Followers

Monday, January 02, 2023

கோவை ஈஷா மையத்திலிருந்து வெளியேறிய பெண்

 கோவை ஈஷா மையத்திலிருந்து வெளியேறிய பெண் வேகமாக ஒரு taxiல் ஏறி வெளியேறி இருக்கிறார். போகும்வழியில் taxi ஓட்டுனரின் செல்போன் மூலம் கணவரை தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறார். பின்னர் செம்மேடு பகுதியில் இறங்கி வேகமாக ஓடியிருக்கிறார். அதன் பிறகு சடலமாக செம்மேடு அருகில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளார். நமக்கு எழும் விடை தெரியா கேள்விகள்?


1) செம்மேடு பகுதி CCTV footageல் அவர் yoga உடையோடு ஓடுவது தெரிகிறது. உடையைக் கூட மாற்றாமல் அங்கிருந்து அவசரமாக வெளியேற வேண்டிய அவசரம் என்ன?

2) அவர் Taxi driverயிடம் phone வாங்கி பேசியுள்ளார். அப்படி என்றால் அவர் கையில் phone இல்லை. Phoneஐக் கூட எடுக்க முடியாத அளவிற்கு அங்கு அவருக்கு இருந்த நெருக்கடி என்ன?

3) வெளியில் இருந்து எமர்ஜென்சி என call வந்திருந்தால் அது அவர் cell phone ல் தான் வந்திருக்கும். அப்படி வந்திருந்தால் அவர் செல்போன் உடன் தான் வெளியேறி இருப்பார். எனவே வெளியிலிருந்து எமர்ஜென்சி என call எதுவும் வரவில்லை என்பது உறுதியாகிறது.

4) Taxi driver மூலம் எதுவும் பிரச்சினை வந்திருந்தால் அங்கிருந்து இறங்கி அவர் தெருவில் ஓடும் போது அருகில் ஆள்நடமாட்டம் இருப்பதால் அவர்கள் உதவியை நாடி இருப்பார். அதுவும் இல்லை என்கிற போது அந்த சந்தேகமும் இல்லை. இவையனைத்தையும் யோசித்தால் தவறு ஆரம்ப இடமான ஈஷா யோகா மையத்திலிருந்தே ஆரம்பித்திருக்கும் என்றே உணர முடிகிறது. தவறு அங்கு தான் என்று உறுதியானால் ஜெயேந்திரர் கைது போல் ஜக்கி கைதும் சாத்தியமே..

இவ்வளவு சம்பவங்களுக்கு பின்னரும் அங்கு போற ஜென்மங்கள என்ன சொல்வது


-Balamurugan



கிருத்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே

 சத்தீஸ்கர்....


கிருத்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டுள்ளது. ஆதிவாசிகள் கிருத்தவ மதத்துக்கு மாறுவதை பொருக்காத சங்கிகள் கலவரத்தை தூண்டியுள்ளனர். இந்து மதத்தில் இருக்கும் காலமெல்லாம் சாதியை காரணம் காட்டி ஆதிவாசிகளுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. கிருத்தவ மதத்துக்கு மாறினால் சகல வசதிகளும் கிடைத்து கூடவே படிப்பும் கிடைக்கிறது. 


ஆதிவாசிகள் கிருத்தவ மதத்துக்கு மாறினால் பார்பனியம் படுத்து விடும். எனவே ஆதிவாசிகளுக்கு இந்து போதையை ஏற்றி விட்டு குளிர் காய்கிறது மேல் சாதிய பார்பனியம். கலவரம் செய்ய மட்டும் கீழ் சாதிகள். இதனை என்று உணர்கிறார்களோ அன்று சூத்திரர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்கு விடிவு காலம். 




Sunday, January 01, 2023

தொழிலதிபர் தனது காரில் தன்னைத் தானே

 பெங்களூரு


தொழிலதிபர் தனது காரில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்துள்ளார். இறப்புக்காரணம் பிஜேபி எம்ஏல்ஏயும் முன்னால் பிஜேபி அமைச்சருமான அரவிந்தே காரணம் என்று கடிதம் எழுதி வைக்கப்பட்டுள்ளது. 


இது தற்கொலையா? அல்லது 40 சதவீத கமிஷனால் ஏற்பட்ட கொலையா? என்பது விசாரணையில் தெரிய வரும். யோக்கியர் அண்ணாமலை இதற்காக போராட தயாரா?






டிஜிட்டல் இந்தியா....

 டிஜிட்டல் இந்தியா....


மோடி வாக்களித்த 15 லட்சத்தை வாங்க ஏடிஎம் க்குள் நுழைந்த பசு. 


பசுவை அப்புறப்படுத்தினால் சங்கிகள் கோபிப்பார்கள் என்பதால் மூக்கை பொத்திக் கொண்டு பணத்தை எடுக்கும் வடக்கன்கள்.....




அண்ணாமலையும், அர்ஜூன் சம்பத்தும் இதற்கு போராட்டம் அறிவிக்கலாமே?

 அண்ணாமலையும், அர்ஜூன் சம்பத்தும் இதற்கு போராட்டம் அறிவிக்கலாமே?