Followers

Showing posts with label chennaiflood. Show all posts
Showing posts with label chennaiflood. Show all posts

Saturday, December 26, 2015

ஆரோக்கியதாஸ் என்ற நல்ல மனிதரின் அகால மரணம்!



வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட மோகன் சித்ரா தம்பதியர், தமது குழந்தைக்கு யூனுஸ் என்று பெயர் வைத்தார்களல்லவா! அந்த யூனுஸும் நானும் இன்று திருவொற்றியூரிலுள்ள ஆரோக்கிய தாஸ் வீட்டுக்கு சென்றோம்.

யார் அந்த ஆரோக்கியதாஸ்?

திமுகவின் நகரத் துணைச் செயலாளர். இருமுறை கவுன்சிலராக இருந்தவர். மக்கள் சேவகர். விஷ பூச்சி கடித்து பலியான இம்ரானின் அண்டை வீட்டுக்காரர். இம்ரானை மருத்துவமனையில் சேர்த்தது முதல் இம்ரான் மரணத்தை வெகுமக்களின் கவனத்துக்கு கொண்டுவந்தது வரை அனைத்தையும் உடனிருந்து செய்தவர். அத்துடன் நிற்கவில்லை அவர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை வரவழைத்து இம்ரானின் பெற்றோருக்கு ஆறுதல் சொன்னதோடு, தனது மகளின் நகையை அடகுவைத்து 50,000 ரூபாய் நிதியும் வழங்கினார். கடந்த 17-ஆம் தேதி தலைவர் திருமாவளவன் அவர்கள் இம்ரான் இல்லத்துக்குச் சென்றபோது முழுவதும் உடனிருந்தார், ஆரோக்கியதாஸ். அத்தகைய பொது நலத் தொண்டர், அன்று மாலையில் தனது வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து அகால மரணம் அடைந்தார்.

பெரிய கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்தபோதும், கவுன்சிலர் பதவியை இருமுறை வகித்தபோதும் எளிய வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அவரது வீடே அதற்கு சாட்சியாய் உள்ளது. அவரின் மூன்று பெண் மக்களுக்கும் இன்னும் திருமணமாகவில்லை. குடும்பமே கண்ணீர் வடிக்கிறது.

நண்பர் யூனுஸ் இன்று, ஆரோக்கிய தாஸ் குடும்பத்துக்கு ஆறுதல் நிதி வழங்கினார். மனிதநேயம் என்பது ஒருவழிப்பாதை அல்ல என்பதை நிரூபிக்கிறார் யூனுஸ்!

நன்றி
சகோ Aloor shanawas

இறந்த ஆரோக்கியதாஸின் குடும்பத்துக்கு திமுக சிறந்த ஒரு உதவியை செய்து தரும் என்று எதிர்பார்போம். பொது மக்களும் நிதி திரட்டி அந்த குடும்பம் சிரமப்படாமல் இருக்க ஆவண செய்யலாம்!

Thursday, December 24, 2015

விஜய் டிவியின் சூப்பர் சிங்கரை நேற்றும் தொடர்ந்தேன்!







விஜய் டிவியின் சூப்பர் சிங்கரை நேற்றும் தொடர்ந்தேன்!

23-12-2015 ஆம் தேதி ஒளிபரப்பான சூப்பர் சிங்கரில் வெளியான சில தகவல்கள்.....

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் என்ற கிருத்துவர் 10 வருடங்களுக்கு முன்பிலிருந்து சென்னையிலேயே தங்கி பொதுப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 'சென்னை மக்கள் அன்பானவர்கள். அவர்களின் அன்பு என்னை இங்கேயே தங்க வைத்து விட்டது' என்று பெருமை பொங்க சொல்கிறார். கிட்டத்தட்ட 250 பேர்களின் உயிர்களை இவர்கள் குழுமம் காப்பாற்றியுள்ளது. உயிர்களை காப்பாற்றிதோடு நில்லாமல் சாக்கடைகளை சுத்தப்படுத்தி கழிவு நீர் தடையின்றி செல்ல மிகவும் உதவியிருக்கிறார். இவரை அழைத்து கவுரப்படுத்தி பூச்செண்டுகளும் கொடுத்தது சூப்பர் சிங்கர் குழுமம்.

அடுத்த ஹீரோ முஹம்மது யூனுஸ்...

இவரைப் பற்றி நாம் முன்பே பத்திரிக்கைகள் வாயிலாகவும் இணையம் வாயிலாகவும் நிறையவே கேள்விப் பட்டிருப்போம். இவரும் நேரிடையாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவர் தனது அனுபவங்களை பகிரும் போது....

'எங்களுக்கு சென்னையில் இரண்டு வீடு இருந்தது. ஒரு வீட்டை நாங்கள் உபயோகித்துக் கொண்டு மற்ற வீட்டை வீடிழந்தவர்களை தற்காலிகமாக தங்க வைக்கலாம் என்று முடிவு செய்தோம். அதனை இணையத்திலும் அறிவிப்பாக வெளியிட்டேன். நிறைய கால்கள் வந்தது. பல நண்பர்களும் தங்கள் வீடுகளை தர முன் வந்தனர். பல நூறு குடும்பங்களை இவ்வாறு தங்க வைத்தோம்.'

பாவனா: 'கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றியது சம்பந்தமாக...'

யூனுஸ்: அவர் கர்பிணி என்பது முதலில் தெரியாது. தண்ணீரின் வேகம் மிக அதிகமாக இருந்தது. ஒரு முறை நானே தவறி குழியில் விழப் போனேன். இவரைப் போன்ற பல குடும்பங்களைக் காப்பாற்றினோம். பிறகுதான் அவருக்கு குழந்தை பிறந்த செய்தி தெரிய வந்தது. இன்னும் நான் அவரை நேரில் சந்திக்கவில்லை. இனிமேல்தான் சந்திக்க வேண்டும். இந்த நேரத்தில் மீனவர்களின் பணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களின் படகு இல்லை என்றால் பல உயிர்களை இழந்திருப்போம்.

பாவனா: இவருடைய சேவையை நினைத்து அந்த குடும்பம் பிறந்த குழந்தைக்கு இஸ்லாமிய பெயரான 'யூனுஸ்' என்ற பெயரை தேர்ந்தெடுத்துள்ளது...

(பலத்த கைத்தட்டல்)

அடுத்து பீஹாரைச் சேர்ந்த கூலி தொழிலாளி அலாவுதீனின் மனைவியையும் படகில் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. மனித நேயமிக்க பல பணிகள் நடந்து பல உயிர்களை காப்பாற்றியுள்ளது. மீதியை நாளையும் தொடர்வோம்.

Tuesday, December 22, 2015

விஜய் டிவி நேற்றைய எமது பதிவைப் பார்த்து மிரண்டு விட்டதோ!





விஜய் டிவி நேற்றைய எமது பதிவைப் பார்த்து மிரண்டு விட்டதோ!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெள்ள பாதிப்பு தொகுப்பில் இஸ்லாமியரின் பெயர் வேண்டுமென்றே விடுபபட்டுள்ளதோ என்ற எனது சந்தேகத்தை நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அந்த பதிவுக்கு ஏக வரவேற்பு. 500 ஷேர்களுக்கு மேல் போனதால் மிரண்டு போன விஜய் டிவி நிர்வாகம் இன்றைய எபிசோட்டில் பல உண்மைகளை உரக்கச் சொன்னது. :

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே 'ஒன்றே குலம் என்று பாடுவோம்! ஒருவனே தேவன் என்று போற்றுவோம்' என்ற இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையை பறை சாற்றுவதோடு நிகழ்ச்சியை தொடங்கியது. அதையும் ஒரு இஸ்லாமியனான சியாதை விட்டு பாடச் சொன்னது. அந்த பாடல் முடிந்த கையோடு இஸ்லாமியர் தங்கள் பள்ளிவாசலில் அiனைத்து மதத்தினரையும் தங்க வைக்கச் சொன்ன நிகழ்வுகளை நம்ம பாவனா அக்கா விலாவாரியாக விளக்கிக் கொண்டிருந்தார். தொழுகை நேரத்தில் முஸ்லிம்கள் இடமில்லாததால் ரோட்டில் தொழுது கொண்டதையும் குறிப்பிட மறக்கவில்லை.

அடுத்து காப்பாற்றப் போன இம்ரான் பூச்சிக் கடியால் இறந்த துயரமான அந்த நிகழ்வை இம்ரானின் தந்தை விளக்கினார். பலரது கண்களில் கண்ணீர். ஒரு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தினர்.

அதே போல் காப்பாற்றப் போன இடத்தில் சாக்கடைப் பள்ளத்தில் தவறி விழுந்து இறந்து போன சகோதரர் பரத்தைப் பற்றியும் ஒளிபரப்பினார்கள். இன்றைய நாள் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது.

ஆனாலும் ஒரு குறை....

வெள்ள பாதிப்பில் ஆரம்பம் முதல் இன்று வரை பல உயிர்களைக் காப்பாற்றிய தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தைப் பற்றியும், தமுமுக, பாபுலர் ஃப்ரண்ட் பற்றியும் சிறிய குறிப்பு கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மலைபோல் குவிந்து கிடந்த குப்பைகளை கார்பரேஷன் காரர்களே கை வைக்க பயந்தபோது தவ்ஹீத் ஜமாத் முதலில் களமிறங்கி சென்னையை தூய்மையாக்கியது. இவர்களை பார்த்து வைகோவும் திருமாவளவனும் களத்தில் இறங்கி துப்புறவு பணியை கையிலெடுத்தனர். பாவனா அக்கா நாளைய எபிசோடில் இதனையும் சேர்த்துக் கொள்வாராக! :-)

-----------------------------------------------------

'என்ன பாய் இது! இது உங்களுக்கே ஓவரா தெரியல... உங்க பதிவை பார்த்து மிரண்டு விட்டது விஜய் டிவி நிர்வாகம் என்பதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு' என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.

'துணை முதல்வர் பதவியை விட்டுத்தர தயாராக இருக்கிறேன்' என்று அன்பு மணி ராமதாஸ் சொன்னா மறு பேச்சு பேசாம நம்புவீங்க....

'தமிழகத்தை அடுத்த ஐந்து ஆண்டு ஆளப் போவது பிஜேபிதான்' என்று சவுண்டு சரோஜா சொன்னா மறு பேச்சு பேசாம நம்புவீங்க....

'என்னோட பதிவை பார்த்து விஜய் டிவி முடிவை மாத்திக்கிச்சு' என்று நான் சொன்னா மட்டும் நம்ப மாட்டீங்களா? .... இது நியாயமா? :-)

Monday, December 21, 2015

நேற்றைய விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி சம்பந்தமாக!

நேற்றைய விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி சம்பந்தமாக!நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது விஜய் டிவியின் 'சூப்பர்...

Posted by Nazeer Ahamed on Monday, December 21, 2015

நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியை பார்ப்பது உண்டு. அந்த வகையில் நேற்றும் அந்த நிகழ்சியை பார்தேன். சென்னை கடலூர் வெள்ள பாதிப்பில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது மக்களை காப்பாற்றிய ஒரு சிலரை பேட்டி எடுத்தனர். அதில் காவல் துறை அதிகாரி சைலேந்திர பாபு தலைமையில் ஒரு டீம் சிறப்பாக செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றியதை நாமும் அறிவோம். அவர்களை அழைத்து சிறப்பித்தனர் விஜய் டிவி 'சூப்பர் சிங்கர்' குழுமத்தினர்.

இவர்களில் விஷ்ணு, ஜமீல் என்ற இரண்டு பேர் சென்னை வெள்ளத்தில் 'சைலேந்திர பாபு டீமில்' கலந்து கொண்டு தண்ணீரில் இறங்கி பல உயிர்களை காப்பாற்றியுள்ளனர். கோவையிலிருந்து மீட்புப் பணிக்காக வந்தவர்கள். நன்கு பயிற்சி பெற்ற வீரர்கள்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்தளித்த ஆங்கர் பாவனா 'விஷ்ணு உங்க அனுபவத்த சொல்லுங்க' என்று விஷ்ணுவிடம் கேட்கிறார். அவரும் தனது அனுபவத்தை சொல்லி முடிக்கிறார். அடுத்து ஜமீல் என்ற இஸ்லாமியரின் அனுபவத்தை பகிரும்போது அவர் பெயர் சொல்லப்படாமல் நேரிடையாக தனது அனுபவத்தை சொல்ல வைக்கப்படுகிறார். ஜமீல் என்ற இஸ்லாமியரின் பெயரை சாமர்த்தியமாக எடிட் செய்து ஒளிபரப்புகிறார்கள். காப்பாற்றியவர் ஒரு இஸ்லாமியர் என்பது மற்றவர்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்கள். நேற்றைய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும். இது தற்செயலாக எடிட் ஆனதா? அல்லது இஸ்லாமியரின் பெயர் வெளியில் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு எடிட் செய்யப்பட்டதா? என்பதை இறைவனே அறிவான்.

விஜய் டிவி மறைத்தால் என்ன? நம்மிடம்தான் 'முகநூல்' என்ற அருமையான ஊடகம் உள்ளதே... அதன் மூலம் மக்களிடம் உண்மையை எடுத்து வைப்போம்.

Friday, December 18, 2015

மனித நேயப் பணி என்பது இதுதான்!

'எங்களின் வாழ்நாளில் முஸ்லிம்கள் செய்த இந்த உதவியை மறக்கவே மாட்டோம். தண்ணீரைப் பார்த்து என்ன செய்வதென்று பயந்து போய் இரு...

Posted by Nazeer Ahamed on Friday, December 18, 2015

'எங்களின் வாழ்நாளில் முஸ்லிம்கள் செய்த இந்த உதவியை மறக்கவே மாட்டோம். தண்ணீரைப் பார்த்து என்ன செய்வதென்று பயந்து போய் இருந்த போது எங்கிருந்தோ வந்த முஸ்லிம்கள் தங்கள் தோள்களைக் கொடுத்து நாங்கள் கீழே இறங்க உதவினார்கள்.'

Tuesday, December 15, 2015

சமீபத்தில் பெய்த மழை இறைவன் அளித்த தண்டனை : இளையராஜா



சமீபத்தில் பெய்த மழை இறைவன் அளித்த தண்டனை. இதை நான் மட்டும்தான் சொல்ல முடியும் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை (பெப்சி) சேர்ந்த உறுப்பினர்களுக்கு வெள்ள நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடந்தது. இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, பெப்சி தலைவர் சிவா, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் 1000 மூட்டை அரிசியும், ஃபிலிம் சேம்பர் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களும், ஏ.ஆர்.ரஹ்மான் 2000 மூட்டை அரிசியும், இளையராஜா 5000 போர்வைகளும், நடிகர் சங்கம் சார்பில் 4,500 லிட்டர் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டன.

இதில் இளையராஜா பேசியதாவது:

இங்கே கொடுப்பதும் வாங்குவதும் சினிமா கலைஞர்கள்தான். இங்கு விளம்பரம் கிடையாது.சமீபத்தில் பெய்த மழை இறைவன் அளித்த தண்டனை. இதை நான் மட்டும்தான் சொல்ல முடியும்.

மனிதன் எங்கேயோ எதுவோ தவறு செய்திருக்கிறான். இறைவன் நினைத்திருந்தால் சுனாமி போன்ற பேரழிவைக் கொடுத்திருக்கலாம். ஆனால், ஐம்பூதங்களில் ஒன்றான நீர் மூலம் கஷ்டப்படுத்தி இருக்கிறான். ஆனால், இந்த மழைதான் மனிதநேயத்தை வளர்த்திருக்கிறது.

பெரிய பணக்காரர்கள் எல்லாம் பிரெட் வாங்க கஷ்டப்படும்போது, பக்கத்து வீட்டுக்காரர்களும் பசியோடு இருக்கிறார்கள் என்று அவர்களுக்கும் சேர்த்து பிரெட் வாங்கியிருக்கிறார்கள். பிறருக்கு கொடுத்து உதவும் எண்ணத்தை இந்த மழை வளர்த்திருக்கிறது.

இவ்வாறு இளையராஜா பேசினார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
16-12-2015

டாக்டர் சித்தீக் அஹமது என்ற தனி நபரின் மனித நேயம்!



டாக்டர் சித்தீக் அஹமது என்ற தனி நபரின் மனித நேயம்
*****************************************************************************
ஆம். டாக்டர் சித்தீக் அஹமது, மழை வெள்ள நிவாரண நிதியாக இரண்டு கோடி ருபாயை தனது பங்களிப்பாக செலுத்தியுள்ளார்.

இவரைப் பற்றி....

தான் செய்யும் உதவிகளை விளம்பரப்படுத்தாமல் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்வார், அதையும் மீறி இவர் செய்த இந்த இரண்டு கோடி நிவாரண உதவி மலையாள மனோரமா பத்திரிக்கையில் கடந்த 13-12-2015, ஞாயிறன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.
தாம் செய்யும் சமூக மற்றும் மனித நேய செயல்களுக்காகவும், வர்த்தகத் திறனிற்காகவும் கடந்த 2012 ல் டாக்டரேட் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டவர் இவர்.

கடந்த 2014 ஆம ஆண்டின் Forbes Middle East ன் "TOP INDIAN LEADERS IN THE ARAB WORLD" தர வரிசையில் இடம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாம் வல்ல அல்லாஹ், இவரது அனைத்து நற்செயல்களையும் அங்கீகரித்து, இவருக்கும் இவரது குடும்பத்தார்க்கும் மென்மேலும் அருள்புரிய பிரார்த்திப்போமாக!


Dr. Siddeek Ahmed is the Chairman & Managing Director of Eram Group, which is apowerh use in Industrial Contracting, Project Management Solutions, Automotive, Health Care, Travel, IT, Manufacturing, Power Electronics, Trading, Floor Covering, Product representation & other commercial services.

Dr. Siddeek leads one of the region's most diverse conglomerates, with over 40 plus entities spread across 12 countries. He is credited with key business promotion initiatives in the Kingdom of Saudi Arabia, United Arab Emirates, India, Kingdom of Bahrain, Qatar, Kuwait, United Kingdom, Italy, Korea, Malaysia,Turkey and USA .

He is also a philanthropist, and treats this facet of his life just as passionately. He supports several charity initiatives in partnership with Governments, Trusts, NGOs and individuals besides his own projects.

Dr. Siddeek hails from the Indian state of Kerala and is blissfully married to Mrs. Nushaiba.They have three children; two daughters, Rizana Mariyam & Rizwi Mariyam, and a son, Rizwan Ahmed.

தகவல் உதவி

‎bro Peer Mohamed‎

Friday, December 11, 2015

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட மாணவன் விஷ பூச்சி கடித்து உயிரிழந்த பரிதாபம்!



விகடன் செய்தி : 12.12.15

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட மாணவன் விஷ பூச்சி கடித்து உயிரிழந்த பரிதாபம்!

சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட மாணவன் விஷ பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் தியாகராயபுரத்தில் வசித்து வருபவர் ஜாபர். இவரது மகன் இம்ரான் (17). இவர் புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். விடுமுறை நாட்களில் தனது தந்தையுடன் சேர்ந்து வீடு வீடாக தண்ணீர் கேன் போட்டு வந்துள்ளார்.

கடந்த 2ஆம் தேதி சென்னையில் பெய்த கனமழையால் நகரங்களில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. இதில் தாங்கல் பகுதியும் தப்பவில்லை. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இம்ரான் உள்ளிட்டவர்கள் களம் இறங்கினர். ஒவ்வொருவராக மீட்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, மீட்பு பணியில் இருந்த இம்ரானை விஷ பூச்சி ஒன்று கடித்து விட்டது. வலி தாங்க முடியாமல் அவதிப்பட்ட இம்ரானை உடனடியாக அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர், கை, கால்கள் செயல் இழந்த நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் இம்ரான் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து நான்கு நாள் சிகிச்சைக்கு பின்னர், இம்ரான் இன்று அதிகாலை 4.30 மணிக்கு உயிரிழந்தார்.

தன்னுயிரையும் பணயம் வைத்து வெள்ள மீட்பில் ஈடுபட்ட மாணவன் விஷ பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் மனிதம் இன்னும் செத்து விடவில்லை!

உலகில் மனிதம் இன்னும் செத்து விடவில்லை!

இதுவரை ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளிவராத தியாகம் அடுத்த நபருடையது. நண்பர் சொன்ன தகவல்.
சாலையை மூழ்கடித்த வெள்ளத்தில் காரில் அவர் போய்க்கொண்டி ருந்தபோது ஒரு முஸ்லீம் பெரியவர் நடுச் சாலையில் கையில் ஒரு செடியைப் பிடித்துக்கொண்டு நின்றிருக்கிறார். இறங்கி என்னவென்று விசாரித்த அந்த நண்பருக்குக் கண்கலங்கிவிட்டது.

சாலையின் அந்த இடத்தில் ஒரு குழி ஏற்பட்டுவிட்டது என்றும், யாரும் அதற்குள் விழுந்துவிடக் கூடாது என்பதால் அடையாளத் துக்காகச் செடியைப் பிடித்துக்கொண்டு நிற்கிறேன் என்றும் அந்த முஸ்லீம் பெரியவர் சொல்லியிருக்கிறார். ஊன்றிவிட்டு நீங்கள் போயிருக்கலாமே என்று நண்பர் கேட்டதற்கு, ஓடும் நீரில் செடி நிற்க மாட்டேன் என்கிறது, அதனால்தான் அதைப் பிடித்துக்கொண்டு நிற்கிறேன் என்று அந்த முஸ்லீம் பெரியவர் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்ல நண்பர்களே, அடுத்து வரும் விஷயம் தான் நம்மை மிக மிக அற்பர்களாகவும், அந்த முஸ்லீம் பெரியவரை மகாத்மாவாகவும் ஆக்குகிறது.

நண்பரிடம் அந்தப் பெரியவர் இப்படிச் சொல்லியிருக்கிறார், ‘கடந்த நான்கு மணி நேரமா நான் இப்படி நின்னுக்கிட்டிருக்கேன். யாராச்சும் பார்த்துக்குவாங்கனு அப்படியே விட்டுட்டுப் போவ மனசே வரல.”

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
12-12-2015

தேச பக்தி என்பது இதுதான்!

சகோதரி செல்வ ராணிக்கு எமது மனமார்ந்த நன்றிகள்!

'அலிகர் முஸ்லிம் யுனிவர்ஸிடி' சென்னைக்கு மருத்துவ குழுவை அனுப்புகிறது!





மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழுவை அலிகர் முஸ்லிம் யுனிவர்ஸிடி சென்னையில் மனிதாபிமான அடிப்படையில் சேவைகள் செய்ய அனுப்புகிறது. இதற்கு முன்பும் நேபாள், காஷ்மீர், உத்தரகாண்ட், முஜா.பர் நகர் போன்ற பாதிப்புக்கு உள்ளான பகுதிகளுக்கு தனது மருத்துவ குழுவை அனுப்பி மகத்தான சேவை செய்துள்ளது இந்த பல்கலைக் கழகம்.

தகவல் உதவி
மில்லி கெஜட்

A team of Doctors from Aligarh Muslim University will leave for Chennai Flood Hit areas to serve humanity.

it's the only university which send it teams in Such Natural Disasters.
Earlier team went to serve Nepal Earthquake Victims, Kashmir Flood Victims, MuzaffarNagar Communal Riots, Uttarakhand Flood Victims.

Regards
Team ‪#‎SOCH‬
Dr Kashif Razi (+919412562870)
Dr Danish Suhail (+919997665436)

தென்சென்னை சைதாப்பேட்டையில் மருத்துவ முகாம்:





தென்சென்னை சைதாப்பேட்டை பகுதியில் 09.12.15 காலை துவங்கிய டிஎன்டிஜேவின் மருத்துவ முகாம்:

'அனுமன் சேனா' உறுப்பினர் பாலிமர் டிவிக்கு மிரட்டல்!





உண்மையை உரத்துச் சொன்னால் அது அரை டிரவுசர்களுக்கு கிலியை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த கிறுக்கனின் பதிவும் ஒரு சான்று.

மற்ற இயக்கத்தவர் ஏதும் செய்யவில்லை என்று பாலிமர் செய்தி எங்கும் சொல்லவில்லை. எல்லா அமைப்புகளையும் சொல்லி அதில் முஸ்லிம்களையும் இணைத்துக் கொண்டது. அதற்கே பொறுக்கவில்லை இந்த அரை டிரவுசருக்கு!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உதவியை நாடிய அரசு அதிகாரிகள்....!!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உதவியை நாடிய அரசு அதிகாரிகள்....!!

கொடுங்கையூர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்த 10 மூட்டை பால் பவுடரை பேக்கிங் செய்து விநியோகிக்க வேண்டும் என்று AE அவர்கள் கொடுங்கையூர் TNTJ கிளையை தொடர்பு கொண்டு அழைத்ததின் பேரில் TNTJ சகோதரர்கள் 10 மூட்டை பால் பவுடரையும் பேக்கிங் செய்து மழையால் பாதிக்கப்பட்டமக்களுக்கு வீடு வீடாக சென்று விநியோகம் செய்தார்கள்.

அதேப்போல் லாரியில் வந்த தண்ணீர் மூட்டை மற்றும் பாட்டில்களையும்இறக்கி வைத்து அரசுக்கு உதவி செய்தார்கள்.

#TNTJ_FLOOD_RELIEF_FORCE
#tntjreliefwork

'தூய்மை இந்தியா' - தமிழ் இந்து நாளிதழின் கார்டூன்!

பிஞ்சுக் குழந்தையை மீட்டதில் ஆத்ம திருப்தி!



பிஞ்சுக் குழந்தையை மீட்டதில் ஆத்ம திருப்தி கொண்ட நெஞ்சங்கள்:

TNTJ மந்தவெளி கிளை சார்பில் 03/12/15 ம் தேதி சைதாப்பேட்டையில் பிறந்து இரண்டே நாளான பிஞ்சுக்குழந்தையின் வீட்டைச் சுற்றி தண்ணீர் வளைத்ததில் தத்தளித்த அந்தக் குழந்தையை அவர்களது பெற்றோர்களுடன் டிஎன்டிஜேவின் மீட்புக்குழு மீட்டது.\

அல்ஹம்துலில்லாஹ்

-JEDDAH TNTJ

உண்மையை உணர்ந்து கொண்ட இந்து உடன் பிறப்புக்கள்!

Thursday, December 10, 2015

கடலூர் நிவாரணப் பொருட்களை பிடுங்கும் மக்கள்!

கடலூர் மக்களுக்காக நாம பரிதாபப் படுறோம். ஆனால் நிவாரணம் அளிக்கப் போகும் நண்பர்களுக்கு பல கசப்பான அனுபவங்களே ஏற்பட்டிருக்...

Posted by கிருஷ்ணா அறந்தாங்கி on Thursday, December 10, 2015

தலித் பகுதியில் வெள்ள நிவாரண பணி!



மீஞ்சூர் அருகே நந்தியம்பாக்கத்தில் தாழ்த்தப்பட்ட இருளர் மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வடசென்னை மாவட்டம், நேதாஜிநகர்கிளையின் நிவாரணப்பணி. இந்த மக்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் யாருமே உதவ முன்வரவில்லை என்று நம்மிடம் சொன்னார்கள்.

Wednesday, December 09, 2015

வாகனத்தை உரியவரிடம் ஒப்படைத்த கொள்கை சகோதரர்கள்!



கேட்பாரற்றுகிடந்தால் தூக்கி கொண்டு ஓடும் மக்கள் மத்தியில் மனிதநேயத்துடன் உரிமையாளரை தேடி வாகனத்தை ஓப்படைத்த தவ்ஹீத் ஜமாஅத்.

கடலூர் மாவட்டம் ஆல்பேட்டை பகுதியில் வெள்ளத்தால் அடித்து சென்றப்பட்ட கார் ஒன்று பெரிய குழியில் சிக்கிக்கொண்டது.அங்கு துப்பரவு பணிக்காக சென்ற தமிழ்நாடு கடலூர் மாவட்டம் ஆல்பேட்டை பகுதியில் வெள்ளத்தால் அடித்து சென்றப்பட்ட மினி லாரி ஒன்று பெரிய குழியில் சிக்கிக்கொண்டது.அங்கு துப்பரவு பணிக்காக சென்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் மினி லாரியை மீட்டு அதனுடைய வாகன எண் மூலம் உரிமையாளரை தொடர்புகொண்டு காரை ஒப்படைத்தனர்!

இழந்த காரை மீண்டும் பெற்ற மகிழ்ச்சியில் இருந்த குமரேசன் அவர்கள் நம் சகோதரர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்ததோடு நிவாரண பணிகளுக்காக தன் வீட்டினை பயன்படுத்தி கொள்ளுமாறும் அன்பு கோரிக்கை வைத்தார்!

அல்ஹம்துலில்லாஹ்.