Followers

Monday, August 13, 2012

உலகின் குப்பைத் தொட்டி நமது இந்தியாவா?



இந்தியாவின் வலிமையினை உலகுக்கு பறைசாற்றும் தொழிநுட்ப புரட்சியின் வித்தாய் திகழ்வது மின்னணுவியல். தகவல்-தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, மருத்துவம் என இதன் எல்லையில்லா பங்களிப்பு தொடர்வது கொண்டிருக்கும் வேளையில் நம்நாடு மட்டுமன்றி மேலைநாடுகளில் பயன்படுத்தப்பட்டு உபயோகமற்ற எலக்ட்ரானிக் கழிவுகளுக்கு புதைகுழியாய் நம்நாட்டின் நகரங்கள் மாறிவருகிறது.

மின்னல் வேகத்தில் வளரும் இந்திய பொருளாதரத்தில், ஒவ்வொரு ஆண்டும் 5 ,00 ,000 டன் எடை கொண்ட மின்னணு குப்பைகளும் சேர்ந்தே வளர்கின்றது. இது 2012 ல் ஒரு மில்லியன் டன் அளவுக்கு வளரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நம்நாட்டில் பயன்படுத்தப்பட்டு இன்று உபயோகமற்ற நிலையில் இருக்கும் கம்ப்யூடர் பாகங்களும், செல்போன்களும், மருத்துவ உபகரணங்களும் என ஒரு புறம் இருந்தாலும், 1992 ம் ஆண்டு உலக வல்லரசுகளை சமாதானம் செய்வதற்காக தற்கொலைக்கு சமமான 'காட்' ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அதன் உட்கூறாய் நம் மீது திணிக்கப்பட்ட 'ஓபன் ஜெனரல் ரைட்ஸ்' எனும் விதியின் கீழ், மேலை நாடுகளில் சேரும் கழிவுகள் 'கொடை' என்ற பெயரிலும், மறுசுழற்சி என்ற போர்வையிலும் நம் மீது திணிக்கப்படுகிறது.




நம்நாட்டைப் பொறுத்தவரை இருபது ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூடர் என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. அந்த சமயத்தில் கம்ப்யூட்டரும் அதன் உதிரி பாகங்களும் மற்ற எலக்ட்ரானிக் பொருட்களும் அந்த முறையில் நம்நாட்டிற்கு தருவிக்கப்பட்டது. ஆனால் அந்த சட்டம் இன்று வளர்ந்த நாடுகளின் குப்பைகளை கொண்டு வந்து இந்தியாவில் கொட்டும் அரசாங்க ஆணையாக செயல்படுகிறது.

கடந்த 2006 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் மேலைநாடுகளிலிருந்து தானமாக(!) வழங்கப்பட்ட கழிவுப் பொருட்கள் 190 மடங்கு அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் அலறுகிறது.

இந்தியாவிற்கான ஒட்டுமொத்த இறக்குமதியில் 48 % மேலை நாடுகளின் குப்பை கழிவுகள்.

பேரழிவுகளைத் தரக்கூடிய கழிவுகளை இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் சட்டம், உரிமை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்தாலும் மேற்சொன்ன 'ஓபன் ஜெனெரல் ரைட்ஸ்' என்ற விதி எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லாக் கழிவுகளையுமே இந்தியாவில் இறக்குமதி செய்ய நங்கூரமிடுகிறது.

ஆபத்தின் ஆழமறியா நம்மூர் அப்பாவி குடிசைவாசிகள் அதுபோன்ற குப்பைகளை தரம் பிரித்து காசு பார்க்க அலை மோதுகின்றனர், குடிசைத் தொழிலதிபர் ஆவதற்காக.




மேற்கு தில்லியின் மாயாபுரி பகுதியில் தீபக் ஜெயின் என்ற பழைய இரும்புக்கழிவு வியாபாரி உட்பட ஆறு தொழிலாளர்கள் மயங்கி சரிந்து விழுந்து உயிருக்கு போராடத் துவங்கியவுடன் அள்ளிக் கொண்டுபோய் அப்போல்லா மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் இருவருக்கு கை, கால் மற்றும் உடல்பகுதியில் உள்ள முடிகள் உதிரத் தொடங்கி, மெழுகுபோல் அவர்கள் கை, கால்கள் உருகத்தொடங்கியதைக் கண்ட மருத்துவக்குழு செய்வதறியாது திகைத்து நின்றது. நோயாளிகளின் பின்புலங்களை ஆராய்ந்தபோது, அவர்களுடைய இருப்பிடம், குடோன் ஆகியவற்றை பரிசோதிக்குமாறு அகில இந்திய மருத்துவக்கழகம் பணித்தது. மாநகராட்சி, மாநகர காவல்துறை, அணுசக்தி ஒழுங்குமுறைக்கழகம் என பலரும் களத்தில் இறங்கினர்.

ஆய்வின் முடிவில் "முறுக்கேற்றப்பட்ட இரும்புக்கம்பி பின்னல்கள்" என்ற பெயரில் எட்டு மூட்டைகளை பாதிக்கப்பட்ட ஜெயின் குடோனிலிருந்து கைப்பற்றியது அணுசக்தி ஒழுங்குமுறைக்கழகம்.பரிசோதனைக்கு பிறகு பகீர் தகவலையும் வெளியிட்டது. காமாக் கதிர்களை வெளியிடும் கோபால்ட் - 60 என்ற உயிர்க்கொல்லும் கதிரியக்கப் பொருள்தான் இந்த மோசமான விளைவுக்குக் காரணம் என்று ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்திவிட்டு தன் கையைக் கழுவிக்கொன்டது அணுசக்தி ஒழுங்குமுறைக் கழகம். ஆனால் "இது பாதுகாப்பனதோ அல்லது பாதுகாப்பற்றதோ என்பதைப் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை" என்கிறார்கள் கம்ப்யூடர் கேபிள்களை உருக்கி அதிலிருந்து தாமிரக் கம்பியினைப் பெறும் வேலையினைச் செய்யும் பெண் தொழிலாளர்கள்.

தாமிரம் பெறுவதற்காக நச்சுப்புகையில் கருகும் இவர்களை கேன்சர் நோய் மட்டுமல்லாது குழந்தைப் பேறின்மை, சிறுநீரகங்கள் செயலிழப்பு, நரம்புகளின் செயலிழப்பு போன்ற பெருநோய்களும் தாக்கலாம். தாமிரம் எடுத்துக்கொண்டபின் எஞ்சியுள்ள பாதரசக் கலவை மற்றும் ஈயம் போன்றவற்றினை ஆறுகளிலும், விளைநிலங்களிலும் வீசி விடுகின்றனர் உணவு தானியங்கள் மூலம் மற்றவர்களுக்கும் அப்பெரும் வியாதிகள் பரவும் என்பதினை அறியா அப்பாவிகள்.

கிராமப்புறத்தில் வாழ்பவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெறும் சவாலாய் நிற்கும் இப்பிரச்சனைக்கு சட்ட வல்லுனர்கள் முன்னின்று இந்தியப் பெருநாட்டின் மக்களின் வாழ்வில் நஞ்சைக் கலக்கும் இந்த அதிநவீன தொழில்நுட்ப குப்பைகளை முறையாக, சுற்றுச்சூழலுக்கும், மனித மற்றும் மற்ற உயிரினங்களுக்கும், விவசாயப் பெருந்தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு அழித்திட வகைசெய்யும் ஆலைகளை அமைத்தல் வேண்டும். மேலை நாடுகளிலிருந்து 'கொடை' அல்லது 'மறுஉபயோகம்' எனும் பெயரில் நம் மீது குப்பை கொட்டுவதை தடைசெய்யப்பட வேண்டும். கோபால்ட்-60 விவகாரம் மக்களவையில் விவாதிக்கப்பட்டு விவாதப்பொருளாகவே அறியப்பட்டது போலில்லாமல், மக்களின் வாழ்க்கையையும், உயிர் உடைமைகளையும், உலக வெப்பமயமாதல் என்ற நெருங்கிவரும் அச்சுறுத்தலையும் கவனத்தில் கொண்டு புதிய சட்டங்கள் வகுப்பதன் மூலமே இப்பேராபத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளமுடியும்.

நன்றி--புதுசுரபி
அதிரை நிருபர்



Most of that waste is bought from Indian consumers by scrap dealers and sold in underground recycling markets like Seelampur. But a 2007 study by the Manufacturers' Association of Information Technology and the German Agency for Technical Cooperation in India found that an additional 50,000 tons of e-waste is imported to India from developed countries every year, despite the nation's bans on the dumping and disposal of foreign waste and on the importing of old computers and their accessories. According to activists, importers have long exploited a loophole in the bans that allows for imports of used electronics as donations.

Read more: http://www.time.com/time/world/article/0,8599,2071920,00.html#ixzz23NSe3H95

------------------------------------------------------------------

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு – 20

16 comments:

Unknown said...

இதே போல் ஆபிரிக்கா நாடு ஒன்றை குத்தகைக்கு எடுதிருக்கு வல்லரசு

வலையுகம் said...

தகவலுக்கு நன்றி
///தாமிரம் பெறுவதற்காக நச்சுப்புகையில் கருகும் இவர்களை கேன்சர் நோய் மட்டுமல்லாது குழந்தைப் பேறின்மை, சிறுநீரகங்கள் செயலிழப்பு, நரம்புகளின் செயலிழப்பு போன்ற பெருநோய்களும் தாக்கலாம். தாமிரம் எடுத்துக்கொண்டபின் எஞ்சியுள்ள பாதரசக் கலவை மற்றும் ஈயம் போன்றவற்றினை ஆறுகளிலும், விளைநிலங்களிலும் வீசி விடுகின்றனர் உணவு தானியங்கள் மூலம்மற்றவர்களுக்கும் அப்பெரும் வியாதிகள் பரவும் என்பதினை அறியா அப்பாவிகள்./////

படித்தவுடன் பகீருன்னு இருந்துச்சு

கண்ணை கட்டிக் கொண்டு அந்திய மூலதனத்திற்கு பின்னால் ஓடியதின் விளைவு இது

VANJOOR said...

சென்னை ஏர்போர்ட்டில் உள்ளாடைக்குள் வைத்து ரூ.1 கோடி போதைப்பொருள் கடத்த முயன்ற பெண் கைது

திங்கள்கிழமை, ஆகஸ்ட் 13, 2012

சென்னை: சென்னையில் இருந்து குவைத் செல்லவிருந்த பெண் ஒருவர் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருளுடன் விமான நிலையத்தில் சிக்கினார்.

கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து குவைத் செல்ல ஏர் இந்தியா விமானம் ஒன்று தயாராக இருந்தது.

அதில் பயணிக்கவிருந்தவர்களை விமான நிலையத்தில் வைத்து பரிசோதித்தனர்.

அப்போது ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.

அந்த பெண்ணை சோதனையிட்டதில் அவரது உள்ளாடைக்குள் 54 பாக்கெட் ஹெராயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

961 கிராம் எடையுள்ள அந்த போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் தர்பாரி பாலகிரி என்றும், அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

http://tamil.oneindia.in/news/2012/08/13/tamilnadu-woman-air-passenger-arrested-with-narcotics-worth-1-cr-159526.html

suvanappiriyan said...

திரு ஆறுமுக வடிவேல் சிவசங்கர்!

//இதே போல் ஆபிரிக்கா நாடு ஒன்றை குத்தகைக்கு எடுதிருக்கு வல்லரசு//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ ஹைதர் அலி!

