இஸ்லாமிய பயங்கரவாதம்
என்பது வல்லரசுகளின் ரத்த வர்த்தகத்திற்கான முதலீடு மட்டுமே...
கருப்புத்
திரைகளும், இரத்தம்
தோய்ந்த கத்திகளும், முகமூடி
அணிந்த கொடிய பயங்கர வாதிகளுடன் இணையதளங்களை உலுக்கிய கொடூர மரண தண்டனை
வீடியோக்களும் உலக நாடுகளின் தூக்கத்தைக் கலைத்துக் கொண்டிருந்த ஒரு காலம்
இருந்தது.
பாலைவனப்
புழுதியில் இருந்து கிளம்பிய அந்தப் பெருநெருப்பு, தேசங்களின் எல்லைகளைத் தகர்த்து உலகையே
நடுநடுங்க வைத்தது.
தங்களை
இறைவனின் ஒரே காவலர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு, அநீதிக்கு எதிரான இறுதிப் போர் என்று
முழங்கியவர்கள் அவர்கள்.
அவர்கள் தான்
ஐஎஸ்ஐஎஸ் என்ற பயங்கரவாதிகள்.
ஆனால் இன்று, காசாவின் வானம் சாம்பலாலும் இரத்தத்தாலும்
மூடப்பட்டு, கான்கிரீட்
இடிபாடுகளுக்கு அடியில் பிஞ்சுக் குழந்தைகளின் குரல்கள் மூழ்கிப்போயின.
உலகமே
திகைத்துப் போய் நிற்கும் இந்த வரலாற்றுப் பேரழிவின் நடுவே, எப்போதும் வன்முறையைச் சுவாசித்த அந்தப்
பயங்கரப் பேய்களின் சத்தம் மட்டும் கேட்கவே இல்லை;
எந்த ஒரு
பழிவாங்கும் தாக்குதலும் நிகழவில்லை.
இஸ்ரேலை
நோக்கி ஒரு தோட்டா கூட இவர்களால் சுடப்படவில்லை.
நீதிக்காகப்
போரிடுவதாகச் சொன்னவர்கள் எங்கே போனார்கள்?
இஸ்ரேலியப்படை
முஸ்லிம்களை கொத்துக் கொத்தாக கொல்லும் பொழுது ஒரு சிறு எதிர்வினை காட்டாமல்
அமைதிகாப்பதன் மர்மம் பற்றி எவராவது சிந்தித்திருக்கிறீர்களா?
அந்த மர்மமான
அமைதியின் பின்னணியில், பல
தசாப்தங்களாக விளையாடப்பட்டு வரும் சர்வதேச அதிகாரச் சதுரங்கத்தின் கொடூர நிஜம்
ஒன்று ஒளிந்திருக்கிறது.
மத்திய
கிழக்கிலும் தெற்காசியாவிலும் உதிர்ந்த இரத்தத் துளிகள் எதுவும் தற்செயலானவை அல்ல;
தாலிபான், அல்-கொய்தா முதல் ஐஎஸ்ஐஎஸ் வரை இந்த உலகில்
முளைத்த எந்த ஆயுதக் குழுவும் வெறும் மத உணர்ச்சியால் மட்டும் உருவானவை அல்ல.
அவை
வல்லரசுகளின் ரகசிய உளவுத் திட்டங்கள்,
‘Proxy Wars’ எனப்படும் மறைமுகப் போர்கள் மற்றும் பில்லியன் டாலர் ஆயுத வர்த்தகத்தின்
பின்னணியில் உருவாக்கப்பட்டவை.
ஈராக் மீதான
படையெடுப்பு சதாம் ஹுசைனின் ஆட்சியைத் தகர்த்து, அந்த நாட்டை நிர்வாகமற்ற
பெருங்குழப்பத்திற்குள் தள்ளியது;
அமெரிக்கா
விட்டுச் சென்ற பலவீனமான கைப்பாவை அரசாங்கத்தின் இடிபாடுகளில் இருந்து, மேற்குலக உளவுத்துறைகளின் திட்டமிடலில் ஒரு
கொடிய அசுரனாக ஐஎஸ்ஐஎஸ் வடிவெடுத்தது.
மத்திய
கிழக்கின் வரைபடத்தை மாற்றியமைத்து இஸ்ரேலுக்குச் சாதகமான ஒரு சூழலை உருவாக்குவதே
இதன் அடித்தளம்.
சிரியாவின்
ஆசாத் ஆட்சியை வீழ்த்தி, அரபு உலகில்
எஞ்சியிருந்த வலுவான எதிர்ப்புக் குரலை அடக்கவும், சிரியா மற்றும் லெபனானில் ஈரானின்
செல்வாக்கைத் துண்டிக்கவும் CIA, MI6 மற்றும் மொசாட் போன்ற அமைப்புகள் காய்களை
நகர்த்தின.
கோலன்
குன்றுகள் முதல் மத்திய தரைக்கடல் வரை தடையற்ற ஆதிக்கத்தை நிலைநிறுத்த, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் போன்ற
நாடுகளின் நிதியும், துருக்கியின்
பயிற்சி முகாம்களும் களம் அமைத்துக் கொடுத்தன.
சமூக
வலைத்தளங்கள் மூலம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு போர்க்களத்திற்கு
இழுக்கப்பட்டனர்.
அமெரிக்க அரசு
“Combined
Joint Task Force – Operation Inherent Resolve” என்ற புதிய ராணுவக் கட்டளையகத்தை அமைத்து
போரை நடத்திய அதே வேளையில், போர்த்
தளவாடங்களை உற்பத்தி செய்யும் பிரம்மாண்ட தனியார் நிறுவனங்களுக்கு ( Military
Industrial complex)அது தொடர்ந்து
பில்லியன் கணக்கான டாலர்களைக் கொட்டும் வருமான ஆதாரமாக மாறியது.
இந்த
நாடகத்தின் உச்சக்கட்ட திரைமறைவு ஆட்டமாக உலாவரும் தகவல்கள் இன்னும்
அதிரவைக்கின்றன.
ஐஎஸ்ஐஎஸ்
அமைப்பின் தலைவராக (Caliph) உலகை
அச்சுறுத்திய அபு பக்கர் அல்-பாக்தாதி என்பவன், Edward Snowdon மற்றும் ஈரானிய ஊடகத் தகவல்களின்படி ‘சைமன்
எலியட்’ (Simon Elliot / Elliot Shimon) என்கிற மொசாட் உளவாளியின் வேடம் என்ற
அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன.
தீவிரவாதக்
குழுக்களை ஒரே குடையின் கீழ் திரட்டி, அரபு நாடுகளை உள்ளிருந்தே சிதைக்க
நிகழ்த்தப்பட்ட ஒரு உளவியல் போரின் ( psy-op) உச்சக்கட்ட முகமாகவே அவன் வலம் வந்தான்.
இந்த
பயங்கரவாத அமைப்பு தாங்கள் உண்மையில் யார் என்பதை தெளிவாக அவர்களின் பெயரான
ஐஎஸ்ஐஎஸ்(ISIS) ஊடாக உலகிற்கு
தெளிவாக அறிவிக்கின்றனர்.
ஒற்றைக் கண் (The
All-Seeing Eye)
பண்டைய
எகிப்திய புராணங்களில் 'ஐசிஸ்'
(Isis) மற்றும்
ஹோரஸின் 'ஒற்றைக் கண்'
(Eye of Horus) என்பது
உலகளாவிய ரகசிய அதிகாரக் குழுக்களாலும் (Illuminati/Freemasonry)
ஆதிக்க
சக்திகளாலும் ஒரு அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது.
புவிசார்
அரசியலில் இது, உலக
நிகழ்வுகளையும் யுத்தங்களையும் திரைமறைவில் இருந்து கவனித்து, முழு உலகையும் தனது கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவரத் துடிக்கும் "மறைமுகக் கண்காணிப்பு மற்றும் பேரதிகாரத்தின்"
அடையாளமாகப் இந்த
ஒற்றைக்கண. பார்க்கப்படுகிறது.
அதுமட்டும்
அல்ல, ISIS என்பது வெறும்
தீவிரவாத இயக்கத்தின் சுருக்கம் மட்டுமல்ல; அது Israeli Secret
Intelligence Service (இஸ்ரேலிய
ரகசிய உளவுத்துறை) என்றும் பொருள்படும்.
இன்று
ஆட்டத்தின் இறுதிக்கட்டம் எட்டியுள்ளது.
ஆரம்பத்தில்
பொதுமக்களைக் கொன்றதற்காக சர்வதேச அளவில் "ஐஎஸ்ஐ௭ஸ் பயங்கரவாதிகள்" எனத்
தடை செய்யப்பட்டவர்கள், ஈரான் மற்றும்
ஹிஸ்புல்லாவுக்கு எதிரான போரில் பயனுள்ள சக்தியாக மாறியவுடன்:
அவர்கள்
"Syrian Rebels” என பெயர் மாற்றப்பட்டு அழைக்கப்படுகின்றனர்.
