தற்பொதய இந்து மத சடங்குகளானது ஈரானிலிருந்து பெறப்பட்டது என்று பலமுறை விளக்கியுள்ளோம். ஐரோப்பாவிலிருந்து கால்நடைகளை ஓட்டிக் கொண்டு வந்த ஆரியர்கள் ஈரானில் பல ஆண்டுகள் தங்குகிறார்கள். அந்த மக்களின் பழக்க வழக்கங்கள், இறை வணக்கம் போன்றவற்றை தாங்களும் கற்றுக் கொண்டு கைபர் போலன் கணவாய் வழியாக நமது நாட்டுக்குள் பிரவேசிக்கிறார்கள்.
நம் நாடு மிகச் சிறந்த செழிப்புடனும் அறிவு சார்ந்த மக்களாகவும் இருப்பதை உணர்ந்த ஆரியர்கள் நம் நாட்டிலேயே நிரந்தரமாக தங்கி விட முயல்கிறார்கள். அரசர்களை கைகளில் போட்டுக் கொண்டு வேள்வி போன்றவற்றை அரசர்களுக்கு சாதகமாக நடத்துகிறார்கள். சிறிது சிறிதாக மன்னர்களும் இவர்களை நம்ப வர்ணாசிரம கோட்பாட்டை நம் மக்களின் மீது புகுத்துகிறார்கள். வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்று நம் முன்னோர்களும் இவர்களின் சதியில் வீழ்ந்து இன்று வரை மீள முடியாமல் தவிக்கிறார்கள்.
இவர்களின் சதியை சரியாக புரிந்து கொண்ட பல மக்கள் இஸ்லாம் கிருத்தவத்தை நோக்கி சென்று தங்களை பாதுகாத்து கொண்டார்கள். மீள முடியாத பெரியார், அண்ணா,அம்பேத்கர் போன்றவர்கள் இன்று வரை ஆரியர்களை வசை பாடி வருகின்றனர். வசை பாடுவதால் ஏதேனும் நன்மைகள் விளையப் போகிறதா என்ன?

No comments:
Post a Comment