//படித்தவுடன் பகீருன்னு இருந்துச்சு

கண்ணை கட்டிக் கொண்டு அந்திய மூலதனத்திற்கு பின்னால் ஓடியதின் விளைவு இது //

இதன் விபரீதத்தை உணராமல் அரசு மேலும் மேலும் கழிவுகளை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. கண்ணை விற்று சித்திரம் வாங்கிய கதைதான்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வாஞ்சூர் பாய்!

//அந்த பெண்ணை சோதனையிட்டதில் அவரது உள்ளாடைக்குள் 54 பாக்கெட் ஹெராயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

961 கிராம் எடையுள்ள அந்த போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.//

பெண்ணின் புனிதம் எந்த அளவு சீரழிக்கப்படுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

.RAHMANFAYED said...

நமது அரசாங்கம் வெளிநாட்டு குப்பைகள் வருவதை தடுக்கவில்லை என்றால் இந்தியா வல்லரசு அகுமோ இல்லையோ நிச்சயம் கழவுரசு என்று பெயர் வரலாம் வருங்காலத்தில் INDIA IS SCRAP COUNTRY..

suvanappiriyan said...

Bro Fayed Rahman!

//நமது அரசாங்கம் வெளிநாட்டு குப்பைகள் வருவதை தடுக்கவில்லை என்றால் இந்தியா வல்லரசு அகுமோ இல்லையோ நிச்சயம் கழவுரசு என்று பெயர் வரலாம் வருங்காலத்தில் INDIA IS SCRAP COUNTRY.. //

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

கடந்த ஜூன் மாதம், முஸ்லிம்களின் குடிசைகளை, தீ வைத்து கொளுத்தி விட்டதாகக் கூறி, பெரிய அளவில் கலவரம் மூண்டது. இதுவரை 50 பேர் பலியாகினர். இதையடுத்து, மவுங்தா பகுதியில், அவசர நிலை அறிவிக்கப்பட்டது.பாதுகாப்பு கருதி, ஏராளமான முஸ்லிம்கள், தங்கள் தாயகமான வங்கதேசத்துக்குள் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

மியான்மரில் உள்ள முஸ்லிம்கள் அந்நாட்டு ராணுவத்தால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதை, இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் கண்டித்துள்ளன. இதற்கிடையே இந்த மாநாட்டின் உறுப்பினரான சவுதி அரேபியா, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் முஸ்லிம்களுக்கு, 250 கோடி ரூபாய் பெறுமானமுள்ள உதவிகளை அறிவித்துள்ளது. இந்த நிவாரணப் பொருட்களை உடனடியாக மியான்மருக்கு அனுப்ப, சவுதி மன்னர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.
-Dinamalar
13-08-2012

suvanappiriyan said...

நந்தவனத்தான்!

//3. அன்பு சகோ சுபி சொல்வதற்கு மாறாக, கிருத்துவ, இந்து, பெளத்த மதங்களிலிருந்து நாத்திகராவோரை விட இசுலாமிலிருந்து மதம் மாறி தப்பி ஓடுவோர் எண்ணிக்கை அதிகம். இதனை இந்த சர்வேயும் உறுதிப்படுத்துகிறது. இந்த லட்சணத்தில் உலகம் எப்புடி இசுலாமிய மயமாகும் என சகோ சுபிக்கும் அவரது அல்லாஹ்-க்குமே வெளிச்சம்!//
சர்வே எடுப்பவரின் மன நிலையைப் பொறுத்து முடிவும் அவருக்கு சாதகமாக அமையும். இங்கு பிபிசி, மற்றும் அமெரிக்க டிவி சேனல்கள் தரும் யுட்யூப் லிங்குகளை பார்த்து தெளிவு பெறுங்கள்.

நம் தமிழ் நாட்டில் மாதம் ஐம்பது பேருக்கு மேல் இஸ்லாத்தில் இணைந்த வண்ணமே உள்ளனர். அவர்களின் முழு விபரத்தையும் நான் பதிவுகளாகவே தந்திருக்கிறேன். உங்கள் மன திருப்திக்காக ஏதாவது சர்வேயை பார்த்து மனதை சாந்தப்படுத்திக் கொள்ளுங்கள். நிலைமை நீங்கள் நினைப்பதற்கு நேர் மாறாகவே உள்ளது. சில நேரங்களில் உண்மை கசக்கவே செய்யும்.

http://www.youtube.com/watch?v=Rfx4glTU5JQ
NBC NEWS: 20000 Americans Convert To ISLAM Each Year !
http://www.youtube.com/watch?v=cp5aKK5ajyU&feature=related
FOX TV News : Islam Worlds Most Growing Religion
http://www.youtube.com/watch?v=og4DMqzycKA&feature=related

Every day many germans convert to Islam -Deutschland zum Islam übertreten
http://www.youtube.com/watch?v=UNIQboFjess&feature=related

BBC NEWS British Muslim Converts
According to a new study by the inter-faith think tank Faith Matters, the real figure could be as high as 100,000, with as many as 5,000 new conversions nationwide each year. Previous estimates have placed the number of Muslim converts in the UK at between 14,000 and 25,000.
The study used data from the Scottish 2001 census, the only survey to ask respondents what their religion was at birth as well as at the time of the survey; researchers broke down what proportion of Muslim converts there were by ethnicity and then extrapolated the figures for Britain as a whole, the newspaper said. In all they estimated that there were 60,699 converts living in Britain in 2001.
http://www.alarabiya.net/articles/2012/01/05/186544.html

1. One CAIR report stated 34,000 Americans converted in the months following the attack. Cited
in Brendan Bernhard, White Muslim: From LA to New York…To Jihad? (Hoboken, New Jersey: Melville
House Publishing, 2006), 14; “NBC NEWS: 20000 Americans Convert To ISLAM Each Year,
75% Of Them Women,” September 9, 2008, http://video.msn.com/?mkt=en-us&brand=msnbc&fg
=email&vid=1151784d-66c1-4310-afc2-06ed464eb2ed&from=00 (accessed January 29, 2009).
2. For reasons why they have been and can legitimately be treated separately, see Richard Brent
Turner, Islam in the African-American Experience (Bloomington and Indianapolis: Indiana University
Press, 1997), 6; Edward E. Curtis IV, “African-American Islamization Reconsidered: Black History
Narratives and Muslim Identity,” Journal of the American Academy of Religion 73, no. 3 (2005):
660; Nuri Tinaz, “Conversion of African Americans to Islam,” dissertation, University of Warwick
(2001), 99; and Yvonne Yazbeck Haddad, “The Dynamics of Islamic Identity in North America,”
Muslims on the Americanization Path? Eds. John L. Esposito and Haddad, Yvonne Yazbeck, (Atlanta:
Scholars Press, 1998), 46. For examples of interactions between African American, white, Latino,
and immigrant Muslims, see, for example, Turner, 232; Margaret Ramirez, “New Islamic Movement
Seeks Latino Converts,” Los Angeles Times, 15 March 1999; and Michael Muhammad Knight, The
Five Percenters: Islam, Hip Hop and the Gods of New York, (Oxford: Oneworld Publications, 2007).
http://digitalcommons.usu.edu/cgi/viewcontent.cgi?article=1003&context=imwjournal


suvanappiriyan said...

சகோ க்ருஷ்ணகுமார்!

//மாற்று மதத்தைச் சார்ந்தவர்களில் பண்பு குன்றாது சம்பாஷிப்பவர்களில் ஒருவராக நான் அறிவது ஜெனாப் சுவனப்ரியன் அவர்களை. அன்பருக்கு என் மனதார்ந்த ரமலான் நல்வாழ்த்துக்கள். நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நிறைந்த பண்பும் தங்களுக்கு இறைவன் நல்க எமது ப்ரார்தனைகள்.
சுடுசொற்களுக்கு எதிராகக் கூட பண்பு குன்றா தங்கள் நிறைவான சம்பாஷணம் மெருகு பெறட்டும்.//

முதலில் உங்களுக்கும் எனது ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சில வாரங்களுக்கு முன் மெக்காவும் சென்று வந்தேன். என்னைப் பற்றி தாங்கள் வைத்துள்ள நல்லபிப்ராயத்திற்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

மற்றபடி எந்தவொரு கருத்தாடலுமே பாமரனுக்கும் புரியும் வகையில் இருக்க வேண்டும். மணிப்பிரவாள முறையைப் பின்பற்றி நீங்கள் எழுதும் பின்னூட்டங்களை சில முறை இரு முறை படிததாலே விளங்குகிறது. எனவே இனி வரும் பின்னூட்டங்களில் தூய தமிழில் எழுதினால் பலரும் உங்கள் கருத்தினால் பயன் பெறுவர். இது எனது வேண்டுகோளே! நன்றி!

ரங்குடு said...

நாடு முன்னேற்றம் அடையும் போது இது போன்ற நிகழ்வுகள் தவிர்க்க முடியாது. நமது நாடு ஏராளமான மக்களைக் கொண்டுள்ளது. இவர்கள் எல்லோருக்கும் ஏதாவது வேலை வேண்டும். குப்பை பொருக்குபவர்களுக்கும், எல்க்ட்ரானிக் குப்பையை பொருக்குபவர்களுக்கும் வித்தியாசம் கிடையாது.

மாற்றம் மக்களிடம் வர வேண்டும். மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்.

மக்களிடம் சுத்த, சுகாதார அறிவு பரப்பபட வேண்டும்.

உளுத்துப் போன மதங்களை வைத்து ஜல்லியடிப்பது நிறுத்தப்பட வேண்டும்.

suvanappiriyan said...

ரங்குடு!

//மாற்றம் மக்களிடம் வர வேண்டும். மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்.

மக்களிடம் சுத்த, சுகாதார அறிவு பரப்பபட வேண்டும்.//

ஒரு இனமே படிக்க வேண்டும் என்ற நிலை மாறி தற்போது அனைத்து சமூகத்தவரும் கல்லூரியைத் தொடுகின்றனர். எனவே மக்கள் தொகை கட்டுப்பாடு சுகாதாரம் அனைத்தும் இனி படிப்படியாக வந்து விடும்.

//உளுத்துப் போன மதங்களை வைத்து ஜல்லியடிப்பது நிறுத்தப்பட வேண்டும்.//

உண்மைதான். உளுத்துப்போன மதங்களை தூரமாக்கி சிறந்த மார்க்கங்களை வாழ்வியலாக்கிக் கொண்டால் அனைவருக்கும் நல்லது.

//குப்பை பொருக்குபவர்களுக்கும், எல்க்ட்ரானிக் குப்பையை பொருக்குபவர்களுக்கும் வித்தியாசம் கிடையாது.//

குப்பை பொறுக்குபவனுக்கு அதனால் உடலில் பாதிப்பு ஏற்படுவதில்லை. எலக்ட்ரானிக் குப்பைகளை பொறுக்குபவனுக்கு உடலும் பாதிக்கப்படுகிறது. சுற்றுச் சூழலுக்கும் கேடு உண்டாகிறது. நமது அரசு நினைத்தால் இதனை தவிர்க்கலாம்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கவனிக்கப்பட வேண்டிய அதி முக்கியமான இந்த மின் கழிவுகள். பெரிய நிறுவனங்கள் இலவசமாகக் கொடுக்கிறோம் என்ற பெயரில் பள்ளிகளுக்கு மினகழிவாக மாற இருக்கும் பயன்படுத்திய கணினிகளை வழங்குகின்றன.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
மிக நல்லதொரு விழிப்புனர்வூட்டும் முக்கியமான பதிவு. நன்றி சகோ.

சதீஷ் செல்லதுரை said...

சகோ இந்த சுதந்திர குப்பையை கவனிக்கவும் நன்றி http://tamilmottu.blogspot.com/2012/08/blog-post_14.html