
நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும் மக்கள் நீதியை நிலை நாட்ட தராசையும் அருளினோம். இரும்பையும் இறக்கினோம். அதில் கடுமையான ஆற்றலும் மக்களுக்குப் பயன்களும் உள்ளன.
-குர்ஆன் 57:25
மேற்கண்ட இந்த வசனம் மிகச்சிறந்த ஒரு அறிவியல் உண்மையை நமக்கு கூறிக் கொண்டிருக்கிறது. ஆகாயத்திலிருந்து மழைநீர் பொழிவதாக நாம் பார்த்திருப்போம். இரும்பு வானத்திலிருந்து பொழிவதை நாம் பார்த்ததில்லை. ஆனால் திருக்குர்ஆன் ஏழாம் நூற்றாண்டிலேயே ஆகாயத்திலிருந்து இரும்பு மழை பொழிவதைக் கூறிக் கொண்டிருக்கிறது. பூமியின் மீது விண்கற்கள் வந்து விழுவதை நாம் அடிக்கடி பத்திரிக்கை வாயிலாக படித்திருப்போம்.

இந்த விண்கற்களின் பெரும் பகுதி இரும்பும் சிலிக்கனும் ஆகும்.
சிலிக்கன் என்ற பெயரையோ, அப்படி ஒரு உலோகம் இருப்பது பற்றியோ முகமது நபி காலத்தில் தெரிந்திராத போதிலும் அந்த மக்கள் இரும்பின் தேவையைப் பற்றி நிறைய அறிந்தே வைத்திருந்தார்கள். இரும்பு என்பது பூமியிலிருந்து கிடைக்கக் கூடிய ஒரு தாதுப் பொருள் என்பது நமக்கு தெரியும். தாதுப் பொருட்கள் என்பது பூமியின் கட்டுமானப் பொருட்களே! எனவே பூமி படைக்கப்பட்டபோது இரும்பும் அதோடு சேர்ந்து இறைவனால் படைக்கப்பட்டாகி விட்டது.அப்படி பூமி படைக்கப்படும் போது இரும்பு எவ்வாறு பூமியின் கட்டுமானத்தில் வந்திருக்க முடியும் என்பதை இந்த காணொளி விளக்குகிறது.
விண்ணிலிருந்து வரும் விண்கற்களில் உள்ள இரும்புக்கும் நாம் பயன்படுத்தும் இரும்புக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது.
நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்த உலோகங்களை விஞ்ஞானிகள் சோதனைக்கு உட்படுத்தினார்கள். அந்த மக்களின் உலோகங்களில் கசடுகளான கோபால்டு, சிலிக்கன் போன்றவை இருப்பது கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்தனர். ஏனெனில் நாம் பயன்படுத்தும் சாதாரண இரும்புகளில் இந்த கசடுகள் சேர வாய்ப்பில்லை. விண்ணில் இருந்து விழுந்த கற்களைக் கொண்டே அந்த மக்கள் உலோகங்களை செய்திருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்தது. எனவேதான் இறைவன் நாம் விண்ணிலிருந்து இறக்கினோம். அதில் மனிதர்களுக்கு பெரும் பயன்பாடும் மிக்க வலிமைகளும் உண்டு எனக் கூறுகிறான்.
http://www.encyclopedia-of-meteorites.com/collection.aspx?id=2637
என்சைக்ளோபீடியாவின் இந்த பக்கத்துக்கு சென்று வானிலிருந்து விழுந்த இரும்பு துண்டுகளை நாடு வாரியாக படங்களோடு பாருங்கள். சில காணொளிகளும் நம்மை ஆச்சரியப்படுத்தும்.
'இரும்பில் மக்களுக்கு பயன்கள் உண்டு' என்ற இந்த வார்த்தையை ஒட்டி நாம் சிறிது ஆராய்வோம். நமது மருத்துவ உலகம் மனிதனுக்கு இரும்புச் சத்து எந்த வகையில் உபயோகமாக உள்ளது என்பதை பட்டியலிடுகிறது. அதை இனி பார்ப்போம்:
இயற்கையில் அபரிமிதமாக கிடைக்கும் இரும்புச் சத்து உடலின் நலத்திற்கு மிக அவசியமாகும். பெரும்பான்மையான புரதங்கள், என்சைம்கள் போன்றவற்றிற்கு இரும்புச் சத்து ஒரு இன்றியமையாத மூலப்பொருள். ஆக்ஸிஜன் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு உடலில் எடுத்து செல்ல இரும்புச் சத்து அவசியம். செல்கள் மேலும் பெருக, வளார்ச்சி அடைய இரும்பு முக்கியமான மூலப்பொருள். இரும்புச் சத்து குறைவால் போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் தளர்ச்சியும், வேலை செய்ய திறமை இல்லாமை போன்றவையும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவும் ஏற்படும். அதே சமயத்தில் இரும்புச் சத்து அதிகமானால் விஷமாகி இறக்கவும் நேரிடலாம்.
உடலில் 3ல் 2 பகுதி இரும்புச் சத்து ஹீமோக்லோபின் ஆக இரத்த சிவப்பணுக்களில் இருக்கிறது.இவை ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்து செல்லும். அதேபோல தசைகளில் உள்ள மையோ க்ளொபின் என்பது ஆக்சிஜனை தசைகளுக்கு மாற்றும். இவற்றிலும் இரும்பு சத்து உண்டு.
இரும்பை உறிஞ்ச தேவையான புரதத்திலும் இரும்புச் சத்து உள்ளது. அதேபோல அதிக இரும்பை சேகரித்து வைக்க உதவும் என்சைம்களில் இரும்பு இருக்கிறது. ஹீம், ஹீம் அல்லாத வகை என இரண்டு வகைகளில் இரும்பு உடலில் இருக்கிறது. இது பெரும்பாலும் புலால் உணவில் கிடைக்கும். பருப்பு வகைகளில் இருக்கும் இரும்பு ஹீம் அல்லாத வகையில் இருக்கிறது. குழந்தைகளுக்காக கிடைக்கும் பாலில் சேர்க்க படும் இரும்புச் சத்து இந்த வகையை சேர்ந்ததே.
உலக சுகாதார மையம் இரும்புச் சத்தின் குறைவால் வரும் நோய்கள்தான் உலகில் உண்ணும் பழக்கத்தால் வரும் நோய்களில் முதன்மையானவை என்று கூறுகிறார்கள். உலகின் 80% மக்கள் இரும்பு குறைவாக கொண்டவர்கள் அதில் 30% மக்கள் இரும்பு குறைவதால் வரும் இரத்த சோகை கொண்டவர்கள் எனக் கூறுகிறார்கள்.
………Iron is an essential element for most life on Earth, including human beings. Most of the human body's iron is contained in red blood cells……
- http://en.wikipedia.org/wiki/Human_iron_metabolism
Without the iron atom, there would be no carbon-based life in the cosmos; no supernovae, no heating of the primitive earth, no atmosphere or hydrosphere. There would be no protective magnetic field, no Van Allen radiation belts, no ozone layer, no metal to make hemoglobin [in human blood], no metal to tame the reactivity of oxygen, and no oxidative metabolism.
-Nature’s Destiny, the well-known microbiologist Michael Denton emphasizes the importance of iron.
அமெரிக்க நாசா நிறுவனத்தில் புரபசராக வேலை செய்யும் விஞ்ஞானி ஆம்ஸ்ட்ராங் சிறந்த அறிவியல் அறிஞர். the National Aeronautics and Space Administration என்ற நிறுவனத்தில் மிகப் பிரபல்யமானவர். 'வானியலைப் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது?' என்று பல ஆராய்ச்சிகளை செய்துள்ளார். உலகில் உள்ள அனைத்து திட பொருட்களும் எவ்வாறு உருவாகியிருக்க முடியும் என்ற முடிவுகளையும் அறிந்து வைத்துள்ளார். மேலும் இரும்பை உருவாக்கும் முறையை விஞ்ஞானிகள் சமீப காலங்களில்தான் கண்டு பிடித்தனர். இரும்பின் அடிப்படை உருவாக்கத்தை பெற போதிய சக்தியற்று இருந்தோம். அதாவது இரும்பை உருவாக்கும் ஒரு அணுவை உற்பத்தி செய்ய போதிய சக்தியை இந்த பிரபஞ்சம் பெற்றிருக்கவில்லை என்கிறது அறிவியல் முடிவுகள். எனவே இந்த இரும்பானது வேறு ஒரு கிரகத்திலிருந்து நமது பூமிக்கு வந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர் நமது விஞ்ஞானிகள்..
அதிலும் நமது பிரபஞ்சத்திலிருந்து இரும்பு வந்திருக்க முடியும் என்ற நம்பிக்கையையும் விஞ்ஞானிகள் ஏறத்தாழ கைகழுவி விட்டனர். நமது சூரியனை விட மிகப் பெரும் ஒரு நட்சத்திரத்திலிருந்து இந்த இரும்பானது வந்திருக்கலாம் என்ற ரீதியில் ஆராய்ச்சிகள் தற்போது நடந்து வருகிறது. சில நூறு மில்லியன் டிகிரி செல்சியஸ் அளவில் உள்ள வெப்பத்துடன் கூடிய ஒரு நட்சத்திமாக அது இருக்கலாம் என்பது இவர்களின் கணிப்பு. இரும்பின் அடர்த்தி குறிப்பிட்ட நட்சத்திரத்தில் அதிகரிக்கும் போது வெடித்து சிதறி வால் நட்சத்திரங்களாக பூமியை நோக்கி வந்திருக்கலாம். அது வானுலக விசையாக இருக்கலாம் என்ற முடிவுக்கும் வருகின்றனர் விஞ்ஞானிகள்.
“இரும்பையும் இறக்கினோம்”
அதிலும் கூட தனிமங்களாக இல்லாமல் முழு இரும்பாகவே இந்த பூமிக்கு வந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர் விஞ்ஞானிகள். இனி குர்ஆனுடைய வசனத்தைப் பார்ப்போம். 'இரும்பையும் இறக்கினோம்: அதில் பல உபயோகங்கள் மனித குலத்துக்கு உள்ளது' என்ற வசனத்தை நாம் சிந்தித்தோமானோல் தற்கால அறிவியல் முடிவோடு குர்ஆன் ஒத்து செல்வதை எண்ணி பிரமிக்கிறோம். வேறு எத்தனையோ பொருள்கள் அனைத்தும் பூமியிலேயே நமக்கு கிடைத்துக் கொண்டிருக்க அதை எல்லாம் குர்ஆன் சொல்லாமல் இரும்பை மட்டும் தனித்து சொல்வதால் அதுவும் தற்கால அறிவியலோடு முற்றிலும் ஒத்து போவதால் இது இறை வேதம்தான் என்பது மேலும் உறுதியாகிறது.
பண்டைய எகிப்தியர்களும் இரும்பை 'சொர்க்கத்தின் உலோகம்' என்று குறிப்புகள் எழுதியுள்ளது கிடைக்கப் பெறுகிறது. குர்ஆனுக்கு முந்தய இறை வேதங்களிலும் இந்த செய்தி சொல்லப் பட்டிருக்க வேண்டும். எனவேதான் பண்டைய எகிப்தியர்களுக்கும் இந்த உண்மை தெரிந்திருக்கிறது. பண்டைய எகிப்துக்கு மோசே என்ற இறைத் தூதர் வந்ததும் அவருக்கு கொடுக்கப்பட்ட வேதம் தோரா என்பதும் நமக்கு முன்பே தெரியும்.
'இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை. சிறிது காலத்திற்கு பிறகு இதனுடைய செய்தியை அறிந்து கொள்வீர்கள்.'
-குர்ஆன் 38:87,88
ஆம். இந்த குர்ஆன் மனிதன் தனது வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொண்டால் வெற்றி பெறுவான் என்பதை விளக்கும் ஒரு வேதம். வெறுமனே மரியாதை செய்கிறோம் என்று கண்களில் ஒத்திக் கொள்வதை விட அதன் மொழிபெயர்ப்பை வாசித்து இறைவன் நம்மோடு என்ன பேசுகிறான் என்பதை ஒவ்வொரு மனிதனும் விளங்க வேண்டும் என்பதற்காகத்தான் குர்ஆனை அருளியதாக இறைவன் கூறகிறான். இந்த குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் பல உண்மைகள முகமது நபி காலத்திய மக்களுக்கு விளங்கா விட்டாலும் பின்னால் வரக் கூடிய அறிவார்ந்த சமூகம் விளங்கிக் கொள்ள பல அத்தாட்சிகள் இதில் இருக்கிறது என்பதையும் இறைவன் குறிப்பிடுகிறான்.
References
1.↑ Kathryn A. Bard - Encyclopedia of the archaeology of ancient Egypt (P. 526) - Routledge; Ill edition, May 14, 1999, ISBN 978-0415185899
2.↑ Kate Melville - Sun's Iron Core May Be Cause Of Solar Flares - Science a Go Go, November 3, 2003
3.Harun yahya.com
4.wikipedia
5. http://www.encyclopedia-of-meteorites.com/collection.aspx?id=2637