை மதியம் கடக்கும் போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை துறைமுகம் பகுதியில் ஏழாம் நம்பர் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது மேலும் பீதியைக் கிளப்புகிறது. ஒரு மீட்டர் உயரத்துக்கு அலைகள் சீறுமாம். தமிழகத்தின் 11 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. அரசு மிக துரித நடவடிக்கை எடுத்து உயிர்ப் பலிகளும் பொருள் சேதமும் ஏற்படாமல் முடிந்த வரை காக்க வேண்டும். அரசே அனைத்தும் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் இல்லாமல் தற்போதே தடுப்புகளை ஏற்படுத்தி வெள்ளம் வீடுகளுக்குள் செல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

----------------------------------------------------------


குரு பூஜையில் கொலை!

தமிழகம் முழுவதும் நிலம் புயல் பயத்தால் உறைந்து போயிருக்க நேற்று பசும் பொன் கிராமத்தில் 105 வது தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டுள்ளது. அது சமயம் அங்கு நடந்த சாதி மோதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது அதிர்ச்சியை தருகிறது. ஒரு வேனில் குரு பூஜைக்கு சென்றவர்களை ஒரு கும்பல் மறித்ததாகவும் எனவே வேறு பாதையில் சென்று அங்கும் கலவரம் ஏற்பட்டு டிரைவரை வெட்டியுள்ளார்கள். சிவகுமார், வீரமணி, மலைக் கள்ளன் என்ற மூன்று பேரும் இறந்ததாக போலீசாரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் பரமக்குடியில் தலித் மக்களின் தலைவராகக் கருதப்படுகிற மறைந்த இமானுவேல் சேகரனின் அஞ்சலிக்காக குழுமிய தலித்துக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியதில் ஆறு பேர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது..

ஒவ்வொரு முறையும் இது போல் சாதி தலைவர்களால் பிரச்னை வருகிறது. ஒன்று இதற்கு தடை விதிக்க வேண்டும். அல்லது பலத்த போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். இப்படி வருடா வருடம் வெளியூர்களில் இருந்து ஆட்கள் வந்து பூஜை செய்தால்தான் தேவரின் பெருமை அல்லது இமானுவேலுவின் பெருமை பறை சாற்றப்படுமா?

இன்று மூன்று இளைஞர்களின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது. எத்தனை கனவுகளோடு வாழ்ந்தார்களோ இன்று அநியாயமாக சாதிக் கொடுமையால் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளார்கள். இதற்கு பதிலடியாக இனி எதிர் தரப்பு களத்தில் இறங்கும். ஏன் இந்த வெறி? எதைக் கொண்டு போகப் போகிறோம்?

முஹர்ரம் ஊர்வலம், மீலாது ஊர்வலம், விநாயக சதுர்த்தி ஊர்வலம், சாதி தலைவர்களின் ஊர்வலம் நினைவு நாட்கள், தலைவர்களின் சிலைகள் என்று அனைத்தையும் தடை செய்து சட்டம் இயற்றினால் இது போன்ற விஷமிகளின் செயல் கட்டுக்குள் கொண்டு வரப்படும். ஆனால் ஓட்டுக்களை எதிர் பார்த்து இதை செய்ய அரசுகள் தயங்குகின்றன. எந்த அரசியல் கட்சி தலைவர்களும் யாரையும் கண்டித்து அறிக்கையும் விட மாட்டார்கள். ஏனெனில் அப்படி அறிக்கை விட்டால் அவர்களுக்கு ஓட்டு போய் விடுமே என்ற பயம். அரசாங்கமும் இரண்டு லட்சத்தை கொடுத்து தனது கடமையை செய்ததாக சொல்லிக் கொள்ளும். நாடு போகும் பாதையை நினைத்தால் பயமாக இருக்கிறது. அனைத்து மக்களும் அமைதியாக வாழக் கூடிய சூழலை உண்டாக்க பிரார்ததிப்போம்..

-----------------------------------------------------------

நேற்றைய புயலுக்குப் பிறகு அமெரிக்கா!








Monday, October 29, 2012

அமெரிக்காவை அச்சுறுத்தும் சாண்டி புயல்!

உச்சகட்ட தேர்தல் பிரசாரத்தை எட்டியிருக்கும் அமெரிக்காவை சாண்டி புயல் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. மணிக்கு 90 மைல் மேலும் அதற்கு அதிகமாகவும் புயல் வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஏழு பேர் இறந்திருப்பதாக செய்தி வந்துள்ளது. இது அதிகரிக்கக் கூடும் என்று செய்திகள் கவலை தெரிவிக்கின்றன..








(A video of the explosion showed a large fireball light up the New York skyline on the East Side.)

ஹைத்தி மற்றும் பிற கரிபியன் தீவுகளை கடந்த சில நாட்களில் தாக்கி 60க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி கொண்ட இந்த சாண்டி சூறாவளி இப்போது வடக்கே நகர்ந்து, நியார்க்குக்கு அருகே இன்று திங்கட்கிழமை இரவு அமெரிக்க கிழக்கு கடற்கரை நேரப்படி சுமார் 8 மணி அளவில், அதாவது, இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணியளவில், கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.






சூறாவளியின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், கடற்கரையோர பெரு நகரங்களில் நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டன.
நாட்டின் வர்த்தகத் தலைநகரான நியுயார்க்கில், இதுவரை, சுமார் 3,70000 பேர் தாழ்வான இடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். நாளொன்றுக்கு பல லட்சக்கணக்கானோரை ஏற்றிச் செல்லும் நியுயார்க் நகர புற நகர் பாதாள ரயில் அமைப்பு நேற்றிலிருந்து மூடப்பட்டுவிட்டது. பள்ளிகள் மூடப்பட்டிருகின்றன. தலைநகர் வாஷிங்டனும் புயல் எச்சரிக்கைக்கு தப்பவில்லை. அங்கும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.







புயலின் தாக்கத்தால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காற்றும் பலமாக உள்ளது. இதனால் அனைத்து இடங்களும் நீரில் மூழ்கி உள்ளன. அமெரிக்காவின் மிகப் பழமையான அணுஉலையிலும் நீர் உட்புகுந்துள்ளது. ஒஸ்டர் க்ரீக் எனும் 1969-இல் கட்டப்பட்ட அணு உலையில் முறையான பராமரிப்பு இருந்தாலும் புயலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் கடல்நீர் அணுஉலைக்குள் வரத் துவங்கி உள்ளது. இது எதிர்பாராத நிகழ்வு என அணுஉலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 7 மணி முதல் நிலைமை மோசமாகத் துவங்கியதாக தெரிவித்துள்ளனர். அணு உலை வெடிக்கும் அபாயம் இல்லையெனினும், அணு உலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணு உலையை சுற்றியுள்ள பகுதிகளில் அவசர எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு நிலை நம் கூடங்குளத்துக்கு வந்தால் அதையும் தாங்கும் திறனை நிர்வாகம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


எவ்வளவு இயற்கை பேரிடர் வந்தாலும் அமெரிக்க மக்கள் எல்லாவற்றிற்கும் அரசின் உதவியை எதிர் பார்க்காமல் தாங்களே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இதனை நம் மக்களும் பின் பற்ற முயற்சிக்க வேண்டும்.

தமிழ் நாட்டிலும் கடற்கரையோர மாவட்டங்களில் நாளை புயல் வீசலாம் என்ற செய்தி வருகிறது. அரசையே எதிர் பார்க்காமல் பொது மக்களும் களத்தில் இறங்கி தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். நம் தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உயிர் பலிகளையும் பொருள் இழப்புகளையும் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.

---------------------------------------------------------

உலகமே தலை கீழாக புரண்டாலும் நம் தமிழக ரத்தத்தின் ரத்தங்களுக்கு கவலை எல்லாம் எதில் இருக்கிறது என்பதை இந்த ஃபேஸ் புக் ஸ்டில் நமக்கு உணர்த்துகிறது. :-)