Followers

Monday, August 24, 2020

வடமாநில முஸ்லீம் சமூகத்தில் மாறி வரும் கல்வி விழிப்புணர்வு..

 வடமாநில முஸ்லீம் சமூகத்தில்

மாறி வரும் கல்வி விழிப்புணர்வு..

இந்திய முஸ்லிம் சமூகம் பெரிதும் கற்பதற்கு ஆசைப்படாத வழக்கறிஞர் கல்வியை கற்றதோடு நிற்காமல் தங்கள் லட்சிய கனவான நீதிபதிக்கான தேர்விலும் சாதித்து காட்டியுள்ளனர் வட மாநிலங்களை சேர்ந்த இஸ்லாமிய இளம்பெண்கள்..

இந்திய முஸ்லிம்கள் கல்வி கற்பதில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக சச்சார் கமிட்டி அறிக்கையில் குறிப்பிட்ட பீகார், உ.பி மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நேரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இளம் முஸ்லிம் வழக்கறிஞர்கள் தங்களது மாநிலங்களில் நடைபெற்ற பணியாளர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று நீதிபதிகளாக பணியில் சேரவுள்ள சந்தோஷ வார்த்தைகள் வெளியாகி உள்ளது..

கடந்த டிசம்பர் மாதம் உத்தரபிரதேச மாநிலத்தில் வெளியான சிவில் ஜட்ஜ் தேர்வு முடிவுகளில் 18 பெண் வழக்கறிஞர் உட்பட 38 முஸ்லிம்களும், ராஜஸ்தான் மாநிலத்தில் 5 பெண் வழக்கறிஞர் உட்பட 6 முஸ்லிம்களும் நீதிபதிகளாக தேர்ச்சி பெற்ற நிலையில் பீகாரில் 7 பெண்கள் உட்பட 22 முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் நீதிபதிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்...
அலிகார், ஜாமிஆ மில்லியா, ஹம்தர்த் ஸ்டடி சென்டர் போன்ற நிறுவனங்கள் இவர்களின் தேர்ச்சிக்கு பின்னால் இயங்கி வருகிறது..

தமிழகத்தில் கூட கையெட்டும் தூரத்தில் தான் நமது சந்ததிகளின் சிறப்பான எதிர்காலம் உள்ளது..
போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்ள ஊக்குவிப்பதுடன் ஜமாஅத் தோறும் கல்வி வழிகாட்டி மையங்கள் அமைப்பது காலத்தின் கட்டாயம்....



1 comment:

Dr.Anburaj said...

சர்ச்சாா் கமிட்டி ஒரு குப்பை அறிக்கை.காங்கிரஸ்காரன் சொல்ல எழுதப்பட்ட ஒரு பொய்களின் கட்டுதான் மேற்படி அறிக்கை. உண்மை நிலையை தாங்கள் வெளிக்கொண்டு வந்து சர்ச்சாா் கமிட்டி அறிக்கை பொய் என்பதை நிரூபித்து வீட்டிர்கள்.

பாக்கிஸ்தானில் ஹிந்துக்களுக்கும் அகமதியா முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அரசு வேலை கிடையாது.

இந்துக்கள் ......?????

இந்தியாவில் முஸ்லீம்கள் பெரும்பான்மை பெற்றால் இந்துக்கள் காஷ்மீரை விட்டு விரட்டப்பட்டது போல் விரட்டப்படுவார்கள். இந்து மகா சமுத்திரம்தான் புகலிடமாக இருக்கும்.

வாழ்க அரேபிய வல்லாதிக்கம்.