Followers

Monday, March 08, 2021

தற்கொலையை கொலையாக சித்தரிக்கும் இந்திய ஊடகங்கள்!

 


தற்கொலையை கொலையாக சித்தரிக்கும் இந்திய ஊடகங்கள்!

 

 

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் என்ற இடத்தில் ராம் சந்த் என்ற இந்து தையல் தொழில் செய்து வந்துள்ளார். குடும்ப வறுமை காரணமாகவும் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டும் தனது மூன்று குழந்தைகளையும் மனைவியையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள எத்தனிக்கிறார். அலறல் சத்தம் கேட்டு உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் வீட்டின் கதவை தட்டுகின்றனர். வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டுள்ளது. வீட்டை உடைத்து உள்ளே நுழைந்த உறவினர்கள் ராம்சந்தை மருத்துவ மனையில் சேர்க்கின்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விடுகிறார். ராம் சந்தின் சகோதரி கணவன் மனைவிக்குள் அடிக்கடி பிரச்னை வரும் என்றும் சொல்லியுள்ளார்.

ராம் சந்த் வுடைய தங்கை சொல்கிறார் 'இரண்டு வருடமாக எனது சகோதரன் வேலை எதுவும் செய்யாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான். நானும் பல முறை அறிவுரை சொல்லி வந்தேன். இப்படி ஒரு முடிவு எடுப்பான் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை' என்கிறார்.

 

 

ஆனால் நமது இந்திய ஊடகங்கள் ஏபிபி, டைம்ஸ் நவ், ஜீ போன்ற தொலைக் காட்சிகள் அவரும் அவரது குடும்பமும் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டதாக செய்திகளை பரப்புகின்றன. இந்துக்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை என்றும் கூப்பாடு போடுகின்றன. தினம் தினம் உபியில் தலித்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்படும் சம்பங்களுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல் கடந்து செல்லும் இவர்கள்தான் பாகிஸ்தான் இந்துக்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். சில சங்கிகள் ட்விட்டரில் 'இந்தியாவில் சிஏஏ நடைமுறை படுத்தினால் இதெல்லாம் குறையும்' என்று சொல்லி தங்கள் அரிப்பை தீர்த்துக் கொள்கின்றனர். காவல் துறையில் அவர்களின் உறவினர்களே இது குடும்ப தலைவனால் நடத்தப்பட்ட சம்பவம் என்று கூறியும் வன்மத்தை வளர்ப்பதற்காக பொய்யான செய்திகளை பரப்புகின்றனர்.

 

 

தமிழில் மொழி பெயர்ப்பு

சுவனப்பிரியன்

 

 

Alt News contacted Pakistani journalist Shiraz Hassan who shared the FIR filed by Ram Chand’s brother-in-law Tirath Ram. The FIR is in Urdu and it says, “My brother-in-law Ram Chand murdered his wife Lakshmi Mai and kids Prem Kumar, Anjali Mai and Aniqa Mai with an axe and dagger on 5-3-2021 because they used to complain…He has injured himself too. Upon receiving this information I went on the spot with Jeena Ram, Barad Ram and Chitra Ram and saw that my sister Lakshmi Mai, his son Prem Kumar and her daughters Anjali Mai and Aneeqa Mai were dead. There were knife marks on their necks. Ram Chand was shifted to the hospital by his brother. Ram Chand used to suspect my sister. He murdered his wife and kids with an axe and knife at night and later tried to commit suicide as well with the knife. I was later informed that Ram Chand also passed away in the hospital.”

 

1 comment:

Dr.Anburaj said...

பாக்கி்தானில் வாழும் இந்துக்களுக்கு இந்திய முஸ்லீம்களுக்கு இந்திய அரசு செய்யும் அனைத்து

உதவிகள் போல்- நிறைய பாக்.அரசு உதவி கிடைக்கிறது என்று தங்களால் உறுதி அளித்து

விபரங்களை பதிவிட முடியுமா?

சிறுபான்மை கல்வி உதவித்தொகை 1ம் வகுப்பு முஸ்லீம் குழந்தைக்கு வருடத்திற்கு ரொக்கமாக ரூ.1000 கொடுக்கிறது. ஆனால் பரம ஏழை இந்து குழந்தைக்கு கிடையாது.
தொழில் துவங்க குறைந்த வட்டியில் கடன் கல்வி உதவித்தொகை வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு சிறப்பு இட ஒதுக்கீடு என்று வழங்கப்படுவது போல் பாக்கிஸ்தானில் சிறுபான்மை மக்களுக்கும் வழங்கப்படுகிறது என்று விவரம் பதிவிடுங்கள்.அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.
முஸ்லீமுக்கு முஸ்லீம் சகோதரன். பாக் முஸ்லீம்கள் இந்திய முஸ்லீம்களுக்கு சகோதரன்தான். இரண்டு பேருக்கும் இந்துக்கள் எதிரிகள்- நண்பன் அல்ல. இதுதான் இசுலாம்.