Followers

Wednesday, April 06, 2016

மீனின் வயிற்றில் மூன்று நாள் வாழ்ந்த மனிதன்!







ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மோசமான வானிலை காரணமாக மாயமானார். தொடர்ந்து உறவினர்கள் புகாரின் பேரில் கடற்கரை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருந்தும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் கடலில் விழுந்து மரணம் அடைந்து இருக்கலாம் என கருதினர்.

ஆனால் ஆச்சரியப்படும் விதமாக மிகப்பெரிய் ராட்சத திமிங்கிலம் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு உள்ளனர். தான் 72 மணி நேரம் தான் திமிங்கிலம் வயிற்றில் இருந்ததாகவும் அங்கிருந்து மீண்டதாகவும் கூறி உள்ளார்.

இது குறித்து மார்கியூஸ் கூறியதாவது:-

நான் இது வரை உயிருடன் இருந்தது ஆச்சரியமான விஷயம் தான்.நான் நல்ல குளிரிலும், இருட்டிலும் இருந்தேன். எனது வாட்டர் புரூப் வாட்சின் ஒளியில் திமிங்கலத்தின் கழிவுகளைத்தான் சாப்பிட்டேன். அங்கிருந்த நாற்றம் தாங்க முடியவில்லை. அங்கிருந்த செறிக்காத உணவுகளின் துர்நாற்றம் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை.மூன்று நாட்கள் குளித்தால்தான் இந்த நாற்றம் போகும் என கூறினார்.

இது உண்மையில் மிகவும் அதிசயமான விஷயம்தான் எனது வேண்டுதலை கடவுள் கேட்டு உள்ளார்.நான் நம்பிக்கையை கைவிடாமல் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தேன்.இப்போது நான் மீண்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் உதவி
தினத் தந்தி
05-04-2016

-----------------------------------------------------------


'இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது.

அவர் நம்மை துதிக்காது இருந்திருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்.

அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம்'

-குர்ஆன் 37: 143,144,145


யூனுஸ் நபி அவர்கள் பல நாட்கள் மீன் வயிற்றி்ல் இருந்தார்கள். அல்லாஹ்வின் அருளால் அவர்கள் மீண்டும் உயிருடன் இவ்வுலகிற்கு வந்தார்கள் என்ற நிகழ்ச்சியை திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கிறது.

நபி யூனுஸ் பின் மத்தா அவர்கள் (யோனா - Jonah) கி.மு 8-ம் நூற்றாண்டில் இராக்கிலுள்ள நைனுவா என்னும் பகுதிக்கு நபியாக அனுப்பப்பட்டார்கள். சிலைவழிபாட்டில் ஈடுபட்டிருந்த அவருடைய சமூக மக்களைச் சீர்திருத்துவதற்காக பல்லாண்டுகள் பாடுபட்டார்கள். ஆனாலும் அவருடைய சமூகம் அவரை நிராகரித்துவிட்டது. இதனால் மனம் வெறுத்துப் போன நபி யூனுஸ் அவர்கள் அல்லாஹ்வின் ஆணையைப் பெறாமலேயே அந்த ஊரை விட்டும் வெளியேறி விட்டார்கள்.

அல்லாஹ்வின் ஆணையின்றி வெளியேறுவது தவறு என்று உணராமலேயே அங்கே பயணிக்க தயாராக இருந்த கப்பலில் ஏறி சென்று விட்டார்கள். எனவே அல்லாஹ் அவரை தண்டிக்க நினைத்தான். அவர் பயணித்த கப்பலை நடுக்கடலில் தடுமாற, தத்தளிக்க வைத்தான். இறுதியில் அக்கப்பலில் யாராவது ஒரு நபர் இறங்கினால் தான் மற்றவர்கள் தப்பிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே அவர்களுக்கிடையில் சீட்டு குலுக்கி போட்டார்கள். அதில் நபி யூனுஸ் அவர்களின் பெயர் வரவே அவர் கடலில் தூக்கி வீசப்பட்டார். அச்சமயம் அல்லாஹ் நபி யூனுஸ் அவர்களை விழுங்கும் படி ஒரு மீனுக்கு கட்டளையிட்டான். மீன் வயிற்றில் சிறைபிடித்தான். தவறை உணர்ந்து இறைத் தூதர் மன்னிப்புக் கேட்டவுடன் மீன் வயிற்றிலிருந்து அவரை விடுவிக்கிறான் இறைவன்.

ஆக்ஸிஜன் இல்லாமல் மனிதன் செத்துவிடுவானே என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

இறைவன் நாடினால் இது போன்ற அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்றாலும் மீன் வயிற்றில் யூனுஸ் நபியவர்கள் உயிருடன் இருந்ததற்கு அறிவியல் சாத்தியம் உள்ளது என்பதைக் கூடுதல் தகவலாகத் தருகிறோம். மேலே சொன்ன தினத் தந்தியின் செய்தியும் இதனை உண்மைப்படுத்துகிறது.

மனிதனை விழுங்கும் அளவில் கடலில் ஒரு மீன் உள்ளது என்றால் அது திமிங்கலம் என்ற மீன்தான். கடலில் உள்ள பல்வேறு திமிங்கலங்களில் நீலத் திமிங்கலம் என்ற ஒரு வகை உண்டு.

இத்தகைய திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும். பெரும் கப்பலையே சாய்த்து விடும் வல்லமை உடையது இது என்றால் அதன் வயிற்றுப் பகுதி எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று நாம் ஊகம் செய்து கொள்ளலாம்.

திமிங்கலம் மற்ற மீன்களில் இருந்து மாறுபட்ட படைப்பாகும். இது மீன் இனமாக இருந்தாலும் இது விலங்கினங்களைப் போல் தனது குட்டிகளுக்குப் பாலூட்டக் கூடிய உயிரினமாகும். மேலும் மீன்கள் தமது செவுள்களால் சுவாசிக்கின்றன.

ஆனால் திமிங்கலங்கள் மனிதனைப் போன்ற நுரையீரல்களைக் கொண்டுள்ளதால் தமது நுரையீரல்களால் சுவாசிக்கக் கூடியவை. நீரின் மேல்மட்டத்துக்கு வந்து தேவையான காற்றை உள் இழுத்துக் கொள்ளும். நீருக்கு அடியில் மூச்சுவிடாமல் இரண்டு மணி நேரம் கூட மூச்சடக்கிக் கொள்ளும். மனிதர்கள் சுவாசிக்கும்போது காற்றில் இருந்து 15 சதம் ஆக்ஸிஜனை உள் இழுக்கிறோம், ஆனால் திமிங்கலங்கள் காற்றில் இருந்து 90 சதம் ஆக்ஸிஜனை உள் இழுத்துக் கொள்வதால் 7000 அடி ஆழம் சென்றாலும் இவற்றால் நீண்ட நேரம் மூச்சடக்க முடிகிறது.

திமிங்கலத்தின் இந்த தனித்தன்மையைக் கவனத்தில் கொண்டால் அவை சுவாசித்து உள்ளே சேமித்துக் கொள்ளும் ஆக்ஸிஜன் அதன் வயிற்றுக்குள் இருந்த யூனுஸ் நபி சுவாசிக்க போதுமானதாகும். ஆக்ஸிஜன் முடியும் நேரத்தில் அவை நீருக்கு மேல் தலையை நீட்டி காற்றை உள் இழுத்துக் கொள்ளும் அவசியம் உள்ளதால் யூனுஸ் நபிக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வழியில்லை.

ஒரு கண்ணாடி அறையில் வெளிக்காற்று புகாமல் அடைத்து ஒருவரை உள்ளே வைத்தால் அந்த அறைக்குள் இருக்கும் காற்றே சில மணி நேரங்கள் அந்த மனிதன் சுவாசிக்கப் போதுமானதாகும். திமிங்கலம் உள்ளிழுக்கும் காற்றில் அதிக ஆக்ஸிஜன் இருப்பதால் யூனுஸ் நபி மீன் வயிற்றில் உயிருடன் இருந்தது அறிவியலுக்கு உடன்பாடானது தான்.

இதில் அறிவியல் பூர்வமாக கேள்வி கேட்க வழியில்லை. இன்னும் சொல்வதாக இருந்தால் கடலில் இது போன்ற தனித்தன்மை வாய்ந்த மீன்களும் உள்ளன என்ற அறிவியல் முன்னறிவிப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

குர்ஆன் இறை வேதம் தான் என்பதற்கு இந்நிகழ்வும் ஆதாரமாக இருக்கிறது.

http://www.dailythanthi.com/News/World/2016/04/05155516/Swallowed-alive-man-survives-inside-whales-stomach.vpf

Monday, April 04, 2016

பீஹாரில் 13 லட்சம் மது பாட்டில்கள் அழிப்பு!



கடந்த ஏப்ரல் 1 முதல் பீஹாரில் மது விலக்கு அமுல்படுத்தப்பட்டது. ஏற்கெனவே இருப்பில் உள்ள சரக்குகளை என்ன செய்வது? ஒரே நேரத்தில் 13 லட்சம் மது பாட்டில்களை (கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய்) புல் டோஷர் விட்டு அழித்துள்ளது பீஹார் அரசு. இதற்கு உறுதுணையாக இருந்த முதல்வர் நிதிஷ் குமாருக்கும் அமைச்சர் அப்துல் ஜலீல் மஸ்தானுக்கும் எமது நெஞ்வார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அணையவிருந்த பல ஏழை குடும்பங்கள் இனி பத்துயிர் பெற்று எழும். வறுமையோடு போராடும் பீஹார் எடுத்த இந்த புரட்சிகர முடிவை மற்ற மாநிலங்களும் பின் பற்ற வேண்டும்.

ஆனால் நமது தமிழக அரசோ அரசு அதிகாரிகளுக்கு இத்தனை கோடி சாராயம் விற்றே தீர வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து சர்குலர் அனுப்புகிறது. இரண்டு முதல்வர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

ஜெயலலிதா அவர்களே! எத்தனை காலம் முதல்வராக இருந்தோம் என்பது முக்கியமல்ல. இருந்த நாட்களில் நாட்டு மக்களுக்கு நாம் என்ன செய்தோம் என்று வரலாறு சொல்ல வேண்டும். இத்தனை ஆண்டு காலம் கடந்தும் காமராஜரை நாம் நினைவு கூறுகிறோம். அது போல் உங்கள் பெயரும் நிலைக்க இலவசங்களை ஒழித்து விட்டு பூரண மது விலக்கை ஆட்சி முடியப் பொகும் இந்த நேரத்திலாவது அமுல் படுத்துங்கள். சசிகலாவின் சாராய ஆலைகளை மது மறுவாழ்வு மையங்களாக மாற்றுங்கள்.

தகவல் உதவி
ஒன் இந்தியா
31-04-2016







உண்மையை போட்டுடைத்த நரேந்திர மோடி!



'சேரமான் பெருமாள் அரபு நாட்டுக்குச் சென்று நபிகள் நாயகம் அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுள்ளார்'

- நரேந்திர மோடி

மோடி அவர்களே கூறி விட்டதால் இனி முகலாயர்கள் ஆட்சியில் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற பொய்யை இந்துத்வாவாதிகள் சொல்ல மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். முகலாயர் ஆட்சிக்கு முன்பே இஸ்லாம் தமிழகத்துக்கு வந்துள்ளது என்பதும் உறுதியாகிறது. இனியாவது நமது வரலாற்றுப் பாட நூல்களில் இந்த உண்மைகளை ஏற்றுவார்களா காவிகள்?

ஜாதிகள் இல்லாத சமுதாயம் மலர வேண்டும்!



ஜாதி ஆணவத்தால் கொலை செய்யப்பட்ட தனது கணவரின் பெயரில் விரைவில் புதிய அறக்கட்டளை தொடங்கி, காதல் திருமணம் புரிவோரை பாதுகாக்க இருப்பதாக கவுசல்யா தெரிவித்துள்ளார்.

கலப்புத் திருமணம் செய்து கொண்ட குமரலிங்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சங்கர், உடுமலை பேருந்து நிலையம் அருகே பட்டப் பகலில் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். தாக்குதலுக் குள்ளான அவரது மனைவி கவுசல்யா, தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமாகியுள்ளார்.

சங்கரின் 16-ம் நாள் நிகழ்ச்சிக் காக கோவை அரசு மருத்து வமனையில் இருந்து திரும்பிய கவுசல்யா, குமரலிங்கத்தில் உள்ள தனது கணவரின் இல்லத்தில் வசித்து வருகிறார். அவரை பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்பினர் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

கவுசல்யா ’தி இந்து’-விடம் கூறியதாவது:

பாதியில் நிறுத்தப்பட்ட கல்லூரிப் படிப்பை மீண்டும் தொடர வேண்டும் என்பது எனது விருப்பம். ஜாதி வெறியால் கொல்லப் பட்ட சங்கரின் நினைவாக விரைவில் ஒரு அறக்கட்டளை தொடங்கி, ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்வோருக்கு ஆதரவளிக்கப்படும். காதல் திருமணம் செய்வோர் மீது நடைபெறும் அத்துமீறல்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும். ஜாதிகள் இல்லாத சமுதாயம் மலர வேண்டும். இதுவே அறக்கட்டளையின் நோக்கமாக இருக்கும்.

பிசிஏ படிக்க விரும்புகிறேன். சங்கரை கொலை செய்தோருக்கு அளிக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். ஜாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவ ளிக்கும் வகையில் எனது எதிர் கால நடவடிக்கைகள் இருக்கும். பள்ளி, கல்லூரிகளில் ஜாதி பார்க்காமல் இருக்கும் வகையில் தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.

இவ்வாறு கவுசல்யா தெரிவித்தார்.

அப்போது, சங்கரின் தந்தை வேலுச்சாமி, சகோதரர் விக்னேஸ்வரன் உடனிருந்தனர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
04-04-2016



Sunday, April 03, 2016

வாணியம்பாடியில் உவைசி பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.



வரும் ஏப்ரல் 9 ந்தேதி வாணியம்பாடியில் ஹைதரபாத் சிங்கம் அஸாஸூத்தீன் உவைசி பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

இந்தியா இந்து முஸ்லிம் கிருத்தவர் பார்ஸி என்ற அனைத்து மக்களுமானது என்ற உண்மையை அகில இந்தியாவுக்கும் எடுத்துச் செல்லக்கூடியவர். உபியில் தலித்களோடு கூட்டணி அமைத்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறார்.

தெலுங்கானாவில் பல தலித்களுக்கு தேர்தல் சீட்டும் தனது கட்சி சார்பாக கொடுத்துள்ளார். இவரது முன்னேற்றம் இந்துத்வாக்களின் கொட்டத்தை சிறிதளவேனும் தடுக்கும்.