Followers

Thursday, August 27, 2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் ரியாத் மண்டலத்தின் #மனித_நேயப்_பணிகள்..

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் ரியாத் மண்டலத்தின் #மனித_நேயப்_பணிகள்..

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சகோதரர் சிங்காரச் செல்வம் கடந்த பிப்ரவரியில் கனரக வாகன ஓட்டுனர் பணிக்காக சவூதி அரேபியா, ரியாத்திற்கு வந்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் பணியில் இருந்த பொழுது தனது வாகனம் ரியாத்திக்கு அருகே ரூமாஹ் என்ற பகுதியில் பழுதடைந்துள்ளது.

அதனை சரி செய்வதற்காக வாகனத்தின் அடியில் சென்ற சகோதரர் எதிர்பாராத விதமாக வாகனத்தின் ஹேண்ட் பிரேக் ரிலீஸ் ஆகி விபத்து ஏற்பட்டு இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்டுள்ளது.

.அதையடுத்து ரியாத்திலுள்ள மன்னர் சல்மான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில் ஜித்தாவில் உள்ள அச்சகோதரரின் அண்ணன் சகோ. ராஜா அவர்கள் மூலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்திற்கு தகவல் கிடைக்கப் பெற்றது.

அதன் பிறகு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையின் வேண்டுகோளுக்கினங்க அவசர இரத்தனமாக 6 யூனிட் இரத்தம் இரண்டு கட்டங்களாக ரியாத் மண்டலம் பத்தாஹ் கிளையின் மூலம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

மேலும், தற்போதைய கொரோனோ நோய்ப் பரவலின் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து தடைபட்டுள்ளதால், மேல் சிகிச்சைக்காக விரைவாக தாயகம் கொண்டு செல்ல வேண்டும் என்று அன்னாரின் குடும்பத்தார்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தார்கள்.

அந்தக் கோரிக்கையை ஏற்று தற்போது இயக்கப்படும் தனி விமான ஏற்பாட்டாளர்கள் மூலம் அவர்களின் உதவியுடன் இலவசமாக விமானத்திற்கான பயணச் சீட்டு பெறப்பட்டு தாயகம் கொண்டு செல்வதற்கான சட்டரீதியான அனைத்து பணிகளையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல நிர்வாகம் துரிதமாக மேற்கொண்டு முடித்தது.

சகோதரர் சிங்காரச் செல்வம் இன்று 25-08-2020 மதுரை விமான நிலையதிற்கு நசீம் கிளைத் தலைவர் சகோ.அப்துல் ஹமீத் மற்றும் மண்டல நிர்வாகியான சகோ.ஜெய்லானி அவர்களின் உதவியுடன் சேர்த்து அனுப்பி வைக்கப்பட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்ட ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக குடும்பத்தாரிடம் பத்திரமாக கொண்டு சேர்க்கப்பட்டார். அல்ஹம்துலில்லாஹ்!

இந்த உன்னதமான மனிதநேயப் பணியை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக சகோதரர் ராஜா அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல நிர்வாகிகளை மண்டல அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசும் பொழுது, தாங்கள் குடும்பத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பேருதவி. இது எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாதது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். நாம் அனைவரும் ஒரு தாய், ஒரு தந்தையிலிருந்து வந்தவர்கள் என்ற சகோதரத்துவத்துடன் மட்டுமே இப்பணி மேற்கொள்ளப்பட்டது தவிர, வேறு எந்த பலனையும் எதிர்பார்த்து செய்யவில்லை என்றும் இதற்கான கூலியை இறைவனிடத்தில் மட்டுமே எதிர்பார்க்கிறோம் என்றும் அவருக்கு ஆறுதல் கூறப்பட்டது.

மருத்துவமனையில் மேல் சிகிச்சைப் பெற்று வரும் அச்சகோதரர் முழுமையாக குணமடைய அனைவரும் பிரார்த்திக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

இதுவரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மற்றும் ஜித்தா மண்டல வழிகாட்டுதல் மற்றும் உதவியின் மூலம் சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 100க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் தமிழகத்தின் பல்வேறு விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





1 comment:

Dr.Anburaj said...

இந்து பண்பாடு முஸ்லீம்களை நன்கு பக்குவப்படுத்தியிருக்கின்றது.ஆகவேதான் இப்படிப்பட்ட தொண்டுகள் செய்ய மனப்பக்குவம் அடைந்திருக்கின்றார்கள். ஆப்கானிஸ்தானத்தில் இத்தகைய தொண்டுகள் உண்டா ? பெரும்பாலும் கொலையில்கொடியவர்களாகத்தான் அரேபிய கலாச்சாரம் அவர்களை ஆக்கியிருக்கின்றது. முஹம்மதுவின் போதனை சாதனை எல்லாம் உலகை வெல்லும் ஆசையை உருவாக்கி அரேபியபெரிய படையை உருவாக்கியதுதான்.எவ்வளவு உயிா்கொலைக்கு அவா் காரணம்.வரலாறு கோடி...கோடி சான்றுகள் உள்ளது.