Followers

Wednesday, April 08, 2026

கடினமாக உழைக்கும் தெஹ்ரான் மாநகராட்சி ஊழியரின் நெற்றியில் கலாச்சார அமைச்சர் முத்தமிட்டார்.


 


கடினமாக உழைக்கும் தெஹ்ரான் மாநகராட்சி ஊழியரின் நெற்றியில் கலாச்சார அமைச்சர் முத்தமிட்டார்.

 

எனது அலுவலகத்தின் பின்னால் இருக்கும் பள்ளியில் நேற்று மதிய நேர (லுஹர்) தொழுகைக்கு போனபோது எடுத்த புகைப்படம் தான் இது. துப்புரவு தொழிலாளியாக தெருக்களை கூட்டி பெருக்கும் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பள்ளியில் அமர்ந்திருப்பதைப்பதைத்தான் நாம் பார்கிறோம். இந்த பள்ளிக்கு தொழ வரக் கூடியவர்கள் பெரும்பாலும் மல்டி மில்லினர்களான சவுதி நாட்டைச் சேர்ந்தவர்கள். விலையுயர்ந்த உடைகளோடு மிக உயர்ந்த வாசனை திரவியங்களோடு மிகவும் சுத்தமாக வந்து தொழுகைக்கு அமர்வர்.

அதே பள்ளியில் கம்பெனி சீருடையான மஞ்சள் நிற அழுக்கு படிந்த உடையோடு அந்த பங்களாதேஷத்து முஸ்லிம் உரிமையோடு பள்ளி வாசலின் மத்தியில் அமர்ந்திருப்பதை பார்கிறோம். இது உலக பள்ளி வாசல்கள் அனைத்திலும் சர்வ சாதாரணமாக பார்கலாம். இது மட்டுமா... தொழுகை ஆரம்பமானவுடன் அந்த பங்காளி எங்கு விரும்புகிறாரோ அங்கு சென்று நின்று கொள்ளலாம். முதல் வரிசையிலும் பல முறை இவர் நின்று பார்துள்ளேன். அதோடு வரிசையில் நிற்கும் போது இவரது அழுக்கு உடையினால் சங்கோஜப்பட்டுக் கொண்டு சற்று விலகி நிற்பார். ஆனால் பக்கத்தில் நிற்கும் மல்டி மில்லினர் சவுதியோ அந்த இளைஞனின் தோள் பக்க துணியை பிடித்து இழுத்து தனது தோளோடு நெருக்கி நிறுத்திக் கொள்வார். ஏனெனில் தொழுகையில் இடைவெளி விட்டு நின்றால் அந்த தொழுகையின் நன்மையில் குறைவு ஏற்படும் என்று நபிகள் நாயகம் சொல்லியிருக்கிறார். எனவே அந்த சவுதிகளுக்கு விருப்பம் இல்லா விட்டாலும் தொழுகையில் நன்மை குறைந்து விடக் கூடாது என்பதற்காக அந்த பங்காளியை தனது அருகில் இழுத்து நிறுத்திக் கொள்கின்றனர். அதிக நேரம் வெயிலில் அந்த இளைஞர் வேலை செய்வதால் உடையிலிருந்து வியர்வை வாசமும் சில நேரங்களில் வரும். பல நேரங்களில் அதை நானும் உணர்ந்திருக்கிறேன். அதையும் மீறித்தான் அந்த சவுதிகள் அந்த இளைஞனை தனதருகில் இழுத்து நிறுத்திக் கொள்கிறார்கள்.

 

 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ஈரானிய தியாகிகளின் குடும்பங்கள்

 

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் சட்ட அமலாக்கத் தளபதியான அஹ்மத் ரெஸா ரதான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ஈரானிய தியாகிகளின் குடும்பங்களுக்கு முன்னால் நிற்கிறார்.

 

அவர் நன்றிக்கடனாக இறைவனுக்கு சிரம் தாழ்த்தினார். அவர் கூறுகிறார்:

 

 "தியாகிகளின் குடும்பங்களுக்காக நான் வெட்கப்படுகிறேன், கடமைப்பட்டிருக்கிறேன். மரியாதை மற்றும் சேவையின் அடையாளமாக, நான் என் தலைகளை அவர்கள் திசையில் தாழ்த்த விரும்புகிறேன். மேலும், எல்லாம் வல்ல, மேலான இறைவனுக்கு முன்பாக, இந்த அன்புக்குரியவர்களுக்கு முன்னால் நான் வெட்கப்படாமல் இருப்பதற்காக, நன்றிக்கடனாக இறைவனுக்கு  சிரம் தாழ்த்துகிறேன்."

 

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அந்த தியாகிகளுக்கு இறைவன் மேலான பதவிகளை மறுமையில் வழங்குவானாக...

 

 

கூகுளில் 'இடியட்' என்று டைப் செய்தால் டொனால்ட் ட்ரம்பின் படம் விழுகிறதே ? இது எப்படி சாத்தியம் - சுந்தர் பிச்சை விளக்கம்

வருமானமின்றி இருந்த ஈரானை சீண்டி இன்று ஹூர்முஸ் நீர்நிலை மூலம் கோடிக் கணக்கில் வருமானம் வர வழி ஏற்படுத்திக் கொடுத்ததே ட்ரம்பின் ஆணவப் பேச்சுதான்.

 பொருளாதார தடையும் நீங்கியது. எண்ணை பல நாடுகளுக்கு தற்போது ஈரான் ஏற்றுமதி செய்கிறது.

இந்த 15 நாள் இடைவெளியில் அணுகுண்டையும் ஈரானால் தயாரித்து விட முடியும்.

இந்த சண்டையினால் பெரும் லாபம் அடைந்தது ஈரான்தான்.

இப்போது சொல்லுங்கள். இடியட் என்ற பெயருக்கு பொருத்தமான நபரின் பெயர் யாராக இருக்க முடியும்?

 



 

No comments: