Followers

Sunday, March 21, 2021

இன்று மாலை சென்னை முகப்பேர் மேற்கு பள்ளிவாசலில் கண்ட காட்சி.

 


இன்று மாலை சென்னை முகப்பேர் மேற்கு பள்ளிவாசலில் கண்ட காட்சி. மாலை நேர (மஹ்ரிப்) தொழுகை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒரு 30 ஆண்களும் பெண்களும் குழந்தைகளுடன் பள்ளிவாசல் வளாகத்தில் வரிசையில் காத்திருந்தனர். தொழுகை முடிகையில் கூட்டம் 50க்கும் மேல் அதிகரித்திருந்தது. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தனர். நம்பிக்கை. வீண் போகவில்லை.
தொழுகைக்கு வந்த எல்லோரும் போய்விட இறுதியாக மோதினார் வந்து ஒவ்வொருவருக்காக ஓதி ஊதினார். விசாரித்ததில் தினமும் கிட்டத்தட்ட ஐவேளை தொழுகையின் போதும் ஒரு ஐந்தாறு பேறாவது குழந்தைகளுடன் வந்து நிற்பார்களாம். ஞாயிறு மாலைதான் அதிகமான கூட்டம். சென்னையின் பல்வேறு பள்ளிவாசல்களில் இதுதான் நிலைமை. பாடி பள்ளிவாசலுக்கு பெருங்கூட்டம் வருமாம். பிற மத சகோதர சகோதரகளின் நம்பிக்கை. உங்கள் ஊர் பற்றி எழுதுங்களேன்.
Kombai S Anwar
அவர்களின் பதிவிலிருந்து....

1 comment:

Dr.Anburaj said...

இந்துக்கள் வினோதமானவர்கள். இதற்கான விடை யோக சுத்திரங்களில் உள்ளது.

முஹம்மது சிறந்தவா் அரேபியர்கள் மட்டும் அறிவாளிகள் ஞானிகள் குரான் மட்டும் உண்மையான வேதம் .. . . . செத்தால் சொர்க்கத்தில் 73 ஆண்ஃ பெண்கள் கிடைப்பார்கள் என்று நம்பி யாரும் அங்கு வரவில்லை.

இது போன்று வேப்பிலை அடித்து பாா்வை பார்ப்பவர்கள் கிளி ஜோதிடம் என்று குறி சொல்பவர்கள் .... என்று எங்கும் கூட்டம்தான்.

உடலில் பிராண சக்தியின் சமநிலை சீா் கெடும் போது நோய் உருவாகிறது என்பது யோக சாஸ்திரம். சில பேருக்கு பிறவியில் அல்லது பயிற்சியால் தங்களது பிராண சக்தியை பிறா் மீது செலுத்தி சிறு நோய்களை தீர்க்கும் ஆற்றல் கிடைக்கும். திசையன்விளை என்ற ஊரில் ML ஆசீா்வாதம் மருத்துவமனையில் கிறிஸ்தவரான மருத்துவா் சிறு பிள்ளை நோய்க்கு பார்ப்பாா் என்று மக்கள் பேசிக் கொள்வார்கள். 3 மாதம் ஆன குழந்தைகளை ஒருமுறையாவது அவரிடம் சென்று காட்டி விட்டுதான் விடுவார்கள். மருத்துவா் நோயாளிகளோ உடன் வருபவர்களோ தன்னை யாரும் தொடக் கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக இருப்பாா். கத்தி வைத்து முன் பின் அசைத்து ”பாா்வை” பாார்ப்பாா்.. உடல் முழுவதும் சிவப்பு நிறத்தில் இருக்கும் நோய்குணமடையும். பிராணனை மிக்க கவனமுடன் செலுத்த வேண்டும். நோயாளிகள் தொட்டுவிட்டால் அதிக அளவில் பிராணன் வெளியேறிவிடும். பாா்வை பார்க்க ...மிகவும் களைத்து விடுவாா். பிரதியட்சமாக காணலாம். தற்சமயம் அந்த மருத்துவமனையை முறையற்ற வைத்தியமுறை என்று காரணம் காட்டி மூடி விட்டாா்கள்.
மருத்துவ வசதியில்லாத போக்குவரத்து வசதியில்லாத ஒரு கிராமத்தில் சாமவேளையில் ஒரு குழந்தைக்கு கடுமையான காய்ச்சல். நான் மட்டும் அந்த வீட்டிற்கு சென்றிருந்தேன். எனவே என்து பிராண சக்தியை பிரயோகித்து அந்த குழந்தையை குணமாக்கினேன். எனது நெஞ்சோடு கட்டி பிடித்து சிவமகாமந்திரம் ஜெபித்தேன். சில நிமிடங்களில் குழந்தை விளையாடிவிட்டது.
இப்படி விதிவிலக்கான சில சமயங்களில் செய்து விட்டு ரகசியம் காக்க வேண்டும் என்று உறுதி மொழி பெற்றேன். பகீரங்கப்படுத்தினால் .... அவ்வளவுதான் .. கூட்டம் வந்து நம்மை வாழ விடமாட்டார்கள். மேலும் பிராண சக்தி அதிக அளவில் இழப்பது நமது உடல் நலனை பாதிக்கும். நரம்பு தளா்ச்சி நோய் தாக்கும் ஆபத்து உண்டு.