Followers

Tuesday, August 18, 2026

மக்கள் மிகவும் தெளிவாகவே உள்ளனர்.

 மக்கள் மிகவும் தெளிவாகவே உள்ளனர்.

மனு தனது அத்தியாயம் 12, ஸ்லோகம் 4 இல் இவ்வாறு சொல்கிறார்:
"வேதத்தைக் கற்க முனையும் சூத்திரனின் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும், மீறிப் படிப்பானேயானால், அவனது நாக்கைத் துண்டிக்க வேண்டும், வேதத்தை முழுமையாக ஒரு சூத்திரன் படித்து அறிவானேயானால் அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போடவேண்டும்".
இப்படி எழுதி வைத்துக் கொண்டு அதனை தடை செய்ய கோரிக்கையும் வைக்காமல் மனுவுக்கு சிலை அமைத்து பூஜித்தால் எந்த சூத்திரன் வேதம் படிக்க வருவான். எனவேதான் வேதத்தை வாங்க மறுக்கிறார்கள்.
அடுத்து குர்ஆனை எடுத்துக் கொள்வோம்.....
குர்ஆனின் பல வசனங்கள் 'மனிதர்களே' என்று தான் ஆரம்பிக்கும். அதில் தமிழன், அரபி, அமெரிக்கன், ஐரோப்பியன், ஆப்ரிக்கன் என்று அனைவரும் வருவர். எனவே தான் அங்கு குர்ஆன் இலவசமாக வழங்கும் போது அனைத்து நாட்டு மக்களும் போட்டி போட்டுக் கொண்டு குர்ஆனை வாங்கிச் செல்கின்றனர்.
நபிகள் நாயகம் கூறினார்கள் “மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.”
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா 2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)



No comments: