Followers

Saturday, April 21, 2018

வாரம் ஒரு சூரா! மனனம் செய்ய!! - சூரத்துல் ஃபஜ்ர்


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

வாரம் ஒரு சூரா!            மனனம் செய்ய!! 
தொழுகைக்கு உதவ கூடிய சிறு சூராக்கள்!

             பதிவு:5

அரபு தமிழ் ஆங்கிலம்
ஆகிய மொழிகளில் தமிழ் ,ஆங்கில மொழி விளக்கங்களுடன்
வெள்ளிக்கிழமை தோறும்

89. سورة الفجر
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
وَالْفَجْرِ {1}
وَلَيَالٍ عَشْرٍ {2}
وَالشَّفْعِ وَالْوَتْرِ {3}
وَاللَّيْلِ إِذَا يَسْرِ {4}
هَلْ فِي ذَٰلِكَ قَسَمٌ لِذِي حِجْرٍ {5}
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ {6}
إِرَمَ ذَاتِ الْعِمَادِ {7}
الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ {8}
وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ {9}
وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ {10}
الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ {11}
فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ {12}
فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ {13}
إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ {14}
فَأَمَّا الْإِنْسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ {15}
وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ {16}
كَلَّا ۖ بَلْ لَا تُكْرِمُونَ الْيَتِيمَ {17}
وَلَا تَحَاضُّونَ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ {18}
وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَمًّا {19}
وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا {20}
كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا {21}
وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا {22}
وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنْسَانُ وَأَنَّىٰ لَهُ الذِّكْرَىٰ {23}
يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي {24}
فَيَوْمَئِذٍ لَا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ {25}
وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ {26}
يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ {27}
ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً {28}
فَادْخُلِي فِي عِبَادِي {29}
وَادْخُلِي جَنَّتِي {30}

சூரத்துல் ஃபஜ்ர்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
வல் ஃபஜ்ர்
வலயாலின் அஷ்ர்
வஷ்ஷஃப்இ வல்வ(TH)த்ர்
வல்லைலி இ(D)தா யஸ்ர்
ஹல்ஃபீ (D)தாலி(K)க (Q)கஸமுல்லி(D)தீ ஹிஜ்ர்
அலம்(TH)தர கய்ஃப ஃபஅல ரப்பு(K)க பிஆ(D)த்
இரம(D)தா(TH)தில் இமா(D)த்
அல்ல(TH)தீ லம் யு(KH)ஹ்ல(Q)க் மிஸ்லுஹா ஃபில் பிலா(D)த்
வ சமூ(D)தல்ல(D)தீன ஜாபுஸ்ஸ(KH)ஹ்ர பில்வா(D)த்
வஃபிர்அவ்ன (D)தில் அவ்(TH)தா(D)த்
அல்ல(D)தீன (TH)தஃகவ் ஃபில் பிலா(D)த்
ஃபஅக்ஸரூ ஃபீய்ஹல் ஃபஸா(D)த்
ஃபஸ(B)ப்ப அலைஹிம் ரப்பு(K)க சவ்(TH)த அ(D)தா(B)ப்
இன்ன ரப்ப(K)க லபில்மிர்ஸா(D)த்
ஃபஅம்மல் இன்ஸானு இ(D)தா ம(B)ப்(TH)தலாஹு ரப்புஹு ஃபஅ(K)க்ரமஹு வனஃஅமஹு ஃபய(Q)கூலு ர(B)ப்பீ அ(K)க்ரமன்
வஅம்மா இ(D)தா ம(B)ப்(TH)தலாஹு ஃப(Q)க(D)தர அலைஹி ரி(Z)ஸ்(Q)கஹு ஃபய(Q)கூலு ர(B)ப்பீ அஹானன்
கல்லா (B)பல்லா து(K)க்ரிமூனல் ய(TH)தீம்
வலா (TH)தஹாள்ளூன அலா (TH)தஆமில் மிஸ்(K)கீன்
வ(TH)தஃ(Q)குலூன(TH)த் (TH)துராஸ அ(K)க்லல் லம்மா
வ துஹி(B)ப்பூனல் மால ஹு(B)ப்பன் ஜம்மா
கல்லா இ(D)தா (D)துக்கத்தில் அர்ளு (D)தக்கன் (D)தக்கா
வஜாஅ ரப்பு(K)க வல் மலக்கு ஸஃப்பன் ஸஃப்பா
வஜீஅ யவ்மஇ(D)திம் பிஜஹன்னம யவ்மஇ(D)திய் ய(TH)த(D)தக்கருள் இன்ஸானு வஅன்னா லஹு(D)த் (D)திக்ரா
ய(Q)கூலு யாலை(TH)தநீ (Q)க(D)த்தம்(TH)து லிஹயா(TH)தி
ஃபயவ்மஇ(D)தில்லா யுஅ(D)த்தி(B)பு அ(D)தாபஹு அஹ(D)து
வலா யூஸி(Q)கு வஸா(Q)கஹு அஹ(D)து
யா அய்ய(TH)துஹன் னஃப்சுல் மு(TH)த்மஇன்னா
இர்ஜிஈ இலா ர(B)ப்பி(K)கி ராளிய(TH)தம் மர்ளிய்யா
ஃப(D)த்(KH)ஹுலி ஃபீஇ(B)பா(D)தி
வ(D)த்(KH)ஹுலி ஜன்ன(TH)த்தி.

Suratul-Fajr
Bismillahir-Rahmanir-Rahim.
1.Wal-Fajr.
2.Wa layalin ^ashr.
3.Wash-shaf^i wal-watr.
4.Wal-layli 'idha yasr.
5.Hal fi dhalika qasamulli dhi hijr.
6.'Alam tara kayfa fa^ala Rabbuka bi^ad.
7.'Irama dhatil-^imad.
8.'Allati lam yukhlaq mithluha fil-bilad.
9.Wa thamudal-ladhina jabus-sakhra bil-wad.
10.Wa fir^awna dhil-'awtad.
11.'Alladhina taghaw fil-bilad.
12.Fa 'aktharu fihal-fasad.
13.Fa sabba ^alayhim Rabbuka sawta ^adhab.
14.'Inna Rabbaka labil-mirsad.
15.Fa 'ammal-'insanu 'idha mabtalahu Rabbuhu fa 'akramahu wa na^^amahu fa yaqulu Rabbi 'akraman.
16.Wa 'amma 'idha mabtalahu fa qadara ^alayhi rizqahu fa yaqulu Rabbi'ahanan.
17.Kalla bal la tukrimunal-yatim.
18.Wa la tahadduna ^ala ta^amil-miskin.
19.Wa ta'kulunat-turatha 'aklal-lamma.
20.Wa tuhibbunal-mala hubban jamma.
21.Kalla 'idha dukkatil-'ardu dakkan dakka.
22.Wa ja'a Rabbuka wal-malaku saffan saffa.
23.Wa ji'a yawma'idhim bi Jahannam,* yawma'idhiy-yatadhakkarul-'insanu wa 'anna lahudh-dhikra.
24.Yaqulu ya laytani qaddamtu li hayati.
25.Fa yawma'idhil-la yu^adhdhibu ^adhabahu 'ahad.
26.Wa la yuthiqu wathaqahu 'ahad.
27.Ya 'ayyatuhan-nafsul-mutma'innah.
28.'Irji^i ila Rabbiki radiyatam-mardiyyah.
29.Fadkhuli fi ^ibadi.
30.Wadkhuli Jannati.

~~~~~

அல்ஃபஜ்ரு – வைகறை
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
1. வைகறையின் மீது சத்தியமாக!
2. பத்து இரவுகள் மீதும் சத்தியமாக!
3. இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக!
4. கடந்து செல்லும் இரவின் மீது சத்தியமாக!
5. அறிவுடையோருக்கு (போதிய) சத்தியம் இதில் இருக்கிறதா?
6, 7. ஆது, தூண்களையுடைய இரம் சமுதாயங்களை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா?
8. உலகில் அவர்களைப் போல் (யாரும்) படைக்கப்படவில்லை.
9, 10. மலையடிவாரத்தில் பாறையைக் குடைந்(து வாழ்ந்)த ஸமூது சமுதாயத்தையும், படைகளுடைய ஃபிர்அவ்னையும் (எப்படி ஆக்கினான்?)
11. அவர்கள் உலகில் வரம்பு மீறிக் கொண்டிருந்தனர்.
12. அதில் குழப்பத்தை அதிகமாக்கினார்கள்.
13. எனவே உமது இறைவன் அவர்களுக்கு எதிராக வேதனையின் சாட்டையைச் சுழற்றினான்.
14. உமது இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.
15. மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச்செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும் போது "என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான்'' என்று கூறுகிறான்.
16. அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும் போது "என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்'' எனக் கூறுகிறான்.
17. அவ்வாறில்லை! நீங்கள் அனாதையை மதிப்பதில்லை.
18. ஏழைக்கு உணவளிக்கத் தூண்டுவதில்லை.
19. வாரிசுச் சொத்துக்களை நன்றாக உண்டு வருகிறீர்கள்.
20. செல்வத்தை அதிகம் விரும்புகிறீர்கள்.
21. அவ்வாறில்லை! பூமி தூள்தூளாக நொறுக்கப்படும் போது,
22. வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும் போது,
23. அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் தான் மனிதன் (உண்மையை) உணர்வான். (அப்போது) இந்தப் படிப்பினை எப்படிப் பயன் தரும்?
24. "எனது வாழ்க்கைக்காக (நல்லறங்களை) நான் முற்படுத்தியிருக்கக் கூடாதா?'' என்று கூறுவான்.
25. அந்நாளில் அவன் தண்டிக்குமளவுக்கு யாரும் தண்டிக்க முடியாது.
26. அவன் கட்டுவது போல் யாரும் கட்ட முடியாது.
27, 28. அமைதியுற்ற உயிரே! திருப்தியோடும் (இறைவனால்) திருப்தி கொள்ளப்பட்டும் உனது இறைவனிடம் செல்வாயாக!
29. எனது அடியார்களில் சேர்ந்து கொள்வாயாக!
30. எனது சொர்க்கத்தில் நுழைவாயாக! (எனக் கூறப்படும்.)


In the name of God, the Gracious, the Merciful.
1  By the daybreak.
2  And ten nights.
3  And the even and the odd.
4  And the night as it recedes.
5  Is there in this an oath for a rational person?
6  Have you not seen how your Lord dealt with Aad?
7  Erum of the pillars.
8  The like of which was never created in the land.
9  And Thamood-those who carved the rocks in the valley.
10  And Pharaoh of the Stakes.
11  Those who committed excesses in the lands.
12  And spread much corruption therein.
13  So your Lord poured down upon them a scourge of punishment.
14  Your Lord is on the lookout.
15  As for man, whenever his Lord tests him, and honors him, and prospers him, he says, "My Lord has honored me."
16  But whenever He tests him, and restricts his livelihood for him, he says, "My Lord has insulted me."
17  Not at all. But you do not honor the orphan.
18  And you do not urge the feeding of the poor.
19  And you devour inheritance with all greed.
20  And you love wealth with immense love.
21  No-when the earth is leveled, pounded, and crushed.
22  And your Lord comes, with the angels, row after row.
23  And on that Day, Hell is brought forward. On that Day, man will remember, but how will remembrance avail him?
24  He will say, "If only I had forwarded for my life."
25  On that Day, none will punish as He punishes.
26  And none will shackle as He shackles.
27  But as for you, O tranquil soul.
28  Return to your Lord, pleased and accepted.
29  Enter among My servants.
30  Enter My Paradise.

அரபு தெரியாதவர்கள் எளிதில் மனனம் செய்து கொள்ள வசதியாக இத்
தொடர் ஆரம்பிக்கபட்டுள்ளது,

இதனை மற்றவர்களும் பயன்பெற ! உங்கள் இணையதளத்தில் பகிரவும்!!

https://www.facebook.com/nazeersuvanappiriyan/posts/927606164086992


No comments: