'என் உயிரே போனாலும்
இஸ்லாத்தை மட்டும் விட்டுக் கொடுக்க மாட்டேன்' - ஹரியானா ப்ரீத்தி
ஹரியானா மாநிலம்
- பானிபட்
ப்ரீத்தி என்ற 26 வயது இந்து பெண். இவருடைய அண்ணன் அந்த பகுதியில்
இந்துத்வாவின் முக்கிய பிரமுகர். தங்கை ப்ரீத்திக்கு இஸ்லாமிய நம்பிக்கைகள் மேல் ஆர்வம் வந்துள்ளது. யூட்யூப், ஃபேஸ் புக் மூலமாக தொடர்ந்து ஆன்மீக தேடலில் இறங்குகிறார்.
இவரது தேடலுக்கு இஸ்லாம் அழகிய பதிலைக் கொடுத்துள்ளது.
தனது பெயரை ஹத்தீஜா
என்று மாற்றிக் கொண்டு இஸ்லாமிய நடவடிக்கையை பின் பற்றுகிறார். இது அவரது வீட்டில்
பெரும் புயலைக் கிளப்புகிறது. இவரது அண்ணன் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறார். ஒரு
பிராமண பண்டிட்டை அழைத்து வந்து அவருக்கு அறிவுரை கூற சொல்கிறார்.
ஆனால் இதனை ஹத்தீஜா
ஏற்க மறுக்கிறார். பிராமண பண்டிட் இந்த பெண்ணை மிரட்டுகிறார். அதற்கு அந்த பெண்...
'இந்த மிரட்டுலெக்கெல்லாம்
நான் பயப்பட மாட்டேன். என் உயிரே போனாலும் இஸ்லாத்தை விடுவதாக இல்லை'
'எதை வைத்து இஸ்லாத்தை
ஏற்றாய்? அதனை சொல். நானும் இஸ்லாத்தை
ஏற்கிறேன்' - அண்ணன்.
'விவரித்து சொல்லும்
அளவுக்கு இன்னும் நான் தயாராகவில்லை. இறைவன் யார்? அவன் எப்படிப்பட்டவன்? என்ற விளக்கம் குர்ஆனில் மிக அழகாக சொல்லப்பட்டுள்து. இதனை யூட்யூப் மூலமாக தெரிந்து கொண்டேன்'
'எங்கே அந்த வீடியோவை
எனக்கும் காட்டு'... தனது செல்போனிலிருந்து
அந்த வீடியோக்களை காட்டுகிறார்.
இதனை கேட்ட அவரது
அண்ணன் 'நீ முன்பு வணங்கிய கற் சிலைகள்,
மூட பழக்க வழக்கங்கள் அனைத்தும் தவறு என்று இந்த
குர்ஆன் கூறுகிறது. இதைப் பார்த்து உனக்கு கோபம் வரவில்லையா?'
அதற்கு ஹத்தீஜா 'முன்பு வணங்கி வந்தவைகளில் திருப்தியில்லாமல்தானே
நான் இஸ்லாத்தை ஏற்றேன். உங்களை பின்பற்றுங்கள் என்று சொல்லவில்லையே? எனது போக்குக்கு என்னை விட்டு விடுங்கள். என்னை
தொந்தரவு செய்யாதீர்கள்' என்று தனது கொள்கையில்
உறுதியாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம்.
என்னைப் போன்றவர்களுக்கு
தாய் தந்தை மூலமாக எந்த வித தேடலும் இல்லாமல் இந்த இஸ்லாமிய மார்க்கம் கிடைத்து விட்டது.
ப்ரீத்தி போன்றவர்களை நினைத்துப் பாருங்கள். அவர் படும் சிரமங்களை மன உளைச்சல்களை நினைத்துப் பாருங்கள். சிரமமின்றி
இந்த மார்க்கம் கிடைத்ததால்தான் பல முஸ்லிம்கள் இதன் அருமை தெரியாமல் உள்ளார்கள்.
பல தலைமுறைகளாக இஸ்லாத்தில்
இருக்கும் என்னைப் போன்றவர்களை விட நேற்று வந்த ப்ரீத்தி இறைவன் முன்னால் மிக உயர்ந்த
ஸ்தானத்தில் வைக்கப்படுவார்.
வாழ்த்துக்கள் ஹத்தீஜா...
No comments:
Post a Comment