ஈரானிலிருந்து
சிரியா வழியாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவுக்கு ஆயுதங்கள் செல்வதைத் தடுக்கும்
நிலப்பரப்புக் கட்டுப்பாட்டை ( ground control) முன்னர் ஐஎஸ்ஐஎஸ் என்று அழைக்கப்பட்ட இந்தக்
“சிரியாவின் கிளர்ச்சிக் குழுக்கள்” கையில் வைத்துள்ளன.
சிரியாவின்
இத்லிப் (Idlib) போன்ற
பகுதிகளில் உள்ளூர் நிர்வாகத்தை நடத்துவதால், அவர்களைத் தவிர்க்க முடியாத "Partners
for Stability” என்ற தொனியில்
மேற்கத்திய அரசியல் வட்டாரங்கள் பார்க்கத் தொடங்கின.
கொலையாளி
தூதராக மாறுவதும், பயங்கரவாதி
கூட்டாளியாக மாறுவதும் இந்த அதிகார அரசியலில் மிகச் சாதாரணம்.
காசாவின்
பிணக்குவியல்களுக்கு முன்னால் ஐஎஸ்ஐஎஸ் இன்று மெளனம் காப்பது ஒன்றே, அந்த இயக்கத்தின் உண்மையான நோக்கத்தையும்
அதன் எஜமானர்கள் யார் என்பதையும் அம்பலப்படுத்துகிறது.
புனிதப் போர்
என்பது உலகை ஏமாற்றப் போர்த்தப்பட்ட ஒரு போலி முகமூடி; அதன் பின்னணியில் இயங்கியது சர்வதேச உளவு
அமைப்புகளும், ஆதிக்க
வல்லரசுகளும் தான்.
இறுதியில்
வெளிப்படும் நிதர்சனம் என்னவென்றால், ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லாடலே உலகளாவிய
அதிகாரப் போட்டியில் ஒரு மூலோபாயக் கருவியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இஸ்லாமியக்
கோட்பாடுகளின் பெயரால் உலகம் முழுவதும் தூண்டிவிடப்பட்ட வன்முறை அலைகள் இயல்பானவை
அல்ல,
அவை
மேற்கத்திய உளவு அமைப்புகளின் திட்டமிடலாலும், சியோனிச ஊடகங்களின் உளவியல்
பிரச்சாரங்களாலும், பெருமளவு
நிதியை இறைத்து உருவாக்கப்பட்ட ஒரு செயற்கையான பூதாகரம் தான் “ இஸ்லாமிய
பயங்கரவாதம்”.
பிராந்தியங்களைச்
சிதைக்கவும், வளங்களைச்
சூறையாடவும், எதிரி நாடுகளைப்
பலவீனப்படுத்தவும் மதத்தின் பெயரால் ஒரு அசுரன் தேவைப்பட்டான்.
அந்தத்
தேவைக்கேற்ப ஆயுதக் குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டன, வளர்க்கப்பட்டன, வேலை முடிந்ததும் கழற்றி எறியப்பட்டன.
இஸ்லாத்திற்கும்
பயங்கரவாதத்திற்கும் ஒரு துளி தொடர்பு கூட கிடையாது.
வரலாற்றின் எந்தப்
பயங்கரவாத அமைப்பின் வேர்களைத் தோண்டினாலும், அதன் பின்னால் ஒரு சக்திவாய்ந்த தேசத்தின்
நிழலும், தீராத
அதிகாரப் பசியும் மறைந்திருப்பது புலப்படும்.
ஏனென்றால், இந்த ஆதிக்க உலகிற்கு அமைதியை விட யுத்தமே
அதிக லாபம் தரும் சந்தையாக இருக்கிறது.
"War is a good business".
ஆயுத
வியாபாரிகளின் பெட்டகங்களை நிரப்பவும், புவிசார் வரைபடங்களைத் தங்களுக்குச் சாதகமாக
மாற்றி அமைக்கவும் மனித உயிர்கள் வெறும் புள்ளிவிவரங்களாக மட்டுமே
மாற்றப்படுகின்றன.
காசாவின்
அழிவும், ஐஎஸ்ஐஎஸ்
குழுவின் மர்மமான மௌனமும் இந்த அதிகார நாடகத்தின் முகமூடியை முற்றிலுமாக
அகற்றிவிட்டன.
பயங்கரவாதம்
என்பது ஒரு மதத்தின் வெளிப்பாடு அல்ல, மாறாக அது வல்லரசுகளின் ரத்த
வர்த்தகத்திற்கான முதலீடு மட்டுமே.

No comments:
Post a Comment