Followers

Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Tuesday, January 14, 2020

இன வெறி - சிறுகதை

'அம்மா பஸ் வந்துடுச்சு! நான் காலேஜூக்கு போயிட்டு வர்ரேன்'




'நல்லபடியா போய்ட்டு வாப்பா'



காலையிலிருந்து மகனை கல்லூரிக்கு அனுப்புவதற்குள் ஜீனத்துக்கு போதும் போதும் என்றாகி விடுகிறது. சுடு தண்ணீர் வைப்பது. காலை பசியார செய்வது என்று ஏக பிசியாக காலைப் பொழுது சென்று விடும். தனது கணவன் காதருக்கும் சேர்த்து காலை உணவு தயார் பண்ணுவதால் சோர்ந்து விடுகிறார் ஜீனத்.



"வீட்டோடு ஒரு பொண்ணை வேலைக்கு வச்சுக்கோ என்று எத்தனை தடவை சொல்லியிருக்கேன். கேட்க மாட்டேங்கிறீயே"...



மனைவி காலை நேரங்களில் படும் சிரமங்களைப் பார்த்து ஆறுதலாக இந்த வார்த்தைகளை சொன்னார் காதர்.



'"வீட்டு வேலைக்கா..நல்லா இருக்கே...அடுப்படி வேலைகளெல்லாம் நாம தான் பார்க்கணும். இல்லலேண்னா எனக்கு சுத்தப் படாது"


"அப்போ கஷ்டப்படு. எனக்கென்ன' என்று சிரித்துக் கொண்டே தனது அலுவலகத்துக்கு செல்ல இரு சக்கர வாகனத்தை இயக்கினார் காதர்.



காதருக்கு சவுதியிலும், குவைத்திலும், மலேசியாவிலும் அலுவலகங்கள் உள்ளது. அங்கிருந்து நம்மவர்கள் தரும் பொருட்களை உரிய விலாசங்களில் சேர்ப்பிப்பது இவர் நடத்தும் நிறுவனத்தின் முக்கிய வேலைகளில் ஒன்று. ஓரளவு வசதியான வாழ்க்கை. ஒரே மகன் பஷீர் என்று பிரச்னையில்லாமல் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.



கல்லூரிக்கு சென்ற பஷீர் மாலையில் வகுப்புகள் முடிவுறவே கல்லூரி வாகனத்தை நோக்கி நண்பன் அம்ஜத் தோடு சென்று கொண்டிருந்தான். சிறு வயதிலிருந்தே பஷீரும் அம்ஜத்தும் இணை பிரியாத நண்பர்கள். பள்ளியில் தொடங்கிய நட்பு இன்று கல்லூரி வரை தொடர்கிறது. ஆனால் இருவருக்குமே பல வகையில் ஒத்தே வராது. பஷீர் மென்மையான சுபாவம் உள்ளவன். அம்ஜத்தோ சற்று முரடன். இவனது முரட்டு சுபாவத்தால் பல இடங்களில் பிரச்னைகளும் வந்ததுண்டு. அங்கெல்லாம் பஷீர் சென்று தனது நண்பனுக்காக வாதாடி பிரச்னைகளை தீர்த்து வைப்பான்.



'ஏண்டா..உன் முரட்டு சுபாவத்தை நீ மாத்திக்கவே மாட்டீயா......'



'எனக்கு மட்டும் ஆசையா என்ன? பிறப்போடு வந்த சுபாவத்தை மாத்த முடியுமாடா..'



"சும்மா பொறப்பு, இறப்பு என்று ஏதாவது ரீல் உடாதே... மனிதன் நினைத்தால் தனது சுபாவங்களை மாற்றிக் கொள்ள முடியும. எதிலுமே மனது வைக்க வேண்டும்"


"யப்பா...கருத்து கந்தசாமி. உன்னோட அறுவை வர வர ஜாஸ்தியாகி கிட்டே வருது. கொஞ்சம் நிறுத்தறியா"



'ம்ஊஹூம்...உன்னை திருத்தவே முடியாது'



கல்லூரி வாகனத்தில் அனைவரும் ஏற ஆரம்பித்தனர். பஷீரும் அம்ஜத்தும் அருகருகே அமர்ந்து கொண்டனர்.



முன் சீட்டில் இரண்டு மாணவிகள் அமர்ந்தனர். இது கடைசி பஸ் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது. பஸ்ஸூக்கான கட்டணத்தை கறாராகக் கறந்து விடும் கல்லூரி நிர்வாகம் அதற்குள்ள வசதிகளை மட்டும் செய்து தருவதில்லை. இடப் பற்றாக் குறையால் பல மாணவ மாணவிகளும் நின்று கொண்டே வந்தனர். பேரூந்தும் புறப்பட்டது. பஷீரின் வீடும் அம்ஜத்தின் வீடும் வர எப்படியும் ஒரு மணி நேரமாகும்.



முன் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு மாணவியின் சடை இவர்கள் பக்கம் விழ சிரித்துக் கொண்டே அம்ஜத் அந்த மாணவியின் முடியைத் தொட்டான்.



'டேய்..என்னடா பண்றே'



"பஷீர்...இதை எல்லாம் கண்டுக்காதே...வாழ்க்கை என்றால் ஜாலியா இருக்கணும்டா' என்று சொல்லிக் கொண்டே சீட்டின் இடைவெளியில் கைகளை விட்டான். அந்த மாணவியோ இவனின் சில்மிஷத்தை தெரிந்து கொண்டு நெளிய ஆரம்பித்தாள். ஒரு முறை கோபமாக திரும்பி 'என்ன?' என்று கேட்டாள். பஷீருக்கோ பயத்தில் முகம் முழுவதும் வேர்வைத் துளிகள் அரும்பத் தொடங்கின. அம்ஜத்தோ எதுவும் நடக்காத மாதிரி சிரித்துக் கொண்டிருந்தான்..



இதற்குள் அம்ஜத்தின் சேட்டைகளால் அந்த மாணவி நெளிவதைப் பார்த்து ஒரு மாணவன் அதே கல்லூரியில் பயிலும் அந்த பெண்ணின் அண்ணன் ராஜாவிடம் விபரத்தை சொன்னான். அந்த மாணவன் சொன்னதைக் கேட்டவுடன் ராஜாவுக்கு கோபம் தலைக்கேறியது. பின் சீட்டிலிருந்து முன்னேறி வந்த ராஜா 'டேய் என்னடா என் தங்கச்சிகிட்டே வம்பு பண்றே' என்று கேட்டான்.



'நான் ஒன்னுமே பண்ணலப்பா...'



'கிண்டலா...ஏய் இவன் ஏதும் வம்பு பண்ணினானா'



அந்த மாணவி ஒரு வித பயத்துடன் 'ஆம்' என்று தலையாட்டினாள். அடுத்த நிமிடம் அம்ஜத்தின் சட்டை காலரை பிடித்தான் ராஜா. அவ்வளவுதான். ராஜாவுக்கு ஆதரவாக ஒரு குரூப்பும் அம்ஜத்துக்கு ஆதரவாக ஒரு குரூப்பும் பேரூந்தில் திரண்டது. நிலைமையை புரிந்து கொண்ட ஓட்டுனர் வண்டியை ஓரமாக்கி நிறுத்தினார். பலரும் அவசர அவசரமாக பஸ்ஸை விட்டு இறங்க ஆரம்பித்தனர். பஷீரும் இறங்கி விட்டான். அதற்குள் இரண்டு கோஷ்டியாக பிரிந்து ஒருவரையொருவர் அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். பஷீரும் மற்றும் சில நண்பர்களும் கைகலப்பை நிறுத்த முயற்சித்தனர். ஆனால் பலனில்லை.



அம்ஜத் ஏற்கெனவே பலரிடம் தகராறு உள்ளதால் அதை எல்லாம் இதுதான் சமயம் என்று பல மாணவர்கள் பழி தீர்த்துக் கொண்டனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த அம்ஜத் தன்னைக் காத்துக் கொள்ள இருக்கைக்கு கீழே இருந்த ஒரு இரும்பு கம்பியை எடுத்தான். அம்ஜத்தை பிடிக்க ராஜா முன்னேறவும் கோபம் தாங்காமல் ராஜாவின் வயிற்றில் அந்த இரும்பு கம்பியை சொருகினான். நுனி கூராக இருந்ததால் வயிற்றிலிருந்து ரத்தம் வர ஆரம்பித்தது. ரத்தம் வருவதைப் பார்த்த ராஜா பயத்தில் உடன் மூர்ச்சையானான். மயங்கி விழுந்ததை இறந்து விட்டதாக எண்ணி பயந்த அம்ஜத் பேரூந்திலிருந்து இறங்கி ஓட ஆரம்பித்தான். ராஜாவின் நிலையைப் பார்த்த பஷீர் அவனது வயிற்றில் துணியால் ஒரு கட்டு போட்டு 'அண்ணே வண்டியை சீக்கிரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்க' என்று கூறினான். ஓட்டுனரும் மிக விரைவாக அருகில் இருக்கும் அரசு ஆஸ்பத்திரிக்கு பேரூந்தை கொண்டு சென்றார். மற்ற மாணவர்களும் பஷீரும் சேர்ந்து ராஜாவை தூக்கிக் கொண்டு அவசர பிரிவை நோக்கி ஓடினர்.



அவசர சிகிச்சைப் பிரிவில் ராஜாவை அனுமதித்து விட்டு பஷீர் ராஜாவின் குடும்பத்துக்கு போன் பண்ணி விபரங்களைச் சொன்னான். அங்கிருந்து அழுது கொண்டே ராஜாவின் குடும்பத்தினர் மருத்துவ மனையை நெருங்கினர்.



'"யார் பையனோட பெற்றோர்?"



'?நாங்க தாங்க டாக்டர். பையன் எப்படி இருக்கான் டாக்டர்'



"ரத்தம் அதிகம் வெளியானதால் சற்று நிலை சீரியஸ்தான். நாங்க முயற்சிக்கிறோம்' என்று சொல்லி விட்டு ராஜாவின் பெற்றோர்களிடம் சில பேப்பர்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டது மருத்துவ நிர்வாகம்.



மற்ற மாணவர்கள் எல்லாம் கல்லூரி வாகனத்தில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப் பட்டனர். காவல் துறையினரும் மருத்துவ மனைக்கு வந்து வழக்கு பதிவு செய்து கொண்டனர். பஷீரும் நடந்த விபரங்களை எல்லாம் சொன்னான். சில மாணவர்களும் தங்கள் தரப்பு பிரச்னைகளை சொன்னார்கள். அம்ஜத் மேல் கொலை முயற்சி என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய புறப்பட்டனர். பஷீரும் ராஜாவின் பெற்றோரிடம் 'பார்த்துக்கோங்க...நான் வீட்டுக்கு போயிட்டு காலையில வருகிறேன்' என்று கிளம்பினான்.



இரவு மணி பத்து



"கடவுள் கிருபையால உங்க பையன் அபாய கட்டத்தை தாண்டி விட்டார். இன்னும் சிறிது நேரம் கழித்து நீங்கள் பையனை பார்க்கலாம்"'



'நன்றி டாக்டர்'



இரவு பதினோரு மணி...



பஷீரின் வீட்டுக் கதவு மெல்லிதாக தட்டப்பட்டது. ஆஸ்பத்திரியிலிருந்து அப்பொழுதுதான் வந்த பஷீர் இந்த நேரத்தில் யார் என்ற யோசனையோடு கதவை திறந்தான். வெளியே வெளிறிய முகத்தோடு அம்ஜத். 'ஏண்டா இப்படி பண்ணினே! இப்போ அவன் ஆபத்தான நிலையிலே கிடக்கிறான்டா"



"தெரியாம நடந்து போச்சுடா...சற்று நேரத்துக்கு முன்னால போலீஸ் என் வீட்டுக்கு வந்தது. அதனால தான் காலையில வக்கீலோட போய்க்கிலாம் என்று உன் வீட்டில் தங்க வந்தேன்"



'ஐயோ அப்பாவுக்கு தெரிஞ்சா பிரச்னையாயிடும்டா. நீ போலீஸில் சென்று சரணடைந்து விடு'



"இரவு நேரங்கள்ல போனா லாக்கப்புல தள்ளிடுவாங்க பஷீர். சில நேரங்களில் அடிக்கவும் செய்வார்கள். நம்ம போலீஸைப் பற்றி உனக்கு தெரியாதா.. காலையில் 8 மணிக்கு நான் கிளம்பிடுறேன்டா"



"சரி சரி சத்தம் போடாம மாடிக்கு என் ரூமுக்கு போ' அரை மனத்தோடு அவனை வீட்டுக்குள் அனுமதித்து கதவை தாளிட்டான்.



நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டதை காதர் தனது ரூமிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார். இவனை நமது வீட்டில் தங்க வைத்தால் தனது குடும்பத்துக்கும் பிரச்னை என்பதால் காவல் நிலையத்துக்கு தனது செல் போனிலிருந்து அம்ஜத்தைப் பற்றிய தகவலை கொடுத்தார்.



அரை மணி நேரத்தில் போலீஸ் காதர் வீட்டின் அழைப்பு மணியை அழுததியது. காதர் கதவை திறந்து 'மாடியில் இருக்கான் கொண்டு போங்க' என்றார்.



போலீஸ் மாடிக்கு சென்றது. அப்போதுதான் படுக்கையில் படுத்த அம்ஜத்தை இரண்டு காவலர்கள் மடக்கி பிடித்து கையில் விலங்கிட்டனர். நடப்பது ஒன்றுமே பஷீருக்கும் அம்ஜத்துக்கும் விளங்கவில்லை. அம்ஜத் நமது வீட்டில் உள்ளது போலீஸாருக்கு எப்படி தெரிந்தது? என்ற யோசனையில் ஆழ்ந்தான் பஷீர்.



