Followers

Sunday, February 02, 2014

ஒளரங்கசீப்- கிருமி கண்ட சோழன்

அரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்துவதும், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் வரலாற்று உண்மை. ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான். இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர். இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு போது ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே. இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங்களையும், வைஷ்ணவப் பிரிவினர் சைவத் திருத்தலங்களையும் தாக்கியதுண்டு, தகர்த்ததுண்டு. வைஷ்ணவர்களைக் கொன்று குவித்து, சிதம்பரத்தில் உள்ள கோவிந்தராஜர் சிலையை கடலில் எரிந்ததால்தான் சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் 'கிருமி கண்ட சோழன்' என்றழைக்கப்பட்டான் என்பது வரலாறு.

இது இங்ஙனமிருக்க ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர முஸ்லிம், அவர் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பது மட்டும் பிரபலப்படுத்தப்படுகிறது. உண்மையில் ஒளரங்கசீப் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார் என்பதும், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.ஒளரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள். இதைத்தவிர அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்? இதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில. தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார். ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர். வைணவம் வளர்ந்தது.

ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை. ஒளரங்கசீப் ஒரு வைதீக முஸ்லிம். இதனால் உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு என்னும் கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர். இதனால் மத மாற்றத்தை இவர் ஊக்குவிக்கவில்லை. சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார். ஒளரங்கசீப்பின் புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார். சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஒளரங்கசீப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 ஆண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப்பட்டதிலிருந்து, ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப் புரியும்.

அதேபோல் இராஜபுத்திர இராணி ஹாதி, 'ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமையாக்கினாள். அங்குள்ள இந்து ஆலயங்களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன் என்று சொன்னபோது அதனை ஏற்றுக் கொள்ளாதவர் ஒளரங்கசீப். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார் உறவினர்களும், குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாக அறிவித்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர். ஒளரங்கசீப் குறித்து வரலாற்று மாமேதை ஜாதுநாத் சர்கார் குறிப்பிட்டுள்ளதை உற்றுநோக்கினால் ஒளரங்கசீப்பின் மதசகிப்புத்தன்மை புரியும். தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார். ''பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட் படுத்தக்கூடாது'' என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது.

பேராசிரியர் கே.கே.தத்தாவின் Islam and Indian Culture(1578 - 1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக்களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் பட்டியலிடுகிறது. ''ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர்கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத்தன்மையையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட

ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது. நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர். மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது. இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.]

மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மை வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற வரலாறு வேறு. நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா? ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்.

(கட்டுரையாளர் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், தலைசிறந்த வரலாற்றாசிரியர்)

7 comments:

ஹுஸைனம்மா said...

பிரபல திருப்பதி பெருமாள் கோவிலே முன்பு சைவக் கோயிலாக இருந்ததாம்.

கட்டுரையாளர் பெயர் என்ன?

suvanappiriyan said...

//கட்டுரையாளர் பெயர் என்ன? //

நான் காப்பி பேஸ்ட் செய்த பகுதியில் தேடிப் பார்த்தேன். அங்கும் கட்டுரையாளரின் பெயர் இல்லை. தெரிந்தவர்கள் சொல்லவும்.

ஆனந்த் சாகர் said...

//ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார்.//

இது அப்பட்டமான பொய். ஒரு நல்ல(வைதீக) ஹிந்து, கிறிஸ்தவன், யூதன், புத்தன், ஜைனன், சீக்கியன், பார்ஸி பிற மதத்தினருக்கு மதத்தின் அடிப்படையில் தீங்கு இழைக்க மாட்டான். ஆனால் ஒரு நல்ல(மத பிடிப்பு உள்ள) முஸ்லிம் எப்பொழுதும் பிற மதத்தினருக்கு மிகவும் ஆபத்தானவன். இப்படிப்பட்ட நல்ல முஸ்லிமுக்கு முன்மாதிரி முஹம்மதுவே. ஒருவன் எந்த அளவுக்கு முஹம்மதுவை உண்மையாக பின்பற்றுகிறானோ அவன் அந்த அளவுக்கு பிறமதத்‌தினருக்கு மிகவும் கேடானவன், ஆபத்தானவன் என்று மாறிவிடுகிறான்.

Anonymous said...

""மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மை வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற வரலாறு வேறு. நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா? ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். ////""இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்."////

இதை எப்படி எடுத்துக்கொள்வது மிரட்டல் என்றா அல்லது ......///////

Dr.Anburaj said...

தங்களின் கருத்துக்கள் பரிசீலனை செய்து பின் பதிவு செய்கின்றேன்.ஆனால் காசி விஸவநாதா் ஆலய வளாகத்திற்குள் இன்றும் ஒரு பள்ளி வாசலை தா்காவை கட்டிவைத்துக் காண்டு அடிச்சாட்டியம் செய்வதேன்.அதை உடைக்க உதவலாமே.அதன் உண்மை என்ன ?தொிவிக்கலாமா.

Dr.Anburaj said...


பாக்கிஸ்தானில் ஆப்கானிஸ்தானில் இந்துக்கள் இல்லை.இசுலாம் காபீா்களான இந்துக்களை கொன்று ஒழித்து விட்டது.

ஆனால் இந்தியாவில் இன்றும் சைவம் வைணவம் ஜெயினா்கள் புத்த சமயத்தவா்கள் ......போன்ற அனைத்துபிரிவு மக்களும் சிரூம் சிறப்புமாக பத்திரமாக பாதுகாப்புடன் வாழ்ந்து ஜெயித்து வருகின்றார்களே !அது மட்டும் எப்படி ?

தாங்கள் குறிப்பிடும் தாவாக்கள் மனித வக்கிரகம் காரணமாக நடந்தவை.இனியும் நடக்கும்.
ஆனால் இசுலாம் பிற மதங்களை அழித்தது கொள்கை அடிப்படையில்.முஹம்மதுவின் நசு்சுப் போதனைதான் காரணம்.முஸ்லீம் பண்பாளா் கூட இந்துக்களை காபீர் என்றே கருதுகின்றாா்.
ஔரங்கசீப் பால் இந்துக்களை ஒரளவிற்குதான் அழிக்க முடிந்தது.அதற்கு மேல் அவருக்கு இயலாது போய்விட்டது.என்பதுதான் உண்மை. ஔரங்ககசீப் ஒன்றும் உத்தமன் அல்ல.

Dr.Anburaj said...

இந்துக்கள் அரசியல்விழிப்புணா்வு இல்லாதவா்கள்.
தங்களை தகுதியானவா்கள் ஆள வேண்டும் என்பதற்கான எந்த திட்டமும் இல்லாமல் இன்றும் வாழ்ந்து வரும் பரிதாபத்திற்கு உரியவா்கள்.என்வே யாரும் இந்துக்களை ஆளமுடியும்.இந்துக்கள் குறித்து ஆங்கிலத்தில் சொல்லவேண்டும் என்றால் naive என்று சொல்லலாம்.
ஔரங்கசீப் மட்டும் அல்ல எந்த முஸ்லீம் மன்னரும் பொல்லாதவராகவே இருந்துள்ளாா்.
அக்பா் கூட ஒரு கயவன்தான்.
மதுரா காசி கோவில்களை முஸ்லீம்கள் இந்துக்களிடம்ஒப்படைக்கலாமே ?