Followers

Wednesday, January 11, 2023

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவன்

 

பிரபல இந்தி நடிகை ராக்கி சாவன் ஆதில் என்ற இஸ்லாமியரை திருமணம் முடித்துள்ளார். இஸ்லாமிய மார்க்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டார். இனி மேலாவது சினிமா தொழிலை விட்டு தூய்மையான வாழ்வுக்கு மாறுவாராக.

 

எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே! தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்பு தேடுபவர்களே!’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதாரரம் : திர்மிதி.

 

ஒருவர் இஸ்லாம் மார்க்கத்திற்கு திரும்பும் போது அவர் முன் செய்த அனைத்து பாவங்களையும் இறைவன் மன்னிக்கின்றான்.



அம்ர் என்ற ஒருவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் வந்து உங்களுடைய வலது கையை கொடுங்கள்! நான் என்னுடைய உறுதி மொழியை தருகிறேன் என்று கூறிய போது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம்முடைய வலது கையை நீட்டினார்கள். அப்போது அம்ர் அவர்கள் தன்னுடைய கையை எடுத்துக்கொண்டார்கள். (அப்போது) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அம்ரிடம் உமக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டபோது, நான் ஒரு நிபந்தனை இட வேண்டும் என பதிலளித்தார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அம்ரிடம் என்ன நிபந்தனையை முன் வைக்க விரும்புகிறாய்? என்று கேட்ட போது இறைவன் என்னுடைய பாவங்களை மன்னிக்க வேண்டும் என்று கூறினார்கள். (அதற்கு) முஹம்மது நபி (ஸல்) அவர்கள், ஒருவர் இஸ்லாம் மார்க்கத்திற்குத் திரும்பும் போது அவருடைய முன்பாவங்களை அல்லாஹ் அழித்துவிடுகிறான் என்று உமக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)




 

 

 

1 comment:

Dr.Anburaj said...

முஹம்மது நபி (ஸல்) அவர்கள், ஒருவர் இஸ்லாம் மார்க்கத்திற்குத் திரும்பும் போது அவருடைய முன்பாவங்களை அல்லாஹ் அழித்துவிடுகிறான் என்று உமக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)
------------------------------------------------------------------------------

மூட நம்பிக்கை.மூட நம்பிக்கை.மூட நம்பிக்கை.மூட நம்பிக்கை.மூட நம்பிக்கை.மூட நம்பிக்கை.மூட நம்பிக்கை.மூட நம்பிக்கை.மூட நம்பிக்கை.மூட நம்பிக்கை.