அம்ஜத்தை ஜீப்பில் ஏற்றிய காவலர்கள் உடன் இடத்தை காலி செய்தனர். அந்த நடுநிசியிலும் வீட்டைச் சுற்றி ஊர் மக்கள் கூடி ஆளாளுக்கு தங்கள் மனத்தில் தோன்றியதை எல்லாம் பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் கூட்டம் களைந்து அந்த தெருவே அமைதியானது.



'பஷீர்...போலீஸ் தேடும் ஒரு குற்றவாளியை நாம் மறைத்து வைக்கலாமா'



'தவறுதாம்பா...ஆனால் அவன் காலையில சரண் அடைஞ்சுட்றேன்னு சொன்னானே..'



'அம்ஜத்தோடு சேர வேண்டாம் என்று நான் பலமுறை சொல்லியுள்ளேன்'



'கொஞ்சம் முரடன். ஆனால் அவன் நல்லவம்பா'



"யார் நல்லவன். படிக்கப் போற இடத்துல கூட படிக்கும் மாணவிகளை கலாட்டா பண்ணுபவன்தான் நல்லவனா! அவன் நம் வீட்டில் தங்குவது பிரச்னையாகும் என்பதால் நான்தான் போன் போட்டு போலீஸை வரவழைத்தேன்"'



'இது நம்பிக்கை துரோகம்பா...உதவி என்று கேட்டு வந்தவனை இப்படி பண்ணிட்டீங்களே'



'குற்றவாளிக்கு பரிந்து பேசுகிறாயா'



'அவன் காலையில சரண் அடையிறேன்டு சொன்னானே'



"குற்றத்தை செய்து விட்டு அவன் விருப்பத்துக்கு காவல் நிலையம் செல்வானோ. அதற்கு நாம் உதவி செய்ய வேண்டுமோ"



இவர்களின் காரசரமான வாக்கு வாதத்தை கேட்டுக் கொண்டே தனது கையில் உள்ள நபி மொழித் தொகுப்பு அஹமதோடு வந்தார் ஆமினா.



"இங்கே பார் பஷீர். அப்பா சொல்வதுதான் சரி. அம்ஜத் நமது எல்லோருடைய பார்வையிலும் குற்றவாளி. நமக்கு தெரிந்தவன் நண்பன் என்பதால் நாம் அவனை ஆதரிக்கக் கூடாது. இதை நமது அரசும் அனுமதிக்காது. நமது மார்க்கமும் அனுமதிக்கவில்லை.' என்று சொல்லிக் கொண்டே 'இந்தா இந்த நபி மொழித் தொகுப்பில் இனவெறி என்ற தலைப்பில் உள்ள நபி மொழி மொழியைப் படித்துப் பார்' என்று அவனிடம் அந்த புத்தகத்தைக் கொடுத்தார் ஆமினா.



நபி மொழித் தொகுப்பில் உள்ள அந்த நபி மொழியை படிக்க ஆரம்பித்தான் பஷீர்..



ஒரு முறை புசைலா என்ற சஹாபி பெண்மணி நபி அவர்களிடம் வந்து "இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா" என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் "தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இன வெறி அல்ல. மாறாக தன் சமூகத்தை சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி" என்றார்கள்.- நூல்: அஹ்மத்



படித்து முடித்தவுடன் தனது தாயை பார்த்தான். 'நல்ல நேரத்தில் எனக்கு அருமையான செய்தியை கொண்டு வந்தீர்கள். நான் தவறு செய்திருப்பேன். நல்ல வேளையாக இறைவன் என்னைக் காப்பாற்றி விட்டான். அப்பா செய்தது நூற்றுக்கு நூறு சரியே! சாரிப்பா உங்களை தப்பா நினைச்சுட்டேன்"



"பரவாயில்லப்பா..இவ்வாறு நமது நண்பன், நமது இனம் என்ற காரணம் கூறி தவறு செய்பவர்களை ஆதரிப்பதுதான் சமூகத்தில் குற்றங்கள் அதிகரிக்கவும் காரணம. இனியாவது கவனமாக இரு"


நடுநிசியாகி விட்டதால் மூவரும் தங்கள் படுக்கைகளுக்கு செல்ல ஆரம்பித்தனர்.




Sunday, October 15, 2017

பேரனின் அன்பைத் தேடிய அந்த முதியவர்.... (சிறுகதை)



பேரனின் அன்பைத் தேடிய அந்த முதியவர்.... (சிறுகதை)

மதியம் 3 மணி வெய்யில் சுள்ளென்று எரித்துக் கொண்டிருந்தது. தெருவில் ஒரு காகம் குருவி கூட இல்லை. வெயிலுக்கு பயந்து அவை மரத்தின் நிழல்களில் இளைப்பாறிக் கொண்டிருந்தன. தெருக்களில் சிறுவர்களையும் காணவில்லை. வெயிலுக்கு பயந்து வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். ஆனால் ஒரு முதியவர் மட்டும் யாரையோ எதிர்பார்த்தவண்ணம் ஏக்கத்தோடு தெருக் கோடியை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த காதர் அந்த முதியவரை பார்த்து ஆச்சரியத்தோடு கேட்டான்.

'என்ன பாய்... இந்த சுட்டெரிக்கும் வெயிலில் யாருக்காக காத்திருக்கிறீர்கள்'

'ஒன்னுமில்ல தம்பி... சும்மா காத்து வாங்க...'

'காத்து வாங்கவா? என்ன பாய்... எனக்கே இந்த வெயிலை தாங்க முடியவில்லை. 65 வயதாகும் உங்களுக்கு தாங்க முடியுமாஉடம்புக்கு ஏதாவது ஆகி விடும். வாங்க வீட்டுக்கு போகலாம்...'

'இல்ல தம்பி.... நீங்க போங்க நான் வர்றேன்'

'பாய்.... காரணத்தை சொல்லாம நான் போக மாட்டேன்... என்ன காரணம் உண்மையை சொல்லுங்கள்'

'அது வேற ஒன்னுமில்லப்பா.... என் மகன் அவனது மனைவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு என்னை அவனது வீட்டில் ஏற்றுவதில்லை. பேரப்பிள்ளைகளை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. இன்னும் 10 நிமிடத்தில் பள்ளிக் கூடம் விட்டு எனது பேரப்பிள்ளைகள் வந்து விடுவார்கள். என் மகனுக்கும் என் மருமகளுக்கும் தெரியாமல் அந்த பேரக் குழந்தைகளை தெருவில் நிறுத்தி 10 நிமிடமாவது கொஞ்சி விட்டு அனுப்பி விடுவேன். இது பல மாதங்களாக நடக்கிறது. பேரப்பிள்ளைகளை கொஞ்சுவதற்காகத்தான் காத்திருக்கிறேன்' என்றார் பரிதாபமாக...

இதைக் கேட்ட காதருக்கு கோபம் தலைக்கேறியது....

'உங்கள் மகனா பெற்ற தகப்பனை வீட்டில் ஏற்றுவதில்லை. என்ன கொடுமை பாய். ஊருக்கெல்லாம் உபதேசம் செய்கிறான். பொதுக் காரியங்களில் ஆர்வமுள்ளவனாகக் காட்டிக் கொள்கிறான். அவனுக்கு இப்படி ஒரு கோர முகமா?  எனது நண்பன் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுகிறேன்'  என்றான் காதர்.

'ஊருக்குத்தானே தம்பி.... நல்லா உபதேசம் பண்ணுவான். பெற்ற தந்தையை தவிக்க விட்டுட்டு ஊருக்கு உபதேசம் பண்ணினால் அவனது நல் அமல்களை அவனது முகத்திலேயே இறைவன் தூக்கி எறிய மாட்டானா'

'சரியாக சொன்னீர்கள் பாய். அவனுக்கு போன் போட்டு நாலு டோஸ் கொடுக்கிறேன்.'

'அல்லாவே.... தம்பி அவனுக்கு இந்த செய்தியை சொல்லிடாதீங்க.... அப்புறம் என் பேரப்பிள்ளைகளையும் கெடுத்துடுவான். இப்படியே போகட்டும்' என்றார் பரிதாபமாக.....

அதற்குள் அவரது பேரப்பிள்ளைகள் வந்து விடவே சில திண்பண்டங்களை கொடுத்து முத்த மழை பொழிய ஆரம்பித்தார். அந்த முதியவரின் நிலையை எண்ணி நொந்தவாறே தனது வீட்டை நோக்கி நகர்ந்தான் காதர்.

-------------------------------------------------------------------

நபிகள் நாயகம் அவர்கள் நவின்றார்கள்: 'அவன் மூக்கு மண்ணாகட்டும்! (அதாவது அவன் இழிவடையட்டும்!)' இவ்வாறு மூன்று முறை கூறினார்கள். மக்கள் வினவினார்கள் 'அல்லாஹ்வின் தூதரே, யார்? (அதாவது, யார் இழிவடையட்டும், யாரை இப்படிக் கடிந்துகொள்கிறீர்கள்?') 'முதுமைப்பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ - இருவரையுமோ பெற்றிருந்தும் அவர்களுக்குப் பணிவிடை புரிந்து சுவனம் புகாதவன்.'
.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம்



Monday, May 29, 2017

புனித பசு!

நேற்று இரவு ஆங்கிலத்தில் சிறுகதை ஒன்றை வாசித்தேன் காலத்தின் தேவை கருதி தமிழில் அதனை பதிவிடுகின்றேன்!

புனித பசு!

ஓரு நாள், சிறுவன் ஒருவன் குப்பை கிடங்கில் இருந்து ஓரு வாழைப்பழ தோலை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.அப்போது அங்கே வந்த பசு ஓன்று அந்த பழத்தோலை அவனிடம் இருந்து பிடுங்கியது. 

உடனே அந்த சிறுவன் பசுவை அங்கிருந்து விரட்டினான்.

 
இதனால் பசு சப்தமிட்டுக்கொண்டே தெருவில் ஓடியது.

அப்போது திடீரென அங்கு வந்த சந்நியாசிகள்( இப்போது பசு பாதுகாவலர்கள்)சிறுவனை நோக்கி புனித பசுவை தாக்கியது நீதானே என்று கேள்வி எழுப்பினர்?

"நான் பசுவை தாக்கவில்லை, நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த பழத்தோலை அது பிடுங்கியது, எனவே நான் சப்தமிட்டு அதனை விரட்டினேன்" என்று பதிலளித்தான் அந்த சிறுவன்.

நீ எந்த மதத்தை சேர்ந்தவன் என்று வினவினர் அந்த புனிதர்கள்!

மதம் என்றால் என்ன ?என்று கேட்டான் அந்த சிறுவன்.

நீ ஓரு இந்துவா அல்லது முஸ்லிமா அல்லது கிறிஸ்தவனா?

நீ கோவிலுக்கு செல்வாயா

பள்ளிவாசல் அல்லது தேவாலயத்திற்கு செல்வாயா என்று வினவினர் அந்த சாதுக்கள்!

நான் எங்கும் செல்வதில்லை என்றான் அந்த சிறுவன்.

அப்படியெனில் நீ கடவுள் நம்பிக்கையற்றவனா? என்றனர் சந்நியாசிகள்.

எனக்கு உடுத்துவதற்கு உடைகள் ஒன்றும் இல்லை. என்னுடைய ட்ரவுசரின்(அரைக்கால் சட்டை) பின்பக்கங்கள் கிழிந்து மிகவும் மோசமாக இருக்கின்றது என்றான் அந்த சிறுவன்.

அந்த சந்நியாசிகள் (சாதுக்கள் அல்லது பசு பாதுகாவலர்கள் ) தங்களுக்குள் சிறிது விவாதித்து விட்டு இப்படி சொன்னார்கள்;

"
கண்டிப்பாக நீ ஒரு முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும். நீதான் பசுவை தாக்கியிருக்கின்றாய் என்றனர்".

நீங்கள் தான் பசுவின் உரிமையாளர்களா என்று கேட்டான் அந்த சிறுவன்.

உடனே கோபம் கொண்ட சந்நியாசிகள் அந்த சிறுவனின் கழுத்தை நெரித்துக் ( இப்போது கல்லால் அடித்து )கொலை செய்து பிணத்தை குப்பைத் தொட்டியில் வீசினர்.

பின்பு அந்த சந்நியாசிகள் ஒருமித்த குரலில் சொன்னார்கள்;
ஓம் நமச்சிவாய!உன்னுடைய இந்த முடிவு மகிமை படுத்தப்படட்டும்!

(இந்தக் கதை 1960களில் புகழ் பெற்ற மலையாள எழுத்தாளர் கமலாதாஸ் அவர்களால் எழுதப்பட்டது.நாயர் சமூகத்தை சேர்ந்த அவர் 1999ல் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு 2009ல் இறப்பெய்தினார்.
Love
Haha
Wow
Sad
Angry
Bottom of Form


Friday, January 30, 2015

'எங்கும் இருட்டு! எனக்குள் பயம் தொற்றிக் கொண்டது!"



இரவு எட்டு மணி இருக்கும். பனிக் காலம் ஆனதால் அதிக நடமாட்டமும் ஊரில் இல்லை. நான் வெளியூர் செல்வதற்காக பஸ்ஸூக்காக காத்திருந்தேன்.. வேப்ப மர இலைகளின் சுகந்தமான காற்று தென்றலாக என் மேல் தவழ்ந்து சென்றது. எங்கோ ஓர் மூலையில் நாய் 'ஊ.............' என்ற ஊளையிடும் சப்தமும் கேட்டது. என்னைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை.

அப்போது நான் நிற்கும் இடத்துக்கு சற்று தூரத்தில் இரண்டு உருவங்கள் மெல்ல வந்து வேப்ப மரத்தினடியில் ஒதுங்கியது. அவர்கள் தங்கள் முகத்தை துணியால் மூடியிருந்தார்கள். கண்கள் மட்டுமே வெளியில் தெரிந்தது. பனியினால் முகத்தை மூடியுள்ளார்கள் என்று நினைத்துக் கொண்டேன். நான் ஏற வேண்டிய பேரூந்தும் வந்தது. நான் ஏறிக் கொண்டேன். ஆச்சரியமாக என்னைத் தொடர்ந்து அந்த இருவரும் அதே பேரூந்தில் ஏறிக் கொண்டனர். பேரூந்தில் கூட்டமும் அதிகம் இல்லை. குளிர் காலம் ஆனதால் குளிருக்கு பயந்து பலரும் வெளிக் கிளம்பவில்லை போலும். :-) மெலிதாக இளையராஜாவின் 'பூங்காற்று திரும்புமா' பேரூந்தில் ஓடிக் கொண்டிருந்தது. அரை மணி நேர பயணத்துக்குப் பின் நான் இறங்க வேண்டிய நிறுத்தமும் வந்தது. நான் இறங்கிக் கொண்டேன்.

என்னைத் தொடர்ந்து அந்த இரண்டு இளைஞர்களும் அதே நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டனர். அதிக முன்னனேற்றமடையாத ஒரு கிராமம். நான் செல்லும் இடத்தை நோக்கி மெல்ல நடக்கத் தொடங்கினேன். என்னைத் தொடர்ந்து அந்த இருவரும் எனது பின்னே வந்தனர். நான் திரும்பி பார்த்தால் உடன் ஒதுங்கி மறைந்து கொள்கின்றனர். முகத்தில் இருந்த துணியையும் இதுவரை விலக்கவில்லை. எங்கோ தூரத்தில் ஒலி பெருக்கியில் சிலர் பேசும் சத்தம் மட்டும் மெலிதாகக் கேட்டது. இந்த இருவரும் என்னை பின் தொடர்ந்து வருவதை பார்த்து எனக்கு பயம் கொஞ்சம் தொற்றிக் கொண்டது. சவுதியிலிருந்து தமிழகம் சென்ற பத்தாவது நாள் இது. விலையுயர்ந்த கைக்கடிகாரம். சில ஆயிரம் பணங்கள் என்னிடம் இருந்தது. விலையுயர்ந்த செல்போனும் என்னிடம் இருந்தது. இதனை நோட்டமிட்டு பணத்தை அபகரிக்கும் கும்பலோ என்று பயந்தேன். நடையை சற்று வேகப்படுத்தினேன். அதே வேகத்தில் அவர்களும் என்னை பின் தொடர்ந்தனர். எனக்கு சந்தேகம் இன்னும் அதிகமானது. காய்ந்த சருகுகளின் சப்தம் வேறு சர....சர... என்று கேட்டது. கூடவே கோட்டான்களின் சப்தமும் சேர்ந்து கொள்ளவே 'அவ்வ்வ்வ்....................' என்று வடிவேல் பாணியில் பயமும் எனக்குள் தொற்றிக் கொண்டது. அதற்குள் வேறொரு ரோட்டில் இருந்து இரண்டு பேர் எனது வழியில் வந்து சேர்ந்து கொண்டனர்.. இப்போதுதான் எனக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. இனி பயமில்லை என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என்னை பின் தொடர்ந்து வந்த அந்த இருவரை நோக்கி நகர்ந்தேன். என்னைப் பார்த்தவுடன் ரோட்டின் மறுபுறம் போக எத்தனித்தனர் அந்த இருவரும்.

'ஏய்... நில்லு! உங்களுக்கு என்ன வேணும்?'

உடன் பயந்தவர்களாக அந்த இருவரும் 'பாய்... நாங்கதான்' என்று முகத்தின் துணியை எடுத்தனர். அட... இது நம்ம ஊர் அரபி மதரஸா பிள்ளைகளாச்சே.... என்று வியந்தவனாக...

'எங்கேப்பா ரெண்டு பேரும் போறீங்க?'

'நீங்க எங்கே போறீங்களோ அங்கதான் நாங்களும் போறோம் பாய்'

'ஓ.... மீட்டிங் கேட்க வர்றீங்களா? அதுக்கு ஏன்பா முகத்தை மூடிக்கிட்டு என்னையும் பயமுறுத்திக்கிட்டு'

'நாங்க இந்த மீட்டிங் கேட்க வந்தது தெரிஞ்சா எங்களை மதரஸாவுலேருந்து நீக்கிடுவாங்க பாய்! அதனால தான் உங்க கண்ணுல படாம போகலாம் என்று நினைத்தோம். ஆனால் மாட்டிக் கொண்டோம்'

'ஹா... ஹா....' பலமாக சிரித்தேன்.

'தயவு செய்து இந்த விஷயத்தை வெளியில சொல்லிடாதீங்க பாய்'

'கவலைபடாதீங்க... நான் சொல்ல மாட்டேன்'

இப்படி பேசிக் கொண்டு வரும் போதே மீட்டிங் நடக்கும் இடத்துக்கு வந்து விட்டோம். நல்ல கூட்டம். தவ்ஹீத் ஜமாத்தின் 'வரதட்சணை ஒழிப்பு மாநாடு' நடந்து கொண்டிருந்தது. பிஜே அப்போதுதான் பேச ஆரம்பித்தார். அந்த இரு இளைஞர்களையும் பக்கத்திலேயே உட்காரச் சொன்னேன். சிறிது நேரம் கழித்து ஹோட்டலுக்கு சென்று இரவு உணவும் சாப்பிட்டோம். 11 மணிக்கு பிஜே தனது அருமையான உரையை முடித்தார். கூட்டம் களைய ஆரம்பித்தது. அந்த இரு இளைஞர்களையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு பஸ் ஏறினோம். வழியில் அவர்களிடம் பேசிக் கொண்டே வந்தேன்.

'மதரஸாவில் ஓதக் கூடிய மாணவர்களான உங்களுக்கு பிஜே மீட்டிங் கேட்கும் ஆர்வம் எப்படிப்பா?'

'எங்க வீட்டுல வறுமையினால மதரஸாவில் சேர்த்து விட்டார்கள் பாய். எனக்கு பிரியம் இல்ல. முன்பெல்லாம் பிஜே மீட்டிங் எங்க நடந்தாலும் போயிடுவேன்' ஒரு மாணவன்.

'இதற்கு முன்னால் ஒரு மாணவன் இவ்வாறு போனது தெரிந்து அவனை மதரஸாவிலிருந்தே நீக்கி விட்டார் எங்கள் முதல்வர்' மற்றொரு மாணவன்.

'தவ்ஹீத் ஜமாத் நடத்தும் மதரஸாவில் சேர வேண்டியதுதானே' என்று நான் கேட்டேன்.

'அதற்கு தான் முயற்சி செய்துகிட்டு இருக்கோம் பாய். துவாச் செய்யுங்க'

'கவலைப் படாதீங்க... உங்களை இறைவன் கைவிட மாட்டான்'

அதற்குள் ஊர் வரவே இறங்கிக் கொண்டோம்.

இது நடந்து 10 வருடங்கள் இருக்கும். அந்த இளைஞர்களை அதன் பின் அடிக்கடி தொடர்பு கொண்டு அவர்களை முழு ஏகத்துவவாதிகளாக மாற்றி விட்டோம். தற்போது அவர்கள் நல்ல வேலையில் வளை குடாவில் இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள்.

சினிமா பார்த்தால் கண்டிக்கலாம்: சூது விளையாடினால் கண்டிக்கலாம்: விபசாரம் பண்ணினால் தண்டிக்கலாம்: திருடினால் தண்டிக்கலாம். குர்ஆனையும் ஹதீஸையும் கேட்க போனால் அந்த மாணவர்களை தண்டிக்கலாமா நியாயமாரே!

சொல்லுங்க நியாயமாரே!

டிஸ்கி: மதரஸா மாணவர்கள் முதல்வரிடம் சொல்லாமல் பிஜே கூட்டத்துக்கு வந்து என்னிடம் மாட்டிக் கொண்டது எங்கள் கிராமத்தில் முன்பு நடந்த ஒன்று. அதோடு சேர்த்து 'மானே... தேனே...' என்று போட்டு அதனை ஒரு சிறுகதையாகவே சொல்லி விட்டேன். இது போன்ற சம்பவங்கள் பல மதரஸாக்களில் நடந்து மாணவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

Saturday, January 17, 2015

அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ் - சிறு கதை



அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ் - சிறு கதை

கடுமையான பசியோடு ‘அம்மா…சாப்பாடு ரெடியாயிடுச்சா..’ என்று கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் ஹஸன்! ‘கொஞ்சம் இருப்பா! மழையில இந்த உரியா மட்டை நனைஞ்சு போயிடுச்சு. அடுப்பு பத்த மாட்டேங்குது. இப்போ சரி பண்ணிடறேன்” என்று சொல்லிக் கொண்டே அடுப்பில் தனது வாயால் ஊத ஆரம்பித்தார் தாய் ஆமினா. தனது தாய் அடுப்பு பத்த வைக்க படும் சிரமத்தை பார்த்துக் கொண்டே தனது பள்ளி சீருடைகளை களைய ஆரம்பித்தான் ஹஸன்.

ஹஸன் அரசு பள்ளிக் கூடத்தில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறான். வறுமையான குடும்பம. தாய் ஆமினா வீட்டு வேலை முடிந்த கையோடு அக்கம் பக்கத்தில் இருக்கும் வீடுகளில் பாத்திரங்கள் தேய்த்து கொடுப்பதும் வீடுகளை பெருக்கி கொடுப்பதுமாக மேலதிக வேலையை செய்து வந்தார்.

அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து தனது ஒரே மகனை எப்படியும் மேல் படிப்பு படிக்க வைத்து விட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு இருந்து வந்தார். தனது கணவன் பிளம்பிங் வேலைக்கு தினக் கூலியாக சென்று ஓரளவு பணம் கொண்டு வந்தாலும் வீட்டு வாடகைக்கும் சாப்பாட்டுக்குமே அது சரியாக இருந்தது. எனவே பிள்ளையின் படிப்பு குடும்ப சூழலால் வீணாகி விடக் கூடாது என்பதற்காக மேலதிக வேலைகளையும் பார்த்து வந்தார் ஆமினா!

இன்னும் வேலைக்கு போன கணவன் வரவில்லை. மணியோ இரவு எட்டாகி விட்டது. ‘தம்பி வா….உங்க வாப்பா வர நேரமாகும் போல இருக்குது. நீ பசி தாங்க மாட்டே..’ என்று சொல்லிக் கொண்டே சமைத்த சாப்பாட்டை தட்டில் எடுத்து மகனுக்கு பரிமாறினார்.

‘இன்னைக்கு என்ன லேட்டா வீட்டுக்கு வந்தே..’

‘பள்ளிக் கூடம் விட்டு கொஞ்ச நேரம் பசங்களோட விளையாடிக்கிட்டு இருந்தேம்மா’ என்று சொன்னான். மனதுக்குள் பொய் சொல்கிறோமே என்ற குறுகுறுப்பும் இருந்தது. பருப்பு சாம்பாரும் மீன் பொறியலும் வாய்க்கு ருசியாக இருக்கவே வழக்கத்தை விட சற்று அதிகமாகவே சாப்பிட்டான் ஹஸன். காலையிலும் இரவிலும் மட்டுமே வீட்டு சாப்பாடு. பள்ளிக் கூடம் உள்ள நாட்களில் மதிய உணவை அரசு போடும் சத்துணவில் சரி கட்டி விடுவான்.

‘பள்ளி கூடத்துல மத்தியானம் என்ன சாப்பாடு’

‘கோதுமை உப்புமா. அவுச்ச முட்டைம்மா’

“படிக்கிற புள்ளே! தெம்பா இருந்தாத்தான் நல்லா படிக்க முடியும் எதையும் வீணாக்காத சாப்பிடணும் தெரியுதா”

‘நான் எதையும் வீணாக்க மாட்டேன்மா..நல்லா சாப்பிட்டேன்’

மகனின் தலையை வருடியவாறு ‘சாப்பிட்டுட்டு போய் படுத்துக்கோ! காலையில தொழுகைக்கு அஞ்சு அணிக்கெல்லாம் வாப்பா எழுப்புவாறு’

‘சரிம்மா’

ரம்ஜானும் வந்தது. 30 நோன்பை பூர்த்தியாக்கிய சந்தோஷத்தில் அனைவரும் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருந்தனர். ஹஸனுக்கு புதிய சட்டையும் பேண்டும் அவனது வாப்பா வாங்கி கொடுத்திருந்தார். மதியம் வீட்டில் பிரியாணி சாப்பிட்ட வேகத்தோடு பெருநாள் கொல்லைக்கு நண்பர்களோடு செல்ல ஆயத்தமானான் ஹஸன்.

‘ஹஸன்! இந்தா 30 ரூபா. பெருநாள் கொல்லைக்கு சென்று தொட்டி ஆட.’

