
(நேபாள பாரளுமன்றத்தில் சமய சார்பற்ற நாடாக ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றவுடன் உறுப்பினர்கள் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி)
உலகில் உள்ள ஒரே இந்து நாடு நேபாளம் என்பதால் மோடி அரசு பல சலுகைகளை முன்பு அந்த நாட்டுக்கு வழங்கி வந்தது. ஆனால் அங்கு கம்யூனிஸ்டுகளின் கை ஓங்கி நேபாளத்தை இந்து மத நாடு என்ற அடையாளத்தை நீக்கி 'மதசார்பற்ற நேபாளமாக' மாற்றி விட்டனர். உடன் மோடிக்கும் அமீத்ஷாவக்கும் மூக்கின் மேல் கோபம். பல கலவரங்களை உண்டாக்கி இந்தியாவை இந்துத்வா நாடாக மாற்ற முயற்சிக்கும் வேளையில் இப்படி ஒரு சிக்கலா? என்ற கோபத்தில் நேபாளத்துக்கு அனுப்பி வந்த பெட்ரோலிய பொருட்கள் முதற்கொண்டு பல அத்தியாவசியப் பொருட்களை இந்திய இந்துத்வா அரசு தடுத்து வைத்துள்ளது.
நேபாளத்தின் உதவி பிரதமரும் உள்துறை மந்திரியுமான பாம்தேவ் கவுதம் டிஎன்ஏ செய்தி ஸ்தாபனத்தக்கு அளித்த பேட்டியில் 'இந்தியாவின் இந்த செயலால் அப்பாவி பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவும் ஒரு வகையில் எங்களுக்கு நல்லதுதான். எப்போதும் இந்தியாவையே சார்ந்திருக்காமல் மாற்று வழிகளை தேட இது எங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. பெட்ரோலிய பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்' என்கிறார்.
தலைவலி போய் தற்போது மோடிக்கும் அமீத்ஷாவக்கும். திருகு வலி வந்துள்ளது. அண்டை நாடுகளில் நேபாளம் எப்போதும் நம்மோடு நட்புடனேயே இருந்து வந்துள்ளது. இந்துத்வா ஆட்சியினால் இன்று அந்த நாடும் நம் கையை விட்டு போகப் போகின்றது. சீனாக்காரன் இனி ராணுவத் தளத்தையும் அங்கு நிறுவி வீடுவான்.
கோமாளிகளின் ஆட்சியில் இன்னும் என்னவெல்லாம் ஹாஸ்யங்கள் அரங்கேறப் போகிறதோ?
மன் மோகன்சிங், ப. சிதம்பரம், சோனியா காந்தி போன்றோரின் அருமை இப்போதுதான் நமக்கு தெரிகிறது.
தகவல் உதவி
dnaindia
ndtv
28-09-2015
