அந்த இரண்டு மருத்துவர்கள் மட்டும் அன்று இந்த உண்மைகளை வெளியே கசிய விட்டிருந்தால் பாகிஸ்தான் என்ற நாடே உருவாகியிருக்காது. காந்தியும் உயிரோடு இருந்திருப்பார். லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புகளும் தடுக்கப்பட்டிருக்கும். ஆர்எஸ்எஸ் பாஜக போன்ற பாசிசவாதிகளும் காணாமல் போயிருப்பர். இந்த பிராந்தியத்தில் ஆயுத வியாபாரமும் படுத்திருக்கும். இந்தியா ஒரு வல்லரசாகவும் மாறியிருக்கும்.
முகம்மது அலி ஜின்னா அவர்களின் ஒரே வாரிசுகள் தற்போது சிறந்த இந்திய குடிமகன்களாகவும், இந்த தேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறார்கள்...
ஹேராம் படத்தில் கூட ஒரு வசனத்தை கமலஹாசன் வைத்து இருப்பார், கமல், ஷாருக்கைப் பார்த்து “பாக்கிஸ்தான் போ” என்கிற பாணியில் மத அடிப்படையில் கருத்து தெரிவிக்க, அதற்கு ஷாருக் பதில், "ஜின்னா மகளே பாக்கிஸ்தான் செல்லாத போது, நான் காந்தியின் மகன்(அவர் வழிநடப்பவன்) நான் ஏன் பாக்கிஸ்தான் செல்லவேண்டும்" என்பார்..
ஆம் ஜின்னாவின் ஒரே வாரிசு டினா பாக்கிஸ்தான் போகாமல் செளராஷ்டிரா மதத்தவரை மணந்து இந்தியாவிலேயே தங்கினார். பின்னர் அமெரிக்கா சென்று வந்தார், அவரது பிள்ளைகள் பேரன்கள் எல்லாம் மும்பையில் டாப் 10 பணக்கார்ரகள், இந்தியாவில் 44வது இடத்தில் இருக்கும் குடும்பம்.

No comments:
Post a Comment