Followers

Monday, January 09, 2023

பொய் பேசாதீர் அமைச்சரே..!

 பொய் பேசாதீர் அமைச்சரே..!

பல்வேறு சங்க இலக்கியங்களில் #தமிழ்நாடு என்றுதான் உள்ளது.


சங்கி ஒன்னு சொன்னா...

100% அது பொய்யாக மட்டுமே இருக்கும்...

என்பது மீண்டும் மீண்டும் பல முறை நிரூபிக்கப்பட்டு வருகிறது.


ஆதாரங்கள்:


1.

சங்கத்தமிழ் இலக்கியமாகிய #சிலப்பதிகாரத்தில்


இமிழ் கடல் வேலியை தமிழ்நாடு ஆக்கிய...

இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்


மற்றொரு பாடலில்...


தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்

செருவேட்டுப் புகன்று எழுந்து...


என இரு இடங்களில் #இளங்கோவடிகள் எழுதி உள்ளார்.


2

சங்கத்தமிழ் இலக்கியமாகிய #பரிபாடலில் 


தண்டமிழ் வேலி தமிழ்நாட்டு அகம் எல்லாம் 

நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது


3

சங்க இலக்கியமான தொல்காப்பியத்துக்கு, 11ஆம் நூற்றாண்டில் உரை எழுதிய #இளம்பூரணர் என்பவரும் `தமிழ்நாடு` என்ற சொல்லினைப் பதிவு செய்யத் தவறவில்லை


நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்


என உரை எழுதுகிறார்.


#கம்பர் எழுதிய கம்ப ராமாயணத்தில்...


கம்பரும் `தமிழ்நாடு` என்ற சொல்லினைக் குறித்துள்ளார்.


உறக்கமுற்றா ரென்னுற்றர் எனுமுணர்வினொடும் ஒதுங்கி

மணியாலோங்கல் பிறக்கமுற்ற மலைநாடு நாடியகல் தமிழ் நாட்டில் பெயர்திர் மாதோ


என்று..!


5

வைணவ சமயம் சார்ந்து கம்பர் மட்டும் தான் தமிழ்நாட்டினை வலியுறுத்தவில்லை, மாறாக சைவ சமயம் சார்ந்த #சேக்கிழார் பின்வரும் பாடல்களில் தமிழ்நாட்டினை 3 இடங்களில் பதிவு செய்தே சென்றுள்ளார்.


“தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவனார்”

---திருநாவுக்கரசு நாயனார் புராணம்.


“பூமியர் தமிழ்நாட் டுள்ள பொருவில்”

---திருஞான சம்பந்த மூர்த்திகள் புராணம்


“மண்குலவு தமிழ்நாடு

காண்பதற்கு மனங்கொண்டார்”

---திருநாவுக்கரசு நாயனார் புராணம்.


6.

#ஒட்டக்கூத்தர் எனும் புலவரும் தனது தக்கயாகப் பரணியில் பின்வருமாறு பாடுகிறார்.


“கங்கைத் துறைவன் பொறையன் தமிழ்நாடன் சோணாட்டு இறைவன் திருப்பவனி என்றாள்”


---இராசராச சோழன் உலா : 189


7

இந்திய நாட்டின் விடுதலையினைப் பாடிய சென்ற நூற்றாண்டின் மகாகவி பாரதியாரும் தமிழ்நாட்டினைக் குறிப்பிட்டே பாடியுள்ளார்.


” செந் தமிழ்நாடெனும் போதினிலே – இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே”

---பாரதி


“தொல்லை வினைதரு தொல்லை யகன்று

சுடர்க தமிழ்நாடே! ”

---பாரதி


ஆகவே...


தமிழர்களாகிய நாம் சங்கிகள் கூறும் பொய்யை நம்பும் முட்டாள்கள் இல்லை.

நாம் சங்க இலக்கியங்களை பள்ளிகளிலேயே தமிழ்ப்பாடமாய் கற்றறிந்த தமிழ்நாட்டுத் தமிழர்கள். 

வடநாட்டினரின் பாதம் தொட்டு அடிபணிந்துவிட்டு இங்கே வரும் எவராலும் நம்மை ஏமாற்ற முடியாது. 


எனவே, மோசடியாளர்கள் வேறு மாநிலம் செல்லட்டும்..! 😊


https://m.facebook.com/100000759817071/posts/5879943892040880/?mibextid=Nif5oz

No comments: