Followers

Sunday, April 03, 2016

தலித்கள் கோவிலின் இடத்துக்குள் நுழைந்ததால் திருவிழா ரத்து



கர்நாடக மாநிலம் ஹஸன் மாவட்டத்தில் உள்ள அரகரெ கிராமத்தில் உள்ள கோவிலில் திருவிழா. தங்களின் மத திருவிழா என்பதால் ஆசையோடு இந்த கிராமத்துக்கு வந்தனர் பெருந் திரளான தலித் மக்கள். ஆனால் மேல் சாதியினர் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. தலித்களை அனுமதித்தால் தீட்டு பட்டு விடும் என்று கூறி திருவிழாவையே ரத்து செய்துள்ளனர். காரியம்மா என்ற இந்த கோவிலில் இருந்து கிளம்பும் பேண்ட் வாத்தியமும் மேல் சாதி தெரு வழியாகவே போகிறது. தலித் குடியிருப்புக்குள் நுழைவதில்லை. அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டும் எவரும் சமரசத்துக்கு ஒத்து வரவில்லை. கடைசியில் திருவிழா ரத்தானது.

மகன் செத்தாலும் பரவாயில்லை. மருமகள் தாலியை அறுக்கணும் என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது.

நீங்கல்லாம் நல்லா வருவீங்கப்பா.... இவ்வளவு அவமானப்படுத்தியும் அந்த மதத்தை விட மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் தலித்களை சொல்லணும்.

தகவல் உதவி
தி ஹிந்து நாளிதழ்
21-03-2016

http://m.thehindu.com/news/national/karnataka/village-festival-cancelled-over-dalit-entry-into-temple/article8425516.ece

மதங்களை இனங்களை கடந்த மனித நேயம் என்பது இதுதான்

மதங்களை இனங்களை கடந்த மனித நேயம் என்பது இதுதான்

----------------------------------


சவுதியில் இளையராஜ என்ற சகோதரரின் பாஸ்போர்ட் தொலைந்து விட்டது..

அது ஒரு பாகிஸ்தானியர் கையில் கிடைக்க அவர் அதை திருநெல்வேலி சேர்ந்த பிலிக்ஸ் என்ற சகோதரரிடம் ஒப்படைத்துள்ளார்.

அவர் சென்னையை சேர்ந்த தவ்ஹீத் ஜமாஅத் நண்பரிடம் கூற அவர் என்னிடம் கூறினார்.

பாஸ்போர்ட் முகவரியில் அது அரக்கோணம் பகுதியில் ஒரு கிராமத்தின் முகவரியில் இருந்தது.

நான் அரக்கோணம் பகுதியில் உள்ள சகோதரி Sabitha Kadherயிடம் அந்த முகவரியில் போய் இளையாராஜாவின் சவுதி செல் நம்பரை அவர் குடும்பத்தாரிடம் விவரம் கூறி பெற்று தருமாறு உதவி கோரினேன்.

அவர் அந்த முகவரியை தேடி இளையாராஜாவின் குடும்பதினரிடம் கூறி அவரின் செல் நம்பரை பெற்று தந்தார்.

சவுதியில் அவரை தொடர்புக்கொண்டு அவரின் பாஸ்போர்ட்டை பத்திரமாக ஒப்படைத்தோம்.

உதவி புரிந்த அத்தனை உள்ளங்களுக்கும் இறைவன் கிருபை செய்வானாக.


Fahad Ahmed

Saturday, April 02, 2016

கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதால் கல்லூரி மாணவி தற்கொலை!



போபால்: குவாலியரில் உள்ள MITS கல்லூரியில் படித்து வந்த ஸூருபி கம்தான் என்ற மாணவி இந்தியா டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸோடு வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தித்து வந்தார். ஆனால் இவரது பிரார்த்தனை பலிக்கவில்லை. இந்தியா தோற்றது. வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இதனால் மனமுடைந்த மாணவி தனது ரூமுக்குச் சென்று துப்பட்டாவினால் தூக்கு மாட்டி இறந்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டு என்பது ஒரு தனியார் நிறுவனம் நடத்தும் நிகழ்வு. பணம் பண்ணுவதற்காக தேவையற்ற விளம்பரங்களையும் தேசபக்தியையும் இதில் புகுத்தி பலருக்கு மன உளைச்சலையும் தற்கொலைவரை செல்லவும் தூண்டுகிறார்கள். ஒரு விளையாட்டில் வெற்றி தோல்விதான் தேச பக்திக்கு அடையாளமா? அவனவன் பணத்தை வாங்கிக் கொண்டு வேண்டுமென்றே தோற்றுப் போகும் இந்த ஆட்டத்துக்கு இத்தனை பில்டப்புகள் தேவையா?

இதை எல்லாம் சொன்னால் 'போலோ பாரத் மாதா கீஜே.... உனக்கு தேச பக்தி கிடையாது. உன்னை பாகிஸ்தானுக்கு நாடு கடத்தி விடுவோம்' என்று டவுசர் பார்ட்டிகள் கம்பையும் வேல்களையும் தூக்கிக் கொண்டு வருவார்கள். :-)

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
01-04-2016

http://timesofindia.indiatimes.com/city/bhopal/Girl-commits-suicide-after-Indias-loss-to-West-Indies/articleshow/51647853.cms

Friday, April 01, 2016

பிரதமர் நரேந்திர மோடி ரியாத் வருகை!



பிரதமர் நரேந்திர மோடி ரியாத் வருகை!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 02-04-2016 இன்று ரியாத் வந்தடைந்தார். இரண்டு நாள் பயணமாக வந்துள்ளார். மன்னர் சல்மான் சுகவீனமாக இருப்பதால் இளவரசர் முஹம்மத் மோடியை வரவேற்றார். அதிக தொழிலாளர்களையும் அதிக ஏற்றுமதி இறக்குமதியையும் கொண்ட இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

எப்போதும் கேமராவை பார்க்கும் மோடி அவர்கள் தனது பாணியை மாற்றிக் கொண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ரூ.60 ஆயிரம் கோடி.... மின்சார ஊழல்!



அதிரப்போகும்.... ரூ.60 ஆயிரம் கோடி.... மின்சார ஊழல்- அம்பலப்படுத்தும்..... ஆவணப்படம்!

சட்டமன்றத் தேர்தலில் மக்களின் கவனத்தைக் கவரும் வகையில் 'ஊழல் மின்சாரம்' என்ற பெயரில் ஆணவப்படத்தை இயக்கியிருக்கிறார் பொறியாளர் சா.காந்தி. அனைத்து தொகுதிகளுக்கும், மின்சாரத்தின் வலியை உணர்த்தும் வகையில் இந்தப் படத்தைக் கொண்டு செல்ல இருக்கிறார்.

இது தொடர்பாக, தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர் அமைப்பின் சா.காந்தியிடம் பேசினோம்.

"மின்துறையில் ஊழலின் அளவு எந்த மாதிரியான வடிவங்களில் உருமாறியிருக்கிறது என்பதைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
மின்சாரத்துறையின் வரலாறு, தொடக்ககால மின்வெட்டு, மின்வெட்டு சரிசெய்யப்பட்ட காலம், மீண்டும் மின்வெட்டு எப்படி உருவாக்கப்பட்டது? மத்திய அரசின் மின்கொள்கை எப்படியிருக்கிறது என்பதையெல்லாம் அலசி ஆவணப்பட நோக்கில் அலசியிருக்கிறோம்.

அரசியல்வாதிகள் ஊழல் செய்தவற்கு மின்சாரம் எப்படி ஒரு வாய்ப்பாக அமைகிறது என்பது மிக முக்கியமான புள்ளி. சந்தைப் பொருளாதாரத்தில் ஈடுபடாத ஏழை மக்களை இந்த பூமியில் இருந்து எப்படியெல்லாம் தூக்கி எறிவதற்கு இவர்கள் முயற்சி செய்கிறார்கள்.
இதன் அபாயம் என்ன என்பதை இன்றைய தலைமுறை அறிய வேண்டும்.

வாழ்வின் அங்கத்தோடு இணைந்துவிட்ட மின்சாரத்தில், நமக்கே ஷாக் அடிக்கும் வேலைகளை இந்த அரசியல்வாதிகள் தைரியமாகச் செய்கிறார்கள்.

ஆவணப்படத்தின் உள்ளார்ந்த பொருளே இதுதான். மின்வெட்டும், மின்வெட்டு காரணமான மின்தேவையும், அதன்மூலம் நடக்கும் ஊழலும்தான் மையக்கரு.

உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன்.

கடந்த ஐந்தாண்டுகளில் மின்துறையில் மட்டும் நாற்பதாயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு மின்சாரத்தை விற்கும் தனியார்கள் வெளி மாநிலங்களுக்கு விற்கக் கூடாது என விதியை வகுத்திருக்கிறார்கள்.
மின்சாரம் தேவையில்லை என்று சொல்லிவிட்டால், அதற்கான இழப்பீடு வேண்டும் என்றுகூறி வழக்கு தொடுக்கிறார்கள் தனியார் மின் உற்பத்தியாளர்கள்.

மின்சாரம் வாங்காமலேயே இரண்டாயிரம் மெகாவாட்டுக்கு, ஒரு யூனிட் 4 ரூபாய் 90 பைசா என இழப்பீட்டைக் கொடுக்கப் போகிறார்கள்.
இதற்காக, தனியாருக்குச் செல்லக் கூடிய தொகையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

மே மாதத்திற்குள் இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்வைச் சொல்ல இருக்கிறது. மே மாதம் தாண்டியதும் நமக்கு காற்று மூலம் மின்சாரம் வந்துவிடும். மின்தேவையும் குறைந்து போகும். வெளியில் இருந்து வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இதைப் பற்றி மின்வாரியத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும். தெரிந்தே முன்கூட்டியே தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடுகிறார்கள் என்றால், ஊழலைத் தவிர வேறெந்த நோக்கமும் இல்லை.

2008-ம் ஆண்டில் இருந்து 2011ம் ஆண்டு வரையில் நடந்த மின்துறை ஊழலைப் பற்றி இதில் சொல்கிறோம்.

எட்டு ஆண்டுகளில் 60,000 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது.

தி.மு.க அரசு ஊழல் செய்தாலும், 'பிளாண்ட் ஆரம்பித்தால் தான் பற்றாக்குறையை சமாளிக்க முடியும்' என 28,000 கோடிக்கு நான்கு பிளாண்டுகளை அமைக்க முயற்சி எடுத்தது.

ஆனால் 2011 தேர்தலில் அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாததால், ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.வுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக இந்த பிளாண்டுகள் அமைந்தன.

அதை முறையாகப் பயன்படுத்தாமல் மூன்று வருடங்களுக்கு அ.தி.மு.க அரசு கிடப்பில் போட்டது.

காரணம், மின்கொள்முதலில் நல்ல ருசியைக் கண்டதுதான்.

எதிர்காலத்திலும் இந்த ருசி வேண்டும் என்பதற்காகத்தான் புதிய திட்டங்களையும் ஜெயலலிதா கொண்டு வரவில்லை.

'எண்ணூர் திட்டத்தைக் கொண்டு வந்தோம்' என இவர்கள் சொல்வது எல்லாம், தி.மு.க ஆட்சியின் கடைசி காலத்தில் போடப்பட்ட திட்டம்தான்.

இந்த வேலையும் இன்னமும் தொடங்கவில்லை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சாலையின் மின் தேவை 35 சதவீதமாக இருந்தது. இப்போது 24 சதவீதமாக சுருங்கிவிட்டது.
அப்படியானால், தொழில்துறை நசுங்கிவிட்டது என்பதுதானே உண்மை.

இதையெல்லாம் ஆவணப்படத்தில் கொண்டு வந்திருக்கிறோம். படம் எடுப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை ஆர்.ஆர்.சீனிவாசன் அளித்தார். 42 நிமிடம் ஓடக் கூடிய படம் இது.

நாளை மாலை சனிக்கிழமை எழும்பூர் இக்சா மையத்தில் ஆவணப்படத்தை வெளியிடுகிறோம். மின்சாரத்துறையில் அரசின் ஊழல் ராஜ்ஜியத்தை 'ஷாக்'கடிக்கும் விதமாக ஆவணப்படுத்தியிருக்கிறோம்" என்றார் நிதானமாக.

-ஆ.விஜயானந்த்
THANKS: VIKATAN