Followers

Tuesday, August 25, 2020

அயோக்கிய அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்!

 அயோக்கிய அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்!

ஐரோப்பாவில் பெலாரஸ் எனும் ஒரு நாடு இருக்கிறது. அதன் ஆட்சியாளார் பெயர் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ. சோவியத் ரஷ்யா காலத்திலிருந்தே அதிகாரத்திலிருந்து வந்திருக்கிறார். கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் ஆட்சி அதிகாரம் என்று வாழ்ந்து வந்துகொண்டிருக்கிறார்.

இந்த மாதம் ஒன்பதாம் தேதி தாம் 80% வாக்குகள் தேர்தலில் பெற்று மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்துக்கொண்டார். ஆனால் மக்கள் நம்பவில்லை. வாக்குப் பெட்டிகளில் தில்லுமுல்லு செய்து விட்டதாக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். லட்சத்திற்கும் அதிகமானோர் ஒன்று திரண்டு போராடினர். அரசு செய்வறியாது ராணுவத்தைக் கொண்டு அடக்கப் பார்க்கிறது. இருப்பினும், ஜனாதிபதியின் படத்தோடு ”உயிருடனோ, பிணமாகவோ பிடிக்க வேண்டும்!” என்று எழுதி வைத்துக்கொண்டு போராடி வருகின்றனர்.

15 ஆம் நாளாக தொடரும் போராட்டத்தைத்தான் நாம் இப்போது வீடியோவாக பார்க்கிறோம்.

மக்கள் சக்திக்கு முன்னால் எந்த ராணுவமும் எதுவும் செய்ய இயலாது. இதனை உலக அரசியல்வாதிகளும், நம் நாட்டு அதிகார வெறி பிடித்த அரசியல்வாதிகளும் புரிந்து கொண்டால் நல்லது.



1 comment:

Dr.Anburaj said...

மக்கள் சக்திக்கு முன்னால் எந்த ராணுவமும் எதுவும் செய்ய இயலாது. இதனை உலக அரசியல்வாதிகளும், நம் நாட்டு அதிகார வெறி பிடித்த அரசியல்வாதிகளும் புரிந்து கொண்டால் நல்லது.

ஆம் முஸ்லீம்களுக்கு சரியான உபதேசம். அரேபிய மதத்தை அரசு மதமாக்கி அட்டுழியம் செய்து வரும் துருக்கி பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தானம்....போன்ற நாடுகளுக்கு மிகப் பொருத்தமான உபதேசம்.