Followers

Tuesday, January 03, 2023

திப்பு சுல்தான் பற்றி அண்ணாமலை...

 திப்பு சுல்தான் பற்றி அண்ணாமலை....


கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது அண்ணாமலை ஆதாரத்தின் அடிப்படையில் பேசுகிறார். உண்மையை அஞ்சாமல் உரைக்கிறார். ஆனால் இன்றோ பிஜேபியில் சேர்ந்தவுடன் வாயிலிருந்து வருவது அனைத்தும் பொய்கள். அலீசா, காயத்ரி ரகுராம், டெய்ஸி என்று வரிசையாக பல சிக்கல்களில் மாட்டி வருவதை தினமும் பார்க்கிறோம்..  ஒரு நல்ல மனிதனை சனாதனம் எந்த அளவு மாற்றி விடும் என்பதற்கு அண்ணாமலையே ஒரு சாட்சி... 


இனி அண்ணாமலையின் பேச்சின் சுருக்கத்தைக் காண்போம்.


'ஒரு முறை திப்பு சுல்தானின் படை வீரர்கள் சிருங்கேரி மடத்தினை தாக்குகிறார்கள். சிறிய அளவிளான சேதமும் மடத்துக்கு ஏற்படுகிறது. அந்த நாளில் மடத்தின் குருக்களும் அவர்களின் குடும்பமும் கடும் சோகத்தில் ஆழ்ந்தனர். குருக்கள் மடத்தின் சார்பாக ஒரு கடிதத்தை திப்பு சுல்தானுக்கு அனுப்புகிறார். 'உங்களின் வீரர்கள் மடத்தையும் எங்களையும் தாக்கியுள்ளனர். உங்கள் ஆட்சியில் இது சரிதானா?' என்ற ரீதியில் அந்த கடிதம் செல்கிறது. 


உடனே திப்பு சுல்தான் குருக்களுக்கு மறுமொழி எழுதுகிறார் 'மன்னித்துக் கொள்ளுங்கள். எனது உத்தரவில்லாமல் சிலர் தவறுதலாக நடந்து விட்டனர். நானே உங்களை நேரில் வந்து சந்தித்து அதற்காக மன்னிப்பு கோருகிறேன்' என்ற மறுமொழி குருக்களை அடைகிறது. 


அதன்படி திப்பு சுல்தான் சிருங்கேரி மடம் சென்று குருக்களை சந்திக்கிறார். மன்னிப்பும் கோருகிறார். சிருங்கேரி மடத்துக்கு 240 கிராமங்களை தானமாக தருகிறார். 'என்னாலும் எனது ராணுவத்தாலும் உங்கள் மடத்துக்கு ஏற்பட்ட இழப்பீடாக இந்த கிராமங்களிலிருந்து வரும் வருவாயை எடுத்துக் கொண்டு சிறப்பாக செயல்படுங்கள் என்று சொன்னார். பெரும் சக்ரவர்த்தியான திப்பு மடத்துக்கு தங்கம், ரத்தினம், வைடூரியம் போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களையும் கொடுத்தார். இவை அனைத்தும் ஆவணங்களாக பதியப்பட்டுள்ளது. இன்று நீங்கள் சிருங்கேரி மடத்துக்கு சென்றாலும் நவராத்திரி அன்று நன்றிக் கடனாக திப்புவுக்கு பூஜைகள் நடைபெறும்.


மேலும் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று அங்கு தங்க ஆபரணங்களை பரிசாக கொடுத்துள்ளார். இன்றும் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்றால் மாலையில் திப்புவுக்கு இஸ்லாமிய முறைப்படி ஆரத்தி நடைபெறுவதைக் காணலாம். இதை எல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால் நமது கர்நாடகா எல்லா மதங்களையும் அரவணைத்து செல்லக் கூடியது என்பதை புரிந்து கொள்வதற்காகவே இதனை பதிகிறேன்.'


இவ்வாறாக அவரது மேடைப் பேச்சு செல்கிறது. எப்படி இருந்த அண்ணாமலை இன்று எப்படி சீரழிந்து போயுள்ளார் என்பதை நாம் அறிவோம்.


கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.


சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு கனவிலேகூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும்
























 

1 comment:

Dr.Anburaj said...

பொது வெளியில் சில நேரங்களில் பண்பாடு கருதி நலல விசயங்களை மட்டும் பதிவிடுவது நல்லவர்கள் வழக்கம். முஹம்மதுஎன்றால் 53 வயதில் 9 வயது ஆயிசாவை மணந்து அன்று இரவே அந்த சிறுமியை புணா்ந்தாா் என்ற சரித்திர உண்மையை பதிவிடுவது சிறப்பானது அல்ல. நல்ல சம்பவங்களைத்தான் எடுத்துச் சொல்ல வேண்டும். அதுவோ பொது வெளியில் நாகரீகமாக கருதப்படும். ஒரு சீரூடை அணிந்த காவல் கண்காணிப்பாளா் திப்பு செய்த அட்டூழியங்களை பதிவிடு வது பண்பாடு குறைந்த செயலாகக் கருதப்படும்.