Followers

Monday, September 23, 2019

இனிமேல்தான் நாம் விழிப்போடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும்.

கீழடி..

இனிமேல்தான் நாம் விழிப்போடும்,

எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும்.


அமெரிக்க ஹூஸ்டனில் மோடிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம்.

அமெரிக்க ஹூஸ்டனில் மோடிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம்.

இந்திய நாட்டு பிரதமர் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடலாமா? இது அவமானமில்லையா? என்ற கேள்வியும் எழுகிறது.

-----------------------------------------------------

ஹவ்டி மோடி நிகழ்வில் மோடிக்கு அறிவுரை கூறிய ஸ்டெனி ஹோயர்
இறுகிபோன மோடியின் முகம்
===========================
நேற்று அமெரிக்காவில் நடை பெற்ற ஹவ்டி மோடி நிகழ்ச்சி தொடர்ப்பாக இந்திய ஊடகங்கள் பெருமிதம் கொள்ளும் நிலையில் அங்கு மோடிக்கு கிடைத்த எதிர்ப்பு அவமதிப்பு பற்றியும் அறிந்து கொள்வது அவசியம்
மோடி அரங்கத்திற்கு உள்ளே பேசி கொண்டிருந்தார் அரங்கத்திற்கு வெளியே உள்ளே இருந்த இந்தியர்களைவிட அதிகமான இந்தியர்கள் மோடிக்கு எதிரான முழக்கங்களை அரங்கிற்கு வெளியே முழங்கி கொண்டிருந்தனர். இது அரங்கிற்கு வெளியே மோடிக்கு ஏற்பட்ட எதிப்பும் அவமதிப்பும்.....
அரங்கிற்க உள்ளே அமெரிக்காவின் மூத்த வழக்கறிஞரும் ஹவுஸ் மெஜாரிட்டி தலைவருமான ஸ்டெனி ஹோயர் மோடிக்கு முன் நேருக்கு நேர் நிகழ்த்திய உரையும் மோடியை அவமதிக்கும் விதத்திலும் மோடியின் நிலைபாட்டிற்கு எதிராகவும் அமைந்தது.....
ஆம்... இந்தியவின் முதல் பிரதமரை மோடி வார்த்தைக்கு வார்த்தை இகழ்ந்து வரும் நிலையில் ஸ்டெனி ஹோயர் நேருவை புகழ்ந்துரைத்தார்
அதுபோல் நேரு மற்றும் காந்தியின் கொள்கைகள் தான் இந்தியாவின் கொள்கை என்றும் பன்முக தன்மை மனித உரிமைகள் மீதான மரியாதை மதசார்பின்மை இவைகள் நேரு மற்றும் காந்தி காட்டிய வழிகள் என்றும் அதை இந்தியா பற்றி நிற்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்
இது மோடி மற்றும் அவரது ஆதரவாளர்களை கவலை கொள்ள செய்தது....





Sunday, September 22, 2019

வரலாற்றில் இருக்கும் வழக்கறிஞர் கனிமொழி மதி

நாச்சியாள் சுகந்தி

கீழடி ஆய்வு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழர் வரலாற்றின் உண்மை வெளியே வந்துவிடக்கூடாது என்று அரசியல் சக்திகள் குறிப்பாக பாஜக பல தடைகளைச் செய்தது.

குறிப்பாக, கீழடியை கண்டறிந்த ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை ஆய்வில் இருந்து அகற்ற பல உள்ளடி வேலைகளைப் பார்த்து அகற்றினர். ஆனால் நீதிமன்றத்தை நாடி, தன் சொந்த செலவில் வழக்காடி அமர்நாத்தை மீண்டும் ஆய்வுப் பணியில் ஈடுபட வைக்கவேண்டும் என்ற தீர்ப்பை போராடி வாங்கியவர் கனிமொழி மதி என்னும் வழக்கறிஞர்.

உலகின் ஒவ்வொரு எழுச்சிப் போராட்டங்களிலும் ஆய்வுகளிலும் பெண்களின் பெயரும் உழைப்பும் இருட்டடிப்பு செய்யப்படுவது வழக்கம்தான்.

அனைத்து அரசியல்வாதிகளும் தோழர் சு. வெங்கடேசனை பாராட்டிய வேளையில் கனிமொழி மதியையையும் மனதாரப் பாராட்டியிருக்க வேண்டும். ஆனால் ஏனோ மறந்துவிட்டார்கள்.

கீழடி வரலாறு இருக்கும் வரை உங்கள் சட்டப்போராட்டமும் நினைவில் வரலாற்றில் இருக்கும் வழக்கறிஞர் கனிமொழி மதி
#கீழடி
#கனிமொழிமதி



உலகை உலுக்கும் கீழடி

உலகை உலுக்கும் கீழடி
*************************
கீழடி ஐந்தாம் கட்ட அகழ்வாய்வில் மேலும் புதிய திருப்பம். ஏற்கனவே கிடைத்த பொருட்களில் இருந்து தமிழகத்தில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே இரண்டாவது நகர நாகரீகம் துவங்கியுள்ளது என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்துள்ளது.
பானை, ஓடு, நகை, ஆட்டக்காய்கள் போன்றவை கிடைத்து வந்த வேளையில் நேற்று நடந்த ஆய்வின் போது களிமண்ணால் ஆன சிலையும் அதன் கீழ் சிதிலம் அடைந்த வாக்கியமும் இடம் பெற்றிருந்தது.
உடனடியாக கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஆராய்ச்சி கூடத்தில் ஆய்வுக்கு உட்படுத்திய போது அந்த சிலை பார்வையற்ற ஒருவரால் வடிவமைக்க பட்டது எனவும், அந்த வாசகம்
"இந்த சிலைய ஒத்த உருவம் பொறித்த தலைவன் தோன்றுவான், அவன் புவியை இணைத்து கட்டி ஆளுவான், அவன் நாமமோ நமோ நமோ" என்றிருந்தது.
சிலையை 3D மாடலிங் செய்து Facial recognition செய்து பார்த்ததில் ஆம் அது 90% பாரத புதல்வன் நரேந்திர மோதியுடன் ஒத்துப்போனது.
ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
( அன்பு ராஜ் போன்ற எந்த முளை வறண்ட சங்கியாவது பதிவை பார்த்து காப்பி பேஸ்ட் பண்ணி போடுவதற்குள் நாமே முந்திக் கொள்வோம்... 



Saturday, September 21, 2019

குவாண்டனோமோ சிறை அதிகாரி ஹோல்ட் ப்ரூக்ஸ்.....

குவாண்டனோமோ சிறை அதிகாரி ஹோல்ட் ப்ரூக்ஸ்.....
மிகக் கடுமையான சித்தரவதைகள் நடத்தப்படும் இடமான குவாண்டனோமோ சிறை அதிகாரியாக பணிபுரிந்தவர் ஹோல்ட் ப்ரூக்ஸ். உலகிலேயே அதிக பாதுகாப்புடன் கைதிகளை பராமரிக்கும் சிறைச் சாலைதான் குவாண்டனோமோ. ஈராக், பாலஸ்தீன் என்று தங்கள் நாட்டில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் பல நாட்டு கைதிகளை அமெரிக்கா இந்த சிறைச் சாலையில்தான் அடைக்கும்.. இங்குள்ள சிறைவாசிகளாக உள்ள முஸ்லிம்கள் ஐந்து வேளை தொழுவதும், ரமலானில் நோன்பு பிடிப்பதும் அன்போடும் பாசத்தோடும் நடந்து கொள்வதும் சிறை அதிகாரியான ஹோல்ட் ப்ரூக்ஸூக்கு ஆச்சரியத்தை தந்தது. இவ்வளவு நல்ல மனிதர்களுக்காக இத்தகைய கொடூரமான குவாண்டகாமோ சிறை என்று வியந்தார். முஸ்லிம்களை பற்றியும் முஸ்லிம்களை இந்த அளவு மாற்றிய குர்ஆனைப் பற்றியும் ஆய்வு மேற் கொள்ள தொடங்கினார்.
சிறையில் மொராக்கோ தேசத்தவரான அஹமத் எர்ராசிதி என்பவரிடம் இஸ்லாம் பற்றி நிறைய விவாதித்தார். இசை, குர்ஆன், குற்றவியல் சட்டங்கள் என்று தினமும் அவரிடம் பல விவாதங்கள் செய்தார். அஹமத் எர்ராசிதி அல்கய்தாவுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு பிறகு குற்றம் நிரூபணமாகாததால் விடுதலை செய்யப்படுகிறார். சிறை அதிகாரியான ஹோல்ட் ப்ரூக்ஸூக்கு இஸ்லாத்தை எத்தி வைப்பதற்காக இந்த சிறைச் சாலைக்கு அமெரிக்கா அனுப்பி வைத்ததோ? 
குர்ஆனின் வார்த்தைகள் புரிந்து கொள்ள மிக இலகுவாக இருந்ததாக குறிப்பிடுகிறார் ஹோல்ட் ப்ரூக்ஸ். “The Quran is the simplest book in the world to read. It doesn’t have magic. It doesn’t contradict itself. It’s simply an instruction manual for living.”
அவரின் மனதை மாற்றியது குர்ஆன். 2003 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு குவாண்டனாமோவிலிருந்து சிறை பொருப்பிலிருந்து விலகுகிறார். 2005 ஆம் ஆண்டு ராணுவத்திலிருந்தும் விலகுகிறார். இதற்குள் பல பிரச்னைகள். புதிதாக இஸ்லாத்தை ஏற்பவர்களுக்கு வரும் வழக்கமான பிரச்னைகள். இவரது மனைவி விவாகரத்து பெற்று பிரிகிறார். அடுத்தடுத்து நடந்த பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் மதுவை நாடுகிறார். இஸ்லாமிய நடவடிக்கைகளிலிருந்து தூரமாகிறார். மன நிம்மதியின்றி அலைந்து திரிந்து திரும்பவும் இஸ்லாத்தை நோக்கி வருகிறார். குடிப்பதையும், சிகரெட் பிடிப்பதையும் விடுகிறார். ஐந்து நேரமும் தொழுகையை ஆரம்பிக்கிறார். இன்று வரை சிறந்த இஸ்லாமியனாக வாழ்ந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு தனது அனுபவங்களை 'ட்ரைடர்' என்ற பெயரில் புத்தகமாகவும் வெளியிட்டார்.
தகவல் உதவி
All americam Muslim.com
மொழி பெயர்ப்பு: சுவனப்பிரியன்