Followers

Thursday, January 19, 2023

கோயம்புத்தூரை சேர்ந்த என்.எஸ் அக்கீம்,

 

கோயம்புத்தூரை சேர்ந்த என்.எஸ் அக்கீம், சுமார் 25 வருடங்களாக சிறையில் இருக்கார், இதில் சுமார் பத்து வருசத்துக்கு மேல புழல் சிறையில் இருக்கார்.

 

பத்து ஆண்டுகள் கழித்த மற்ற சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் பொதுமன்னிப்பு, அட்வைசரி போர்டு மூலம் விடுதலை, வழிக்காவல் இல்லாத பரோல் போன்ற சட்டப்படியான எந்த உரிமையும் இவர்களுக்கு இல்லை.

 

சிறையில் அடிக்கடி தலைவலி ன்னு போனவருக்கு பாரசிட்டமால் மாத்திரை கொடுத்து அனுப்பிட்டு இருந்திருக்காங்க. கடந்த சில மாதங்களாக அடிக்கடி வலிப்பும் மயக்கமும் வந்திருக்கு, உள்மருத்துவமனையிலும் வெளி மருத்துவமனைக்கும் கொண்டு போயிருக்காங்க. அதே சுகர் ஈசிஜி டெஸ்ட் எடுத்து பாரா ரானிட்டென் மாத்திரை கொடுத்து அனுப்பிருக்காங்க.

 

போன மாசம் நிலைமை மோசமாகி வெளி ஆஸ்பிடலுக்கு அனுப்பியும் அதே டெஸ்ட் அதே மாத்திரை கொடுத்து உள்ள அனுப்பிருக்காங்க.

 

வலிப்பும் மயக்கமும் போட்டு விழுகிறவனை பார்த்து கடைசியில் வெளியில் கொண்டுபோய் செக் பண்ணினால் மூளையை ஒட்டி பெரிய கட்டியாம். பத்து வருசமா வளர்ந்திருக்கு, இதுக்குத்தான் டெஸ்ட் பண்ணி பார்க்காம பாரசிட்டமால் கொடுத்து அனுப்பிருக்காங்க.

 

அது என்ன மாதிரியான கட்டின்னு அறிவதற்காக அதன் ஒரு பகுதியை வெட்டியெடுத்து அனுப்ப ஆரம்பகட்ட ஆப்ரேஷன் நடந்தது. முடிவில் அது நான்காம் கட்டத்தில் உள்ள கான்சர் கட்டி என்பது தெரியவந்தது. கேன்சர் முற்றிய நிலையில் அவர் எதிர்காலம் என்னான்னு யூகிக்க முடியும். டாக்டரும் அதேதான் சொல்கிறார். தெளிவாக சர்டிபிகேட்டும் கொடுத்திருக்கார். ஆப்ரேஷன் பண்ணி அகற்ற முடியாது, 30ம் தேதி ரேடியேஷன் குறித்து முடிவு பண்ணலாம்னு சொல்லியிருக்கிறார்கள்.

உடல்நலம் முற்றாக சிதைந்து, மற்றவர்களின் உதவியில்லாமல் செயல்பட முடியாத நிலையில் இருக்கிறார். இறுதி நாட்களையாவது குடும்பத்தாருடன் இருக்கவும், தனியார் மருத்துவமனைகளில் ஏதாவது சிகிச்சை செய்ய முடியுமா என்று பார்க்கவும் சுப்ரீம் கோர்ட்டில் பெயில் மனு தாக்கல் செய்துள்ளார்கள்.

 

இன்னைக்கு தமிழ்நாடு அரசு தரப்பு சார்பில் இதற்கு கவுண்டர் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

அக்கீமுக்கு ட்ரீட்மெண்ட் கம்ப்ளீட்டாயிடுச்சாம், சிறையில் நல்ல நிலையில் இருக்காராம். சிறையில் உள்ள ஹாஸ்பிடலில் சிறப்பு கண்காணிப்பில் சிகிச்சை கொடுக்குறாகலாம் 😏. உயிருக்கு போராடிட்டு இறுதி காலத்தை நெருங்கி வருபவரின் பெயிலுக்கு எதிரான திமுக அரசின் கவுண்டர் இது. நேற்றும் வலிப்பு வந்து இன்றும் ஸ்டான்லி ஹாஸ்பிடலில் தான் இருக்கார். சாதிக்க அரசியல் அதிகாரம் வேணும்னு ஆரம்பித்த ரெண்டு முஸ்லீம் பாய்கள் திமுக சார்பில் தான் எம்எல்ஏ க்களாக இருக்காங்க. குறைந்தபட்ச அறமாவது இருக்கனும்..

 

கோவை பாசித்..

தொடர்ந்து புறக்கணிக்கப்படும்

இஸ்லாமிய சமூகம்.. 🥹🥹🥹

 

Thameem Mulla




 

1 comment:

Dr.Anburaj said...

முஸ்லீம்கள் மதத்தை பயன்படுத்தி அரசியல் வாதிகளை ஏமாற்றப் பார்க்கின்றார்கள். அரசியல் வாதிகள் ஓட்டுக்காக பல பொய்களை இச்சகமாகப் பேசி முஸ்லீம்களை ஏமாற்றி வருகின்றார்கள். இதுதான் இறுதி நிலை. முஸ்லீம்கள் இந்தியர்களாக வாக்களிக்க வேண்டும்.