வரலாறு எப்படி
திரிக்கப்படுகிறது?
ஆதாரம் இல்லாமல் சொல்லப்படுகிறது என்பதை உங்களுக்குக்கெல்லாம் அறிமுக மான பேராசிரியர் இர்ஃபான் ஹபிப் அவர்கள் ஒரு செய்தியைச் சொன்னார்கள். அதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக் கின்றேன். இது ஒரு எண்டோவ்மென்ட் லெக்சர். அறக்கட்டளை சொற்பொழிவு.
Islam and Indian Culture Towards National integration என்ற பெயராலே ஒரிசாவிலே கவர்னராக இருந்த மிகப் பெரிய மூத்த சிந்தனையாளர் சி.என். பாண்டே - அவர் இல்லை இப்பொழுது.
மூத்த சிந்தனையாளர் சி.என். பாண்டேமிகப் பெரிய வரலாற்று ஆசிரியர் சி.என். பாண்டே அவர்கள். அலகாபாத் பல்கலைக் கழகத்திலே பாட்னா பல்கலைக் கழகத்திலே அவர்கள் ஆராய்ச்சி நிகழ்த்தினார்கள்.
நீண்ட காலத்திற்கு முன்னாலே எனக்கு அறிமுகமான ஒருவர். அவர் ஒரு முற்போக்கு சிந்தனையாளர். அவருடைய நூலை எனக்கு அனுப்பினார். அந்த நூலிலே ஒரு ஆழமான செய்தியை சுட்டிக் காட்டியிருக்கின்றார். வரலாறு எப்படி திரிக்கப்படுகிறது என்பதை சொல்லி யிருக்கின்றார்கள்.
சமுதாயத்திற்கு பெரிய கேடுஅந்த ஒன்றே ஒன்றை மட்டும் எடுத்துச் சொல்லி, அது சமுதாயத்திற்கு எவ்வளவு பெரிய கேடாக ஆகியிருக்கிறது என்பதை மட்டும் உங்களுக்குச் சுட்டிக்காட்டி என்னுடைய உரையை நான் நிறைவு செய்ய விரும்புகின்றேன்.
இஸ்லாமியர்களுடைய வரலாற்றைச் சொல்லும் பொழுது பல இந்திய சரித்திர நிலைகளைச் சொல்லுகின்றார்.
திப்பு சுல்தான் பற்றி ஆராய்ச்சிபேராசிரியர் எம். ஹபீப் சொல்கிறார். திப்பு சுல்தானைப்பற்றி நான் ஆராய்ச்சி செய்தேன். அலகாபாத் பல்கலைக் கழகத்திலே ஆராய்ச்சி செய்தார். ஆய்வுபற்றி சொன்னார்கள் அல்லவா டாக்டர் ராமசாமி அவர்கள். ஆய்வுகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
1928 ஆம் ஆண்டு திப்பு சுல்தான்பற்றி ஆராய்ச்சி அலகா பாத்தில் நடத்தினேன். 3000 பார்ப்பனர்களை திப்பு சுல்தான் இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார் என்று டாக்டர் ஹரி பிரசாத் சாஸ்திரி என்பவர் சமஸ்கிருத துறைக்குத் தலைவர் - கல்கத்தா பல்கலைக் கழகத்திற்கு. இப்படி நீங்கள் எழுதியிருக்கின்றீர்களே இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கின்றார். ஹபீப் பல நினைவூட்டல் கடிதங்களை எழுதினார்.
ஆதாரம் இல்லைமைசூர் கெசட்டில் இருக்கிறது என்று அவர் பதில் எழுதினார். மைசூர் கெசட் அலகாபாத் பல்கலைக் கழகத்திலும் கிடைக்க வில்லை. கல்கத்தா பல்கலைக் கழகத்திலும் கிடைக்கவில்லை என்றவுடன் மைசூர் யுனிவர்சிட்டி துணை வேந்தருக்குக் கடிதம் எழுதுகிறார். மைசூர் கெசட்டிற்கு புதிதாக ஒரு ஆசிரியரைப் போட்டு ஸ்ரீகண்டய்யா என்பவர் அதை எடிட் பண்ணிக் கொண்டிருக்கின்றார். துணை வேந்தர் அவர்கள் ஸ்ரீ கண்டையா அவர்களுக்கு இந்தக் கடிதத்தையும் பார்வைக்கு அனுப்புகின்றார்.
திப்பு சுல்தானின் தளபதியே ஒரு பார்ப்பனர்பேராசிரியர் ஸ்ரீகண்டையா இந்த மாதிரி ஒரு சம்பவமே கிடையாது என்று அவர் பதில் எழுதியிருக்கின்றார். திப்பு சுல்தானுடைய பிரைம்மினிஸ்டரே ஒரு பார்ப்பனர். அந்த பார்ப்பனருடைய பெயர் பூர்ணய்யா.
திப்புசுல்தானின் படைத் தளபதியும் ஒரு பார்ப்பனர். அவருடைய பெயர் கிருஷ்ணாராவ். 168 கோயில்களுக்கு ஆண்டுதோறும் திப்பு சுல்தான் மானியம் வழங்கியிருக்கின்றார்.
சிருங்கேரி மட ஜகத் குரு சங்கராச்சாரியாருக்கு கடிதங்கள் பல எழுதி இணக்கமாக இருந்திருக்கிறார் என்று இவ்வளவு ஆதாரத்தையும் கொடுத்தார்.
தகவல் வெளியே வந்திருக்காது.........
இந்த ஆதாரத்தை ஒருவர் இவ்வளவு கஷ்டப்பட்டு வழங்கி யிருக்காவிட்டால் இவ்வளவு தகவல்களும் வெளியே வந்திருக்காது. இந்த புத்தகத்தில் இருக்கின்ற தகவலும் இதுவரை சரியாக வெளியே போகவும் இல்லை. எனவே இன்னமும் என்ன சொல்லி கொடுக்கிறார்கள்?
3000 பிராமணர்கள் தற்கொலையா? திப்பு சுல்தான் நெருக்கடி கொடுத்ததினாலே மூவாயிரம் பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று பிரச்சாரம் செய்கின்றான். இதைப்போய் குஜராத்தில் சொன்னால் என்ன ஆகும்? இதை உத்தரப் பிரதேசத்தில் சொன்னால் என்ன ஆகும்? இந்தப் பாடத்தை ராஜஸ்தானத்திலே படித்தால் என்ன ஆகும்? மத நல்லிணக்கம் இருக்குமா? சமூக ஒற்றுமை இருக்குமா? சமூகத்தில் மனித நேயம் இருக்குமா?
உண்மைகளை எழுதுங்கள். விருப்பை உண்டாக்குவதற்குப் பதிலாக மனிதர்களை ஒன்று படுத்துவதற்குப் பதிலாக, மண்ணின் ஒருமைப்பாடு பேசக் கூடியவர்கள், மக்களின் ஒருமைப்பாட்டைப் பற்றி கவலைப்பட வேண்டாமா?
எனவே பேராசிரிய பெருமக்களே..... உங்களை நாங்கள் வேண்டுவதெல்லாம் உண்மைகளை அதன் நிர்வாணத் தன்மையிலே நீங்கள் எடுத்துக் காட்டுங்கள். தேவையானால், குறைந்த பட்ச ஆடையை மட்டும் போடுங்கள். உண்மைக்கு ஒப்பனை செய்யாதீர்கள். அது வரலாறாக ஆகிவிட முடியாது. உண்மை உண்மையாக இருக்க வேண்டும்.
ஒளிப்படம் ஒளிப்படமாக இருக்கட்டும். ஊடுகதிர் - எக்ஸ்ரே எக்ஸ்ரேவாக இருக்கட்டும். ஒருபோதும் ஓவியமாக மாற்ற வேண்டாம் என்று கேட்டு, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.
- சென்னைப்
பல்கலைக் கழகத்தில் 14-12-2007 அன்று நடை பெற்ற நிகழ்ச்சியில் திராவிடர்
கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி