
உலகின் முதல் ஹலால் உணவுக்கான சர்வதேச கலந்தாய்வு கடந்த செவ்வாய்க் கிழமை ரியாத் நகரில் இனிதே நிறைவுற்றது. இஸ்லாமிய நாடுகளுக்கு உணவு ஏற்றுமதி செய்யும் முஸ்லிம் அல்லாத நாடுகள் இஸ்லாமிய சட்டத்தை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
ரியாத் கவர்னர் இளவரசர் சத்தாம் இந்த மாநாட்டை துவக்கி வைத்து கண்காட்சியையும் திறந்து வைத்தார். ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய இந்த கலந்தாய்வு மூன்று நாள் தொடர்ந்து நடந்து செவ்வாய்க்கிழமை நிறைவுற்றது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு சவுதி மன்னர் அப்துல்லாஹ்வின் ஏற்பாட்டில் உணவு மற்றும் மருந்து ஆணையத்தின் கீழ் நடைபெற்றது.
உணவு மற்றும் மருந்து ஆணையத்தின் தலைவர் முஹம்மது அல் கன்ஹல் தனது அறிக்கையில் முஸ்லிம் நாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகள் இஸ்லாமிய வழி முறையில் அறுக்கப்பட்ட உணவுகளையே அனுப்ப வேண்டும் என்ற ஒரு ஒப்பந்தத்துக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.
மேலும் அவர் கூறும்போது 'சில நாடுகள் மின்சார அதிர்ச்சியைக் கொடுத்து உயிரினங்களை கொல்கின்றன. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். சுகாதாரமான முறையில் அறுக்கப்பட்டு(ஹலால்) அந்த பேக்கிங்களில் உரிய சீல்களும் இடப்பட வேண்டும். இத்தகைய தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தையும் வேர்ல்ட் முஸ்லிம் லீக்குக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்” என்ற கோரிக்கையையும் வைத்தார்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த மாநாடு திரும்பவும் கூட்டப்படும். அந்நேரம் இந்த கமிட்டி எடுத்த நடவடிக்கைகள் மற்றும் இதனால் ஏற்பட்ட முன்னேற்றங்கள் போன்றவை அங்கு அலசப்படும். இந்த கூட்டம் சிறப்பாக நடக்க ஒத்துழைத்த மன்னர் அப்துல்லாவுக்கு இந்த கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கன்ஹல் கூறினார்.
இந்த கலந்தாய்வில் ஏழு முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது சம்பந்தமாக அறிவியல் கட்டுரைகள் 60 இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் இஸ்லாம் கூறும் ஹலால் வழிமுறை, உணவுகளை பதப்படுத்துவது, உணவுகளை முறைப்படி அறுப்பது, இஸ்லாம் கூறும் ஹலால் உணவுகள் போன்ற அனைத்து அம்சங்களும் விரிவாக அலசப்பட்டன.
கெய்ரோ பல்கலைக் கழகத்தின் ஊட்டச் சத்து பிரிவின் தலைவி மஹா எம் ஹாதி பேசும்போது 'சரியாக அறுக்கப்படாத சில உணவு வகைகளால் மார்பக புற்று நோயும் பெருங்குடல் புற்று நோயும் வரும் சாத்தியங்கள் உண்டு' என்றும் எச்சரித்தார்.
“நீங்கள் இறைச்சி சாப்பிடும் போது அதை உங்களுக்கு விற்றவர் அந்த விலங்குக்கு என்ன உணவளித்தார் என்று தெரிந்து கொள்வது நல்லது. நாம் அறுக்கப்படுவதை ஹராமா ஹலாலா என்று பார்ப்பதோடு அதற்கு முன்னால் அதற்கு தீவனமாக என்ன கொடுக்கப்படுகிறது என்பதையும் ஆராய வேண்டும். நமக்கு நம்பிக்கையான பண்ணைகளில் இருந்து உணவு வாங்குவது மேலும் சிறந்தது.” என்கிறார் ஹாதி.
ஐரோப்பிய ஆணைய வர்த்தக கழகத்தைச் சேர்ந்த போலோ லுர்சியானோ 'ஏற்றுமதி நாடுகள், நுகர்வோர், வியாபாரிகள், மார்க்க அறிஞர்கள் போன்ற அனைவரின் கூட்டு முயற்ச்சியே இந்த கோரிக்கைகளை சரியாக கொண்டு செல்ல முடியும்' என்று கூறினார். டாக்டர் ஹனி அல் ஹசாப் கூறும்போது 'முஸ்லிம் அல்லாத நாடுகளில் அங்கு எவ்வாறு விலங்குகள் அறுக்கப்படுகின்றன என்பதை கண்காணிக்க கமிட்டி நிறுவப்பட வேண்டும்' என்று கூறினார்.
-அரப் நியூஸ் 17-02-2012
-------------------------------------------------------------
உயிரினங்களை உணவாகக் கொள் ளும் முஸ்லிமல்லாதவர்கள் அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்தோ, அல்லது கழுத்தை நெறித்தோ, தடியால் அடித்தோ, ஈட்டியால் குத்தியோ இன்னும் இது போன்ற வழிகளில் பிராணிகளின் உயிரைப் போக்குகின்றனர்.
ஆனால் இந்த வழிமுறைகளில் பிராணிகளைக் கொல்வதை இஸ்லாம் கண்டிக்கிறது. பிராணிகளின் குரல் வளையில் கூர்மையான கத்தி மூலம் அறுத்துத் தான் பிராணிகளைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
குரல்வளை மிக விரைவாக அறுக்கப் படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு அறுந்து போகின்றது. இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது. இரத்தத்தை வெளியேற்று வதற்காக உடல் துடிக்கிறது; வேதனையால் அல்ல என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வை நடத்தியவர்கள் பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆவார்கள்.
அவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும் அதன் முடிவுகளின் விவரத்தையும் கீழே தருகின்றோம்.
1) முதலில் உணவுக்காக அறுக்கப் படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன. 2) அறுவை சிகிச்சை செய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையை தொடும் படி பல பகுதிகளில் மின்னணுக் கருவிகள் பொருத்தப்பட்டன.
3) உணர்வு திரும்பியதும். முழுவது மாகக் குணமடைய பல வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன.
4) அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன.
5) மறு பாதி எண்ணிக்கை விலங்கு கள் மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்டன.
6) பரிசோதனையின் போது கொல்லப் பட்ட எல்லா விலங்குகளுக்கும் ஊ.ஊ.ஏ. மற்றும் ஊ.ஈ.ஏ. பதிவு செய்யப்பட்டன. அதாவது ஊ.ஊ.ஏ. மூளையின் நிலையையும், ஊ.ஈ.ஏ. இருதய நிலையையும் படம் பிடித்துக் காட்டின.
இப்போது மேற்கண்ட பரிசோத னையின் முடிவுகளையும், அதன் விளக்கங்களையும் காண்போம். இஸ்லாமிய ஹலால் முறை:
1) இம்முறையில் விலங்குகள் அறுக்கப்பட்ட போது, முதல் மூன்று வினாடிகளுக்கு எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும் போது அவை வலி யினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது.
2) மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து அதிகப் படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது.
3) மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலி அல்லது வதைக்கும் ஆளாக வில்லை என்பதை இது காட்டியது.
4) மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத் துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் உடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிலிருந்து முற்றிலுமாக ரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதார நிலையை அடைகிறது.
முஸ்லிமல்லாதவர்கள் பிராணிகளைக் கொல்லும் முறை:
1) இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் உடனே நிலை குலைந்து போய் உணர்வற்ற நிலைக்குப் போகின்றன. 2) அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை ஊ.ஊ.ஏ. பதிவு காட்டியது. 3) அதே நேரத்தில் விலங்குகளின் இதயம் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும் போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடல் மிகுதியான ரத்தம் தேங்கிவிடுகிறது. ரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொள்ளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை.
மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையும் நிரூபித்துள்ளது.
எனவே பிராணிகளை இஸ்லாம் கூறும் முறையில் அறுத்தால் அதில் உயிரினங்களுக்கு வதை இல்லை என்பது நிரூபணமாகின்றது.
சைவம் மற்றும் அசைவம் ஆகிய இரு உணவுகளையும் ஜீரணிக்கும் வகையில் மனிதனின் குடல் அமைந்திருப்பதும் சிந்திக்கத்தக்கது.
இந்த முறையில் விலங்குகளை கொல்வதை இஸ்லாம் தடுக்கிறது. ஏனெனில் இதன் முலம் ரத்தம் முழுவதும் வெளியேறுவது இங்கு நடைபெறாது. உடலில் தங்கக் கூடிய ரத்தம் சாப்பிடுபவர்களுக்கு சில அலர்ஜிகளை கொடுக்கலாம்.
மேலும் சிலர் கோணிப் பைகளில் கோழியை விட்டு இரண்டு அடி தரையில் வேகமாக அடித்து அதனை கொல்கிறார்கள். தமிழகத்தில் கூட இந்த முறை சில இடங்களில் பின் பற்றப்படுகிறது. இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு முறை. இவையும் சுகாதாரக் கேடு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அடுத்து டெல்லியில் சில ஹோட்டல்களில் பயன்படுத்தும் ஆடு மாடு போன்றவை எவ்வாறு அறுத்து கொண்டு வரப்படுகின்றன என்ற காணொளியை பார்த்தேன். அன்றிலிருந்து நமது நாட்டில் வெளியிடங்களில் மாமிசம் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்த்துக் கொண்டேன். :-)
---------------------------------------------------------------
கொலெஸ்ட்ரோல் என்பது என்ன?
கொலெஸ்ட்ரோல் (Cholestrol) என்பது வெண்மை நிறத்திலான மெழுகு போன்ற, கொழுப்பு வகையைச் சேர்ந்த ஒரு பொருளாகும். இது உடலின் வளர்சிதை மாற்றத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகும். இன்னும் பல்வேறு முக்கியமான ஹார்மோன்கள் (காட்டாக எஸ்ட்ரோஜென்), பித்த நீர், வைட்டமின் D போன்ற உடலின் பல்வேறு முக்கியச் செயல்பாடுகளில் பங்கு வகிக்கும் புரதச் சத்துகள் மற்றும் திரவங்களின் தயாரிப்பிற்கு மிகவும் உதவிகரமானதாகும்.
கொலெஸ்ட்ரோலை உடல் எங்கிருந்து பெறுகிறது?
கொலெஸ்ட்ரோலை நமது உடல் பொதுவாக இரண்டு விதங்களில் பெறுகிறது.
முதலாவதாக, நமது உடல் கொலெஸ்ட்ரோலைத் தன்னிலிருந்தே உற்பத்தி செய்து கொள்கிறது. நமது உடலுறுப்புகளுள் ஒன்றான கல்லீரல் நாளொன்றுக்குச் சுமார் 1000 மில்லிகிராம்கள் வரை கொலெஸ்ட்ரோலை உற்பத்தி செய்கிறது.
இரண்டாவதாக நாம் உட்கொள்ளும் உணவு வகைகளான முட்டைக் கரு, மாமிசம், கோழியிறைச்சி, பால் மற்றும் பால் தயாரிப்புகளிருந்து கொலெஸ்ட்ரோல் உற்பத்தியாகிறது.
பழங்கள் காய்கறிகள், தானியங்கள் பருப்புகள் மற்றும் விதைகள் போன்ற தாவர உணவுகளில் கொலெஸ்ட்ரோல் இல்லை.
பல்வேறு காரணிகள் இரத்தத்தில் கொலெஸ்ட்ரோல் அளவை அதிகப்படுத்துகின்றன :
- அதிக அளவிலான கொழுப்புகள் கலந்த உணவுப் பழக்கம்
- அதீத உடற்பருமன் (Obesity)
- உடல் இயக்கக் குறைவான பணிகள்
- புகைப் பழக்கம்
- மன அழுத்தங்கள்
- மதுப் பழக்கம்
- சக்கரைநோய், சிறுநீரகம் மற்றும் தைராய்டு சுரப்பி நோய்கள்
- கருத்தடை மாத்திரைகள் உட்கொள்தல்
- வயோதிகம்
- பாலியல் காரணங்கள் (பெண்கள் குழந்தை பெறும் பருவத்தில் குறைந்த கொலெஸ்ட்ரோல் அளவினைப் பெற்றிருப்பர்).
- தலைமுறை
டாக்டர். ஜெயந்தி (டயட்டீஷியன்) கூறும் போது, ‘‘சுவைகூட்டவும், மணமூட்டவும் பல வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. வீட்டில் இயற்கையான பூண்டு, இஞ்சி, மசாலா செய்து சாப்பிடுவதற்கும் வெளியில் சாப்பிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எண்ணெயை 1000சி சூடேற்றிய பிறகு திரும்பவும் அளவுக்கு மீறி சூடேற்றுவதால் அதன் உண்மைத்தன்மை மாறி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
மசாலா + கலர் பவுடர்கள் அதிகமாக சாப்பிடுவதால் உடலில் குடலை அரிக்க ஆரம்பித்துவிடும். குறிப்பாக ரோட்டோர கடைகளில் பிரியாணி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தரமற்ற பிரியாணிகளாலும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. பிரியாணிக்கு வெங்காயப் பச்சடியை தயிரோடு கலந்து சாப்பிடுவதால் ஜீரண சக்தி கிடைக்கிறது.
கத்திரிக்காயில் நார்ச்சத்து இருப்பதால் பிரியாணியிலுள்ள கொழுப்பை உடலில் சேர்க்காமல் இருக்கும். வேளா வேளைக்கு வரிந்து கட்டிக்கொண்டு உள்ளே தள்ளக்கூடாது.
ஒரு சராசரி மனிதன் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பிரியாணி சாப்பிடலாம். அதுக்குக் கூட சரியான உடற்பயிற்சி தேவை. முன்பெல்லாம் நாற்பது வயதுக்கு மேல் தான் கண் பிரச்சினை, இடுப்பு வலி, மூட்டு வலியெல்லாம் வரும். இப்போது உணவில் கெமிக்கல் இருப்பதால் 20 வயசிலேயே எல்லாப் பிரச்சினையும் வர ஆரம்பித்துவிட்டது.
எண்ணெய், மசாலாக்கள் அதிகரிப்பால் கேன்சர், உணவுக் குழாய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எல்லா கேட்டரிங் சென்டர்களிலும் உணவு தயாரிக்கும் முறைகளை (HACCP) கடைப்பிடிக்க வேண்டும். மக்களுக்கு உணவுக்கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வு தேவை’’ என்கிறார்.
இதுபற்றி சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர். எஸ்.கிருஷ்ணாவிடம் பேசினோம்.
‘‘222 ஆஃப் தி முன்சிபல் ஆக்ட்’ படி சாலையோரங்களில் எந்தவிதமான ஆக்கிரமிப்பும் இருக்கக்கூடாது. ஆனால், சாலையோரங்களில் பலர் கடைகளை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஏழை, எளிய மக்களிடம் வரவேற்பும் பெற்றுள்ளது. அதற்காக சாப்பிடுபவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிப்பதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது.
முக்கியமாக சுத்தமில்லாத தண்ணீரால் ஈக்கோலை, டைபாய்டு, காலரா போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். 500 எம்.எல். தண்ணீரில் ஆயிரக்கணக்கான கிருமிகள் அடங்கியிருக்கிறது. சில உணவுகளை ஃபிரிஜ்ஜில் வைத்து வெளியே வைக்கும் போது பாக்டீரியா கிருமிகளின் எண்ணிக்கை பல ஆயிரமாக அதிகரித்துவிடும்/. இதற்கு ‘Aflotosin’ விஷத்தன்மை என்பார்கள். சிலர் உணவுகளில் மாத்திரைகள் கலப்பது அதிகரித்து விட்டது.
இதனால் தலைவலி, உடம்பு வலி என பல பிரச்சினைகள் ஏற்படும். இதைத் தடுக்க ரெயில்வே ஸ்டேஷன் உணவகங்களுக்கு லைசன்ஸ் கொடுப்பது போல் சாலையோர உணவகங்களுக்கும் லைசன்ஸ் கொடுத்து முறைப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் சாலையோர உணவகங்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.’’
ம்... சொல்லவேண்டியதை சொல்லியாச்சு!
நன்றி:--KUMUDAM HEALTH