Followers

Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Thursday, March 16, 2017

இறந்த முத்துக் கிருஷ்ணனின் முகநூல் பதிவுகள்!





தலைநகர் டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் திடீரென மர்மமான முறையில் இறந்துபோனார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என போலீஸ் கூறுகிறது.

அசைக்க முடியாத அளவுக்கு ஆழமாக இந்த சமுதாயத்தில் ஊடுருவியிருக்கும் சாதியத்தையும் அதனால் ஒரு தலித் அடைய வேண்டிய அவமானங்கள் எத்தகையது என்பதையும் விவரிக்கின்றன முத்துக்கிருஷ்ணனின் பதிவுகள்.

முத்துக்கிருஷ்ணனின் தந்தை பெயர் ஜீவானந்தம். இந்த பதிவில் 'ஜீவாவின் மகன்' என்று தன்னைப் பற்றி பேசியிருக்கிறார் அவர்.

ஃபேஸ்புக் பதிவு:

"அந்த ஆடிட்டோரியத்தின் பின்னணியில் வைக்கப்பட்டிருந்த வெள்ளைத் திரை ஸ்கிரீன் ஜீவாவின் மகனைச் சற்றுப் பின்னோக்கி நினைவலைகளை அசைபோடச் செய்தது. 70எம்.எம். பெருந்திரையில் பிதாமகன் தமிழ் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. படம் முடிந்தவுடன் மீண்டும் திரையில் வெண்ணிறம். அது அப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி. படத்தைப் பார்த்து முடித்த ஜீவாவின் மகன் கிட்சிப்பாளையத்துக்குச் சென்றார்.. மானா (மாட்டிறைச்சி வாங்க). மானா சந்தையில் வாங்கிய மாட்டிறைச்சியைக் கறுப்பு கேரி பேகில் கட்டிக் கொடுத்திருந்தார்கள். அதை எடுத்துக்கொண்டு பழைய பேருந்து நிலையத்துக்குச் சென்றார் ஜீவாவின் மகன். அங்கிருந்து வலப்புறம் திரும்பினால் ஓரியன்டல் சக்தி திரையரங்கு. அதற்கு பக்கத்திலேயே லட்சுமி ஐஸ்க்ரீம் கடை. அங்கிருந்த எல்லோரது கண்களும் அந்த கறுப்பு கேரிபேக் மீதுதான். அந்த காலகட்டத்தில் கறுப்பு கேரி பேகில் மானா மட்டுமே பொட்டலம் கட்டப்படுவது வழக்கம். கறுப்பு கேரி பேகை பார்த்தவுடன் அனைவரது கண்களும் சட்டென திரும்பிக்கொள்ளும்.

அசராத ஜீவாவின் மகன், 5 கிலோ மானா அடங்கிய பையுடன் சேலம் பழைய பேருந்து கிளாக் ஹவுஸூக்கு வந்து சேர, சத்திரம், லீ பஜார் வழியில் செல்லும் பஸ்ஸுக்கான காத்திருப்பு ஆரம்பித்தது. அப்போது ஜீவாவின் மகன் பள்ளி நண்பன் ரமணா அவ்வழியாக வர. ஜீவாவின் மகன் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். ரமணாவுடன் பேசிக்கொண்டு 4 ரோடு நிறுத்தம் செல்லும் பொழுதை போக்கலாம் என்று. ஆனால், ரமணாவோ ஜீவாவின் மகன் கையிலிருந்த மானா பையைப் பார்த்தவுடன் பக்கத்திலேயே வரவில்லை.

6-ஏ பஸ் வர ஜீவாவின் மகன் அதில் ஏறிக்கொள்கிறார். பேருந்தின் நடுப்பகுதியில் ஜன்னலோர இருக்கை கிடைத்தது. சேலம் ஆட்சியர் அலுவலக நிறுத்தம் வந்தது. அங்கு வேலைபார்க்கும் அதிகாரி ஒருவர் பேருந்தில் ஏறினார். ஜீவா கையிலிருந்த மானா பை அவரது கண்ணில் தென்பட்டது. அதை பார்த்தபின் அவர் ஜீவா அருகே உட்காரவில்லை. இத்தனைக்கும் பஸ்ஸில் வேறு எங்கும் இடமில்லை. அடுத்ததாக கல்பனா தியேட்டர் நிறுத்தம். அங்கு ஒரு தம்பதி 3 வயது குழந்தையுடன் ஏறினர். உட்கார அவர்கள் இடம் தேடினர். ஜீவாவின் மகன் இருக்கையிலிருந்து எழுந்த நிற்க முடிவு செய்திருந்தார். காரணம், பஸ்ஸில் பயணித்த யாரும் ஜீவாவிடம் பேசத் தயாராக இல்லை என்பதே. அதனாலேயே அந்த தம்பதி உட்கார இடம் தேடியபோது இருக்கையிலிருந்து எழுந்து சென்று ஜீவா இடம் கொடுத்தார். ஆனால், மானா பையை பார்த்த அவர்கள் யாரும் உட்காரத் தயாராக இல்லை. அதற்குள் மானா வாசனை பஸ் முழுதும் பரவியிருந்தது. 4 ரோடு வரும்வரை அந்த இருக்கையில் யாருமே அமரவில்லை.

4 ரோடு நிறுத்ததுக்குப் பின் ஜீவாவின் மகன் படிக்கட்டில் நின்றுகொண்டார். தம்மன்னன் செட்டி ரோடுவரை படிக்கட்டில் பயணம் நீடித்தது. ஆனால், உடன் நின்றிருந்த பயணிகளுக்கு அவ்வளவு கோபம். மானா பையிலிருந்து வந்த வாசனையால் வந்த கோபம் அது. சிலர் ஜீவாவின் காலை (வேண்டுமென்றே) மிதித்தனர். சத்திரம் நிறுத்தத்தில் இறங்கிய ஜீவா லீ பஜாரை நோக்கி நடையைக் கட்டினார். சிலர் மானா பையைப் பார்த்து முகம் சுளித்தனர். சிலர் விலகி நடந்தனர். சிலர் சாலையைக் கடந்து எதிர்ப்புறத்துக்குச் சென்றுவிட்டனர்.

அந்தக் காலத்தில் மானாவுக்கு சமத்துவம் இல்லை. இப்போது மானாவே இல்லை. சமத்துவம் என்பதே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம்.

இப்போதும், எம்.ஃபில்., பி.எச்.டி., மாணவர் சேர்க்கையில் சமத்துவம் பேணப்படவில்லை. ஆராய்ச்சி மாணவர்களுக்காக நடத்தப்படும் வாய்மொழித் தேர்விலும் சமத்துவம் இல்லை. அங்கே நடைபெறுவதெல்லாம் சமத்துவம் மறுக்கப்படுவது மட்டுமே. பேராசிரியர் சுகதேவ் தோரத் பரிந்துரைகள் இங்கு சிறிதும் பின்பற்றப்படுவதில்லை. மாணவர்கள் போராட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சமூகத்தின் விளிம்புநிலையில் இருந்து வருபவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. சமத்துவம் மறுக்கப்படும்போது அனைத்துமே மறுக்கப்படுகிறது"

இப்படி அந்த ஃபேஸ்புக் பதிவு ஒரு கறுப்பு கேரி பேக் சாதிய அடையாளமாக இருப்பதை விவரித்திருக்கிறது.

'நான் இளவரசனாக விரும்பவில்லை'

இது முத்துக்கிருஷ்ணனின் முகநூலில் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பகிரப்பட்ட நிலைத்தகவல். "தாஜ்மகால் முன்னால் காதலி இல்லாமல். கல்லூரியில் நான் கொண்ட ஒருதலை காதல் நினைவுக்கு வருகிறது. அந்தப் பெண்ணுக்கு இப்போது திருமணமாகிவிட்டது. நானும் எல்லாவற்றையும் கடந்துவந்துவிட்டேன். ஏனெனில், நான் இளவரசன், கோகுல்ராஜ், சங்கருக்கு நேர்ந்த அவலத்தை எதிர்கொள்ள விரும்பவில்லை. நான் காதல் கொண்ட பெண்ணைவிட சிறந்த பெண் இந்த உலகத்தில் எனக்குக் கிடைப்பாள்.

இப்போது என் எண்ணமெல்லாம் எனது ஆயா செல்லம்மாள் பற்றியே இருக்கிறது. செல்லம்மாள்தான் என் ஆயா" என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

'கணிதமே வரலாறு'

எம்.ஃபில்., பி.எச்.டி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்துவிட்டு நேர்முகத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என யுஜிசி திட்டமிட்டுக்கொண்டிருந்தபோது மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியிருந்தன. அப்போது முத்துக்கிருஷ்ணன் ஒரு நிலைத்தகவலை தனது ஃபேஸ்புக்கில் பதிந்தார்.

"எனது கணக்கு ஆசிரியருக்கு என் மேல் அவ்வளவு வெறுப்பு. எப்போதுமே நான் எங்கிருந்து வருகிறேன் என்பதை சுட்டிக் காட்டிக்கொண்டே இருப்பார். நான் முடிதிருத்திக்கொண்டிருந்த விதத்தைக் கிண்டல் செய்வார். அதனாலேயே எனக்கு கணிதம் மீது வெறுப்பு வந்தது. எனது நாட்டம் மாறியது. கணிதம் வரலாறானது. அந்த ஆசிரியரின் கேலியும் கிண்டலும்தான் என்னை முதல் தலைமுறை பட்டதாரியாக்கியது. ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து வரும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு தயைகூர்ந்து வாய்ப்பு கொடுங்கள். இல்லையென்றால் அவர்கள் கணிதம் என்றால் விரோதி என்ற புரிதலுக்குத் தள்ளப்படுவார்கள். கல்வி என்றால் அழுத்தம் என எண்ணுவார்கள். பல்கலைக்கழகம் என்றால் பாகுபாடு என அறிவார்கள்"

இவ்வாறாக அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.

முத்துக்கிருஷ்ணனின் ஃபேஸ்புக் பதிவுகளிலிருந்து.. தமிழில்: பாரதி ஆனந்த்.

-----------------------------------------------------

மாட்டுக் கறி தின்பது ஏதோ மிகப் பெரிய குற்றம் என்பதை வர்ணாசிரம தர்மம் மிக ஆழமாக மக்கள் மனதில் பதிய வைத்துள்ளது. அதனை மாற்றுவது ஒவ்வொரு தமிழனின் கடமை என்றால் அது மிகையில்லை.

Saturday, November 14, 2015

சமூகத் தற்கொலை செய்துகொள்கிறோமா நாம்?



ஆந்திராவின் கிருஷ்ணா நதி நீர் கிடைக்காவிட்டால் சென்னையில் தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காது. கர்நாடகாவின் காவிரி நீர் கிடைக்கவில்லை என்றால் நெற்களஞ்சியமான டெல்டா பகுதிகள் பாலைவனமாகிவிடும். பெரியாறு, பவானி, சிறுவாணி இந்த ஆறுகளின் குரல்வளை எல்லாம் கேரளாவின் கையில் இருக்கிறது. கேரளா அந்தக் குரல்வளையைக் கொஞ்சம் நசுக்கினால் போதும், நமது கொங்கு மண்டலமும் காலி; தென் மாவட்டங்களும் காலி. இப்படி ஒரு மாநிலத்தின் பெரும் பகுதியே தண்ணீருக்காக அண்டை மாநிலங்களை நம்பியிருக்க வேண்டிய நிலை. குழாயடிச் சண்டைப் போடாத குறையாகத்தான் அங்கெல்லாம் தண்ணீரைப் பெற்று வருகிறோம். இதில் நமது கட்சித் தலைவர்கள் செய்யும் அரசியல் இருக்கிறதே... சினிமா நடிகர்களே தோற்றுவிடுவார்கள். சரி, இப்படி தண்ணீருக்காக நாம் கையேந்தி நிற்கும் அண்டை மாநிலங்களின் மழை அளவைவிட நம் தமிழகத்தின் மழை அளவு அதிகம் என்கிற உண்மை தெரியுமா?

ஒரு புள்ளிவிவரத்தைப் பார்ப்போம். உலக ஆண்டு சராசரி மழையளவு 840 மில்லி மீட்டர். இந்திய ஆண்டு சராசரி மழையளவு 1,170 மி.மீ. கர்நாடகம் 732 மி.மீ. ஆந்திரம் 908 மி.மீ. இப்போது தமிழகத்தின் ஆண்டு சராசரியைப் பார்ப்போம். ஜனவரி முதல் மே மாதம் வரை பொழியும் உபரி மழை 179 மி.மீ. ஜூன் முதல் செப்டம்பர் வரை பொழியும் தென்மேற்குப் பருவ மழை 307 மி.மீ. அக்டோபர் முதல் டிசம்பர் வரை பொழியும் வடகிழக்குப் பருவ மழை 439 மி.மீ. ஆக மொத்தம் 925 மி.மீ. ஆந்திர மாநிலத்தைவிட தமிழகத்தில் 17 மி.மீ மழையளவு அதிகம். கர்நாடகத்தைவிட 193 மி.மீ அதிகம்.

அதேசமயம் கர்நாடகம் கடந்த 1991-ம் ஆண்டில் 11.20 லட்சம் ஏக்கராக இருந்த தனது விவசாய பாசனப் பரப்பை இன்று 21.71 லட்சம் ஏக்கராக வளர்த்தெடுத்துள்ளது. ஆனால், தமிழகமோ 1971-ம் ஆண்டில் 28 லட்சம் ஏக்கராக இருந்த தனது பாசனப் பரப்பை 2014-ல் 21 லட்சம் ஏக்கராக அழித்துக்கொண்டது. அதிகம் மழை பெறும் நமது மாநிலம் 7 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை இழந்துள்ளது. குறைந்த மழை பெறும் கர்நாடகம் 10.51 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை அதிகரித்துள்ளது. இத்தனைக்கும் அண்டை மாநிலங்களிடம் தமிழகத்தைப் போல 2 ஆயிரம் ஆண்டுகாலப் பாரம்பரிய நீர் கட்டமைப்புகள் எல்லாம் ஒன்றுமில்லை. ஆனால், அவை எல்லாம் பிற்காலத்தில் விழித்துக்கொண்டன. சிறப்பாக நீர் மேலாண்மை செய்கின்றன. (ஆந்திராவும் கர்நாடகாவும் செய்துவரும் சிறப்பான நீர் மேலாண்மை மற்றும் பாசனத் திட்டங்கள் குறித்து பின்னர் விரிவாகப் பார்ப்போம்)

இன்னொரு உதாரணம்: கோதாவரி, கிருஷ்ணா போன்ற மிகப் பெரிய நதிகள் கொண்ட ஆந்திராவில் இயந்திரங்களைக் கொண்டு ஆற்றில் மணல் அள்ளத் தடை விதித்திருக்கிறார்கள். பெரியாறு உட்பட 44 ஆறுகள் கரை புரண்டோடும் கேரளாவிலும் அப்படியே. அந்த மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இங்கே ஓடும் பாலாறு, தென்பெண்ணை, வைகை இவை எல்லாம் வானம் பார்த்த சிறிய ஆறுகள்தான். ஆனால், இங்கெல்லாம் அரசாங்கமே ராட்சத இயந்திரங்களின் மூலம் மணல் அள்ளுவதை என்னவென்று சொல்ல? நம் தாய் வயிற்றைக் குத்திக் கிழித்து ரத்தம் குடிக்கிறோம் நாம். கர்நாடகாவும் ஆந்திரமும் முன்னோக்கிச் செல்கின்றன. நாம் மட்டும் அதள பாதாளத்துக்குச் செல்கிறோம். இந்தக் கொடுமையை எங்கேச் சொல்லி முட்டிக்கொள்வது?

எல்லாவற்றுக்கும் காரணம், நாம் இயற்கையை மதிக்கவில்லை. நம்மைத் தவிர வேறு எதையுமே ஓர் உயிராக நாம் பாவிப்பதே இல்லை. மண்ணின் மீது பேராசை; வனத்தின் மீது பேராசை; வன உயிர்களின் மீது பேராசை; மலையின் மீது பேராசை; நீர் நிலைகளின் மீது பேராசை… எல்லாவற்றையும் அசுர வெறிக் கொண்டு அழித்துக்கொண்டிருக்கிறோம். இது இயற்கையின் மீதான அழிவு மட்டுமல்ல; நம் தலையின் மீது நாமே மண் அள்ளிப் போட்டுக்கொண்டிருக்கிறோம். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் இதன் பெயர் சமூகத் தற்கொலை.

தமிழகத்தில் அரசாங்கத்தின் கணக்குப்படி 39,202 ஏரிகள் இருக்கின்றன. அவற்றில் 100 ஏக்கருக்கும் அதிகமான ஆயக்கட்டு கொண்டவை 18,789. இவை பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. 100 ஏக்கருக்கும் குறைவான ஆயக்கட்டு கொண்டவை 20,413. இவை உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இவைத் தவிர, 3,000 கோயில் குளங்கள், 5,000 ஊருணிகள் இருக்கின்றன. இவற்றின் மொத்த நீர் கொள்ளளவு 390 டி.எம்.சி. இது சாதாரண அளவு அல்ல; ஒரு டி.எம்.சி. தண்ணீர் என்பது 100 கோடி கனஅடி தண்ணீர். எவ்வளவு பிரமாண்டம்! இது தமிழகத்தின் மொத்த அணைக்கட்டுகளின் நீர் கொள்ளளவான 243 டி.எம்.சியை விட அதிகம். ஏன், காவிரி ஆற்றுப் படுகையில் கிடைக்கும் 249.60 டி.எம்.சியை விடவும் அதிகம். இப்போது புரிகிறதா நம் முன்னோர்கள் வெட்டிய ஏரிகளின் அருமை!

ஏரிகளை மட்டுமே ஒழுங்காகப் பராமரித்திருந்தாலே நாம் விவசாயத்துக்காக ஆறுகளையும் அணைகளையும் நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

சுழலியலாளர்கள் ஏரியைப் ‘பூமியின் கண்’ என்று குறிப்பிடுகிறார்கள். நாம் அந்தக் கண்ணில் கழிவுகளைக் கொட்டி குருடாக்கி வருகிறோம். மொத்தம் உள்ள 39,202 ஏரிகளில் இன்று சுமார் 5,000 முதல் 6,000 ஏரிகளை காணவில்லை. கோவையிலும் மதுரையிலும் கடல் போல் விரிந்த ஏரிகள் எல்லாம் சாக்கடையாகத் தேங்கி கொசு உற்பத்தி மையங்களாக துர்நாற்றம் அடிக்கின்றன. மறைந்த கவிஞர் கா.மு. ஷெரீப் எழுதி, எஸ்.எஸ்.ஆர் நடித்த ‘ஏரிக்கரை மீது போறவளே பொன்மயிலே...’ பாடல் காட்சி சேலம் பனமரத்துப் பட்டி ஏரியில் படமாக்கப்பட்டபோது, அந்த ஏரி 2,700 ஏக்கர் பரப்பில் விரிந்து கடல்போலத் தண்ணீர் தளும்பியதாம். இப்போது ஒரு வாரமாக சேலத்தில் நல்ல மழை பெய்துகொண்டிருக்கிறது. ஆனால், பனமரத்துப்பட்டி ஏரியில் சொட்டுத் தண்ணீர் இல்லை. ஏரி முழுவதும் கருவேல முட்செடிகள் நிறைந்து நெஞ்சை குத்திக் கிழிக்கின்றன.

நமது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 51- ‘ஏ’ ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாக 10 ஷரத்துக்களை வகுத்துள்ளது. அதில் 7-வது ஷரத்து என்ன சொல்கிறது தெரியுமா?

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
15-11-2015

Thursday, October 08, 2015

ரத்த தானம் - 11 வருடங்களாக முதலிடத்தில் 'தவ்ஹீத் ஜமாத்'



தமிழக அரசு 2014 ஆண்டுக்கான இரத்த தான கொடையாளர்கள் தர வரிசைப்பட்டியல் வெளியீடு...

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாநில அளவில் முதலிடம்.!

தொடர்ந்து 11 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் தவ்ஹீத் ஜமாஅத்...

சவுதியிலும் ரத்ததானத்தில் முதலிடம் பிடித்து தமிழர்களின் பெருமையை பறை சாற்றுகிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.

எல்லா புகழும் இறைவனுக்கே...

------------------------------------------------------------

இந்துத்வ இயக்கங்கள் கலவரத்தை உண்டு பண்ணி மனித ரத்தம் குடிக்கிறது.....

இஸ்லாமிய இயக்கங்கள் இரத்தம் கொடுத்து பல உயிர்களை காக்கிறது.

இந்துத்வ இயக்கங்கள் காவல் துறை வாகனங்களை உடைக்கிறது....

இஸ்லாமிய இயக்கங்கள் ஆம்புலன்ஸ் சேவையால் உயிர்களை காக்கிறது....


கோவிலில் நுழைந்ததற்காக ஒரு தலித்தை அடித்தே கொன்றுள்ளது இந்துத்வ வெறிக் கும்பல். இன்று உபியில் ஒரு தலித் குடும்பத்தை பலர் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி உலகையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. மாட்டு இறைச்சியை சேமித்து வைத்தார் என்ற காரணத்தை சொல்லி முஹம்மது இஹ்லாக்கை அடித்தே கொன்றுள்ளது இந்துத்வா... இவை எல்லாம் கடந்த இரண்டொரு நாளில் நடந்த நிகழ்வுகள்.

இந்துக்களே! இந்திய மக்களே! இந்துத்வாவை தூரமாக்கி நமது நாட்டை அழிவிலிருந்து காப்பாற்றுகள்!

Tuesday, August 04, 2015

டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு! வெட்கக்கேடு!





உலகிலேயே தனது சொந்த மக்களை குடிகாரர்களாக்கி அழகு பார்க்கும் அரசை நாம் பார்க்க முடியாது. ஆனால் நமது தமிழகத்தில் அரசே சாராயத்தை விற்பதும் அதனை தடுப்பவர்களை காவல் துறையை ஏவி விட்டு அடித்து விரட்டுவதும் இந்த ஆட்சி தனக்குத் தானே குழி பறித்துக் கொள்கிறதோ என்று எண்ண வேண்டியதாய் இருக்கிறது.

எனது வீட்டில் டிவி இல்லை: கிரைண்டர் இல்லை என்று எவனாவது போராடினானா? எதற்கு இந்த இலவசங்கள்? ஓடாத டிவியும் ஓடாத கிரைண்டரும் யாருக்கு தேவை? ஒரு வீட்டின் தலைமகனை குடியால் அழித்து விட்டு அந்த வீட்டுக்கு டிவியும் கிரைண்டரும் போய் என்ன பயன்? இலவச திட்டங்களால் பலனடைந்து வருவது அதிகம் கட்சிக் காரர்கள்தானே? சாராய ஆலைகளால் லாபம் பார்ப்பது மிடாஸ் ஆலை தானே? அது யாருக்கு சொந்தமானது? அந்த ஆலையின் பங்குதாரர்கள் கோடி கோடியாக லாபம் பார்க்க தமிழனின் ரத்தம் தான் கிடைத்ததா? பெண்கள், கல்லூரி மாணவர்கள் என்று எங்கு பார்த்தாலும் சாராய நெடி. பேரூந்தில் பயணித்தால் காலையிலேயே சாராயத்தை ஊற்றிக் கொண்டு அருகில் வந்து அமர்ந்து கொண்டு நம்மோடு பேசவும் செய்கிறான். ஏதாவது சொன்னால் தகராறு. ஒரு தலைமுறையே இன்று குடிக்கு அடிமையாகி உள்ளது. இவர்களை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கே இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம்.

வருகின்ற தலைமுறைகளையாவது நாம் காப்பாற்றியாக வேண்டும். தற்போது அதற்கான சிறு பொறி தூவப்பட்டுள்ளது. ஆங்காங்கே சாராய கடைகள் அடித்து நொறுக்கப்படுவதாக செய்திகள் வருவது மகிழ்ச்சியே. அதோடு ஊற்றுக் கண்ணாக விளங்கும் சாராய ஆலைகளை உற்பத்தி பெருக்க விடாமல் கூடிய வரை முயற்சிக்க வேண்டும். சாதி, மதம், கட்சி எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு நாம் அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் ஆட்சியாளர்கள் தங்களின் தவறை உணருவார்கள். நீங்கள் என்ன போராட்டம் நடத்தினாலும் எனக்கு சாராய வருமானம் வேண்டும் என்று இந்த அரசு சொல்லுமானால் அடுத்த முதல்வராக ஸ்டாலின் அமருவதற்கு ஜெயலலிதாவே காரணமாகி விடுவார்.


Saturday, June 27, 2015

"பூச்சாண்டி" யாருக்காவது காட்டியிருக்கிறீர்களா?



அக்காலத்தில் சமணர்கள், உடலில் திருநீறையும், நாமமும் இட்டுக்கொள்ளும் வைதீகர்களை "பூசிய ஆண்டிகள்" என கூறி அவர்களை கண்ணால் பார்த்தாலும் பாவம், அவர்களின் குரலை கேட்டாலும் பாவம் என்ற பொருள்படும் "கண்டு முட்டு, கேட்டு முட்டு" என்ற ஒருவகை பயம் கலந்த சொல்லாடலை உபயோகித்து வந்தனர். அந்த அளவு வைதீகத்தை போதித்தவர்களின் செயல்கள் கர்ண கொடூரமாக இருந்தது. உடலில் திருநீறு பூசிய சிவனடியார்களையும், நாமம் பூசிய வைணவ தாசர்களையும் வீதியில் கண்டால் சமணர்கள் உடனே தங்கள் வீட்டின் வாசல்கதவை பூட்டி உள்ளே ஒளிந்து கொள்வார்களாம். அவர்கள் போன பின்னே கதவை திறந்து வெளிவருவார்களாம். அந்த அளவு தெய்வங்களின் பெயரால் சமணர்கள் கொடுமையை அனுபவித்திருக்கிறார்கள்.

சமணர்கள் தங்கள் வீட்டு பெண்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்த "பூசிய ஆண்டிகளை" காட்ட வைத்து விடுவேன் என்று கூறுவார்களாம்.

பூச்சாண்டி காட்டுதல் என்ற பிரயோகம் "பூசிய ஆண்டி"களை காட்டுவதான சமணர் காலத்திய அச்சுறுத்தலின் பிற்கால திரிபாகும். அடுத்தமுறை பூச்சாண்டி காட்டாதே என்று கூறுமுன் எதிராளி ஒரு சமணரா என்று உறுதி செய்து கொள்ளவும் ! :-) எங்கள் ஊரிலும் சிறு குழந்தைகளை பயமுறுத்த 'பூச்சாண்டியிடம்' பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று அன்னையர்கள் தங்கள் குழந்தைகளை மிரட்டுவதை இன்றும் காணலாம்.

Saturday, June 13, 2015

சவுதி அரேபியாவை நமது நாடும் ஏன் பின்பற்றக் கூடாது?



நம் ஊர் கடற் கரைகளை விபசாரம் செய்யும் இடங்களாக மாற்றி விட்டோம். ஒரு வாரம் முன்பு குடும்பத்தோடு சிதம்பரம் பக்கம் உள்ள பிச்சாவரம் கடற் கரைக்கு சுற்றுலா சென்றிருந்தேன். மிக ரம்மியமாக இருந்தது. அனைவரும் பார்க்க வேண்டிய இடம். கடலுக்கு மேல் காடு இங்குதான் நம்மால் பார்க்க முடியும். பொதுவாக உப்பு தண்ணீரில் எந்த தாவரங்களும் வளர வாய்ப்பில்லை. ஆனால் ஆச்சரியமாக அந்த உப்பு நீரிலும் அலயாத்தி காடுகள் வளர்ந்து அந்த இடங்களையே குளிர்கச்சியாக்கி வைத்துள்ளது. இது பற்றி தனியாக ஒரு பதிவே எழுதுகிறேன்.

ஆனால் இந்த இடத்திலும் அரவாணிகள் கும்பல் கும்பலாக உட்கார்ந்து கொண்டு பாலியல் தொழிலில் ஈடுபடுவதை பார்க்க முடிந்தது. சில போட்களில் கூட இது நடப்பதை பார்த்தேன். குடும்பத்தோடு வருபவர்கள் முகம் சுழிக்கும் வகையில் இந்த காட்சிகள் அரங்கேறுகிறது.

ஜெத்தாவில் கடற் கரை விடுதி ஒன்றில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த இருவரை காவல் துறை கைது செய்தது. இதனை விசாரித்த ஜெத்தா கிரிமினல் கோர்ட் அந்த இருவருக்கும் ஐந்து சவக் குழிகளை வெட்ட வேண்டும் என்று ஆணை இட்டது. அதன்படி அந்த இருவரும் தலா ஐந்து சவக் குழிக்களை வெட்டினர்.

அந்த நண்பர்களுடன் கொட்டமடித்த இரு பெண்களை மருத்துவ மனைக்கு அனுப்பி அவசர பிரிவு நோயாளிகள் 10 பேரை சென்று பார்க்க வேண்டும் என்று கோர்ட் ஆணையிட்டது. சிறு குற்றங்களுக்கு தண்டனை தருவதற்கு பதிலாக இது போன்ற மன நல சிகிச்சைகளைப் போன்ற தண்டனைகளை சவுதி அரசு தருகிறது. இதனால் குற்றவாளியும் திருந்த ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது.

குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நம் நாடு சவுதியின் இந்த திட்டததை ஏன் அமுல்படுத்தக் கூடாது?

செய்தியை பிரசுரித்த தினமலர் நாளிதழுக்கு நன்றி! அத்தி பூத்தாற்போல் எப்போவாவது தின மலர் தனது குடுமியை மறைத்துக் கொண்டு நல்ல செய்திகளையும் வெளியிடும். அது போன்ற ஒன்றுதான் இந்த செய்தியும். :-)

Friday, April 24, 2015

தூக்கில் தொங்கிய பெரியவர் - நேரடி அனுபவம்



இன்று மாலை 5 மணி இருக்கும். சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தேன். குடமுருட்டி ஆற்றங்கரையோரம் சிலர் கும்பலாக நின்று கொண்டிருந்தனர். என்ன விஷயம் என்று விசாரித்தேன். 'ஒரு பெரியவர் தூக்கில் தொங்குகிறார்' என்று சொல்லி விட்டு ஒருவர் வேகமாக சென்று கொண்டிருந்தார். அவரின் ஆர்வம் எனக்கும் தொற்றிக் கொள்ளவே நானும் அவரை பின் தொடர்ந்து சென்றேன்.

தஞ்சை மாவட்டம் பண்டாரவாடை கிராமத்தை ஒட்டி குடமுருட்டி ஆறு ஓடுகிறது. அதன் அருகில் மரங்களும் செடிகளும் அடர்ந்து காணப்பட்டன. அந்த புதர்களுக்கிடையில் ஒரு மரத்தின் கிளையில் தனது துண்டால் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருந்தார் ஒரு முதியவர். ஒருவர் தூக்கில் தொங்குவதை முதன் முதலாக அப்போது தான் நேரிடையாக பார்க்கிறேன். கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் பந்து அந்த புதர்களுக்குள் சென்று விடவே அதனை எடுக்க சென்ற போதுதான் ஒருவர் தூக்கில் தொங்குவதை பார்த்துள்ளனர். அதன் பிறகுதான் செய்தி வெளியே தெரிந்துள்ளது. சிறிது நேரத்தில் இரண்டு கான்ஸ்டபிள்களும், கிராம அதிகாரிகளும் வந்தனர். தூக்கில் மாட்டிக் கொண்டு ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரம்தான் ஆகி இருக்கும் என்று பேசிக் கொண்டனர். தூக்கில் தொங்கிய அவரை போலீஸார் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

'யோவ்... யாராவது மேலே ஏறி கயிற்றை வெட்டி விடுங்கய்யா' போலீஸின் சற்று மிரட்டலான குரல்....

பலரும் பயத்தில் பின் வாங்கினர். ஒருவர் தணிச்சலாக மரத்தில் ஏறி மரத்தில் இறுகிய துண்டை வெட்டி விடவே பிணம் 'பொத்தென்று' கீழே விழுந்தது. மூன்று பேர் பிணத்தை புதரிலிருந்து இழுத்து வெளியே கொண்டு வந்து போட்டனர். இந்து சமுதாயத்தை சேர்ந்த ஒரு கூலித் தொழிலாளி என்று பலரும் அடையாளம் கண்டனர். ஆனால் அவரது பெயரோ ஊரோ இன்னதென்று தெரியவில்லை. எனது செல்லிலிருந்து ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டேன்.

சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து பிணத்தை பிரேத பரிசோதனைக்காக தூக்கிச் சென்றது. கூட்டமும் களைய ஆரம்பித்தது. வயது ஏறத்தாழ 70 இருக்கும். இந்த வயதில் என்ன மன அழுத்தமோ என்ன கவலையோ அந்த பெரியவருக்கு! தூக்கில் தொங்கி தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

நபித் தோழர் அனஸ் அறிவித்தார்: "நபி அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி அவர்கள் 'இறைவனுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன பெரும் பாவங்களாகும்" என்று கூறினார்கள். [நூல்;புஹாரி எண் 2653 ]

உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் ! -அல் குர்ஆன்(2:195)

உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! அல்லாஹ் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!-அல் குர்ஆன் (4:29)

இறைவன் கொடுத்த இந்த சிறந்த உயிரை நாமாக போக்கிக் கொள்ள நமக்கு உரிமையில்லை. எந்த சிக்கல் வந்தாலும் அதனை இறைவனின் மேல் பாரத்தைப் போட்டு விட்டு மனதை லேசாக்குவோம். மனச்சிதைவிலிருந்து நம்மை காத்துக் கொள்வோம்.

Monday, March 09, 2015

இஸ்லாமியரை தடுக்கலாம்! இந்துக்களை தடுக்க முடியுமா?





இஸ்லாமியரை தடுக்கலாம்! இந்துக்களை தடுக்க முடியுமா?

திரு பிஎஸ்!

//இசுலாமியருக்குச் சொல்லிச்சொல்லி அவர்களைப்போக விடாமல் செய்வேன் என்று சுவனப்பிரியன் எழுதுகிறார். அபபடியே இசுலாமியர் நிறுத்திக்கொண்டாலும் இந்துக்களால் தர்கா வழிபாடு தொடர்ந்து கொண்டே இருக்கும்.//

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பது போல இன்று நாகூர் தர்ஹா போன்ற தமிழக தர்ஹாக்களை பெரும் பாலான இஸ்லாமியர்கள் விட்டு விட்டனர். எனது குடும்பத்திலேயே பலர் வருடா வருடம் நாகூர் தர்ஹாவுக்கு சென்று வருவர். குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்லி இன்று பெண்களும் தொழுகைக்கு பள்ளிக்குச் செல்கிறார்கள்.

மற்றபடி இந்துக்கள் தர்ஹாவுக்கு இன்றல்ல. தொன்று தொட்டு வந்து கொண்டேயிருக்கிறார்கள். பள்ளி வாசலுக்கும் தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து ஓதி விடச் சொல்வார்கள். திருத்தணி பள்ளி வாசலில் சில நேரம் நானும் ஓதி ஊதி விட்டுள்ளேன். :-) அது அவர்களின் நம்பிக்கை. அதில் நான் தலையிட முடியாது. ஆனால் இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றினால் ஒரு இஸ்லாமியன் என்ற முறையில் அதற்கான ஆதாரத்தை கேட்கும் உரிமை எனக்கிருக்கிறது.

//தர்காக்கள் இறந்த இசுலாமியர் மேல் எழுப்பப்பட்ட சமாதிகள் மட்டுமல்ல, இறந்த இசுலாமியரல்லாதோர் மேலும் எழுப்பப்பட்ட சமாதிகளும் ஆகும். தமிழகத்தைப் பொறுத்தவரை. பிராமணர்களுக்கும் தர்காக்கள் உண்டு. திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வரும் காட்டுப்பள்ளிவாசல் என்ற நிறுத்ததில் வரும் புகழ்பெற்ற தர்கா இரு இசுலாமியச்சஹோதரகளும் 7 பிராமணப்பெண்டிரும் தொடர்பான கதை. தஞ்சைக்குப் பக்கத்தில் இருப்பது பாப்பாத்தி அம்மன் தர்கா (ஒரு பிராமணப்பெண் இசுலாமியராக மாறி இறந்து அது தர்ஹாவாக மாறியுள்ளது) //

இது எனக்கு புதிய தகவல். தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி! அந்த தர்ஹாக்களை கல்விச் சாலைகளாகவோ அல்லது இறைவனை வழிபடும் பள்ளி வாசலாகவோ மாற்றினால் அங்கு அடங்கியுள்ள அந்த சகோதரர்களின் நன்மைகளாக பதிவு செய்யப்படும். அந்த தர்ஹாக்களை நிர்வகிப்பவர்கள் இதற்கான முயற்சிகளை அந்த மக்களின் துணையோடு எடுப்பார்களாக!

//லேட் மலர்மன்னன், க்ருஷ்ணகுமார் போன்ற இந்துக்கள் இத்தர்காக்களுக்குச் சென்று வழிபடுதலும் உருகுதலும்//

திரு மலர்மன்னனும், திரு க்ருஷ்ணகுமாரும் தர்காக்களுக்காக உருகுவதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. பவுத்தம், சமணம், நாட்டார் வழிபாடு, தமிழரின் வழிபாடு, கிறித்தவம் என்று அனைத்து வழிபாடுகளிலும் பார்பணியத்தை புகுத்தி அவற்றை எல்லாம் இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே மாற்றி விட்டனர். ஆரம்ப காலம் தொட்டு இஸ்லாம் மட்டுமே தனித் தன்மையோடு விளங்குகிறது. இந்து மதத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது இஸ்லாம் மட்டுமே! பல இந்துக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இதனை தடுக்க அருமையான வழிதான் இஸ்லாத்தில் இந்து மத சடங்குகளை புகுத்துவது. அதற்கு மிக உறுதுணையாக இருப்பது தமிழக தர்ஹாக்கள். தேர் இழுத்தலை சந்தனக் கூடு என்றும், தீ மிதித்தலை பூக்குழி இறங்குதல் என்றும் பெயர்களை மாற்றி இந்து மத சடங்குகளை கணக்கின்றி புகுத்தினர். காலில் விழுவது, மயிலிறகால் ஆசீர்வதிப்பது, இசைக் கச்சேரிகளை அரங்கேற்றுவது, மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடி, தேங்காய், பூ, சந்தனம் என்று அனைத்து கலாசாரத்தையும் தர்ஹாக்களில் அரங்கேற்றுவதை காணலாம்.

ஆனால் இவற்றில் எந்த ஒன்றுமே பள்ளி வாசலில் அரங்கேற்ற முடியாது. பாதுகாக்கப்பட்ட குர்ஆனின் மொழி பெயர்ப்பு இருப்பதால் அதனை வைத்தே புதிய வழிபாடுகள் அனைத்தையும் இஸ்லாமியர் ஓரங்கட்டி விடுவர்.

எனவே தான் க்ருஷ்ணகுமாரும், அரிசோனனும், மலர் மன்னனும் தர்ஹாவுக்கு கொடி பிடிக்கின்றனர். இது தர்ஹாவின் மேல் எழுந்த பாசம் அல்ல. இஸ்லாத்தின் தனித் தன்மையை உடைக்க தர்ஹா பயன்படுகிறதே என்ற சந்தோஷத்தில் எழும் வார்த்தைகளே அவை. இதனை க்ருஷ'ணகுமாரும் நன்றாகவே உணர்வார் :-)

Saturday, March 07, 2015

சென்னை உயர்நீதி மன்றத்தில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம்!



06-03-2015 அன்று சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தில் தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் மன்றம் சார்பில் 'மாட்டுக் கறி உண்ணும் போராட்டம்' மிக விமரிசையாக நடந்தது. வழக்கறிஞர்கள் ஆர்.சி.பாலகனகராஜ், மனோகரன், பாரி, தமிழினியன் போன்ற ஏராளமானோர் கலந்து கொண்டு மாட்டுக் கறியை இன்பமோடு தின்று மகாராஷ்டிர அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்தனர்.

தமிழகத்தில் பசுவதை தடுப்பு சட்டமோ அல்லது மாட்டிறைச்சிக்கு தடையோ விதிக்கப்படவில்லை என்றபோதிலும், மகாராஷ்ட்ராவில் பசுவதை தடுப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, பசு மற்றும் மாடுகளை கொல்லவும், அவற்றின் இறைச்சிகளை விற்கவோ, கொண்டு செல்லவோ, வைத்திருக்கவோ கூடாது என அரசு தடை விதித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. முன்னதாக மகாராஷ்ட்ரா அரசின் மேற்கூறிய தடை உத்தரவை பின்பற்றி தமிழக அரசும் அதேப்போன்ற தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் அறிக்கை விடுத்திருந்தார். போராட்டக் குழுவினர் ராம கோபாலனுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

முஸ்லிம்களுக்கு எதிராக காய்களை நகர்த்துவதாக எண்ணிக் கொண்டு இந்துத்வாவாதிகள் இந்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். இந்த சட்டத்தால் நேரிடையாக பாதிக்கப்படுவது இந்து பிற்படுத்தப்பட்ட மக்கள் என்பதனை ஏனோ இந்துத்வாவாதியினர் மறந்து விட்டனர். 'தேன் கூட்டில் கை வைத்து விட்டோம்' என்று இந்துத்வாவாதிகள் இனி உணர்ந்து கொள்வார்கள்.




Monday, February 23, 2015

காரிய கிருக்கன் கராத்தே வீரர் ஹூசைனி!



"அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டி எனக்கு நானே சிலுவையில் அறைந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபடுகிறேன்.”

-கராத்தே வீரர் ஹூசைனி

முதலில் கால்களில் ஆணியை ஹூசைனி அடித்துக் கொண்டார். பின்னர் அவரது மாணவர்கள், ஹூசைனியின் மற்றொரு கையில் ஆணியை அடித்தனர். பின்னர் இரண்டு கால்களிலும் ஆணிகள் அடிக்கப்பட்டது. இதையடுத்து சிலுவை நேராக தூக்கி நிறுத்தப்பட்டது.

முதல்வரிடமிருந்து இதன் மூலம் பிறகு காரியம் சாதித்துக் கொள்ளலாம் என்று எடுத்த நாடகமே இந்த முடிவு. ஷியா முஸ்லிமான ஹூசைனி இப்படி கிறுக்குத் தனமாக ஏதாவது செய்வது நமக்கு ஒன்றும் ஆச்சரியமில்லை. என்றோ இறந்து போன நபிகளின் பேரனின் நினைவாக இன்றும் தங்கள் உடம்பை கீறிக் கொண்டும், ரத்தத்தை வெளியாக்கிக் கொண்டும் இருக்கும் ஷியாக்களின் மூட கொள்கையையே ஹூசைனியும் பிரதிபலிக்கிறார்.

இவர் தனது தவறை திருத்திக் கொண்டு நேர் வழி பெற பிரார்த்திப்போம். இந்த கிறுக்குச் செயலை முதல்வர் ஜெயலலிதா அவர்களும் விரும்ப மாட்டார் என்றே நினைக்கிறேன். இது போன்ற கிருக்கர்களை அந்த இடத்திலேயே காட்டமாக கண்டித்து அறிக்கை விட்டால்தான் மூடப் பழக்கங்கள் சமூகத்தில் குறையும்.



Friday, February 20, 2015

படிக்கத் தொடங்கி விட்ட இஸ்லாமிய சமூகம்!



படிக்கத் தொடங்கி விட்ட இஸ்லாமிய சமூகம்!

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் முஸ்லிம்களை சாம்பிராணி போடுபவர்களாகவும், கறி கடை பாயாகவும், பச்சை தலைப்பாகையோடு முழு ஜிப்பாவோடு தப் அடிக்கும் ஃபக்கீர்களாகவும் காட்டி வந்தனர். பேசும் தமிழ் மொழி கூட 'நம்பள் வரான், நிம்பள் போரான்' என்று மார்வாடி பாஷையை நாமெல்லாம் பேசுவதாக ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் பொய்களையே பரப்பி வந்தது.

இன்று வந்த அழைப்பிதழை பார்த்து அகமகிழ்ந்தேன். வீட்டுக்கு ஒரு பட்டதாரிகள். ரஜினி ரசிகனாகவும், கமல் ரசிகனாகவும் கேடுகெட்ட கூத்தாடிகளுக்கு ரசிகர் மன்றம் அமைத்து வந்த இஸ்லாமிய இளைஞர்கள் இன்று குர்ஆன் மாநாட்டு திடலுக்கு உங்களை அழைக்கிறார்கள். அத்தனை பேரும் பட்டதாரி இளைஞர்கள். கூத்தாடிகளை சுமந்த நெஞ்சங்கள் இன்று குர்ஆனை சுமக்கின்றன.

எல்லா புகழும் இறைவனுக்கே!

Friday, December 19, 2014

இந்த பதிவு பிரவீன் தெகோடியாவுக்கு சமர்ப்பணம்!



"இரண்டு நாளாக விடாமல் அழுதுக்கொண்டிருந்த என் குழந்தையை மசூதிக்கு தூக்கின்னு போயி ஊதின்னு வான்னு எங்க அம்மா சொன்னாங்க.

இதுக்கு முன்னாடி மசூதிக்குள்ள பலமுறை நான் போயிருந்தாலும் குழந்தைய தூக்கின்னு போறது இதுதான் முதல் முறை.

அங்கு எனக்கு முன்னாடியே சில பெற்றோர்ங்க அவங்களோட குழந்தைய வச்சினு வரிசையா நின்னுன்னு இருந்தாங்க.

அது வரைக்கு என் மனசுல எந்த வித்தியாசமும் தெரியில. கொஞ்சம் நேரம் கழிச்சி தொழுகைய முடிச்சிக்கின்னு வந்த இஸ்லாமிய சகோதரருங்க வரிசையில இருந்த ஒவ்வோரு குழந்தையின் நெத்தியிலையும் எதோ சொல்லிவிட்டு ஊதினாங்க.

இத பாக்கும்போது எனக்கு ஒரே ஆச்சரியம். காரணம் அவங்க யாரிடமும் நீங்கள் எந்த மதம், ஜாதி, குளம் , கோத்திரம்ன்னு எந்த விவரத்தையும் கேக்கல.

ஆனால் நம்மல நம்பி வந்தவங்களுக்கு நம்ம கடவுள் மூல்யமா நல்லது நடக்கனும்ன்ற மனசு மட்டுமே அவங்ககிட்ட இருந்தத நான் பாத்தேன்

இந்த நல்ல மனசு நம்ம வழிபடுற கோவிலுங்கள்ல இல்லனு நினைக்கும் போது எனக்கு அவமானமா இருந்துச்சி.

அவங்க நம்ம மேல அன்பு செலுத்த தயாராத்தான் இருக்காங்க. நமக்கு தான் அதை ஏத்துக்க மனசு வரல.

இந்த குருகிய வட்டத்த விட்டுட்டு நாம வெளிய வந்தோம்ன்னா நம்மள கட்டிதழுவ இந்த அன்பு நிறைஞ்ச உலகம் காத்துன்னு இருக்கு..."

https://www.facebook.com/photo.php?fbid=903876806289690&set=a.846702762007095.1073741826.100000021381369&type=1&fref=nf

மிக அழகிய வார்த்தைகளை பதிவாக்கியிருக்கிறீர்கள் தோழரே! உங்களின் நல்ல மனதுக்கு இறைவன் கிருபையால் எந்த சிரமமும் வரக் கூடாது என்று நானும் பிரார்த்திக்கிறேன்.

நானும் பலமுறை திருத்தணி பள்ளி வாசலில் வரிசையாக குழந்தைகளோடு நிற்கும் இந்து தாய்மார்களுக்கு 25 வருடங்களுக்கு முன்னால் ஓதி விட்டுள்ளேன். உங்களைப் போன்ற நல்லுள்ளம் கொண்ட இந்துக்கள் இருக்கும் வரை ராம கோபாலனின் எண்ணமோ பிரவீன் தெகோடியாவின் எண்ணமோ இந்த மண்ணில் நிறைவேறப் போவதில்லை. வாழ்த்துக்கள் சகோதரரே!

குழந்தைக்கு உடலுக்கு ஏதும் பிரச்னை என்றால் அந்த குழந்தையை மருத்துவரிடம் கொண்டு செல்லுங்கள். இறைவனிடமும் பிரார்த்தனை புரியுங்கள். நீங்கள் இஸ்லாத்தை அறிய வேண்டுமானால் குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பை வாங்கி படித்துப் பாருங்கள். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறைகளை படியுங்கள். அந்த முயற்சிகள் உங்களை இன்னும் நெருக்கமாக கடவுளிடம் கொண்டு சேர்க்கும்.

Sunday, November 23, 2014

அலைகடலென குழுமி விட்டார்!







எத்தனை எத்தனை அவதூறுகள்

அத்தனையும் தாண்டி இன்று

அரங்கத்துக்கும் வெளியே மக்கள்

அலைகடலென குழுமி விட்டார்.

எல்லா புகழும் அந்த படைத்த

ஒருவனுக்கே என்றும் உரித்தாகட்டும்!

இடம் : கோவை PVG மஹால் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில்
உரை :PJ
நாள் :23:11:2014

Friday, October 17, 2014

கடித்த நாயை நாம் பாதுகாக்கத்தானே வேண்டும்!



கடித்த நாயை நாம் பாதுகாக்கத்தானே வேண்டும்!

“இவ்வழக்கில் ஜெய லலிதாவுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் நான் மதிக்கக்கூடியவர். அவர் ஜெயலலிதாவின் உடலில் உள்ள நோய்களை பற்றி எடுத்துக்கூறி ஜாமீன் கேட்டார். அதனால் நான் அதிகமாக ஆட்சேபிக்கவில்லை.

எனவேதான் உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி இருக்கிறது. தண்டனைக்கும் இடைக்காலத் தடை மட்டுமே விதித்திருக்கிறது. அவர் வீட்டை விட்டு எங்கும் போக கூடாது. கட்சிக்காரர்களை சந்திக்ககூடாது. அரசியல் செய்ய கூடாது. மேல் முறையீட்டில் வாய்தா வாங்கக்கூடாது. டிசம்பர் 18-ம் தேதிக்குள் வழக்கை நடத்த வேண்டும். ஒரே ஒரு நாள் தாமதித்தால் கூட ஜாமீன் தள்ளுபடி செய்யப்படும் என நீதிபதிகள் கண்டிப்பாக சொல்லி இருக்கிறார்கள்.

இந்த ஜாமீன் காலத்தில் சுப்பிரமணியன் சுவாமியையோ, நீதிபதியையோ அசிங்கமாக பேசக்கூடாது. கார்ட்டூன் போடக் கூடாது. வீடு மீதோ, ஆட்கள் மீதோ தாக்குதல் நடத்தக் கூடாது. மீறி ஏதாவது நடந்தால் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் இல்லாமல் போய்விடும் என நீதிபதிகளே கூறி இருக்கிறார்கள்.

அவருடைய கட்சிக்காரர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது. அதனை ஜெயலலிதா தடுக்க வேண்டும். நீதிமன்றத்தையும், நீதிபதியையும் அருவருப்பாக பேசக்கூடாது. தமிழ்நாட்டில் மீண்டும் சட்டம் ஒழுங்கை கெடுத்தால் அவருக்குத்தான் பிரச்சினையாக முடியும்.

ஆனால் அதே நேரத்தில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் நான்காண்டு சிறை தண்டனை ஏழாண்டாக கூட மாற வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஜெயலலிதாவுக்கு சிக்கல் இன்னும் முடிந்துவிடவில்லை. இதனை யாரும் மறந்துவிடக் கூடாது''என்றார்.

ட்விட்டரில் விமர்சனம்

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் சமூக வலைதளத்தில் அதிமுகவினரை கடுமையாக விமர்சித்துள்ளார்.அதில் அதிமுகவினரை பொறுக்கிகள் என குறிப்பிட்டுள்ளது கட்சியினர் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

-சுப்ரமணியம் சுவாமி
தமிழ் ஹிந்து நாளிதழ்
18-10-2014

நாய் கடித்தால் கடி பட்டவர் அந்த நாயை இறந்து விடாமல் மிக ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த சம்பவம் ஏனோ எனக்கு இப்போது ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது. :-)

Wednesday, August 13, 2014

புற்று நோயால் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறோம்!



கடியப்பட்டினத்தில் நுழைந்தபோதே சாவு வரவேற்றது. ‘அது' சாவு. மக்களின் முகத்தில் துக்கத்தைத் தாண்டி ஆக்கிரமித்திருக்கிறது பயம். துக்கத்துக்காகக் கூடியிருப் பவர்கள் குனிந்து கிசுகிசுக்கிறார்கள். ‘அது' பற்றியது இந்தப் பேச்சு. வாயைத் திறந்து ‘அது' பெயரைச் சொன்னாலே 'அது' வீட்டுக்கு வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். ‘அது'வோ ஈவிரக்கம் இல்லாமல் மக்களை வேட்டையாடுகிறது.

தமிழகத்திலேயே கதிரியக்கத்தை அதிக அளவில் எதிர்கொள்ளும் ஊர்களின் வரிசையில் முதல் வரிசையில் இருக்கிறது கடியப்பட்டினம். ஒவ்வொரு வாரமும் யாரோ ஒருவர் புதிதாக வெளியூர் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய சூழல் உருவாகிறது. ஒவ்வொரு மாதமும் யாரோ ஒருவருக்குப் புதிதாக ‘அது' கண்டறியப்படுகிறது. வெகு சீக்கிரம் ஒரு நாள் ‘அது' கொன்றுபோடுகிறது.

அபலைகளின் கதறல்

“ஐயா, பொறுப்புள்ள பிள்ளையா. பதிமூணு வயசுல இப்பிடி ஒரு பிள்ளையை நீங்க பார்க்க முடியாது. தாய் - தந்தை மேல அப்பிடி ஒரு பிரியம், மதிப்பு. கடலுக்குப் போயி நூறு, எரநூறுக்கு உயிரைக் கொடுத்து, அப்பன் பொழைக்கிறாம்னு சொல்லி, நல்லாப் படிச்சுக் குடும்பப் பொறுப்பை ஏத்துக்கிடுவேன்னு சொல்லிக்கிட்டிருந்த பிள்ளை. ஒரு நா கைய வலிக்குண்ணாம். கடுக்குண்ணாம். ஆஸ்பத்திரி போனோம். மருந்து மாத்திரை கொடுத்தாங்க. வலி கட்டுபடல்ல. பரிசோதனை பண்ணணும்னாங்க. கடைசில அதுன்னாட்டாங்க. எலும்புல வந்துடுச்சு.

ஐயா, ஒரு பாவம் அறியாத பிள்ளைய்யா. பச்ச பிள்ளைக்கு என்ன தெரியும்? ஐயோ, ஒரு கெட்ட பழக்கம், அது இதுன்னு இருந்து செத்தாக்கூட, தப்புன்னு சொல்லி ஆத்திக்கலாமே... ஏ, ஐயா, புருனோ... உன்னையே பொறுப்பே இல்லாம பறி கொடுத்துட்டேனேய்யா...”

- மாரிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு வெளிப்படும் அந்த அழுகுரல் இதயத்தைச் சுக்கு நூறாக்குகிறது.

ஒன்று, இரண்டல்ல; அங்கொன்றும் இங்கொன்றும் அல்ல; இதோ எதிர்த்த வீட்டில் ரத்தப் புற்று, அதோ பக்கத்து வீட்டில் எலும்புப் புற்று, இங்கே பின் வீட்டில் கருப்பைப் புற்று என்று கூப்பிட்டுச் சொல்கிறார்கள்.

யாருக்கும் தெரியவில்லை!

கடியப்பட்டினம் பங்குத்தந்தை செல்வராஜ், வரிசை யாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, உயிரிழந்தவர் கள் தொடர்பான கோப்புகளை விரித்துக் காட்டுகிறார்.

“ஒவ்வொரு வருஷமும் 20 பேர் புத்துநோயால மரிச்சுப்போறாங்க. இந்தச் சின்ன ஊர்ல இதோ, ரெண்டு மாசத்துல நாலு பேர் அடுத்தடுத்து, புத்துநோயால பாதிக்கப்பட்டிருக்காங்க. கொடுமை என்னன்னா, காட்டுறதுக்கு ஆஸ்பத்திரிகூட இங்கே ஏதும் கிடையாது. ஒண்ணு திருவனந்தபுரம் ஓடணும், இல்ல, சென்னைக்கு ஓடணும். சரியான மருத்துவ வசதி, பரிசோதனை வசதி இல்லாததால, முத்துன நெலையிலதான் நோய் பாதிப்பே தெரியவருது. ஒவ்வொரு நாளும் மக்கள் வந்து கதறுறாங்க. என்ன செய்யுறதுன்னே தெரியலை” என்கிறார்.

கடற்கரை முழுவதும் பாதிப்பு

இங்கே குமரி மாவட்டத்தில் தொடங்கி அங்கே திருவள்ளூர் மாவட்டம் வரை புற்றுநோய் கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. கடற்கரை ஊர்களில் நுழையும்போதெல்லாம், மக்களைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் அவர்கள் சொல்லும் செய்திகள் குலைநடுங்க வைக்கின்றன. அரசுக்கோ ஊடகங்களுக்கோ இதன் தீவிரம் தெரியவில்லை. நம் கடற்கரை மக்கள் வாழ்க்கையை எந்த அளவுக்குப் புற்றுநோய் குலைத்துப்போட்டிருக்கிறது என்பதற்குச் சரியான உதாரணம் காயல்பட்டினம்.

ஒரு உயிர் ஒரு உலகம்

காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் இறங்கியதுமே எதிர்ப்படுகிறார்கள் புற்றுநோயாளிகள். சுப்பிரமணியன் பேருந்து நிலைய வளாகத்தில் வல்கனைசிங் தொழில் செய்கிறார். மனைவியும் புற்றுநோயாளி, மகனும் புற்றுநோயாளி. “டயருக்கு பஞ்சர் ஒட்டிப் பொழப்பு நடத்துறவங்க. பொஞ்சாதிக்கு நுரையீரல்ல புத்து. புள்ளைக்கு ரத்தத்துல புத்து. ஒரே நேரத்துல ஒருத்தரை சென்னையிலேயும் இன்னொருத்தரை மதுரையிலேயும் வெச்சுக்கிட்டுப் போராடுனேன் பாருங்க. எவ்வளவோ செலவு செஞ்சி பாத்தாச்சு. பொஞ்சாதி போய்ட்டாங்க. பிள்ளையைக் காப்பாத்தணும், அதுக்காகத்தான் ஓடிக்கிட்டு இருக்கேன்” என்று சொல்லும் தந்தையையே பார்த்துக்கொண்டிருக்கிறான் ஐயன்ராஜ். மருத்துவச் செலவை எதிர்கொள்ள படிப்பை நிறுத்திவிட்டு, அப்பாவோடு கடையில் உதவிக்கு உட்கார்ந்திருக்கிறான். “அப்பா ஒண்டியா எவ்ளோண்ணே கஷ்டப்படுவாங்க, பாவம் இல்லேண்ணே, என்னால பெருசா ஒண்ணும் முடியாது. ஆனா, பக்கத்துலேயே உட்கார்ந்துருக்கும்போது அப்பாவுக்கு ஒரு ஆறுதலா இருக்கு” என்கிறான், கண்ணில் ததும்பும் நீரை அடக்கிக்கொண்டு.

புற்றுக்கு எதிராகத் திரளும் ஊர்

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக வாழும் பாரம்பரியமான ஊர் காயல்பட்டினம். சமீப காலத்தில் மட்டும் 60 பேர் இறந்திருக்கிறார்கள்; அவர்களில் 20 பேர் புற்றுநோயாளிகள் என்கிறார்கள் ஊர்க்காரர்கள். அரசு கண்டுகொள்ளாத நிலையில், புற்றுக்கு எதிராக இப்போது ஊரே திரள ஆரம்பித்திருக்கிறது. ‘காயல்பட்டினம் புற்றுநோய் காரணி கண்டறியும் குழு’ என்று ஒரு குழுவை அமைத்து அறிவியல்ரீதியிலான ஆய்வுகளில் களம் இறங்கியிருக்கிறார்கள்.

“ஒண்ணுபட்ட சமூக அமைப்பு உள்ள ஊர் காயல் பட்டினம். பொண்ணு கொடுக்க, எடுக்க எல்லாமே பெரும்பாலும் இங்கைக்குள்ளேதான் நடக்கும். அதனால, இந்த நோயால பாதிக்கப்பட்டாகூட மக்கள் வெளியே சொல்லத் தயங்குனாங்க. பலர் இதை வெளியே சொல்ல விரும்புறதில்லை. ஆனா, இப்படியே போனா இந்தத் தலைமுறையையே பறி கொடுக்க வேண்டியதாம்னு சொல்லிக் களத்துல எறங்கிட்டோம்.

ஒவ்வொரு வீட்டுலேயும் எத்தனை பேர் புத்துநோயால் பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு 40 தன்னார்வலர்களை வெச்சுக் கணக்கெடுத்தோம். விஞ்ஞான ரீதியா என்ன காரணமா இருக்கும்னு நிலத்தடித் தண்ணீர்ல ஆரம்பிச்சு மளிகைக் கடை சாமான்கள் வரைக்கும் ஆய்வு நிறுவனங்களுக்கு மாதிரியை அனுப்பிச்சு ஆய்வுசெஞ்சோம். புத்துநோய் மருத்துவர் சாந்தாவைக் கூட்டிட்டு வந்து இந்த அறிக்கைங்க, பாதிப்பு எல்லாத்தையும் கொடுத்து ஆலோசனை கேட்டோம். தொடர்ந்து அரசாங்கத்துக் கதவைத் தட்டிக்கிட்டேதாம் இருக்கோம். ஆனா, செவிசாய்க்க ஆள் இல்லை” என்கிறார் உள்ளூரில் மருத்துவ உதவிக்காக இயங்கும் ஷிஃபா கூட்ட மைப்பின் செயலாளரான தர்வேஷ் முஹம்மத்.

கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 125 பேருக்கும் மேற்பட்டவர்களுக்குப் புற்றுநோய் கண்டறியப் பட்டுள்ளதாகக் கூறுகிறார் மருத்துவ அறிக்கைகளோடு.

ஊருக்குள் நோயாளிகளுடன் உரையாடும்போது, நோய் வேதனையைக் காட்டிலும் அரசின் புறக்கணிப்பு தரும் விரக்தி அவர்களைத் துளைத்தெடுப்பதை உணர முடிகிறது. நான்கு குழந்தைகளின் தாயான ஜீனத் தன் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்துப் பேசும்போது துக்கம் வெடிக்கிறது. தந்தை முஹம்மது ஹசன் சிறுநீர்ப்பை புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளான பிறகு, தாய் ஆப்பம் விற்கப்போவதாகச் சொல்லும் 12 வயது சஹர் பானு குடும்பத்தைப் பற்றிப் பேசும்போது மலங்க மலங்க விழிக்கிறாள். “அப்பாவுக்கு நல்லாயிடுமாண்ணே?” என்று அவள் கேட்கும் கேள்வி துரத்திக்கொண்டே வருகிறது.

தொடர்ந்து கடற்கரையோர ஊர்களில் நோயாளி களைச் சந்திக்கும்போதெல்லாம் எழும் கேள்வி ஒன்று தான்: இவ்வளவு நடக்கிறது, அரசாங்கம் என்ன செய்கிறது?

(அலைகள் தழுவும்...)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

தமிழ் இந்து நாளிதழ்
13-08-2014

Saturday, July 19, 2014

ஒரு இந்துவா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேக்கிறேன் - அரவிந்தன் நீலகண்டன்



வினவு அண்ணனுக்கு

வணக்கம்,

என்னோட பெயர் மனோஜ் குமார், நெல்லை மாவட்டம் வள்ளியூர் பக்கத்துல ஒரு கிராமத்த சேந்தவன். மெக்கானிக்கல் டிப்ளமா முடிச்சிட்டு இப்ப சென்னையில தங்கி வேலை தேடறேன்.

இந்த லெட்டரை ஏன் எழுதறேன்னு எனக்கே தெரியல, உங்கள்ட்ட சொல்லனும்னு தோணிச்சி. எழுதுறேன்.
வருசநாடு, கொடியங்குளம், தருமபுரி .. மாதிரி எங்க ஊர்ல பெரிய கலவரங்கள் நடக்கலேன்னாலும், எங்க ஊருல ஜாதி பாகுபாடு உண்டு. எங்க ஊருனு இல்ல, எங்க மாவட்டமுமே அப்படிதான். தூத்துக்குடியில் நான் பாலிடெக்னிக் படிக்கும் போது அங்க இருந்த மாணவர்கள் எல்லாருமே ஜாதி செட்டா குரூப் குரூப்பாத் தான் இருப்போம். சினிமா நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கது மாதிரி ராக்கெட் ராஜா, சுபாஷ் பண்ணையார், பசுபதி பாண்டியன் இவங்களுக்கும் ரசிகர்கள் இருக்காங்க. “நாடு பாதி நாடார் பாதி”, “எக்குலமும் வாழனும் முக்குலம் தான் ஆளனும்”னு மாணவர்கள் நிறைய பஞ்ச் டயலாக்கு வெச்சுருக்காங்க. பள்ளிக்கூட சுவர்லயும் பாக்கலாம்.

நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேந்தவன். என் தாத்தாவோட பழைய காலம் மாறி இல்லைன்னாலும் நானும் ஜாதி பாகுபாட்டை அனுபவிச்சிருக்கிறேன். பள்ளி, ஊரு, கோவிலு எல்லா இடத்திலும் ஜாதி பாகுபாடு இருக்கிறது. முன்னெல்லாம் எங்க ஊரு பெரிய வீட்டுக்காரங்க எல்லாரையும் அடிப்பாங்களாம். அதை வாங்கிகிட்டு பேசாம அவங்க கிட்ட வேலை பாக்கனுமாம். கோவில் சப்பரம் வரும் தெருவில் செருப்பு போட்டு நடக்க கூடாதாம். இப்பல்லாம் அப்படியில்ல. இருந்தாலும் முழுசா போகலை.
என் வகுப்பு மாணவர்கள் என் கண்ணு முன்னாடியே பறப்பய, சேரி, சக்கிலின்னு அவங்களுக்குள்ள திட்டுறதுக்கு சகசமா பயன்படுத்துவாங்க.

ஜாதின்னு ஒண்ணு இல்லாம இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்னு பல தடவை கற்பனை செஞ்சு பார்த்திருக்கிறேன். கடவுள் ஏன் இப்படி படைச்சாருன்னு தெரியவில்லை. ஜாதியினால் எவ்வளவு பிரச்சனை. தர்மபுரியில் எங்க சமுதாயத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காக எத்தனை பேரு வீடுகள கொளுத்துனாங்க. தினமும் எங்கையாவது ஒரு மூலையில் யாராவது ஒரு தாழ்த்தப்பட்டவர் ஜாதி கொடுமையால பாதிக்கப்பட்டுகொண்டு தான் இருக்கிறார்கள்.

தர்மபுரி பிரச்சனை நடந்த போது எனக்கு பல நாள் தூக்கமே வரவில்லை. நாம் அங்கு போய் நம்ம மக்களுக்கு எதாவது உதவலாம்னு நினைச்சாலும் எப்படி போவது எங்கு தங்குவது ஒன்றும் தெரியாத்தால் எதையும் செய்ய முடியவில்லை. எங்கள் ஊர் வி சி கட்சிகார்களிடம் கேட்டுபார்த்தேன். தலைவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று கூறினார்கள்.

தர்மபுரியில் கலப்பு திருமணம் செஞ்சுவச்சதப் பத்தின உங்க கட்டுரைய பாத்தேன். ரொம்ப சந்தோசமாக இருந்தது. நீங்க செய்தது மிகப்பெரிய பணி. எந்த ஊருல கலப்பு திருமணம் செய்ஞ்சால் கொலை செய்வேன்னு சொன்னார்களோ அந்த ஊரிலேயே கலப்பு திருமணம் செய்துவைத்திருக்கிறீர்கள். மனம் நிறைந்து உங்களை வாழ்த்துகிறேன்.

இதே சமயத்தில் உங்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். நீங்க இந்து மதத்தை எதிர்த்து எழுதும் போது பலமுறை திட்டியிருக்கிறேன். சில கமெண்டுகளும் கோபத்துல போட்டுள்ளேன். நான் படிச்சது இந்து பள்ளிகூடம். எனக்கு சாமி நம்பிக்கையும், தேசபக்தியும் அதிகம். அந்த பள்ளிகூடத்துல ஜாதி வித்தியாசம் இல்லாம எல்லாரும் பாரதமாதா புதல்வர்கள்ன்னு சொல்லுவாங்க அது எனக்கு பிடிக்கும். அதனால, ஆர்.எஸ்.எஸ் மாதிரியான இந்து இயக்கங்கள் தான் நம் நாட்டிற்கு தேவைன்னு நினைச்சேன். சென்னை வந்ததுக்கு பின்னாடிதான் உங்க தளத்தை படிக்க ஆரம்பிச்சேன். உங்க கட்டுரைங்கள்ள இந்து மதத்த திட்டுற கட்டுரைகள் எனக்கு பிடிக்காது. சாதிப் பிரச்சினை சம்பந்தமா எங்க மக்கள ஆதரிச்சு நீங்க எழுதுறது எனக்கு பிடிக்கும்.

இப்போது வேலை தேடி சென்னை வந்து, எங்க ஊரு நண்பர்கள் கூட தங்கி இருக்கேன். சென்னை வந்த பிறகுதான் பல விசயங்கள் தெரிய வருது. ஊர் அண்ணன்கள் சிலர் அவங்க வீட்டுக்கு கூட தெரியாம புத்த மதத்துக்கு மாறியிருக்காங்க. அவங்க நிறைய சொல்லுவாங்க. அம்பேத்கர் இந்து மதம் மோசம்னு சொன்னதா சொல்லுவாங்க. அவங்க தான் உங்க வெப்சைட்டை குடுத்து படிக்க சொன்னாங்க.

நான் அவுங்க கிட்ட விவேகானந்தர் சாதி இல்லைனு சொல்லியிருக்கார் என்று பேசுவேன். இந்திய வல்லரசா வரணுமுனா மோடி தான் பிரதமரா வரணும்னு வாதாடுவேன்.

இருந்தாலும், அவங்க கேக்குற கேள்விங்களுக்கும் உங்க சைட்ல நீங்க எழுதற வாதங்களுக்கும் என்னால பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் நமக்குத்தான் விசயம் தெரியலியே தவிர, நிச்சயமா இதுக்கெல்லாம் சரியான பதில் இருக்கும்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு.

போன வாரம் திருவான்மியூரில இந்து ஆன்மீக சேவை கண்காட்சி ஒன்று நடந்தது. உங்களுக்கு பதிலடி கொடுக்க ஏதும் புக் கிடைக்குமான்னுதான் கண்காட்சியை பார்க்கவே நான் போனேன். அங்க நீங்களும், ரூம் நண்பர்களும் சொல்றதுதான் உண்மைங்கிறத நேரிலேயே பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.

கண்காட்சிக்கு உள்ளே போனால் 2வது ஸ்டாலே வீர வன்னியர் ஸ்டால் என்று போட்டிருந்தார்கள். வன்னியர் தான் அரச பரம்பரை ன்னு சொல்லி அது சம்பந்தமான் புத்தகங்கள், வீடியொ எல்லாம் வைத்திருந்தார்கள். நாங்கள் தான் அரச பரம்பரை என்று அவங்க சொல்லும் போதே மத்தவங்க எல்லாம் அவங்களுக்கு அடிமையாக இருந்தாங்கன்னு தானே சொல்ல வாராங்க. அதை பாத்ததும் எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. நாம எல்லாரும் இந்துக்கள் என்று உண்மையில் நினைத்திருந்தால் இப்படி ஒரு ஸ்டாலை போட்டிருப்பார்களா? தர்மபுரியில் இப்படி ஒரு மோசமான சம்பவம் நடந்து முடிந்து ஜாதி வெறி பரவிவரும் நிலையில் இந்து இயக்கம் நடத்தும் ஒரு கண்காட்சியில் சாதிவெறியை எப்படி அனுமதிச்சாங்கன்னு கோவம் வந்துச்சு.

கொஞ்சம் தள்ளி போனால் அகமுடையார் ஸ்டால், விஸ்வகர்மா ஸ்டாலுனு ஜாதிக்கு ஒரு ஸ்டால் வைத்திருந்தார்கள். ஜாதியும் இந்து மதமும் வேறு வேறு கிடையாது. ஜாதிதான் இந்துமதம் என்று ரூம் நண்பர் அடிக்கடி சொல்வார். அப்படி கிடையாது, இந்து மதத்தில் ஜாதி இல்லை. இடையில் வந்தவர்கள் தான் உருவாக்கி இருக்காங்க. இந்து இயக்கங்களும் ஜாதி இல்லைன்னுதான் பேசுறாங்கன்னு அவங்களோட சண்டைபோட்டிருக்கிறேன். இப்படி அது எல்லாம் பொய்யாகும்னு நான் நினைக்கவேயில்லை.
இந்து இயக்கங்கள் ஜாதியை ஆதரிக்கிறத நேரிலேயே பார்த்த பிறகு நான் இந்து இயக்ககங்களுக்கு ஆதரவா இருந்ததை நெனச்சி அவமானமா இருந்தது.

கண்காட்சி ஸ்டால்களை சில பெண்கள் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தங்க. அவங்ககிட்ட பேசிப் பார்த்தேன். அவங்களும் எல்லாரும் தாழ்த்தப்பட்ட சாதிதான்னு தெரிஞ்சது. கண்காட்சியின் மற்ற வேலைகளை இந்து இயக்க தொண்டர்கள் செய்து கொண்டிருந்தாங்க. ஆனால் சுத்தம் செய்யும் வேலைக்கு மட்டும் தாழ்த்தப்பட்ட மக்களை பயன்படுத்துறாங்கன்னு பாத்தபோது ஆத்திரமா வந்தது.

நான் உங்களையும், ரூம் நண்பர்களையும் மூக்குடைக்க வேண்டும் என்றுதான் கண்காட்சிக்கு போனேன். ஆனால் நானே மூக்குடைபட்டு போனேன்.

அப்போ எந்த ஜாதியின் பேரும் இல்லாமல் அம்பேத்கர் படம் வைத்திருந்த ஒரு ஸ்டாலைப் பார்த்தேன். மனதுக்கு ஆறுதலா இருந்தது. நான் மூக்குடைபட்டதை யாரிடமும் கூறக்கூடாது என்று தான் கோவமாக நினைத்தேன். ஆனால் அங்கிருந்த அம்பேத்கர் படங்களும், ஸ்டால் நிர்வாகி அரவிந்தன் நீலகண்டன் என்பவர் பழகிய விதம் காரணமாக, என்னையறியாமல் அவரிடம் என் ஆதங்கத்தை கொட்டி பேசினேன். நாமெல்லாம் இந்துக்களாக, இந்தியர்களாக இருக்கும் போது சாதி பெருமை பேசுபவர்களை அழைத்து ஸ்டால் போட்டிருக்காங்க, சுத்தம் செய்யும் பணிக்கு இந்து இயக்க வாலண்டியர்கள் இல்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் தான் எனக்கு இன்னும் அதிர்ச்சியளித்தது. அவருடைய நிலைமை என்னைவிட பரிதாபமாக இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன்.

அவர் அம்பேத்கர் படத்தை ஸ்டாலில் போடுவதாக சொன்னாராம். கண்காட்சி நடத்துறவங்க வேணுமினே ஒதுக்குபுறமா, ஒரு மறைவான இடத்தை கொடுத்து இங்கு போடுங்கள் என்று சொல்லிவிட்டார்களாம். அவரது மற்றொரு ஸ்டாலுக்கு பான்பராக் பாக்கெட் சைசில் சின்ன இடம்தான் தருவோம்னு சொல்லி இடம் ஒதுக்கிட்டாங்கன்னார். சென்னையை சேர்ந்த பிராமணர்கள் தான் இந்தக் கண்காட்சிய நடத்துறாங்கன்னு அவர் சொன்னார். பாத்தீங்கன்னா அவரும் சாதாரண ஆளு கிடையாது, பல புத்தகங்களை எழுதுன எழுத்தாளர். (எனக்கும் சில புத்தகங்களை அன்பளிப்பா கொடுத்தார்). அவருக்கே இந்த நிலைன்னா வேற எதைப்பத்தி பேசி என்ன ஆகப் போகுது?

அந்த ஸ்டாலில் அம்பேத்கர் பொன்மொழிகளை எழுதி வைத்திருந்தார்கள். “ சம்ஸ்கிருதத்தை தேசிய மொழியாக்கணும். பாகிஸ்தான் முசூலீம்கள் கிட்ட இருந்து இந்துக்களை பாதுகாக்க மகர் ரெஜிமென்டை ஏற்படுத்தணும்” இது மாதிரி நான் இதுவரைக்கும் கேள்விப்படாத அம்பேத்கர் பொன்மொழிகளை காட்சிக்கு வைத்திருந்தார்கள். இதெல்லாம் சொன்னால் ரூம் நண்பர்கள் ஒத்துக்கமாட்டார்களேன்னு அவரிடம் “இது அம்பேத்கரின் எழுத்துக்களில் எந்த தொகுதியில் வருது” என்று கேட்டேன். அதுக்கு அவர் “இந்த பொன்மொழிகள் தொகுதியில் இல்லை, அம்பேத்கார் பத்தி வேறு எழுத்தாளர் எழுதினதில் இருந்து போட்டிருக்கோம்”னு சொன்னார். இந்த புக்கை வைத்துதான் அம்பேத்கர் தொகுதிகளை வெளியிட்டிருக்காங்கன்னும் சொன்னார். அதனால அம்பேத்கர் தொகுதியிலும் இது இருக்கும் ஆனா எந்த தொகுதினுதான் ஞாபகமில்லைன்னு சொன்னார். ஒரு சின்ன புக்குல இருந்து இவ்வளவு தொகுதிங்க எப்படி வந்திச்சின்னு எனக்கு ஆச்சரியம். அந்த சாரோ எந்த தொகுதின்னு இமெயிலில் அனுப்புறேன்னு சொன்னார். மெயில் வந்தவுடன் உங்களுக்கு வெவரத்தை அனுப்புகிறேன்.

அப்புறம் அவருகிட்ட ஜாதி சங்க ஸ்டால் பத்தி கேட்டேன். தப்புதான்னு வருத்தப்பட்டாரு. கையோட வெங்கடேசன்னு ஒரு ஆர்.எஸ்.எஸ் சாருகிட்ட அழைச்சுகிட்டுப் போனார். இவரு கேக்குற கேள்விங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் என்ன பதில் சொல்றீங்கன்னு அவர் கிட்டே கேட்டார். அவருகிட்டயும் “நாம இந்துவா இருக்கும்போது இப்பிடி ஜாதி சங்கங்களை அனுமதிக்கிறது தப்புதானே, கூட்டி பெருக்கும் வேலைங்களுக்கு மட்டும் உங்ககிட்ட வாலன்டியருங்க இல்லையா”ன்னு கேட்டேன்.

அவரோ “நாங்கள் தேவேந்திர குல வேளாலர்களுக்கும் இடம் கொடுத்திருக்கிறோமேன்னு சொல்லி இன்னொரு குண்ட தூக்கி போட்டார். ஜாதி சங்கங்களை அனுமதிக்கிறது தப்புன்னு சொல்வாருன்னு பாத்தா, “வேணும்னா பறையன்னு சொல்லி நீயும் ஒரு ஸ்டால் போட்டுக்கோ” ன்னு சொல்றாமாரி இருந்தது அவருடைய பதில்.

இதை தவறுன்னு இவங்க கருதலயேன்னு வருத்தமாவும், கோபமாவும் இருந்தது. இவ்வளவு நாள் என்ன இந்துவா நினைச்சதுக்கு இது ரொம்பவே அதிர்ச்சியா இருந்தது. நீ இந்து இல்லை பறையன், அதை ஏத்துக் கொண்டு நீயும் ஸ்டால் போட்டுக் கொள்ளலாம்ங்கிற மாறி இருந்துச்சு அவரது பதில். கூனி குறுகி போனேன். அடுத்து என்ன பேசுவதுன்னு எனக்கு தெரியல. நாம் இத்தனை நாள் நண்பர்களாக நினைச்சவங்க நம்மை எட்டி உதைப்பது போல இருந்தது.

இல்லை சார், நாம இந்துக்களா இருக்கும் போது ஏன் ஜாதி பெயரை பயன்படுத்தனும்? நீங்க அம்பேத்கர் பெயரை போட்டு பறையருன்னு போட்டாலும் அது தப்புதானேன்னு வாதிட்டேன். இதுக்கு வெங்கடேசன் சாரு ஒன்னும் பதில் சொல்லல. நான் தெளிவா பேசுறதா அரவிந்தன் சார்தான் சொன்னார். கூட்டுறதுக்கு கான்ட்ராக்டு விட்டதால ஒன்னும் செய்ய முடியலேன்னு வெங்கடேசன் சாரு சொன்னாரு. எனக்கு அந்த பதிலிலும் திருப்தி இல்லை.

ரூம் நண்பர்களும் வினவும் சொல்றது மாதிரி இந்து மதமே இப்படித்தானா? இல்லை இந்து இயக்கங்கள் தான் இப்படியா? எனக்குள்ள பல கேள்விகள் தோணிச்சு.

அரவிந்தன் சாரை தவிர அங்கு எனக்கு ஆறுதலா யாரும் இல்லை. ரூம் நண்பர்கள் புத்த மதத்திற்கு மாறுமாறு கூறியது சரின்னுதான் பட்டது. முதல்ல அரவிந்தன் சாரை பாத்த போது அம்பேத்கர் மதம் மாறியது பத்தி கேட்டேன். அதுக்கு அவரு அம்பேத்கர் வேறு அந்நிய மதத்துக்கு மாறலை. புத்தமத மாற்றம் என்பது ஒரு ரூமிலிருது இன்னொரு ரூமுக்கு மாறுவது. ஆனா வீடு ஒன்னுதான். இப்படித்தான் அம்பேத்கர் கூட சொல்லியிருக்காருனு சொன்னார்.

அது இப்ப ஞாபகத்துக்கு வந்து அவருகிட்டயே கேட்டேன். “இப்ப நீங்க புத்த மதத்துக்கு மாறுவது சரியான தீர்வல்ல”ன்னு அவர் கூறினார். ஏன் இப்ப மாறி பேசுறாருன்னு எனக்கு குழப்பம் வந்தது.

உடனே சார் ஒரு பேப்பரை எடுத்து ஒரு மேப் வரைஞ்சு காமிச்சார். அதுல கட்டம் கட்டமா போட்டு இது எஸ்சி அதுக்கு மேல எம்பிசி பிறகு பிசி, எப்சின்னு போட்டு சைடுல முஸ்லீம்னு போட்டு இவங்க எல்லாரும் தாழ்த்தப்பட்டவர்கள தாக்குறாங்கன்னு சொன்னாரு. தாழ்த்தப்பட்ட மக்களை தாக்குறதுக்கு ஜாதி இந்துக்களை தூண்டுறது மேல இருக்குற பிராமணர்கள் மாதிரியான எஃப்சின்னு விளக்குனார். இதை வாய்ப்பா பயன்படுத்தி எஸ்சி மக்களுக்கு எதிரா முஸ்லீம்கள் செயல்படுறாங்கன்னும் சொன்னார்.
அதுக்கு நான் சொன்னேன், சார், முஸ்லீமகள் நம்ம மக்களுக்கு எதிராக இருக்கிறதா தெரியல. முஸ்லீம்கள் நம்மள எங்கயும் அடிக்கல. ஜாதி இந்துக்கள்னு சொல்றவங்க தான் தர்மபுரி மாறி பல இடங்கள்ள அடிக்கிறாங்க. முஸ்லிம் மதத்துக்கு மாறிய என் நண்பனைப் பற்றி சொல்லி வேணுண்ணா அவன்கிட்ட பேசுறீங்களான்னு கேட்டேன். அவன அவங்க மதத்துக்காரங்க சமமா மதிக்கிறாங்க. மசூதியில எல்லா இடத்துக்கும் அவன் போக முடியுது.

அதே நேரத்தில நான் காதலிக்கிற பி.சி சாதி பெண்ணை கலியாணம் செய்வதில் எனக்கு நிறைய கஷ்டங்கள் இருப்பதை சொல்லி முசுலீம் ஆட்களிடம் அப்படி இல்லையேன்னு கேட்டேன்.

இத அமைதியா கேட்ட அரவிந்தன் சார், டெல்லி ஜும்மா பள்ளிவாசலிலும், மெக்கா, மெதினாவிலயும் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவங்க தான் இமாம் ஆக முடியும். அங்கேயும் சாதி இருக்குன்னு விளக்கினார்.

நான் சொன்னேன், “நான் சென்னையத் தாண்டி டெல்லி, மெக்காவுக்கெல்லாம் போறதுக்கு சான்சே இல்ல. அந்த இடங்கள்ள எப்படி இருந்தாலும் எனக்கு கவலையில்ல. எங்க ஊரு பள்ளிவாசல்ல என்ன மதிச்சா அது போதும். எங்க ஊரு பக்கத்துல இருக்கும் ஆத்தங்கரை தர்கா பள்ளிவாசலுக்கு யாரு போனாலும் நல்லாவே மதிப்பாங்க. அந்த மதிப்பு வள்ளியூர் முருகன் கோவில்ல கூட கெடைக்காது சார்” ன்னு சொன்னேன்.

அதே நேரத்தில, நம்ம பண்பாட்ட விட்டு கொடுக்காம நான் புத்த மதத்துக்குத்தான் மாறப் போறேன்னு சொன்னேன். அதுக்கு அரவிந்தன் சாரு, “தாழ்த்தப்பட்ட மக்கள் புத்த மதத்துக்கு மாறி என்ன பயன்? இடைநிலை ஜாதிங்களும் உங்களோட மாறுனாத்தான் ஜாதிப்பாகுபாடு இருக்காது. அப்படி மாறதா இருந்தாலும் காசுக்கு ஆசைப்பட்டு முஸ்லீம், கிறிஸ்டீனுக்குத்தான் மாறுவாங்க. புத்தமதத்துக்கு யாரும் மாறமாட்டாங்க”ன்னு பேசுனார்.



இதக் கேட்டதும் எனக்கு சுரீர்னு கோவம் வந்துச்சு. சில வருசங்களுக்கு முன்னடி என்னோட சித்தப்பா கிரிஸ்டியனாக மாறினார். அவரு பேரு முதல்ல ஈஸ்வரன் இப்போது யோவானாகியிருக்கார். சார் நீங்க சொல்றது எங்களை கொச்சைப்படுத்துற மாறி இருக்கிறது என்று சொல்லி என் சித்தப்பா கதையை சொன்னேன். அவருதான் எங்கள் குடும்பத்துல முதல்ல படிச்சு ஆளானவரு. அரசு வேலையில் இருக்கிறார். நாங்க எவ்வளவு தான் சொல்லியும் எங்க ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்க மாட்டேன் என்று பிடிவாதமா இருக்காரு. ஏன்னா அவர் வந்தா இங்க யாரும் மதிக்க மாட்டார்கள். அவர் சொல்றது உண்மைதான். ஒரு பியூன் கூட மதிக்கமாட்டார். இதுக்குத்தான் சாதியை மறைச்சு வெளியூருல வேலைசெய்கிறார்னு சொன்னேன். மேற்கொண்டு அரவிந்தன் சாரு ஒன்னும் சொல்லல.

அதற்கப்பறம் பெரியார் பத்தி பேசுனோம்.

அம்பேத்கர் படத்தை நீங்க போட்டிருக்கீங்க. உண்மைக்குமே சந்தோசமா இருக்கு. ஆனா அம்பேத்கரை நம்மளவிட பெரியார் இயக்கங்களும், வினவு தளம், கீற்றுல தான் அதிகமாக போடுறாங்கன்னு கேட்டேன்.

அதெல்லாம் ஏமாத்துற வேலை. ஈ.வெ.ரா -வை பெரியார்னு அழைக்கிறதும், பாபாசாகேப் அம்பேத்கரை வெறுமனே அம்பேத்கர்னு அழைப்பதும் திராவிட இயக்கங்கள் திட்டமிட்டுத்தான் செய்யுராங்க. நம்மளயும் ஏமாத்துராங்க. அதனால் ஈ.வெ,ரா ன்னு மட்டும் சொல்லுங்க என்றார். கீழ்வெண்மணியில் நம்மாள்களை கொன்ற போது பெரியார் அதை கண்டிக்கல தெரியுமான்னு சொல்லி ஈ.வெ.ரா தாழ்த்தப்பட்டவங்களுக்கு எதிரானவர்னு பேசினார்.

“பெரியாரையும் அம்பேத்கரையும் இணைச்சி பேசுறதே முதலில் தப்பு. நீங்க அம்பேத்கரையும், காஞ்சி சங்கராச்சாரியாரையும் சேத்து பேச முடியுமா? சங்கராச்சாரியார் ஒரு முட்டாள். அம்பேத்கர்தான் அறிவாளி. பல பட்டங்கள் பெற்றவர். இவங்களை இணை வெச்சி பேசமுடியுமா? அதுமாறி தான் ஈ.வெ.ராவும் அம்பேத்கரும். இவங்க ரெண்டுபேரையும் இணைச்சி பேசுறதே தப்பு”
“வீரமணி யாதவ சாதிக்காரர் பெரியார் திடலில் யாதவர்களுக்கு தான் முன்னுரிமை தெரியுமா? வினவு ஆசிரியர்குழுவில் எத்தனை தலித்துங்க இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? அதை நடத்தற மாதையன் ஒரு ஐயர்னு உங்களுக்குத் தெரியுமா”ன்னு கேட்டார்.

“எனக்கு அதெல்லாம் தெரியாது சார். ஆனால் நம்மாள்களை போல அவுங்க ஜாதி பெருமையை வெளிப்படையா இங்க மாறி ஸ்டால் போட்டு சொல்லலியே”ன்னு சொன்னேன்.

“நாம என்ன தான் தி.க வை திட்டினாலும் கோவில் நுழைவு, அனைத்து சாதி அர்ச்சகர் என எல்லாத்துக்கும் திராவிட கட்சிங்கதான் முன்னணியில் இருக்கிறார்கள். கருணாநிதி தான் சட்டம் கொண்டுவந்தாரு”ன்னு சொன்னேன். உடனே அரவிந்தன் சார் குறுக்க பேசினார்.

“நம் வரலாறே நமக்கு தெரியவில்லை. இவங்கதான் எல்லாம் செஞ்சாங்கன்னா எம்.சி.ராஜா யாரு?, சகஜானந்தா யாரு? குஜராத்துல மோடிஜி அமைதியா பெரிய கோவிலுங்கள்ள கூட எல்லா ஜாதிக்காரங்களையும் அர்ச்சகரராக்கிட்டார் தெரியுமா” ன்னார்.
சகஜானந்தா யார்னு எனக்கு தெரியல. அவரிடம் கேட்டேன். தில்லை சிதம்பரம் கோவிலில் மடம் கட்டி அனைவருக்கும் கல்வி கொடுத்தவராம் அவரு தில்லைன்னு சொன்னதும் அங்கு கூட மனித உரிமை மையம்தான் கோவிலுக்குள்ள தமிழுக்காக போராடுனாங்கன்னு சொன்னேன்.



பிறகு மீண்டும் மத மாறுவது பத்தி பேசினோம்.

“நம் முன்னோர்கள் கஷ்டப்பட்டு கோவிலை கட்டினார்கள். அதை எளிதாக அடுத்தவர்கள் கையில் விட்டுவிட்டு போகலாமா. உள்ளிருந்து கொண்டே போராட வேண்டும். இந்த கண்காட்சியில் அனைவரும் பாத்து பயப்படும் ஸ்டால் எது தெரியுமா இந்த ஸ்டால் தான். ஏன்னா நான் சாதியில்லைன்னு சொல்கிறேன். அதுவும் அவங்க விரும்பும் சாவர்க்கர் போன்ற இந்து இயக்க தலைவர்கள் சொன்னதை வைத்து சொல்றேன். ஈ.வெ.ரா மாதிரி வேறு யாரும் சொன்னதா சொன்னா அவங்க கவலைப்படமாட்டாங்க. உங்க சாவர்க்கர்தான்பா சொல்லியிருக்காருன்னு எடுத்து சொல்றேன்” என்றார்.

சில நிமிடங்கள் என்னை புத்தகம் படிக்க சொல்லிட்டு வெளியே போனார். திரும்பி வந்து “ நான் ஆர்.எஸ்.எஸ் காரங்கட்ட சொல்லிவிட்டேன். நீங்க கொங்கு கவுண்டர்களையும் வன்னியர்களையும் இந்து இயக்கத்துக்குள் கொண்டுவருகிறேன் என்ற பெயரில் பல தலித்துகளை வெளியே தள்ளிகொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லிட்டு வந்தேன்” என்றார். அவருக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவருங்க கிட்ட நெருக்கமான பழக்கம் இருக்கும் போல.

நாங்க பேசிக்கொண்டிருந்தபோது ஒரு பெரியவர் வந்தார். தஞ்சாவூர் இல்லேன்னா கும்பகோணத்துக்காரர்னு நினைக்கிறேன் அவர மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர்னு அறிமுகம் செஞ்சார். அந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் நான் வேண்டாம்னு சொல்லியும் எனக்கு ரசனா ஜூஸ் வாங்கி கொடுத்தார். “அம்பேத்கர் மேற்கோள்களை தமிழில் மொழிபெயர்த்து அதை விளக்குவதற்கு ஆட்களும் தருவதாகவும் அதை பள்ளிக்கூடங்களில் காட்சிக்கு வைக்க உதவி வேண்டும்”னும் அந்த ஆர்.எஸ்.எஸ் தலைவரிடம் கேட்டுக்கொண்டார் அரவிந்தன் சார்.

வினவு அவர்களுக்கு,

இந்த கண்காட்சிக்கு ஏன்டா போனோம்னு ஆகிவிட்டது. போகாமல் இருந்திருந்தால் இந்து மதமும் இயக்கங்களும் சரியானவை என்று கற்பனையிலாவது நிம்மதியா இருந்திருப்பேன். போனபிறகு ஜீரணிக்கவே முடியலை.
என்னை போல இன்னும் பல தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் இந்து இயக்கங்களை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். நான் பேசிய ஸ்டால் நிர்வாகி அரவிந்தன் நீலகண்டன் சார் கூட, அம்பேத்கருக்கு ஓரமாக இடம் ஒதுக்குவோம், பான்பராக் பாக்கெட் அளவு இடம் ஒதுக்குவோம்னு சொன்ன பின்பும் அவங்களை எதுக்கு நம்புறாருன்னு எனக்கே தெரியல.
“நம் சகோதரன் மனநோயால் பாதிக்கப்பட்டால் அப்படி விட்டுவிடுவோமா, அதனால் இடைநிலை ஜாதியினரை மாத்தணும். அதுக்கு மதத்தை கைவிடக் கூடாதுங்கிறது” தான் அவரோட கருத்து.
அவங்களை மாத்தி நமக்கு என்ன ஆகப்போகுது? நமக்கு வேண்டியது தன்மானம். அது மதம் மாறினால் கிடைக்கும்னா ஏன் மாறக்கூடாதுங்கிறது என்கருத்து.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் உள்ள ஒருத்தர் தலித் சேம்பர் காமர்ஸ் ஆரம்பிச்சிருக்காருன்னும், அதுல தலித்துக்கள் பொருளாதார வலிமை உள்ளவங்களாகி அதுக்கு பின்னாடே நாமே இது மாதிறி பல கண்காட்சிகங்கள நடத்தலாம்னு அரவிந்தன் சார் சொன்னார்.
திரும்பும் போது “ஒரு இந்துவா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேக்கிறேன். நீங்க சொன்ன விசயங்கள் செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு” என்று அரவிந்தன் சார் வருத்தப்பட்டு சொன்னார்.

“உங்களுக்கே பான்பராக் பாக்கெட் அளவுக்கு தான் இடம் கொடுக்குறாங்க. பேசாம நீங்களும் என்னோடு மதம் மாறுங்க”ன்னு நான் சொன்னேன். அவர் மறுத்துட்டார். அரவிந்தன் சார் மாதிரி உள்ளவங்க எல்லாம் தெரிஞ்சிருந்தும் ஏன் மறுக்கிறாங்கன்னு தெரியல.
அங்கிருந்து வந்தததுக்கு பிறகு எனக்கு குழப்பமாவே இருக்கு. நீங்க இந்து மதத்தை திட்டறீங்க. ஆனால் தருமபுரியிலேயே கலப்பு திருமணம் செஞ்சு வக்கிறீங்க. ஒரு வகையில இதுதான் இந்து ஒற்றுமையை உண்டாக்குற காரியம். ஆனால், இந்து ஒற்றுமைன்னு பேசுறவங்க சாதிக்கு ஒரு ஸ்டால் போடுறாங்க. சாதியை மறந்து ஒன்றுபட வைக்கிற உங்களைத் திட்டுறாங்க.
ஒரே குழப்பமா இருக்கு. இதை உங்களிடம் பகிர வேண்டும் போல தோன்றியது. அதுக்குத்தான் இந்த நீண்ட லெட்டரை இமெயில்ல அனுப்புறேன்.

இப்படிக்கு
மனோஜ்குமார்

தகவலுக்கு நன்றி

வினவு தளம்.

Sunday, July 06, 2014

இந்து முன்னணி ஜீவராஜைக் கொன்றது அவரது மனைவியே!




சங்கரன்கோவில் இந்து முன்னணி பிரமுகர் கொலை அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது பரபரப்பு தகவல்கள்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகர இந்து முன்னணி செயலாளர் ஜீவா என்ற ஜீவராஜ் (வயது 37). இவர் நேற்று முன்தினம் இரவில் வீட்டின் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது தொடர்பாக சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடினார்கள். இந்த சம்பவத்தில் புதிய திருப்பமாக, கொலை செய்யப்பட்ட ஜீவாவின் மனைவி அய்யம்மாளை (31) நேற்று இரவில் போலீசார் கைது செய்தனர்.

பரபரப்பு தகவல்கள்

அவரிடம் நடந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.

இந்து முன்னணி பிரமுகர் ஜீவாவும், அவருடைய மனைவி அய்யம்மாளும் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கரடிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஷர்மிளா தேவி என்பவரை, ஜீவா 2–வது திருமணம் செய்துகொண்டார். அதன் பின்புதான் ஜீவாவுக்கும், அய்யம்மாளுக்கும் இடையே வாழ்க்கையில் புயல் வீசியது. கணவன் – மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இருந்தாலும் அய்யம்மாள், ஷர்மிளாதேவி மற்றும் பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் ஜீவா வசித்து வந்தார்.

சமீப காலமாக 2–வது மனைவி ஷர்மிளாதேவியுடன் சேர்ந்து அய்யம்மாளை ஜீவா துன்புறுத்தி வந்தாராம். இதனால் உள்ளூரில் உள்ள தன்னுடைய தாயார் வீட்டுக்கு அய்யம்மாள் சென்றுவிட்டார். கணவர் மீது ஆத்திரத்தில் இருந்தார்.

கழுத்துஅறுத்துக்கொலை

நேற்று முன்தினம் இரவில் வீட்டுக்கு வெளியே ஜீவா படுத்து இருந்தார். அவருடைய 2–வது மனைவி ஷர்மிளாதேவி வேலைக்கு சென்றுவிட்டார். குழந்தைகளும் தூங்கிவிட்டனர்.

நள்ளிரவில் அங்கு வந்த அய்யம்மாள், கணவர் படுத்து இருந்த படுக்கையைச் சுற்றி மிளகாய் பொடியை தூவியதுடன், ஜீவாவின் முகத்திலும் மிளகாய் பொடியை வீசியுள்ளார். பின்னர் அரிவாள்மனையால் கணவரின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார் என்று தெரிய வருகிறது. இதற்கிடையே சற்று நேரத்தில் ரத்தவெள்ளத்தில் ஜீவா பிணமானார்.
நாடகமாடினார்

அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று காலையில் அந்த கிராம மக்களுக்கு தெரியவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ஒன்றுமே தெரியாதது போல் கணவரின் வீட்டுக்கு வந்த அய்யம்மாள், கணவரின் உடலை பார்த்து கதறி அழுது நாடகமாடினார்.
போலீசார் விசாரணைக்கு பின்பு அய்யம்மாள் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தியதில், கணவரை அரிவாள்மனையால் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, நாடகமாடியது வெளிச்சத்துக்கு வந்தது.

2–வது மனைவியுடன் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்தியதால் கணவரை கொன்றதாக அய்யம்மாள் போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தகவலுக்கு நன்றி
newsalai.com



நல்லவேளையாக குற்றவாளி குற்றத்தை ஒப்புக் கொண்டார். இல்லை என்றால் கண், காது, மூக்கெல்லாம் வைத்து பல அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் இந்நேரம் கைது செய்யப்பட்டிருப்பார்கள். பல அரசு பஸ்கள் உடைக்கப்பட்டிருக்கும். ஜீவராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.


இனி இந்து முன்னணி இராம கோபாலன் பண்ணும் காமெடியை பார்ப்போம்.

சமுதாய சேவையில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றிய ஜீவராஜ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு வேலை செய்கிறதா? என்ற சந்தேகத்தை இந்தக் கொலை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட கொடூர குற்றச் செயல்கள் முதல்வர் ஜெயலலிதாவின் பார்வைக்குச் செல்கிறதா? என்பதும் தெரியவில்லை.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் நடந்த படுகொலைகளில் காவல்துறையின் நடவடிக்கை கவலை அளிக்கும் வகையிலேயே உள்ளது.

இதற்கு காவல் துறையும், அரசும் பதில் சொல்லாமல் இருக்கலாம், ஆனால், மக்கள் தங்களது எதிர்ப்பை உரிய நேரத்தில் பதிவு செய்வார்கள்.இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்பது தெரிந்தும் காவல்துறை அலட்சியமாக நடந்து கொள்கிறது.

காவல்துறை மீதும், அரசாங்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டால் அது பேராபத்தாகிவிடும்.அரசு மீது மக்கள் நம்பிக்கை இழக்கக் கூடாது என்பதற்காக குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்பவர்களிடம்கூட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நம்பிக்கையை ஏற்படுத்த முனைகிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட படுகொலைகள் நடந்தும்கூட நமது அரசியல்வாதிகள் வாய் மூடி மெளனியாக இருக்கிறார்கள்.

இனியும் இது தொடர்ந்தால் மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை இழந்து விடுவார்கள். எனவே, தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

சந்தேகத்திற்கு இடமானவர்களை கைது செய்யவும், சந்தேகப்படும் இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்ளவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும் என இராம. கோபாலன் வலியுறுத்தியுள்ளார்.

-தினமணி

சமுதாய சேவையில் தன்னை இணைத்துக் கொண்டவராம். கட்டிய மனைவிக்கு துரோகம் பண்ணி விட்டு வேறொரு பெண்ணோடு சல்லாபித்துக் கொண்டு குடி போதையில் இருப்பது தான் இராம கோபாலனின் அகராதியில் சமுதாய சேவை போலும்.


Monday, January 27, 2014

ரியாத்திலிருந்து தமிழகம் திரும்பிய தமிழர் பூமாலை!



சவூதி வாகன விபத்தில் கோமா நிலையில் இருந்த தமிழர் India Fraternity Forum, Riyadh முயற்சியால் நாடு திரும்பினார்!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுகா, பெருமங்களம் பஞ்சாயத்து கீழ்நாரியப்பனூரை சேர்ந்த முதலி என்பவரின் மகன் பூமாலை (வயது 33). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 2011 ம் ஆண்டில் வேலைக்காக சவூதி அரேபியாவின் ரியாத்இற்கு ஓட்டுனர் வேலைக்கு வந்தார். இங்கு அவர் டேங்கர் லாரியில் ஓட்டுநராக பணி செய்து வந்தார். இந்நிலையில் வாகன விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டு King Fahd National Guard மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பூமாலை, நினைவு எதுவும் திரும்பாமல் கடந்த ஒன்றரை வருடங்களாக கோமா நிலையில் இருந்து வந்தார். இந்த விபரம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் சவூதியில் சமூக நல பணிகளை மேற்கொள்ளும் இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரத்தை தொடர்புகொண்டு அவரை இந்தியாவிற்கு அழைத்து வரும் முயற்சியை மேற்க்கொல்ளும்படி கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் கோமா நிலையிலிருந்து ஓரளவு நினைவு திரும்பிய நிலையில் இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரத்தின் ரியாத் நிர்வாகிகளின் தொடர் முயற்சியின் காரணமாக மருத்துவமனையின் உதவியுடன் சென்னை செல்லும் விமானத்தில் முதல் வகுப்பில் அவரது ஊரை சேர்ந்த கோவிந்தராசு என்பவர் துணையுடன் நேற்று (25-01-2014) சென்னை அனுப்பிவைக்கப்பட்டார்.

பூமாலையை சென்னை விமானநிலையத்தில் வரவேற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் காஞ்சி பிலால், துணைத் தலைவர் அன்சாரி, ஆலந்தூர் தொகுதி செயலாளர் ஹாரூண் ரஷீது ஆகியோர் பூமாலையை பெருமங்களம் பஞ்சாயத்து தலைவர் மருது மற்றும் பூமாலை மனைவி சங்கீதா ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பூமாலையை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பூமாலையை தமிழகம் அழைத்துவர எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரம் மேற்கொண்ட மனிதநேய முயற்சிக்கு அவரது குடும்பத்தார் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

IFF, Riyadh - KSA

A.Mohammed Ramujudeen
Riyadh - KSA

கொள்கை ஒன்றாக இருந்தாலும் இஸ்லாமிய இயக்கங்கள் பல பெயர்களில் இயங்குகின்றன. தவ்ஹீத் ஜமாத், தமுமுக, பாபுலர் .பிரண்ட், ஃபிரடர்னிடி ஃபாரம் என்று பல பெயர்களில் இயங்கினாலும் அனைத்து இயக்கங்களும் பொது சேவையை கருத்தில் கொண்டே இயங்குகின்றன. சாதி, மத வித்தியாசம் பாராமல் இது போன்ற நற்செயல்களை செய்வதற்கு அனைத்து இயக்கங்களும் முன்னுரிமை தர வேண்டும். இரத்ததானம், மரம் வளர்ப்பு, ஏழை மக்களின் கல்விக்கான ஏற்பாடுகள், கிராமங்களின் சுகாதாரம் என்று அனைத்து துறைகளையும் எடுத்து உழைக்க ஆரம்பித்தால் மிகச் சிறந்த எதிர்காலம் இம்மையிலும் மறுமையிலும் இந்த இயக்கங்களுக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் வல்ல இறைவன் தர தயங்க மாட்டான்.

Saturday, January 18, 2014

சரத் சந்தோஷூம் சையது சுப்ஹானும்!





சரத் சந்தோஷ் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். சையது சுப்ஹான் நமது மதுரையைச் சேர்ந்தவர். இருவரும் விஜய் டிவி நடத்தும் 'சூப்பர் சிங்கர்' போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள். இதில் முதல் இடத்தை பெறுபவருக்கு 60 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள வீடு கிடைக்கும். ரன்னருக்கு ஒரு கிலோ தங்கமும் கிடைக்கும். செமி ஃபைனலில் முதல் மூன்று இடத்தில் முதல் இடத்தை திவாகரும் இரண்டாம் இடத்தை கேரளாவைச் சேர்ந்த பார்வதியும் பெற்று விட்டனர். மூன்றாம் இடத்துக்கு இரண்டு பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் இருவர்தான் சையது சுப்ஹானும் சரத் சந்தோஷூம். இது செமி ஃபைனலே! ஃபைனல் இன்னும் சில வாரங்களில் நடக்கும்.

மூன்றாம் இடத்துக்கான செமி ஃபைனல் தேர்வு தேர்வு எப்படி நடத்தப்பட்டது என்பதை இந்த காணொளி விளக்குகிறது. இரண்டு பேருமே இணைபிரியாத நண்பர்கள். எங்கு சென்றாலும் எங்கு அமர்ந்தாலும் ஒன்றாக செல்வர். ஜாதி மதம் இவர்களை பிரிக்கவில்லை. இந்த இரண்டு உயிர் நண்பர்களுக்கு இடையில் போட்டி. போட்டியின் முடிவுக்கு முன்னால் சையதின தாயாரிடம் கருத்து கேட்டனர். அதற்கு அவர் 'எனக்கு எப்படி சையதோ அது போல் சரத்தும் எனது பிள்ளைதான். யார் வெற்றி பெற்றாலும் சந்தோஷமே' என்று கூறியது மத நல்லிணக்கத்தை மேலும் மெருகூட்டுவதைப் போல் இருந்தது.

மிகக் கடுமையாக நடந்த போட்டியில் சையது சுப்ஹான் வெற்றி பெற்று விடுகிறார். அந்த அரங்கமே வெற்றிக் களிப்பில் இருக்கிறது. ஆனால் வெற்றி பெற்ற சையது சுப்ஹானின் கண்களில் இருந்து வருத்தத்தால் ஏற்பட்ட கண்ணீர் வழிந்தோடி வருகிறது. தனது உயிர் நண்பன் இந்த மாபெரும் போட்டியிலிருந்து விலக நாமும் ஒரு காரணமாக இருந்து விட்டோமே என்ற மன உறுத்துதலால் சையதின் உணர்வுகளை அவரால் கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறார்.

பிண்ணனி பாடகர் ஸ்ரீநிவாஸ் 'சையத்! நீ ஃபைனலுக்கு தேர்வாகியுள்ளாய்! சந்தோஷமாக இரு!' என்று சொல்கிறார். அனால் சையதோ 'எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது! நான் போயிருந்தால் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன்' என்று சொல்லி தனது நண்பனை கட்டித் தழுவுகிறார். தோல்வியடைந்த சரத்தோ 'சையத் வெற்றி பெற்றது எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. அவன் ஃபைனலிலும் தனது திறமையை நன்கு காட்டுவான்' என்று தனது நண்பனின் வெற்றியை பெரிதாக எண்ணுகிறார். நெகிழ்ச்சியான தருணம்.

வெற்றி பெற்றவர் நண்பனுக்காக வருத்தப்படுவதும் தொல்வியடைந்தவர் நண்பனின் வெற்றிக்காக சந்தோஷப்படுவதும் பார்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

அண்ணன் தம்பிகளாக உடன் பிறப்புகளைப் போல் வாழ்ந்து வரும் இந்த ஜோடியைப் போல்தான் நமது பாரதத்தில் பெரும்பாலான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. பள்ளி நாட்கள், கல்லூரி நாட்களிலெல்லாம் இந்த மத ஒற்றுமையை மிக சர்வ சாதாரணமாக காணலாம். எனது இரண்டு பையன்களும் வீட்டில் பிரியாணி அல்லது சிறப்பான உணவுகள் எது செய்தாலும் தனது இந்து நண்பர்களுக்காக கேரியரில் வைத்து தூக்கத்தை மறந்து டூ வீலரில் சென்று கொடுத்து விட்டு வருவதை ஆச்சரியத்தோடு பார்ப்பேன். சில நேரங்களில் தனது பாட்டி வீட்டுக்கு சென்று பாட்டியிடம் ஏதாவது பலகாரங்கள் செய்யச் சொல்லி தனது இந்து நண்பர்களுக்கு ஆசையோடு கொண்டு செல்லும் இந்த அன்பை விதைத்தது யார்?

அதே போல் எனது பிள்ளைகளின் இந்து நண்பர்களும் தங்கள் வீடுகளில் பொங்கல், தீபாவளி பலகாரங்களை எங்கள் வீட்டுக்கு அனுப்புவது இன்று வரை தொடர்ந்து வருகிறது. அன்பினால் பிணையப்பட்ட இந்த நட்புக்களை சில அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்துக்காக பிரிக்க பார்க்கின்றனர். கலவரங்களை தூண்டி விட்டு ஓட்டுக்களை அறுவடை செய்ய முயற்சிக்கின்றனர்.

அரசியல்வாதிகள் என்னதான் திட்டங்களை தீட்டினாலும் இந்திய மக்கள் தாங்கள் என்றுமே மதத்தால் ஒருவரையொருவர் வெறுக்க மாட்டோம் என்பதை பலமுறை நிரூபித்து வந்துள்ளார்கள். அது வரக் கூடிய பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்.

'மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் இறைவன் உங்களுக்கு தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை இறைவன் விரும்புகிறான்.'
-குர்ஆன் 60:8