Followers

Monday, April 06, 2026

பாகல்பூர் - 900 முஸ்லிம்களை கொன்று அங்கு காளி ஃப்ளவரை பயிரிட்ட சங்கிகள்..

 





பாகல்பூர் - 900 முஸ்லிம்களை கொன்று அங்கு காளி ஃப்ளவரை பயிரிட்ட சங்கிகள்..

 

அதென்ன Gobi Farming என தேடினேன்! 1989 பாகல்பூர் கலவரத்தில் 900 இஸ்லாமியர்களைக் கொன்று புதைத்து அதன் மீது காலிஃப்ளவர் பயிர் செய்த சம்பவமாம்!

 

 பீகார் வெற்றி அதை அங்கீகரித்து விட்டது என்கிறார் ஒரு பாஜக அமைச்சர்! எங்கோ என்னவோ ஆகிட்டுப் போகுது!

 

நாம நம்ம தமிழ்நாட்டை ஒற்றுமையான வாழ்விடமாக காப்பாற்றி வைத்துக் கொண்டால் போதும் என சிந்திக்கும் அளவுக்கு இப்போதே மனம் சமரசம் கொண்டு விட்டது! இந்த 25 - 30 வயதுக்குள் இருக்கும் இளைஞர்களை நினைத்தால் பரிதாபமாக உள்ளது. அவர்கள் வாழப் போகும் இந்தியா இதற்கு முந்தைய தலைமுறைகள் வாழ்ந்த இந்தியாவாக இருக்காது!

 

இனி இது சங்கிகள் கையில் கிடைத்தப் பூமாலை.

 

 

இஸ்ரேலுக்கு ஆயுதம் ஏற்றி செல்ல மாட்டேன் - அமெரிக்க விமானி எதிர்ப்பு

 

இஸ்தான்புல்லில் ஈரான் ஆதரவுப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

 

வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஆயிரக்கணக்கானோர் கூடி, ஈரான் கொடியை அசைத்தவாறும், இஸ்லாமியக் குடியரசுக்கு ஆதரவு தெரிவித்தவாறும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்தனர்.

 

அனுமன் ஜெயந்தியை கொண்டாடாமல் இஸ்லாமிய வெறுப்பை கையிலெடுத்த சங்கிகள்

 

லவ் ஜிஹாத் கருப்பொருளிலான ஒரு அலங்கார ஊர்தி. தலையில் முஸ்லிம் தொப்பி, கையில் கத்தி/வாள்தாக்கும் காட்சி!!

 

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் இன்று, அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இந்து ரக்ஷா தல் ஒரு ஊர்வலத்தை நடத்தியது.

 

No comments: