Followers

Monday, March 15, 2021

இஸ்லாம் வாளால் வளர்ந்தது என்று தொடர்ந்து பொய்களை....

 


இஸ்லாம் வாளால் வளர்ந்தது என்று தொடர்ந்து பொய்களை பரப்பும் சங்கிகள் இந்த செய்தியை படிப்பார்களாக!

 

இனியாவது பொய்களை பரப்புவதை நிறுத்துவார்களாக!

 

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

திருக்குர்ஆன் 2:256

 

இஸ்லாத்தில் வற்புறுத்தல் கிடையாது என்றும், தெளிவான ஆதாரங்களை எடுத்துச் சொல்லி மார்க்கத்துக்கு அழைப்பு விடுப்பது மட்டுமே இஸ்லாத்தின் கொள்கை என்றும் இவ்வசனம் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறது.

 

மார்க்கத்தில் யாரையும் கட்டாயப்படுத்தி சேர்க்கக் கூடாது என்று திருக்குர்ஆனே கூறி விட்ட பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டாயப்படுத்தி யாரையும் மதமாற்றம் செய்திருப்பார்கள் என்று கருத நியாயம் இல்லை.

 

(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா?

திருக்குர்ஆன் 10:99

 

ஒருவர் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தால் அது இறைவனின் நாட்டப்படி தான் நடக்கிறது. நீர் யாரையும் கட்டாயப்படுத்துவதோ, நிர்பந்தம் செய்வதோ கூடாது என்று இந்த வசனமும் தெள்ளத் தெளிவாக பிரகடனம் செய்கிறது.

 

1 comment:

Dr.Anburaj said...


நிச்சயம் சிறந்த காரியம்.
செய்தவருக்கு வாழ்த்துக்கள்.
புண்ணியம் சேரும்.
இறைவனின் அருட்கொடைகள் அவருக்கு கிடைப்பதாக.

ஆனால் இது போன்ற சம்பவங்கள் அரேபிய மொகலாய துருக்கி படையெடுப்பாளா்கள் நடத்திய கொடுங் செயல்களை நியாயப்படுத்த போதாது.