Followers

Wednesday, April 11, 2018

முகத் திரை அவசியம் அணிய வேண்டுமா?

முகத் திரை அவசியம் அணிய வேண்டுமா?

பட்டமளிப்பு விழாவுக்கு வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முகத்தை மூடி பட்டம் வாங்க வந்த மாணவிகளை முகத்திரையை அகற்றச் சொன்னாராம். ஒலிப் பெருக்கியிலும் சொல்லியுள்ளார்கள். இந்த செய்கை சர்ச்சையாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக குர்ஆன் இடும் கட்டளையானது முகம், கைகள் தவிர வெளியே செல்லும் பொது மற்ற பகுதிகள் வெளியில் தெரியாமல் மறைத்தக் கொள்ளச் சொல்கிறது. கவர்னர் சொன்னதில் தவறில்லை. முகத்தை மூடிச் செல்வதால் பல தவறுகள் நிகழவும் வாய்ப்புண்டு.

கவர்னர் புரோகிதைப் பொருத்த வரை ஆர்எஸ்எஸில் வார்த்தெடுக்கப்பட்டவர். அதில் மாற்றுக் கருத்தில்லை.

----------------------------------------------

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்தைத் திறந்து இருந்ததற்கு பல சான்றுகள் உள்ளது.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன் அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழகை நடத்தினார்கள் பாங்கோ இகாமத்தோ இல்லை. பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்து கொண்டு இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும் இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கட்டுப்படுமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்கு சென்று அவர்களுக்கும் நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும் பெண்களை நோக்கி தர்மம் செய்யுங்கள் நீங்கள் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவிர்கள் என்று கூறினார்கள். அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மனி எழுந்து ஏன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் அதிகமாக குறை கூறுகின்றீர்கள். நன்றி மறந்து கணவனை நிராகரிக்கின்றீர்கள் என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதனிகள் மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்கனை பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போட்டார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (1612)
கன்னங்கள் கருத்த பெண்மனி என்று ஜாபிர்(ரலி) அவர்கள் குறிப்பிடுவதாக இருந்தால் அப்பெண்ணின் முகம் திறந்திருந்தாலே இது சாத்தியம்.
பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயமாக இருந்திருந்தால் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னிலையில் நபித்தோழியர்கள் முகத்தைத் திறந்திருக்கமாட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் இதைக் கண்டிக்காமல் இருக்க மாட்டார்கள். பெண்கள் முகத்தை மறைக்க வேண்டியதில்லை என்பதாலே இதை நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை.


No comments: