Followers

Monday, May 17, 2021

மாண்பு மிகு நிதி அமைச்சர் P.T.R. பழனி வேல் ராஜனின் சிறப்பான பேட்டி!

 

மாண்பு மிகு நிதி அமைச்சர் P.T.R. பழனி வேல் ராஜனின் சிறப்பான பேட்டி!

 

'மண்ணின் மைந்தனான எங்கள் குடும்பம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலோடு நீண்ட கால தொடர்புடையது. ஹரிலால் முதலியார், கலாதிநாதி முதலியார் என்று  விஜய நகர பேரரசு வரை 500 வருடங்களுக்கு மேலாக இறை சேவை செய்து வருகிறோம். மீனாட்சி அம்மன் கோவிலின் ஆயிரம் கால் மண்டபம், ஆலயத்தின் மேல் உள்ள மகுடம் என்று அந்த கோவிலோடு நெருங்கிய தொடர்புடையவர்கள் நாங்கள்.'

 

'முஸ்லிம்கள் அவர்கள் நம்பிக்கையில் உறுதியாக உள்ளார்கள். அதே போல் எனது மத நம்பிக்கைகளில் நானும் உறுதியாக இருக்கிறேன். அதே நேரம் நட்புணர்வோடு அவர்களும் பழகுகிறார்கள்: நானும் பழகுகிறேன். இதுதான் நமக்கு தேவை. பல சமயங்கள் கலந்து வாழும் ஒரு நாட்டில் அவரவர் மத நம்பிக்கைளை எவ்வித அச்சமுமின்றி நிறைவேற்றிடும் சூழலை உண்டாக்க வேண்டும். ஒரு அரசு செய்ய வேண்டிய முக்கிய மான கடமைகளில் ஒன்று அது. '

 

"பொதுவாக அரசியல் கூட்டங்களுக்கு எனது குழந்தைகளை அழைத்துச் செல்ல மாட்டேன். ஆனால் இரு வருடங்களாக எனது குழந்தைகள் இருவரையும் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு அழைத்து வருகின்றேன். காரணம் என்னெவென்றால் அவர்களுடைய கொள்ளுத் தாத்தா (P T ராஜன்), ஹாஜி கருத்தா ராவுத்தரின் உற்ற நண்பர். பரம்பரை பரம்பரையாக தொடரும் இந்த உறவினை எனக்கடுத்து எனது குழந்தைகளும் பின்பற்றவேண்டும் என்பதற்காகவே நான் அவர்களை மதுரையில் நோன்பு திறக்கும் நிகழ்விற்கு அழைத்துச் செல்கிறேன்.......".

 

'வட மாநிலங்களில் நிகழும் மத வன்முறைகள், ஒரு மதத்துக்கு எதிரான வெறுப்புப் பிரசாரம் மிகவும் கவலை அளிக்கிறது.'

 

- தமிழக நிதி அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன்




 

1 comment:

Dr.Anburaj said...

"பொதுவாக அரசியல் கூட்டங்களுக்கு எனது குழந்தைகளை அழைத்துச் செல்ல மாட்டேன். ஆனால் இரு வருடங்களாக எனது குழந்தைகள் இருவரையும் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு அழைத்து வருகின்றேன். காரணம் என்னெவென்றால் அவர்களுடைய கொள்ளுத் தாத்தா (P T ராஜன்), ஹாஜி கருத்தா ராவுத்தரின் உற்ற நண்பர். பரம்பரை பரம்பரையாக தொடரும் இந்த உறவினை எனக்கடுத்து எனது குழந்தைகளும் பின்பற்றவேண்டும் என்பதற்காகவே நான் அவர்களை மதுரையில் நோன்பு திறக்கும் நிகழ்விற்கு அழைத்துச் செல்கிறேன்....
சரிதான் தவறு அல்ல. ஆனால் கருத்தா ராவத்தா் பேரன் பேத்திகள் உங்கள் வீட்டு சமய நிகழ்சி எதிலெல்லாம் கலந்து கொள்ள வருகின்றார்கள் என்ற தகவல் .. . மிஸ்ஸிங் ஐயா

அந்த தகவலை அளித்தால்தான் கட்டுரை முழுமைபெறும். நான் என்னை காபீர் (காட்டுமிராண்டி) என்று இழிவுபடுத்துபவனுக்கும் நன்மையே செய்வேன் என்பது தங்கள் கொள்கை.
வாழ்க!
நான் அப்படிச் செய்ய மாட்டேன். ஒரு முஸ்லீமின் அழைப்பை ஏற்கும் முன் இந்துக்களை காபீர் என்று கருதுகின்றீரா என்று கேட்பேன். அவனது பதில் இல்லை என்றால் உறவு. ஆம் என்றால் என் வழி தனி வழி என்று அந்த முஸ்லீமின் எந்த அழைப்பையும் நான் ஏற்க மாட்டேன்.

தெரு அளவு வீதி அளவு சந்தைக் கடை நுலகம் அளவு ......... உறவாக அது இருக்கும்.