‘சரிம்மா..நான் போய்ட்டு வர்றேன்’

‘பார்த்து பெரிய தொட்டில்லாம் ஆடாதே! கவனம்’

தனது பள்ளி நண்பர்கள் நால்வரோடு பெருநாள் கொல்லைக்கு சென்றான் ஹஸன். பெரும் கூட்டம் கூடியிருந்தது. பெரும் பெரும் தொட்டிகள், விளையாட்டு சாமான்கள், தற்காலிக பலகார கடைகள் என்று எங்கும் ஜே ஜே என்று இருந்தது.

ஹஸன் மட்டும் ஏதோ ஒரு கடையை தேடிக் கொண்டிருந்தான். ‘டேய்…என்னடா அங்கேயும் இங்கேயும் பார்க்ககுற’

‘சமையல் சாமான் எல்லாம் போட்டு வச்சுறுக்குற கடை எங்கடா இருக்கு’

‘அதோ..அந்த பெரிய தொட்டிக்கு பக்கத்துல பார்’

நண்பர்கள் அனைவரும் அந்த கடையை நோக்கி சென்றனர்.

அந்த கடையில் சமையல் பாத்திரங்கள் முதற் கொண்டு பெரிய அடுப்புகள் வரையில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. தனது தாயார் தினம் தினம் சமைக்க கஷ்டப்படுவதை மனதில் இருத்திக் கெண்டே…’அந்த அடுப்பு எவ்ளோ பாய்’ என்று கேட்டான் ஹஸன்.

‘350 ரூபாய் தம்பி.. மண்ணெண்ணை அடுப்பு. அருமையா எரியும்’

‘கொஞ்சம் குறைச்சு குடுங்கோ’

‘சின்ன பையனா இருக்கிறே…சரி உனக்காக 300 ரூபாய் …கடைசி விலை. எடுத்துக்கோ’

பணத்தை கடைக்காரரிடம் கொடுத்து விட்டு அடுப்பை வாங்கிக் கொண்டான்.

‘டேய்..உனக்கு கிறுக்கு புடுச்சுடுச்சாடா..தொட்டி ஆட குடுத்த பணத்துல அடுப்பு வாங்குற. அதுவும் உங்க அம்மா கொடுத்தது 30 ரூபா தான். 300 ரூபா எங்கேயிருந்துடா வந்துச்சு’

பதில் பேசாமல் நேராக வீட்டுக்கு அடுப்போடு சென்றான் ஹஸன். சீக்கிரமே மகன் திரும்பி வருவதைப் பார்த்த ஆமினா ஆச்சரியத்தோடு ‘என்னடா இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க’ என்று கேட்டார். கையில் ஒரு பார்சலை பார்த்து விட்டு ‘என்ன வாங்கி வந்துறுக்குற…விளையாட்டு சாமானா’ என்று கேட்டுக் கொண்டே பேப்பரை கிழிக்க ஆரம்பித்தார். உள்ளே அழகிய அடுப்பு. ஆச்சரியத்தோடு பார்த்தவளாக ‘இது ஏது?’ என்று கேட்டார்.

‘உனக்கு தாம்மா! நான்தான் வாங்கினேன்.’

‘நீ வாங்கினியா! இது விலை அதிகம்ல…ஏது பணம்’

பதில் சொல்வில்லை ஹஸன். ஆமினாவின் முகம் சற்று மாறியது. ‘சொல்லுடா இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?’

ஹஸனின் காதை திருகினாள். ‘திருடினியா’

‘ஐயோ..இல்லம்மா…பள்ளிக் கூடம் விட்டவுடன் அருகிலேயே இருக்கும் நாயர் கடையில தினமும் இரண்டு மணி நேரம் பாத்திரங்களை கழுவுவேன். ஒரு டீ குடுத்து 15 ரூபாவும் குடுப்பாரு. அதை தினமும் சேர்த்து வச்சேன். நீ தினமும் அடுப்பு பத்த வைக்க சிரமப்படுற..கண்ணுல்லாம் ஒனக்கு எரியுது. அதனால அடுப்பு வாங்கத்தான் நான் வேலை செஞ்சேன்.’

கண் கலங்கியவளாக ‘என் ராசா..’ என்று அவனை அணைத்துக் கொண்டு…’இத ஏம்பா எங்கிட்டே முன்னாலேயே சொல்லல’ என்று விம்மினார்.

‘நான் வேலை செய்யிறத சொன்னா…நீ திட்டுவே…நாயர் கடையில போய் எனக்கு வேலை கொடுக்க வேணாம்ணு சொல்லுவே..அதான் ஒங்கிட்ட சொலலல’

தனது மகனின் அன்பையும் சமயோஜித புத்தியையும் கண்டு புளங்காகிதம் அடைந்தவளாக இறைவனுக்கு நன்றி செலுத்த தொழுகைக்கு பயன்படுத்தும் துணி விரிப்பை தேட ஆரம்பித்தார் ஆமினா….

--------------------------------------

'திண்ணை' இதழில் பிரசுரமான எனது சிறுகதை இது! அந்த இதழில் கதைக்கு வந்த பின்னூட்டங்கள்.

ஹசன் says:
December 31, 2012 at 10:00 am

மாஷா அல்லாஹ் அருமையான கதை.எதார்த்தமான எழுத்து நடை.குழந்தைகளுக்கு இது போன்ற கதைகளை சொல்வது மிக அவசியம்.அந்த மகன் கதாபாத்திரத்துக்கு தாங்கள் வைத்திருக்கும் பெயர் பொருத்தமாக உள்ளது. :-)

-------------------------------------

Sivakumar N, New Delhi says:
December 31, 2012 at 10:41 am

அருமை!!!

------------------------------------

தேமொழி says:
January 1, 2013 at 7:44 am

இது போன்ற கதைகளைப் படிப்பது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.

ஆசிரியருக்கு நன்றியும் புத்தாண்டு வாழ்த்துக்களும்.

…தேமொழி

---------------------------------

க்ருஷ்ணகுமார் says:
January 3, 2013 at 9:58 am

ஜெனாப் சுவனப்ரியன், உன்னதம்.

இதற்கு முன் தங்களுடைய இதுபோன்ற படைப்புகளை வாசித்ததில்லை. ஒரு ஆதர்ச குடும்பத்தை அழகாக காண்பித்திருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

-------------------------------

punaipeyaril says:
January 4, 2013 at 4:07 am

வழவழவென்று இல்லாமல் சுருக்கமான கதைக்கு பாராட்டுக்கள். ஆனால், “இறைவனுக்கு நன்றி செலுத்த ..” அப்ப பொறுப்பில்லாத புள்ளைகளை கொண்டவர்கள் இறைவனை திட்டுதல் சரி தானே….

Sunday, November 30, 2014

என் மகனுக்கு பேய் புடிச்சிருக்கு (சிறுகதை)

என் மகனுக்கு பேய் புடிச்சிருக்கு(சிறுகதை)



எல்லோர் முகத்திலும் சோகம்! இறப்பு என்பது எத்தகைய சோகத்தை கொடுக்கும் என்பதை அந்த வீடு உணர்த்திக் கொண்டிருந்தது. இப்றாகிம் பாய் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர் இன்று இறந்த சடலமாக கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். வயதும் ஐம்பத்தைந்தை தாண்டியிருந்தது. சில காலம் நோய்வாய்பட்டிருந்தவர் நேற்று இரவு இந்த உலகுக்கு விடை கூறி விட்டு மறு உலக பயணத்துக்கு ஆயத்தமாகி விட்டார்.

எல்லோரும் சவுதியில் இருக்கும் இவரது மகன் ரஹீமின் வரவுக்காக காத்திருந்தனர். வந்தவுடன் உடலை அடக்கம் செய்ய தூக்க வேண்டியதுதான். சொந்தங்கள் ஒவ்வொருவராக வந்து துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தனர். இப்றாகிம் பாயின் மனைவி ஜீனத் சோகமே உருவாகி கணவனின் தலைமாட்டில் அமர்ந்திருந்தார். இறந்தவுடன் அந்த உடலை தண்ணீரால் கழுவி கட்டிலில் வைத்திருந்தனர். மறு குளிப்பாட்டு பையன் வந்தவுடன் வைத்துக் கொள்ளலாம் என்று சொந்தங்கள் சொல்லவே மகன் ரஹீமின் வரவை எதிர் நோக்கி அனைவரும் காத்திருந்தனர்.

இப்றாகிம் பாய்க்கு ஒரே பையன். பையனை நன்கு படிக்க வைத்திருந்தார். ரஹீம் துடிப்பான இளைஞன். கல்லூரி படிப்பை முடித்த கையோடு தாய் நாட்டிலேயே வேலை செய்ய விருப்பப்பட்டு பல இடங்கள் ஏறி இறங்கியும் ஒன்றும் சரிபட்டு வராததால் இணைய தொடர்பு மூலம் சவுதியில் வேலை கிடைத்து தற்போது மாதம் 50000 அனுப்பி வருகிறான். ஊருக்கு வந்து திருமணம் முடிக்கும் எண்ணத்தில் வர இருந்தவனுக்கு தகப்பனாரின் இறப்பு செய்தி இடியாக வந்திறங்கியது. கம்பெனியில் நிலைமையை விளக்கிச் சொல்லி தற்போது 15 நாள் விடுப்பில் தாயகம் திரும்பிக் கொண்டிருக்கிறான் ரஹீம்.

இதோ ஊருக்குள் வாகனம் நுழைந்து விட்டது. தனது வீட்டின் முன் சொந்தங்கள் அனைவரும் குழுமியிருப்பதை தூரத்திலிருந்தே பார்த்த ரஹீமுக்கு துக்கம் தொண்டையை அடைக்க மௌனமாக அழுதான். வீட்டின் முன் வாகனம் நின்றது.

சொந்தங்கள் சோகத்தோடு ரஹீமை வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். அதுவரை துக்கத்தை அடக்கி வைத்திருந்த ஜீனத் மகனைப் பார்த்தவுடன் 'அப்பா போய்ட்டாருப்பா...' என்று மகனை கட்டி அணைத்து அழத் தொடங்கினார். ரஹீமும் தாயாரோடு சேர்ந்து சிறிது நேரம் அழுது விட்டு தகப்பனாரின் முகத்தை பார்த்தான். அமைதி தவழும் முகம். ஒரு வேளை தொழுகையைக் கூட பிறபடுத்தாதவர். நல்ல உழைப்பாளி. இறைவன் சற்று சீக்கிரமே அழைத்துக் கொண்டு விட்டான் என்று நினைத்தவனாக தகப்பனாரை குளிப்பாட்ட ஆயத்தமானான்.

இறந்தவரை குளிப்பாட்டுதல் என்பது ஹஜ்ரத் என்று சொல்லப்படும் மார்க்க அறிஞரை அழைத்து செய்வதுதான் ஊர் வழக்கம். அதன்படி அவரின் வருகைக்காக பலரும் காத்திருந்தனர். ரஹீம் தனது மாமாவிடம் 'ஏன் ஹஜ்ரத்துக்காக காத்திருக்க வேண்டும். நான் இறந்தவரை குளிப்பாட்டுதலைப் பற்றிய செய்முறை விளக்கம் படித்திருக்கிறேன். எனது தகப்பனாருக்கு நானே கழுவதுதான் சிறந்தது' என்று பைப்பை திறந்து தண்ணீர் பிடிக்க ஆரம்பித்தான் ரஹீம்..

ரஹீமின் மாமா குத்தூஸ் வேகமாக வந்து 'தம்பி! அததற்கென்று ஆட்கள் இருக்கிறார்கள். நாமே செய்தால் பின்னால் அவரை பகைத்துக் கொண்டதாக ஆகும்' என்றார்.

'"என்ன மாமா! இறந்தவருக்கு குளிப்பாட்டும் உரிமை அவரது நெருங்கிய சொந்தத்துக்குத்தான் உண்டு என்ற ஹதீதை நீங்கள் பார்த்ததில்லையா? யார் தடுத்தாலும் நான்தான் குளிப்பாட்டுவேன்'". என்று கூறியவனாக பைப்பில் தண்ணீர் பிடிக்க ஆரம்பித்தான். உதவிக்கு ரஹீமின் நண்பர்களும் வந்தனர். வந்திருந்த பெரியவர்கள் ஆச்சரியத்தோடு ரஹீமை பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.

இறந்த உடலை சற்று சரிவாக உட்கார வைத்து தேங்கிய மலம் சிறுநீர் போன்றவை வெளியேற தோதுவாக வயிற்றை மெதுவாக அமுக்கினான். கையில் உறை இருந்ததால் அசுத்தங்களை எல்லாம் துடைத்து விட்டு பன்னீர் மற்றும் சோப்பு நுரை கலந்த தண்ணீரால் உடலை கழுவ ஆரம்பித்தான். அவனுக்கு உதவியாக இப்போது அவனது மாமாவும் வந்தார். அவனது நண்பர்களும் உதவினர். இறந்தவுடன் உடல் மிருதுவாகி விடும் ஆகையால் தோல்களுக்கு சிராய்ப்பு ஏற்படாமல் மிக மிருதுவாக தனது தந்தையை கழுவிக் கொண்டிருந்தான் ரஹீம்.

அடுத்தாக கற்பூரம் கலந்த தண்ணீரினால் இறந்த உடலை கழுவி விட்டனர். கழுவும் போது மூக்கிலும் வாயிலும் தண்ணீர் செல்லாமல் பார்த்துக் கொண்டனர். ஏனெனில் அந்த தண்ணீர் திரும்பவும் வயிற்றுக்குள் சென்றால் பிறகும் அசுத்தங்கள் வெளியாக வாய்ப்பிருக்கிறது. கழுவி முடிந்து ஒரு மெல்லிய துணியால் உடலை துடைக்க ஆரம்பித்தனர்.

அடுத்து அவனது மாமா வெள்ளை துணியை கொண்டு வந்தார். தலைப் பக்கமும் கால்பக்கமும் ஒரு அடி விட்டு இறந்த உடலின் மேல் போர்த்தினர். கால் பக்கமும், உடல் பக்கமும், தலைப் பக்கமும் துணியினால் முடிச்சு போட்டு நெருங்கியவர்கள் கடைசியாக பார்க்க அழைக்கப்பட்டனர். ஜீனத் கடைசி முறை தனது கணவனை பார்த்து விட்டு மகனைக் கட்டிக் கொண்டு சத்தம் போட்டு அழ ஆரம்பித்தார். 'வேண்டாம்மா! சத்தம் போட்டு அழாதீங்க...மனசுக்குள்ள அழுதுக்கோங்க...' என்று சொல்லி விட்டு வந்திருந்த அனைவரும் சேர்ந்து இறந்த உடலை தூக்க ஆயத்தமாகினர்.

சவப் பெட்டி வந்தது. உடலை அதனுள் பவ்யமாக வைத்து நான்கு பேர் சேர்ந்து தூக்க ஆரம்பித்தனர். பெண்கள் புறத்திலிருந்து அழுகுரல் அதிகமாகவே அவர்களை ரஹீம் ஆசூவாசப்படுத்தி தனது தந்தையின் உடலுக்கு தனது தோளையும் கொடுத்தான். இறந்த உடல் பள்ளிவாசலை நோக்கி சென்றது. இறந்தவருக்காக செய்யப்படும் பிரார்த்தனை என்ற ரீதியில் இந்த தொழுகை நடத்தப்படுகிறது. தொழுகை நடக்கும் இடத்தில் உடலை வைத்து விட்டு எல்லோரும் கை கால்களை அலம்பச் சென்றனர்.

எல்லோரும் இறந்த உடலுக்கு முன்னால் வரிசையாக நின்றனர். 'தொழ வைக்க ஹஜ்ரத் எங்கே?' என்ற கேள்வியை ஒரு சிலர் கேட்க ஆரம்பித்தனர். இறந்த உடலை கழுவ தன்னைக் கூப்பிடாமலும் பிறகு உடலை வீட்டிலிருந்து எடுத்து வரும் போது ஓத வேண்டிய பாத்திஹாவையும் ஓதாமல் எடுத்து வந்ததால் சற்றே கடுப்பான ஹஜ்ரத் 'ஏன் அதையும் அந்த பையனையே செய்ய சொல்லிடுங்களேன்' என்றார். கூட்டத்தில் சிறு சலசலப்பு.

"நான் அப்பவே சொன்னேன்பா...இப்போ பார் ஹஜ்ரத் கோபத்தில் இருக்கிறார்"

"இந்த பையனுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை. ஹஜ்ரத்தையே அனைத்து காரியத்தையும் செய்ய சொல்லியிருக்கலாம்ல. இப்ப பார் தொழுக வைப்பதிலும் பிரச்னை"


"சிறு பிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க... அப்போ நம்ம அப்பன் பாட்டன் எல்லாம் செஞ்சது தப்பு. ரஹீம் சொல்றதுதான் சரியா!"

"எல்லாம் இந்த 25 வருஷமாத்தான்யா பிரச்னைக்ள். முன்னாடில்லாம் இது மாதிரி பள்ளி வாசலில் எந்த குழப்பமோ சண்டையோ வந்ததில்லை."

"நான் அப்பவே சொன்னேன்ல...இப்ப பார் யார் தொழ வைக்கிறது? போய் ஹஜ்ரத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவரை தொழ வைக்க கூப்பிடு" -ரஹீமின் மாமா.

பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ரஹீம் தொழுகைக்காக நின்றவர்களைப் பார்த்து பேச ஆரம்பித்தான் : "அஸ்ஸலாமு அலைக்கும்! பாத்திஹா ஓதாததோ என் தந்தைக்கு நானே குளிப்பாட்டியதோ நானாக செய்ததல்ல. முகமது நபி நெருங்கிய உறவினர்கள்தான் குளிப்பாட்ட வேண்டும் என்று சொன்னதால்தான் நான் செய்தேன். பாத்திஹா ஓதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே நான் பாத்திஹாவும் ஓதவில்லை. இறந்தவருக்காக நடத்தப்படும் தொழுகையும் இமாமாக(தலைவராக) நிற்பதற்கு இறந்தவரின் உறவினர்களே முதல் தகுதியாக நான் ஹதீதுகளில் படித்துள்ளேன். எனவே நானே எனது தகப்பனாருக்காக தொழ வைக்கிறேன்."

என்று கூறியவனாக தொழுகைக்கு தலைவனாக நிற்க ஆரம்பித்தான். இதை சற்றும் எதிர்பாராத ஹஜ்ரத் 'தம்பி..எனக்கு கோபமெல்லாம் இல்லே! நானே தொழ வைக்கிறேன்.' என்றார்..

"இல்லை ஹஜ்ரத். பள்ளியில் மற்ற நேர தொழுகைகளை நீங்கள் தொழ வையுங்கள். இது எனது தகப்பனாரின் இறப்புக்காக நடத்தப்படும் தொழுகை. இதை நானே தொழ வைக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே 'அல்லாஹூ அக்பர்' என்று சொல்லி நெஞ்சில் கையை கட்டிக் கொண்டான். பலர் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்பே தொழுகை ஆரம்பமாகி விட்டது. வந்திருந்த பலரும் வேக வேகமாக வந்து வரிசையில் நின்று தொழ ஆரம்பித்தனர். ஹஜ்ரத்தும் வேறு வழி இல்லாமல் வரிசையில் நின்று ரஹீமை பின்பற்றி தொழ ஆரம்பித்தார்.

தொழுகை முடிந்தது. எப்போதும் தொழுகை முடிந்தவுடன் ஃபாத்திஹா ஓதுவது வழக்கம். ஆனால் அதற்கும் இடம் கொடுக்காமல் சவப் பெட்டியை தனது நண்பர்களின் உதவியோடு தூக்கிக் கொண்டு இறந்தவர்கள் அடக்கம் செய்யும் மைய வாடியை நோக்கி நடக்க ஆரம்பித்தான் ரஹீம். மக்களும் பின் தொடர்ந்தனர். தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை உணர்ந்த ஹஜ்ரத் 'இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்' என்று மனதுக்குள் நினைத்தவராக தனது வீட்டை நோக்கி நடந்தார்.

பள்ளி வாசலை ஒட்டியே அடக்கஸ்தலும் இருந்தது. உடலை குழிக்குப் பக்கத்தில் இறக்கினர். குழியினுள் முதல் ஆளாக ரஹீம் இறங்கி தனது தகப்பனாரின் உடலை நண்பர்கள் உதவியோடு வாங்கினான். உதவிக்கு அவனது நண்பர்களும் வந்தனர். மண் வெட்டியின் துணை கொண்டு மண்ணை சிறிது சிறிதாக இழுத்து உடலை மூட ஆரம்பித்தனர். அனைத்து வேலைகளையும் ரஹீமே செய்வதை அவனது கல்லூரி தோழன் ராகவன் தூரத்திலிருந்து ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

உடலை மூடியவுடன் அங்கு நின்ற ஏழைகளுக்கு சில பண முடிப்புகளை ரஹீம் கொடுத்துக் கொண்டிருந்தான். பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். ரஹீமும் அவனது நண்பர்களும் உறவினர்களும் வீட்டை நோக்கி நடந்தனர்.

ரஹீமின் மாமா "தம்பி! சாப்பாடு ஆக்குவதற்கு நெய் ஆடு முதலான அனைத்துக்கும் நீ வருவதற்கு முன்பே சொல்லி விட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடும்" என்றார்.

"சாப்பாடு...ஆடா...என்ன மாமா கல்யாணமா நடக்குது. என் தகப்பனார் இறந்த இந்த நாளில் விருந்தா. எதுவும் வேண்டாம் எல்லாவற்றையும் கேன்சல் பண்ணுங்கள். எனது நண்பன் தாஹீர் வீட்டிலிருந்து சாப்பாடு ஆக்கி அம்மாவுக்கும் நம் குடும்பத்தவருக்கும் கொடுக்க சொல்லுகிறேன்"


"இங்க வந்திருக்கிறர்களுக்காவது சாப்பாடு கொடுக்க வேண்டும். தடுக்காதே ரஹீம்" - தாயார் ஜுனத்.

'"இல்லம்மா! நபிகள் இவ்வாறு இறந்த வீட்டில் சமைப்பதை தடுத்துள்ளார்கள். பக்கத்து வீடுகளிலிருந்து சாப்பாடு கொடுப்பதுதான் நபி வழி".

"என்னடா தம்பி! புதுசு புதுசா சொல்லுறே! இறந்த வீட்டில் அன்று சாப்பாடு ஆக்குவதும் ஏழாம் நாள் நாற்பதாம் நாள் வருடம் என்று நெய் சோறு ஆக்குவது நம் ஊர் பழக்கமாச்சே!"

"அம்மா! நம் ஊர் பழக்கத்தை நான் கேட்கவில்லை. முகமது நபி தடுத்ததனால் என்னால் செய்ய முடியாது. தயவு செய்து என்னை புரிந்து கொள்ளுங்கள்"

"ஏண்டா! என்னையே எதிர்த்து பேசிறியா"

"மார்க்கத்துக்கு முரணாக பேசினால் எதிர்க்கத்தான் செய்வேன் அம்மா! மன்னித்துக் கொள்ளுங்கள்"

"சவுதி போவதற்கு முன்னால் நல்லாதாணடா இருந்தே! பேய் கீய் புடுச்சுருச்சோ! ஹஜ்ரத்து கிட்டே சொல்லி உனக்கு நூல் முடிஞ்சு போடனும்" என்று சொல்லிக் கொண்டே வீட்டிற்குள் சென்றார் ஜீனத்..

தனது தாயார் இன்னும் இஸ்லாத்தின் அடிப்படையையே சரியாக விளங்க வில்லையே என்று தனக்குள் சிரித்துக் கொண்டவனாக நண்பர்கள் ராகவன் தாஹீரோடு வெளியில் சென்றான்.

ராகவன்: ஏண்டா...ரஹீம். புரோகிதர் செய்யற வேலையை எல்லாம் நீ ஏண்டா செய்யறே!

ரஹீம்: எங்கள் மார்க்கத்தில் அனைவருமே புரோகிதர்கள்தான். அனைத்து காரியங்களையும் அனைவரும் செய்ய வேண்டும். குறிப்பிட்ட நபர்கள்தான் செய்ய வேண்டும் என்று சம்பளத்துக்கு ஆட்களை நியமிப்பது முகமது நபி சொன்னதற்கு நேர்மாறான ஒன்று.

ராகவன்: என்னவோ போப்பா...நீ சொல்றது எல்லாம் நல்லாதான் இருக்கு. இப்படி பாத்திஹா எல்லாம் இல்லை என்றால் பாவம் அவர் குடும்பம் நடத்த பணத்துக்கு என்ன பண்ணுவார்?


ரஹீம்: அதற்கு அவரது சம்பளத்தை அதிகப்படுத்த வேண்டும். தொழுகை நேரம் போக மற்ற நேரங்களில் வேறு வேலைகள் செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றலாமே!

ரஹீம் சொல்வதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டவர்களாக நண்பர்கள் கலைந்தனர்.


(தொடரும்)

ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி)அவர்கள் மரணித்தபோது ஜஃபருடைய குடும்பத்தாருக்கு உணவு தயார்செய்து கொடுங்கள் அவர்கள் கவலையில் இருக்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

(முஸ்லிம்).

இறந்தவர் வீட்டில் சாப்பாடு தயாரிக்கச் சொல்லி அங்கு சென்றவர்களெல்லாம் சாப்பிடுவதையும் அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறோம் என்ற பெயரில் அடிக்கடி அந்த வீட்டில் கூட்டம் கூடுவதையும் நாங்கள் மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்ட ஒப்பாரி யின் வகைகளில் ஒருவகையாகவே கருதினோம் என்று நபித்தோழர்கள் கூறுகின்றார்கள்

(அபூதாவூத்)

எனவே நபிவழியைப் பின்பற்றி மரணம் சம்பவித்த வீட்டாருக்கு சமைத்துக் கொடுக்க வேண்டுமே தவிர. அந்த வீட்டில் இறைச்சியும் சோறும் சமைப்பது வேதனைக்குரிய விஷயமாகும்.


Sunday, January 19, 2014

மரணம் - சிறுகதை

மரணம் - சிறுகதை

'நமதூர் கீழத் தெருவை சேர்ந்த அப்துல் குத்தூஸ் அவர்களின் தகப்பனார் அப்துல் ரஹ்மான் இன்று இரவு 8 மணியளவில் காலமாகி விட்டார். அன்னாரின் ஜனாஜா(இறந்த உடல்) நாளை காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்'

பள்ளிவாசலின் ஒலி பெருக்கியிருந்து இந்த செய்தியானது மூன்று முறை சொல்லப்பட்டது. ஊர் முழுக்க ரஹ்மான் பாய் இறந்த செய்தியைப் பற்றியே பேச்சாக இருந்தது. நெருங்கிய உறவினர்களும் அக்கம் பக்கத்து வீட்டாரும் ரஹ்மான் பாயின் உடலைப் பார்க்க வந்த வண்ணம் இருந்தனர்.

அப்துல் குத்தூஸ் ஒரே பையன். கவலை தோய்ந்த முகத்துடன் தகப்பனாரின் அருகில் அமர்ந்திருந்தான். இன்னும் திருமணம் ஆகவில்லை. பிகாம் பட்டதாரி. சவுதியில் ஒரு அலுவலகத்தில் கணக்கராக வேலை பார்த்து வருகிறான். தந்தையின் உடல் நிலை மோசமாவதை அறிந்து மூன்று மாத விடுப்பில் தமிழகம் வந்து 10 நாட்கள் ஆகிறது. பக்கத்தில் இருக்கும் டவுன் ஆஸ்பத்திரியில் ஒரு வாரம் வைத்து வைத்தியம் பார்த்து தேறாததால் இறந்த உடலை மட்டுமே அவர்களால் வீட்டுக்கு கொண்டு வர முடிந்தது. குத்தூஸின் தாயார் மர்யம் தனது சொந்தங்களோடு அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.

வீட்டின் திண்ணையில் அமர்வதற்கு பாய்கள் போடப்பட்டன. தெருவில் வாடகைக்கு எடுக்கப்பட்ட நாற்காலிகள் போடப்பட்டன. பக்கத்து வீட்டிலிருந்து குத்தூஸூக்கும் மர்யமுக்கும் மற்றும் உறவினர்களுக்குமாக உணவுகள் கொண்டு வரப்பட்டன. சோகமான சூழல் ஆதலால் சிறிது சாப்பிட்டு விட்டு மற்றவற்றை ஏழைகளுக்கு கொடுத்து விட்டனர்.

இரவு 11 மணி ஆகி விட்டதால் நாளை காலையில் வருவதாக சொல்லி விட்டு பக்கத்து வீட்டுக் காரர்கள் கலைய ஆரம்பித்தனர். இரவு முழுவதும் சோகமாக கழிந்தது குத்தூஸூக்கு.

காலை ஒன்பது மணி. கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. பள்ளிவாசல் நிர்வாகியை சந்தித்து மையவாடியில் குழி வெட்ட அனுமதி கேட்டனர். குத்தூஸ் தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவன் என்பதால் நிர்வாகி ஹஸன் சற்று குழப்பத்தோடு 'ஏம்பா..அந்த பையன் தவ்ஹீத் ஜமாத் ஆச்சே...ஏதும் பிரச்னைகள் வராதே' என்று கேட்டார்.

'பிரச்னை இதுல என்ன இருக்கு பாய்...'

அரை மனத்தோடு அனுமதி கொடுத்தார் ஹஸன். மைய வாடியில் குழி வெட்டும் வேலையும் நடக்க ஆரம்பித்தது. வீட்டில் இறந்த உடலை குளிப்பாட்ட ஆரம்பித்தனர். உடலை வெள்ளைத் துணியால் போர்த்தி கடைசி பார்வைக்காக வைக்கப்பட்டது. மர்யமும் நெருங்கிய உறவினர்களும் உடலின் அருகில் நின்று அழ ஆரம்பித்தனர். சவ பெட்டி கொண்டு வரப்பட்டு அதனுள் இறந்த உடல் வைக்கப்பட்டது. உடல் பள்ளிவாசலை நோக்கி புறப்பட்டது. இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் முகமாக தொழுகை ஒன்று நடத்தப்படும். அதனை இறந்தவரின் சொந்தங்களே நடத்த பிரியப்பட்டால் அதில் மற்றவர் குறிக்கிடக் கூடாது என்று நபி மொழி இருப்பதால் குத்தூஸ் தலைவராக நின்று தொழ ஆயத்தமானான். சிறிய சலசலப்பு.

'இது என்னப்பா புது பழக்கமா இருக்கு. தொழுகையை பள்ளி இமாம் (மார்க்க அறிஞர்) தானே வைக்கணும்?'

'சொந்தங்கள் தொழ வைக்க அனுமதி இருக்குது பாய்'

ஆளாளுக்கு பேச ஆரம்பித்தனர். அதற்குள் 'அல்லாஹ் அக்பர்' (இறைவன் பெரியவன்) என்று கூறி தொழுகையை ஆரம்பித்து விட்டான் குத்தூஸ். உடன் பலரும் தொழுகையில் கலந்து கொண்டு அந்த கடமையை முடித்தனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத நிர்வாகி ஹஸன் குழப்பத்தோடு 'என்ன செய்யலாம் ஹஜ்ரத்?' என்று கேட்டார்.

'என்னை கேட்டா? தொழுகை வைத்த அந்த பையனை கேளுங்கள்' என்றார் கோபமாக! இதனை கண்டு கொள்ளாமல் விட்டால் நமது வேலை போய் விடும் என்ற பயம் அந்த இமாமுக்கு.

இமாமுக்கு ஆதரவாக பலரும் குத்தூஸூக்கு ஆதரவாக இளைஞர்களும் பிரிந்து தங்கள் பக்க நியாயத்தை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தனர். பிரச்னை பெரிதாவதை உணர்ந்த நிர்வாகி குத்தூஸிடம் 'நீ எப்படி தொழுக வைக்கலாம்?' என்று கேட்டார்.

'மார்க்கம் அனுமதிக்குது பாய்'

'அதெல்லாம் எனக்கு தெரியாது. உடலை அடக்கம் பண்ண நாங்கள் அனுமதிக்க முடியாது. வேறு எங்காவது அடக்கம் செய்து கொள்ளுங்கள்'

இந்த வார்த்தையை கேட்டவுடன் ஒரே கூச்சல் குழப்பம் பள்ளியினுள்.

'பூட்டை உடைத்து உடலை உள்ளே கொண்டு செல்வோம்' என்று இளைஞர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர். நிர்வாகி காவல் துறைக்கு உடன் போன் பண்ணினார். காவல் துறை அதிகாரியும் இரண்டு கான்ஸ்டபிள்களும் அடுத்த அரை மணி நேரத்தில் இடத்திற்கு வந்தனர். காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் பல ஆண்டுகளாக இந்த ஏரியாவில் பணியில் இருப்பதால் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்களையும் நன்கு அறிந்தே வைத்திருந்தார். அங்குள்ள தற்போதய பிரச்னையையும் இரு தரப்பையும் அழைத்து பொறுமையாக கேட்டார்.

'ஹஸன் பாய்! அந்த பையன் தொழுக வைப்பது உங்கள் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதா' -கண்ணன்

'எனக்கு தெரியாது சார். இமாமிடம் கேட்போம்! சொல்லுங்க ஹஜ்ரத்' -ஹஸன்

'இதுவரை இறந்தவர்களுக்கு பள்ளி இமாம்தான் தொழ வைத்துள்ளார். அனைத்து ஊர்களிலும் இது தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது' -பள்ளி இமாம்

'நான் ஊர் வழக்கத்தை கேட்கவில்லை ஐயா! உங்கள் மார்க்கம் அனுமதிக்குதா என்று தான் கேட்டேன்'

'அது நபி மொழிகளை எல்லாம் பார்த்துதான் சொல்லணும்' -ஹஜ்ரத்

உடனே அங்கிருந்த ஒரு இளைஞர் முஸ்லிம் நபி மொழி தொகுப்பின் தமிழாக்கத்தை அதிகாரி கண்ணனிடம் கொடுத்தார்.

'எந்த மனிதரின் குடும்பத்தினர் விஷயத்திலும், அவரது அதிகாரத்திலும் அவருக்கு நீ இமாமாக - தலைவனாக ஆகாதே!' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் (ரலி) நூல்: முஸ்லிம் 1079, 1078

இதை படித்துப் பார்த்த அதிகாரி ஆச்சரியத்துடன் 'இவ்வளவு தெளிவா குடும்ப விவகாரத்தில் மற்றவர்கள் தலையிடக் கூடாது என்று இருக்கும் போது அந்த பையனின் விருப்பத்துக்கு நீங்கள் ஏன் குறுக்கே நிற்கிறீர்கள்?' என்றார்.

'அப்போ இத்தனை நாள் நாங்கள் செய்தது தவறு என்கிறீர்களா?' -பள்ளி இமாம்

'தவறு சரி என்று வேறு மதத்துக்காரன் நான் எப்படி சொல்ல முடியும். மார்க்க அறிஞர் நீங்கதான் முடிவை சொல்லணும். நேற்று இறந்த உடல். அதிலும் வயதானவர் கூட. எனக்கு மனது கஷ்டமாக இருக்கிறது. அந்த குடும்பம் எந்த அளவு வேதனைப்படும். இதைப் பற்றி நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? அல்லது அவர் கொடுத்த புத்தகம் தவறா?' அதிகாரி கண்ணன்.


இதே ஊரில் தர்ஹாவை வைத்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கும் வேறு சிலர் இமாமுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தனர்.

'இவனுங்க எப்பவுமே பிரச்னைதான் சார். தர்ஹாவுக்கு போகக் கூடாதுண்டு சொல்வானுங்க. மார்க்க அறிஞர்களை மரியாதை குறைவா பேசுவானுங்க. பாத்திஹா, ஹத்தம், ஹந்தூரி, மீலாது விழா இதெல்லாம் கூடாதுண்டு சொல்வானுங்க. இதெல்லாம் நாங்க பரம்பரையா செய்துகிட்டு வர்றோம். அதை எப்படி சார் நிறுத்த முடியும்'

'மற்ற பிரச்னைகள் எல்லாம் என்னவென்று எனக்கு தெரியாது. இப்போ இறந்த உடலை அடக்கம் செய்ய மாட்டேன் என்று யாரும் சொன்னால் இந்திய சட்டப்படி கிரிமினல் குற்றம். 'வன் கொடுமை' சட்டத்துல உள்ளெ புடுச்சு போடுறதுக்கும் சட்டத்துல இடம் இருக்கு. நீங்க எல்லாம் கண்ணியமானவங்க. ஒரு குற்றமும் பதியப்படாத ஊர். நானும் உங்களை மதிக்கிறேன். அந்த மரியாதையை காப்பாற்றிக் கொள்வது ஊர் பெரிய மனிதர்கள் கையில் தான் இருக்கிறது' - என்றார் கண்ணன் சற்று சூடாக.

பள்ளி இமாமுக்கும் நிர்வாகி ஹஸனுக்கும் முகம் சற்று இறுகியது. பிரியாணியும், நெய் சோறும் தினம் சாப்பிட்டு பழக்கப்பட்ட பள்ளி நிர்வாகியின் வாய் களி திங்க விரும்புமா? எனவே சுருதி சற்று குறைந்தது. நிர்வாகியும் பள்ளி இமாமும் ஊர் பெரியவர்களும் கூடி பேசி உடலை அடக்க அனுமதிப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.

'சரி சார். நாங்க அனுமதிக்கிறோம்' என்றனர் நிர்வாகிகள் அனைவரும்.

பெரிய சிக்கல் தீர்ந்த மகிழ்ச்சியில் கண்ணன் 'பாருங்க பாய்! முஸ்லிம்களான உங்களை சுற்றி இப்போ பெரும் சதி வலை பிண்ணப்படுகிறது. நான் பெரியார் வழியில் வந்த நாத்திகன். அதனால்தான் உங்களுக்குள் பிரச்னையை பெரிதாக்க விரும்பவில்லை. வேறு அதிகாரிகள் யாராவது இதனையே பெரிய இஸ்யூ ஆக்கி இந்த இளைஞர்களை எல்லாம் உள்ளே தள்ளலாம். அந்த இளைஞர்களின் படிப்பும் எதிர்காலமும் வீணாகும். அனுமதி மறுத்த உங்களையும் உள்ளே தள்ளலாம். சட்டத்தில் அதற்கு இடமும் உண்டு. அல்லது அந்த சட்டத்தை எப்படி வளைப்பது என்பதும் எங்களுக்குத் தெரியும். எனவே இனிமேல் ஏதும் பிரச்னை என்றால் உங்களுக்குள் பேசி சமாதானம் ஆகிக் கொள்ளுங்கள். நாடு கெட்டுக் கெடக்குது. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.' என்றார்.

பள்ளி இமாமின் பேச்சைக் கேட்டு தவறிழைத்து விட்டோமோ என்ற யோசனை நிர்வாகி ஹஸனுக்கு வந்தது. 'இப்படி ஒரு ஹதீஸ் இருப்பதை ஏன் ஹஜ்ரத் எனக்கு முன்னாடியே சொல்லவில்லை.' என்று இமாமிடம் கேட்டார்.

'இப்படி ஒரு ஹதீஸ் இருக்குதா? என்று என்னிடம் நீங்கள் ஏன் முன்னாடியே கேட்கவில்லை' என்றார் இமாம். 'கழுவுற மீன்ல நழுவுற மீனாக' இமாம் மாறுவதைப் பார்த்த ஹஸன் வெறுத்துப் போய் தனது தவறை உணர்ந்து கொண்டு வீட்டுக்கு சோகத்தோடு நடையைக் கட்டினார்.

ஒரு நபி மொழியை உயிர்ப்பித்த சந்தோஷத்தில் இளைஞர்கள் இறந்த உடலை அடக்க ஆயத்தமாயினர். ஊர் பொது மக்களும் பிரச்னை சுமூகமாக முடிந்ததை எண்ணி நிம்மதி பெரு மூச்சு விட்டனர். உடல் அடக்கப்படும் வரை அதிகாரி கண்ணன் கூடவே நின்று அங்கு நடப்பதை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். உடலை குழியில் இறக்குவதையும் இறந்த உடலின் மேல் சொந்தங்களே ஆர்வமோடு மண் வெட்டியால் மண்ணை தள்ளுவதையும் பார்த்துக் கொண்டு நின்றார். மற்ற ஊர்களில் உள்ள இளைஞர்கள் ரஜினி ரசிகர் மன்றமும் கமல், அஜீத் ரசிகர் மன்றமும் வைத்துக் கொண்டு குடித்து விட்டு கும்மாளம் அடிப்பதையே பார்த்து பழக்கப் பட்டவருக்கு புரோகிதர்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் இந்த இளைஞர்கள் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டே தனது சக கான்ஸ்டபிள்களிடம் 'பாருங்கய்யா இந்த பையன்களை! ஊரையே பகைச்சுகிட்டு புரோகிதத்தை ஒழிக்க இவர்கள் காட்டும் ஆர்வத்தில் 10 சதமாவது நாம காட்ரோமாயா! இந்த பையன்களை பார்த்தாவது நாமெல்லாம் திருந்துணும்யா' என்று சொல்லிக் கொண்டே தனது வாகனத்தில் வந்து அமர்ந்தார் கண்ணன்.







Friday, December 20, 2013

இப்படியும் நடக்கலாம் விவாகரத்து!- சிறுகதை

அமெரிக்க நகரம் ஒகலஹாமாவில் ரிச்சர்டு, மேரி தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தாமஸ் என்றும் ரீட்டா என்றும் இரண்டு பிள்ளைகள் உண்டு. மகன் நியூயார்க்கிலும், மகள் ஹாங்காங்கிலும் வேலை செய்து வருகின்றனர்.

ரிச்சர்டு சற்று கோபமாக நியுயார்க்கில் உள்ள தனது மகனிடம் அலை பேசியில் பேச ஆரம்பித்தார்.

'ஒரு வருத்தமான செய்தி மகனே! நானும் உனது தாயாரும் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். 30 வருட திருமண பந்தம் எங்களுக்கு சலிப்பை தந்து விட்டது. எனவே இந்த வாழ்க்கை போதும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்'

'அப்பா! என்ன சொல்றீங்க!'

'உண்மைதான் மகனே! இனியும் எங்களால் சேர்ந்து வாழ முடியாது'

'உங்கள் குழந்தைகளான எங்கள் இருவரையும் நினைத்துப் பார்த்தீர்களா? உங்கள் இருவரையும் பிரிந்து எங்களால் சந்தோஷமாக இருக்க முடியாது தந்தையே! அதிலும் எனது தங்கை இந்த செய்தியை கேட்டால் துடித்து விடுவாள்! உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்'

'எங்கள் இருவரின் முடிவிலும் எந்த மாற்றமும் இல்லை மகனே! உன் தங்கையிடம் இந்த விபரத்தை சொல்லி விடு'

தாமஸ் தனது பெற்றோரை நினைத்து மிகவும் கவலை கொண்டான். எவ்வளவு ஒற்றுமையாக இருந்தனர். அப்படி என்ன அவர்களுக்குள் பிரச்னை என்ற சிந்தனையோடு ஹாங்காங்கில் உள்ள தனது தங்கையை தொடர்பு கொண்டான்.

'ரீட்டா! உனக்கு விபரம் புரியுமா? நமது பெற்றோர் இருவருக்கும் திருமண வாழ்வு கசந்து விட்டதாம். எனவே விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்களாம். அப்பா இப்பொழுதுதான் விபரங்களைச் சொன்னார்.'

'என்ன சொலறே நீ! அவர்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என்ன? நான் அப்பாவிடம் பேசுகிறேன்' என்று கோபத்தோடு போனை வைத்தாள் ரீட்டா.

போனை வைத்த அதே வேகத்தோடு ஒகலஹாமாவில் உள்ள தனது தந்தையை தொடர்பு கொண்டாள் ரீட்டா.

'அப்பா! என்ன இது பைத்தியக்காரத்தனம். விவாகரத்து பண்ணப் போறீங்களாமே! திருமணம் முடிக்கும் வயதில் உள்ள உங்கள் இரு குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சமாவது யோசித்தீர்களா?'

'உன் கோபம் புரிகிறது. என்னால் இதைத் தவிர வேறு முடிவு எடுக்கத் தெரியவில்லை. என்னை மன்னித்து விடு ரீட்டா'

'அப்பா! அவசரப்படாதீங்க! நானும் அண்ணனும் இன்னும் இரண்டு நாட்களில் ஒகலஹாமா வருகிறோம். 15 நாள் விடுப்பில் வருகிறேன். அது வரை எந்த முடிவும் எடுக்கக் கூடாது. சரியா!'

'நீ வந்து ஏதும் நல்லது நடந்தால் சரி. அது வரை விவாகரத்தை தள்ளி வைக்கிறேன்.'

போனை வைத்த ரிச்சர்ட் தனது மனைவியை நோக்கி 'கவலைப்படாதே! இரண்டு பிள்ளைகளும் இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகையை நம்மோடு கொண்டாடுவர். உனக்கு சந்தோஷம் தானே' என்று தனது மனைவியின் கன்னத்தை கிள்ளினார்.

'அதற்காக விவாகரத்து என்று பொய் சொல்ல வேண்டுமா?' சிணுங்கினாள் மேரி.

'வேறு வழி. போன வருட கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் இருவரும் வரவில்லை. இந்த வருடமும் ஏதாவது காரணம் சொல்லி வராமல் இருந்து விட்டால்! எனவே தான் ஒரு பொய்யை சொன்னேன்' என்றார் ரிச்சர்டு குறும்பாக!

-இணையத்தில் ஆங்கிலத்தில் வந்த சம்பவத்தை தழுவி எழுதப்பட்டது

Tuesday, September 03, 2013

பாவம் ஜனங்கள் கட்சியும், பீதியில் ஜெயிக்கும் பிளானும்

" என்னது, எங்க வீட்டு மேலேயே நானே பாம் வீசணுமா?" - கேள்வி கேட்ட திருநாவுக்கரசனை முறைப்பது போல பார்த்தார் பித்தளையழகன், பாவம் ஜனங்கள் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர்.

"எலே, குமரா, இவங்கிட்ட ஒண்னும் சொல்லலையாலே..." என்று அருகிலிருந்த சகா எலை.குமரனைப் பார்த்து எரிச்சலாகக் கேட்டார்.

எலை.குமரன் உடனடியாக தலைவருக்கு அந்தப் பக்கமாக அமர்ந்திருந்த எஸ்.ஓஜாவைப் பார்த்து "நீங்க சொல்லலையா?"

"சொழ்ழேன்ல" என்றார் ஓஜா, வெற்றிலைப் பாக்கை மென்றபடி.

மீண்டும் திருநாவுக்கரசை தன்னருகே வரும்படி சைகையில் அழைத்தார். வெற்றிலையை கீழே துப்பினார்.

"இதோ பாரப்பா, நேத்து ஒங்கிட்டே சொன்னேன்ல, ஒனக்கு கட்சியில பெரிய ஆளா ஆவணும்னு ஆச இருக்கா இல்லியா?"

திருநாவுக்கரசு பவ்யமாக "இருக்குண்ணே " எனவும் ஓஜா தொடர்ந்தார்

"நாங்க சொல்றமாரி கேட்டீன்னா, வர்ர எலக்சென்ல ஒனக்கு பஞ்சாயத்து உறுப்பினராவ சீட்டு கெடக்கிம்; உங்க வீட்டு மேலே பாம் போடுவோம்; அத நீதான் ஏற்பாடு செய்யணும்"

";;;;;;;;;;;;;|"

"புரிஞ்சுதா, பாம் னா பயந்துராதே, பெட்ரோல் குண்டு தான். பெட்ரோலை ஒரு பாட்டில்ல ஊத்தி மூடி திரிய வெச்சு எரிய வெச்சுட்டு அதத் தூக்கி வீசறது தான்"

"ஆனா...." தலையைச் சொறிந்தான் திருநாவுக்கரசு "அதனாலே என்னங்க பிரயோஜனம்?"

"இருக்குலே .. "என்ற ஓஜா, கண்ணடித்தார். (நீ கேட்ட பணம் உனக்குக் கிடைக்கும் என்று அதற்கு அர்த்தம் என்று திருநாவுக்கரசு புரிந்துகொண்டான்). "முக்கியமா பெட்ரோல் குண்டு வீசறப்போ நீங்க யாரும் வீட்ல இருக்கக் கூடாது; வீசிட்டு, உடனே போய் போலிஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் கொடுத்துறனும்.

"என்னன்னு கொடுக்கணும்?"

"அத நீ எழுதறாமாதிரியே நாங்க ரெடியா எழுதி வெச்சிருக்கிறோம். அதுல என்னன்னா, இந்தமாதிரி எதிர்சமுதாயத்தச் சேர்ந்த தீவிரவாதிங்க உன்னை கொல்ல முயற்சி ன்னு இருக்கும் ; ஒனக்கும் ஒரு பப்ளிசிட்டி, என்ன நாஞ்சொல்றது!"

"சரி, போலிஸ் வந்து விசாரிச்சா..?"

"நாங்க சொல்லிக் கொடுக்கற மாதிரி சொன்னா போறும்; இந்த மாதிரி எதிர்சமுதாயத் தீவிரவாதிங்களால தீவிரவாதச் செயல்கள் அதிகரிச்சிட்டு வருது" ன்னு மறக்காம சொல்லிடணும். பீதி கெளப்புறது தான் முக்கிய நோக்கம்"

"அதனால என்னங்க ஆவும்"

"பலே, பலே, அப்டிக் கேளு" என்றார் எலை.குமரன். " உன் பேரு பேப்பர்ல வரும்டா, கட்சிலேயேயும் நீ ஃபேமஸாயிருவ; அப்புறம், அப்படி பீதி கெளப்பினோம்னா, அந்த எதிர் சமுதாயத்தப் பத்தி மோசமான எண்ணம் மக்களுக்கு வரும்; முக்கியமா, நம்ம சமுதாயக் கட்சின்னு நமக்கு ஓட்டு விழும், நாம ஜெயிப்போம் -புரியுதா?"


"ஆனா நம்ம சமுதாயம் ஒன்னுதிரண்டு நமக்கு ஓட்டுப் போடும்னு நெனக்கிறீங்களா சாமி?"

"அதுக்குத் தாண்டா சொல்றோம்... ............. பயலே, நாங்க சொல்றமாதிரி செய், நம்ம தலைவரு கேடி போட்ட ரூட்டு இது.

"அண்ணே, பேசிக்கிட்டிருக்கும் போதே கோவப்படுறீங்க, சாதியத் திட்டிப் பேசறீங்களே.."

"சரி வுடு, நாமெல்லாம் ஒண்ணுமண்ணு தானேடா, என்ன ஒண்ணு நாங்க என்னத்த சொன்னாலும் உங்க ஜாதிக்காரவங்க எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டீங்களேடா"

"எங்க ஜாதி மட்டுமா; உங்க பெரிய ஜாதிக் காரவங்க கூட நம்ம கட்சிக்கு ஓட்டு போட மாட்றாய்ங்க சாமி"

"ஆங்.. மறந்துட்டேன்; தப்பித் தவறி போலிஸ் கண்டுபிடிச்சுடுத்துன்னு வை, இப்படிலாம் பேசிக்கிட்டோம்னுலாம் சொல்லப்படாது; 'எனக்கு ஃபேமஸாவனும்னு ஆச; அதான், எங்கூட்ல நானே பாம் போட்டேன்"னு சொல்லோணும்., புரிஞ்சுதா"

"சரிங்கைய்யா" என்று கிளம்பிச் செல்ல இருந்தவனை ஓஜா மறுபடி அழைத்தார்.

" உன் பொஞ்சாதியிட்டயும் சொல்லிவை; இந்தமாதிரி, பாம் வெடித்து கூந்தல் நுனி கருகிடுச்சு" அப்படி ஏதாச்சும் பேட்டி கொடுக்கணும்"

"சரிண்ணே" என்று திருநாவுக்கரசு கிளம்பியதும்

ஓஜா எலை.குமரனைப் பார்த்து சொன்னார் : 'பீதியில் ஜெயிக்கும் பிளான்" - நம்ம தலைவர் கேடிய சும்மா சொல்லக்கூடாதுங்க"

"ஓஜா, என்னதான் கேடி ப்ளான் போட்டு கொடுத்தாலும், எலக்க்ஷண்ல ஜெயிச்சோம்ணா, நம்ம கில்லாடி தாங்க பிரதமர் ஆவணும், ரொம்ப நாள் தலைவரா இருந்தவரு அவர் தானே, அதாங்க ஞாயம்"

"அட விடுங்க எல, அவரா முக்கியம், காரியம் தானே முக்கியம். ஆமா, காஸ்மூஸ் கட்சி என்ன பிளான் பண்ணப் போறாய்ங்களாம்.ஏதாச்சும் தெரியுமா?"

"நம்ம கரன்சி மதிப்பு கொறஞ்சிட்டு வருதுல்ல; அவங்க கவலை அவங்களுக்கு; ஊழல் வேற அவங்களுக்கு எதிரா இருக்குது"

நமுட்டுச் சிரிப்பு சிரித்தார் பித்தளையழகனார் (நம்ம கட்சியில் இல்லாத ஊழலா? என்பது போல)." தங்காருவும், அடிபட்டாரப்பாவும் நம்ம கட்சிலயும் இர்க்காங்கெடே" என்றார் மெதுவாக. "அதனால, ஊழல்ப் பத்தி பேசறதுனால மக்கள்ட்ட அதுலாம் எடுபடாது"

"அப்ப, கரன்சி மதிப்பு பத்தி பேசலாமா?"

"பேசலாம்டே, ஆனா, மக்களுக்கு நல்லா புரிஞ்சிருக்கு, நம்ம 'பாவம் ஜனங்கள் கட்சி'க்கும் இப்ப ஆட்சி செய்ற காஸ்மூஸ் கட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லங்கறது. என்ன ஒண்ணு, நாம பெரும்பான்மை மக்களுக்குன்னு உள்ள கட்சின்னு சொல்லிக்கறோம்,அவிங்க சிறுபான்மைய்ங்களையும் சேர்த்துகறாங்க, அவ்ளோதான் வித்தியாசம்"

"அப்ப பீதிய கெளப்பி வுடறது தான் இப்ப பிளானா?"

"பின்னே, அதத்தானே செஞ்சிட்டிர்க்கோம்; தலைவர் கேடியும் அதத்தானே சொல்லிருக்காரு"

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே கவிதாயினி கர்நாட்டிக்இசை அழகுராணி உள்ளே நுழைகிறார்.

"வாங்க கவிஞரே, இந்த எலக்க்ஷனுக்கு ஒரு ஸ்லோகம் சொல்லுங்க"

"எப்புடி, நாடு ஒளிர்கிறது -ன்னு முன்னே சொன்னேமே, அப்படியா?"

"ஆனா, நாம இப்ப எதிர்கட்சி, ஞாவகமிருக்கட்டும்"

"ஓ, அதெல்லாம் மறப்பேனா,யோசித்தார், பின்பு "நாரத நாடு; நாறுது பாரு!" ன்னு வெச்சுக்குங்கோ." என்றார்.

- Nazee

http://www.inneram.com/opinions/politics/1579-short-story.html

Thursday, March 28, 2013

மாணிக்கமா? மாலிக்கா? ஒரே குழப்பம் - பகுதி இரண்டு.

மாணிக்கமா? மாலிக்கா? ஒரே குழப்பம் - பகுதி இரண்டு.

பள்ளி வாசலை தினமும் சுத்தமாக வைத்திருப்பது மாணிக்கத்துக்கு அவ்வளவு சிரமமாக இல்லை. எல்லா வேலைகளும் இரண்டு மணி அல்லது மூன்று மணி நேரத்தில் முடிந்து விடும். வேலை முடிந்து சும்மா இருக்காமல் தினமும் கையோடு கொண்டு வந்த குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பை வாசிக்க ஆரம்பித்தான். படிக்க படிக்க அவனுக்கு மேலும் படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ரமலானும் வந்தது. நோன்பு திறப்பதற்காக சவுதிகள் தங்கள் வீடுகளில் இருந்து பழங்கள் பலகாரங்கள் என்று நிறைய பள்ளிக்கு அனுப்புவார்கள். அரசாங்கமும் 50 பேர் சாப்பிடும் அளவுக்கு பிரியாணியையும் அனுப்பி வைக்கும். அனைத்தையும் ஒழுங்குபடுத்தும் வேலையும் தற்போது மாணிக்கத்துக்கு கிடைத்தது. இதற்கு தனியாக 500 ரியால் போனஸாகவும் கிடைத்தது. ஒரு பெரிய தட்டில் சாப்பாடு பழங்கள் வைத்து அதை சுற்றி 4 பேர் அமர்ந்து கொண்டனர். மாணிக்கம் இவ்வாறு சாப்பிட்டு பழக்கம் இல்லை ஆதலால் சிறிய தட்டில் தனக்கு மட்டும் கொஞ்சம் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு ஒரு ஓரமாக ஒதுங்கினான்.

இதை தூரத்திலிருந்து கவனித்து விட்ட ஒரு சவுதி நாட்டவர் மாணிக்கத்தை அழைத்தார்.

'நீ முஸ்லிம் தானே'

'ஆம்'

'பிறகு ஏன் உனக்கு மட்டும் தனி சாப்பாடு? அது தவறல்லவா? எங்களோடு சேர்ந்து சாப்பிடு! அதுதான் சிறந்தது'

மாணிக்கத்துக்கு ஒன்றும் சொல்ல வழியில்லை. அவர்களோடு ஒரே தட்டில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். தனது சொந்த கிராமத்தில் இவன் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்பதால் கோவில் குருக்கள் பிரசாதத்தைக் கூட சற்று தூரமாக நின்றே கொடுப்பார். கை மேலே பட்டு விடக் கூடாது என்பதிலே மிக கவனமாக இருப்பார்.

கோவிலுக்குள்ளும் மாணிக்கத்துக்கு அனுமதி கிடையாது. அந்த அளவு தீண்டாமை மாணிக்கத்தை கோவிலிருந்து தூரமாக்கி வைத்திருந்தது. இங்கோ மாணிக்கம் கை வைத்த சாப்பாட்டை கோடீஸ்வரனான சவுதி நாட்டவர் அசூசைபடாமல் சாப்பிடுவதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

'என்ன யோசனையில் ஆழ்ந்து விட்டாய்? எல்லோரும் ஆதமுடைய மக்களே! சாப்பிடு'

மாணிக்கத்தின் கண்கள் சிறிது கலங்கியது. சாப்பிட்டு முடித்தவுடன் எல்லோரும தொழுகைக்கு தயாரானார்கள். சாப்பிட்ட இடங்களை மாணிககம் சுத்தம் செய்ததால் அவனால் தொழுகையில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே கூட்டு தொழுகை முடிந்ததும் தனது தொழுகையை தனியாக தொழ ஆரம்பித்தான் மாணிக்கம். வீட்டில் நோன்பு திறந்து விட்டு சற்று தாமதமாக வந்தவர்கள் மாணிக்கத்தின் பின்னால் தொழுவதற்கு நின்று கொண்டனர். சவுதி வந்து ஆறு மாதத்துக்கு மேல் ஆகி விட்டதால் தொழுவதும் அதன் வசனங்களும் மிக நன்றாக மனனம் ஆகியிருந்தபடியால் எந்த பயமும் இல்லாமல் அனைவருக்கும் தலைவராக நின்று தொழுக வைத்தான் மாணிக்கம். தனக்கு பின்னால் சவுதி, எகிப்து, சூடான், பாகிஸ்தான், பங்களாதேஷ என்று பல நாட்டவரும் தனது கட்டளைக்கு அடி பணிவதை நினைத்து இனம் புரியாத இன்பத்தில் திளைத்தான் மாணிக்கம். தனியாக தொழும் போது பூமியில் நெற்றியை வைத்து இந்த சிறந்த நிலையை தந்த இறைவனுக்கு நன்றி சொல்லி அழ ஆரம்பித்து விட்டான். இது போன்று தொழ வைப்பது பலமுறை நிகழ ஆரம்பித்தது. வேலைக்காக முஸ்லிமாக நடித்த மாணிக்கத்துக்கு தற்போது உண்மையிலேயே இஸ்லாத்தின் மேல் பற்று வர ஆரம்பித்தது.

சவுதி அரசு நடத்தும் அழைப்பு வழி காட்டு மையத்துக்கு வந்து இஸ்லாம் சம்பந்தமான அனைத்து புத்தகங்களையும், சிடிக்களையும் தனது ரூமுக்கு கொண்டு வந்தான். வேலை நேரம் போக மாணிக்கத்தின் தேடல் இஸ்லாமாகவே இருந்தது. சில காலத்திற்கு பிறகு தனது பெற்றோரிடமும் தனது நிலையை மெல்ல மெல்ல விளக்கினான் மாணிக்கம். முதலில் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் மாணிக்கத்தின் விளக்கத்துக்குப் பிறகு மௌனமானார்கள்.

'நம்ம புள்ள என்னாங்க இப்படி பண்ணிட்டான்'

'ஆமாம்! காலத்துக்கும் தீண்டத்தகாதவனாகவே தான் நான் வாழ்ந்துட்டேன். எம் புள்ளையாவது கொஞ்சம் கௌரவமா இருக்கட்டும்'

'நம்ம சாதி சனம் எல்லாம் தப்பா பேசாதுங்களா'

'நாம கஷ்டப்பட்டப்போ, அவமானப்பட்டப்போ இந்த சாதி சனம் நமககாக என்ன பண்ணுச்சு. ஒண்ணும் ஆகாது கவலைபடாதே'

'நம்ம பையனுக்கு நம்ம சனத்துல பொண்ணு தர மாட்டாங்களே'

'தர வேணாம். எனக்கு தெரிஞ்ச பாய்க்கு 3 பொண்ணுங்க. அதுல மூத்த பொண்ண நமக்கு தர்ரதா சொல்லியிருக்கார்'

'நெசம்மாவா சொல்றீங்க'

'அட..ஆமா புள்ள...மாணிக்கம் மதம் மாறிட்டான்னு தெரிஞ்சவுடனேயே அவர் கிட்ட அரசல் புரசலா இந்த பேச்சை உட்டு பார்த்தேன். அந்த பாயும் 3 பொண்ணுங்கள வச்சுகிட்டு சிரமப்படுரார். அதான் நான் சொன்னவுடனேயே ஒத்துக்கிட்டார். மாணிக்கத்தையும் நல்லா தெரியும்னு சொனனார்'

'ரொம் சந்தோஷங்க....பொண்ணு கிடைக்குமான்னுதான் பயந்தேன்'

'பையன் வந்ததும் நாமலும் முஸ்லிமா மாறிடுவோம். என்ன சொல்றே'

'நம்ம முனியாண்டி சாமி கோவிச்சுக்க மாட்டாரா'

'அவரு கோவிச்சுக்குவேன் என்று உன் கிட்டே வந்து சொன்னாரா! எல்லாரும் கும்புடுறது ஒரு சாமியைத்தான். நம்மல படைச்சதும் ஒரு சாமிதான். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' கிறதுதான் நம்ம நாட்டு வழக்கம். பின்னால மாத்திப்புட்டானுங்க. அதைத்தானே இஸ்லாமும் சொல்லுது. அதனால பேசாம அந்த பாய் கிட்டேயே சொல்லி முஸ்லிமா மாற ஏற்பாடு பண்ணுறேன். மாணிக்கத்துக்கும் இந்த விஷயத்தை போன்ல சொல்லிடு' என்று சொல்லி விட்டு மாணிக்கத்தின் அப்பா தனது வருங்கால சம்பந்தியை பார்க்க கிளம்பினார்.

'சலாம் பாய்'

'என்னப்பா வணக்கம் போய் சலாம் வந்துருச்சு'

'நானும் அஞ்சலையும் என் மகனைப் போல முஸ்லிமா மாறலாம்னு இருக்கோம்'

'அடடே ....ரொம்ப சந்தோஷமான செய்தியாச்சே! இனி உன்னை சம்பந்தியா ஏத்துக்கிறதுல எந்த கஷ்டமும் எனக்கில்லே'

'அப்போ மவுலானா கிட்டே போய் அதுக்கு ஏற்பாடு பண்ணுறீங்களா'

'அதுக்கு ஏம்பா மவுலானா கிட்டே போகணும்? நம்மல படைச்சது ஒரே இறைவன். அதை நம்புறியா'

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' கிறது காலாகாலமா இந்த மண்ணுல பொறந்த பழக்கம் தானே பாய்'

'சரியா சொன்னே. அடுத்து அந்த இறைவன் பல தூதர்களை அனுப்பியிருக்கான். அதுல கடைசியா அனுப்பிய தூதர் முஹமது நபிங்கறத உளமாற நம்புறியா'

'கண்டிப்பா நம்புறேன் பாய்'

'அவ்வளவு தான் நீ இப்போ முஸ்லிம்' என்று முத்துவை கட்டி தழுவினார்.

'பேரை மாத்த வேண்டாங்கலா'

'முத்து என்கிற பேரே அழகாக இருக்கு. அதே பெயரையே வைக்க இஸ்லாத்தில் தடை இல்லை. ஆனால் இந்த பழைய பேர் உனது சாதியை திரும்பவும் மற்றவர்களுக்கு ஞாபகப்படுத்தும். எனவே ஒரு அழகான அரபு பேரை நீயே தேர்ந்தெடுத்துக்கோ'

'அப்துல்லா ங்கற பேரு எனக்கு பிடிச்சுருக்கு பாய்'

'ஆஹா...இறைவனுக்கும் மிகவும் பிடித்தமான பெயர். 'இறைவனின் அடிமை' என்று பொருள் வரும். இந்த வார வெள்ளிக்கிழமை பள்ளி வாசலுக்கு உன் மனைவியையும் அழைச்சுகிட்டு வந்துடு. எல்லோர் முன்னிலையிலும் இஸ்லாத்தை ஏற்றதை சொல்லிட்டா தானாக உனது கிராமத்துக்கும் இந்த சேதி போயிடும்'

'நல்லது பாய்! பையன் இன்னும் ஆறு மாசத்துல ஊருக்கு வரான்! அப்போவே கல்யாணத்தை வச்சுகிடலாம்னு'

'தாராளமா! இரு பொண்ணு போட்டோவை தர்றேன். பையனுக்கு அனுப்பி வை' என்று வீட்டின் உள்ளே சென்றார் காதர் பாய்.

பெண்ணின் போட்டோவையும் வாங்கிக் கொண்டு கம்பீரமாக நடந்து சென்றார் முத்து. தனக்கும் தனது மனைவிக்கும் தனது மகனுக்கும் சிறந்த வாழ்வும் கௌரவமான வாழ்வும் கிடைக்கப் போவதை எண்ணி மனம் மகிழ்ந்தவராக வீட்டை நோக்கி சென்றார் முத்து என்கிற அப்துல்லா.

-முற்றும்.