Followers

Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Saturday, November 14, 2015

"இஸ்லாம் ஓர் இனிய மார்கம்" - இலங்கையில்...







முதன் முதலாக இலங்கையில் அதிகமான சிங்கள மக்கள் கலந்து கொண்ட "இஸ்லாம் ஓர் இனிய மார்கம் நிகழ்ச்சி"

அல்லாஹ்வின் பேருதவியால் இன்று SLTJ கண்டி மாவட்டத்துகுட்பட்ட மாத்தளை மாவட்டம் வரக்காமுறை கிளை சார்பாக வரக்காமுறையில் முதன் முதலாக சிங்கள மொழியில் நடத்திய இஸ்லாம் ஓர் இனிய மார்கம் நிகழ்ச்சி•

இலங்கையில் அதிகமான சிங்கள மக்கள் கலந்து கொண்ட இஸ்லாம் ஓர் இனிய மார்கம் நிகழ்ச்சி இதுவே. மழையையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் அலைக்கடலன திரண்ட மக்கள் கூட்டம். அனைத்து சந்தேகங்களுக்கும் சகோ: அப்துர்ராஸிக் அழகிய முறையில் பதிலளித்தார்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிங்கள மதத்தை சார்ந்த சிங்கள மொழியை தனது பாடசாலையில் பாடமாக கற்பிக்கும் சிங்கள மொழி ஆசிரியை “இவரை போல் சிங்கள மொழி சிங்கள மக்களால் கூட பேச முடியாதென்று” பாராட்டு தெரிவித்தார்.

104 சிங்கள மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் 20 சிங்கள மொழிபெயர்ப்பு திருக்குரானும் இலவசமாக வழங்கப்பட்டது. காவலுக்கு வந்த காவல்துறை வந்த நோக்கத்தையே மறந்து சிங்கள புத்தகங்களை வாசிப்பதிலும் நடந்த நிகழ்ச்சியை உன்னிப்பாக கவனிப்பதிலுமே இருந்தனர்
மாற்றுக்கொள்கையில் உள்ள மக்களும் நிகழ்ச்சியை பார்வையிட அலைக்கடலன திரண்டு வர இடம் பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு மக்கள் திரள்.

அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே !!!!

தகவல் : NM MISHAL DISC
வரக்காமுறை

Saturday, November 07, 2015

பிஜே வரவுக்கு இலங்கை ஜமாத்துல் உலமாவின் கண்டன கடிதம்!



ACJU வின் கடிதம் >>>>>>
2015-11-05

ஊடக அறிக்கை:
தென்னிந்தியாவைச் சேர்ந்த பீ. ஜைனுலாப்தீன் அவர்கள் ஒரு நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொள்ள இருப்பதாக ஊடகங்களினூடாக அறிய முடிகிறது.

கடந்த கால அவரது விஜயத்தின் பொழுது ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள் மற்றும் சமூக ஒற்றுமையையும், சக வாழ்வையும் சீர்குலைக்கும் சம்பவங்கள் ஏதும் ஏற்படாமலிருப்பதை கவனத்திற் கொண்டு இலங்கையின் பல முன்னணி இஸ்லாமிய நிறுவனங்களும், அமைப்புக்களும், அறபுக் கல்லூரிகளும் அவரது விஜயம் ஆரோக்கியமற்றது என எழுத்து மூலமும், தொலைபேசி மற்றும் நேரடியாகவும் ஜம்இய்யாவுக்கு அறிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் மேற்படி காரணங்களை கருத்திற் கொண்டு அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறது என்பதையும் நாட்டு மக்களுக்கு அறியத் தருகிறோம்.

அத்துடன் அவர் கூறும் சில கருத்துக்கள் மற்றும் கொள்கைகள் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமாக இருப்பதாலும் இது விடயத்தில் சகலரும் மிக அவதானமாகவும், எச்சரிக்கையாகவும் நடந்துகொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.

இது தொடர்பாக குறித்த ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சகோ. ஆதம் அலி
பிரதம நிறைவேற்று அதிகாரி

---------------------------------------------------------------------

SLTJ பதில் >>>>>>

கருத்தை கருத்தால் எதிர்கொள்வதே இஸ்லாமிய அழைப்புப் பணி என்பதை ஜம்மிய்யதுல் உலமா எப்போது உணர்ந்து கொள்ளும்? – ACJUவின் கடிதத்திற்கு SLTJ பதில்.
05.11.2015

தலைவர் / செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு – 10

நேர் வழியை பின்பற்றுபவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டும்!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ!!!

அல் குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸூம் மட்டுமே நேர்வழி காட்டி. அதை மாத்திரம் பின்பற்றி மறுமையில் வெற்றி பெற நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

எதிர்வரும் 08.11.2015 அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் சுகததாச உள்ளரங்கில் நடைபெறவுள்ள சிங்கள மொழியிலான திருக்குர்ஆன் தர்ஜுமா வெளியீட்டு நிகழ்வில் தென்னிந்திய மார்க்க அறிஞர் மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன் (உலவி) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்வது ஆரோக்கியமற்றது என்று கூறி அதனை தவிர்ந்து கொள்ளுமாறு எமக்கு ACJU சார்பில் கடிதம் எழுதியுள்ளீர்கள்.

உங்களின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணமாக அவரது 2005 ஆம் ஆண்டு வருகையின் போது ஏற்பட்டது போன்ற சமூக ஒற்றுமையையும், சக வாழ்வையும் சீர்குழைக்கும் விதமான சம்பவங்கள் (?) ஏற்பட்டு விடும் என்ற காரணத்தை முன்வைத்து, அவரது விஜயம் ஆரோக்கியமற்றதால் அதனை தவிர்ந்து கொள்ளுமாறு பல அமைப்பினரும், அரபுக் மத்ரஸாக்களும், நிறுவனங்களும் வேண்டுகோள் விடுத்துள்ளதையும் குறிப்பிட்டு, அது தான் ஜம்இய்யாவின் நிலைப்பாடும் கூட என்றும் அறிவித்துள்ளீர்கள்.

முதலில், 2005 ஆம் ஆண்டில் மவ்லவி P.J அவர்களின் வருகையினால் சமூக ஒற்றுமைக்கோ, சகவாழ்வுக்கோ எவ்வித பாதிப்பும் அவர் தரப்பாலோ, அவரை அழைத்து வந்த எமது ஜமாஅத் சார்பாகவோ ஏற்படுத்தப்படவில்லை. வஹியின் செய்திகள் ஆதாரபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் சமூக தளத்தில் முன்வைக்கப்பட்டது மாத்திரமே நிகழ்ந்தது. கருத்தை கருத்தால் எதிர் கொள்ளும் குர்ஆனிய பண்பாடும், சமூக நாகரீகமும் அறியாத சில அறிவீனர்களால் தான் சூழ்ச்சிகள் செய்யப்பட்டு அவரது வீஸா இரத்துச் செய்யப்பட்டது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். மார்க்க பணி செய்வதற்கு இலங்கை வருபவர்கள் எடுக்கு வேண்டிய வீஸா எடுக்காமல் மார்க்க பிரச்சாரம் செய்கிறார் என்று அன்று ஆளும் தரப்பிலிருந்துக் கொண்டு மார்க்கத்தை விலை பேசிய சில அரசியல்வாதிகளும் மார்க்க அறிஞர்களும் (?) செய்த சூழ்ச்சியே அவரது வீஸா ரத்து செய்வதற்கு காரணமாக அமைந்ததே தவிர அறிஞர் மவ்லவி P.ஜைனுல் ஆபிதீன் (உலவி) அவர்களின் இலங்கை வருகை சக வாழ்விற்கோ சமூக ஒற்றுமைக்கோ எந்தவொரு பாதிப்பையும் உண்டாக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

இன்று இலங்கைக்கு பல கொள்கைகளுடையவர்கள் அவர்களது மக்களால் அறிஞர்களாக கருதப்படுபவர்களை அழைத்து வருகிறார்கள். உதாரணமாக காதியானி மதத்தைச் சேர்ந்தவர்கள், ஷீஆக்களின் தலைவர்கள், அத்வைதத்தை போதிப்பவர்கள், கப்ருகளை வணங்குபவர்கள் எல்லாம் இலங்கைக்குள் வரவழைக்கப்படுகிறார்கள். அண்மையில் காதியானிகள் தமது குர்ஆன் சிங்கள மொழியாக்கத்தை வெளியிட்டார்கள். போராக்கள் யாழ்பானத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டினார்கள். மேலும் ஓட்டமாவடியில் ஷீஆக்களின் மத்ரஸா நடைபெறுகின்றது. குறித்த மத்ரஸாவில் இருந்து 60 க்கும் அதிகமான ஷீயா மத அறிஞர்கள் வெளியேறி நாடு முழுவதும் ஷீஆ கொள்கையை பரப்புகின்றார்கள். இஸ்லாமிய ஷரீஆவில் காபிர்கள் என்று அனைத்து சுன்னத் வல் ஜமாஅத் தரப்பினரும் ஒப்புக் கொள்ளும் இத்தகையவர்கள் இலங்கை வர முடியும் என்றால் மார்க்கத்தை அதன் தூய வடிவில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் போதிக்கும் ஒரு மார்க்க அறிஞரை இலங்கைக்கு அழைத்து வருவதை தவிர்ந்து கொள்ளுங்கள் என்று நீங்கள் முன் வைத்திருக்கும் கோரிக்கை நீதியானதல்ல, சமூக அக்கறை கொண்டதல்ல, நாகரீகமானதல்ல, ஜனநாயகத்திற்குட்பட்டதுமல்ல என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ளுங்கள்.

பி.ஜெ அவர்கள் இலங்கை வருவதை எதிர்த்து எச்சரிக்கும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா காதியானிகளின் தலைவர்கள், பிரச்சாரகர்கள், போதகர்கள் இலங்கை வருகின்ற நேரங்களிலெல்லாம் இப்படி எச்சரித்ததுண்டா?
ஷீயாக்களின் இமாம்கள், பேச்சாளர்கள், போதகர்கள் இலங்கை வருகின்றார்கள் பிரச்சாரம் செய்கின்றார்கள். நபித்தோழர்களை காபிர்கள் என்று வசை பாடுகின்றார்கள், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை விபரச்சாரி என்று பகிரங்க பிரச்சாரம் செய்கின்றார்கள் இவர்களுக்கு எதிராக எச்சரித்து இலங்கை வருகையை நிருத்துவதற்கு ஜம்மிய்யதுல் உலமா ஏன் பாடுபடவில்லை?
முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக மியன்மாரில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொத்து கொத்தாய் கொண்று குவித்த அஷின் விராதோ தேரர் கடந்த காலங்களில் இலங்கை வர வழைக்கப்பட்டார். இனவாதம் மேலோங்கியிருந்த ஒரு கால கட்டத்தில் இனவாத தீயை பரப்புவதற்காகவே அத்தேரர் இலங்கை கொண்டு வரப்பட்டார். அவர் இலங்கை வருவதை தடுப்பதற்கு நீங்கள் என்ன முயற்சிகளை எடுத்தீர்கள்?

குறைந்த பட்சம் அதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கையாவது வெளியிட்டீர்களா?

சமூக பொறுப்புள்ளவர்கள் கட்டாயம் செய்தே தீர வேண்டிய இத்தனை பணிகளை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருந்து அறிஞர் பீ. ஜெயினுலாப்தீன் அவர்களின் வருகையை மாத்திரம் தவிர்ந்துக் கொள்ளுங்கள் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது. சிந்திப்பீர்களா?

பி.ஜெ விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிக்கை விட்டுள்ளீர்கள். அப்படி அவர் இஸ்லாமிய அடிப்படையின் எந்த பகுதிக்கு மாற்றமாக கருத்து வெளியிட்டார்? அவர் வெளியிட்ட இஸ்லாத்திற்கு மாற்றமான கருத்துக்களை அல்-குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் எங்களிடம் தெளிவுபடுத்த அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா தயாரா?

ஒருவரின் கருத்துக்களைப் பற்றிய எந்த வித புரிதலையும் மக்கள் மன்றில் முன் வைக்காது, வெறுமனே இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றம் என்று மாத்திரம் கூறிவிடுவதினால் கடமை முடிந்து விட்டாதாக எண்ணிக் கொள்கின்றீர்கள் போலும். உண்மையில் பி.ஜெ யின் கருத்துக்களில் மார்க்கத்திற்கு மாற்றமான கருத்துக்கள் இருந்தால் அதனை எங்களிடம் நீங்கள் முன் வைத்திருக்கலாமே? ஏன் அதனை செய்ய ஜம்மிய்யா முன்வரவில்லை?

சிங்கள மொழி மூல அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வு தொடர்பில் ஜம்மிய்யதுல் உலமா சபையுடன் சந்திப்புக்கான நேரம் தாருங்கள் என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நாம் வேண்டுகோள் விடுத்த போது, “தலைவர் நாட்டில் இல்லை. வெள்ளிக்கிழமை தான் வருகின்றார் வந்தவுடன் நேரம் தருகின்றோம்.” என்று பொய் சொல்லி காலம் கடத்தி விட்டு இப்போது பி.ஜெ வருகையை தவிர்ந்து கொள்ளுங்கள் என்று எமக்கு கடிதத்தை அனுப்பி விட்டு கடிதம் படிக்கப்படும் முன்பே ஊடகங்களுக்கு அவசர அவசரமாக குறித்த கடிதத்தை அனுப்பி வைத்ததின் மர்மம் என்ன?

இப்போது உங்கள் தலைவர் என்ன ஆனார்? இந்தக் கடிதம் எழுதுவதற்கும், ஊடகங்களுக்கு அனுப்புவதற்கும் தலைவர் நாட்டில் இல்லையே? ஏன் இந்த இரட்டை நிலை? இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யும் உலமாக்கள் சபை என்று சொல்லிக் கொண்டு இப்படி நயவஞ்சக வேடம் போடுவது நபிகளாரின் வாழ்வுக்கு மாற்றமில்லையா?

08.11.2015 அன்று நடைபெறவுள்ள நிகழ்வானது, திருமறைக்குர்ஆனின் சிங்கள மொழியிலான தர்ஜுமா வெளியீட்டு நிகழ்வாகும். இந்நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்களின் மனங்களுக்கு படைப்பாளன் அல்லாஹ்வின் செய்திகளை எளிய நடையில், அறிவுபூர்வமாக கொண்டு போய் சேர்க்கும் முயற்சியின் வெளியீட்டு நிகழ்வாகும். தமிழ்பேசும் மக்கள் மத்தியில் மிகவும் எளிய நடையில் அதிகமான விளக்கங்களுடன் வெளியிடப்பட்ட தமிழாக்கத்தின் சிங்கள மொழிபெயர்ப்பை தான் நாங்கள் வெளியிடுகிறோம். அதன் முக்கியத்துவத்தையும், பெருமதியினையும் அதனை நீங்கள் படித்திருந்தால் அறிந்துக் கொள்வீர்கள்.

சிங்கள மக்கள் மத்தியில் அல்-குர்ஆன் தொடர்பாகவும், இஸ்லாம் பற்றியும் பரப்பப்பட்ட அனைத்து தவறான கருத்துக்களும் ஆதாரப்பூர்வமான, அறிவுப்பூர்வமான பதில் அளிக்கப்பட்டே எமது குர்ஆன் மொழியாக்கம் சிறப்புர செய்யப்பட்டிருக்கின்றது. முஸ்லிம் அல்லாதவர்கள் இந்த மொழியாகத்தை படித்தால் இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் அல்லாஹ்வின் அருளால் கண்டிப்பாக நல்லெண்ணம் கொள்வார்கள். எனவே முஸ்லிம் சமுதாயம் சார்பாக செய்யப்பட்ட இத்தகைய மிக முக்கியமான பணியை முடக்கும் விதமாக அறிஞர் பீ. ஜெயினுலாப்தீன் அவர்களின் இலங்கை வருகையை தவிர்ந்துக் கொள்ளுங்கள் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது உங்கள் அமைப்பின் மீது பொது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இன்னும் குறைத்து விடும் என்பதை நீங்கள் சிந்திக்க தவறியதை நினைத்து நாங்கள் கவலை கொள்கிறோம்.

காலத்தின் அவசியத் தேவை கருதி நடைபெறும் இத்தர்ஜுமா வெளியீட்டினால் சமூக சகவாழ்வு கட்டியெழுப்பப்படும் சந்தர்ப்பம் வாய்க்கும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும். மேலும் அறிஞர் பீ. ஜையனுலாப்தீன் அவர்களின் வருகையையும் சிறப்புரையையும் எதிர்பார்த்து பல்லாயிரக் கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள். எனவே இந்நிகழ்வை எதிர்க்காமல் தாங்களும் கலந்து அவரது சிறப்புரையை செவியேற்குமாறு தயவாய் கேட்டுக் கொள்கின்றோம்.

எல்லம் வல்ல அல்லாஹ் எம் பணிகளை பொருந்திக் கொள்வானாக!

இப்படிக்கு,
ஆர். அப்துர் ராஸிக் B.com
பொதுச் செயலாளர் – SLTJ

பிஜே இலங்கை வருவதற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு?



இந்த கூட்டம் எதற்காக இத்தனை ஆக்ரோஷத்துடன் பிஜே வருகைக்கு இலங்கையில் எதிர்ப்பு தெரிவிக்கிறது?

இஸ்லாமியரிடத்தில் இருந்த வரதட்சணை கொடுமையை துடைத்தெறிந்தாரே..... அதற்காகவா?

கமலுக்கு ரஜினிக்கும் ரசிகர் மன்றம் வைத்தவனை நபிகள் நாயகத்தை தலைவராக ஏற்றுக் கொள்ள வைத்தாரே.... அதற்காகவா?

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் ரத்த தானத்தில் முதலிடத்தை பெற்றுள்ள தவ்ஹீத் ஜமாத்தை இன்று வரை கட்டிக் காத்து வருகிறாரே.... அதற்காகவா?

தமிழக இஸ்லாமியருக்கென்று ஒரு தனி தமிழ் நடை இருந்ததை உடைத்து மாற்று மதத்தவரும் குர்ஆனை எளிதில் விளங்கும்படி விளக்கவுரை எழுதியுள்ளாரே...... அதற்காகவா?

மந்திரம், தட்டு, தாயத்து என்று புரோகிதர்களால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருந்த இஸ்லாமியர்களை ஐந்து வேளை தொழுகையாளிகளாக மாற்றி குர்ஆனை கையில் எடுக்க வைத்துள்ளாரே..... அதற்காகவா?

கல்வி வேலை வாய்ப்புகளில் 3.5 சதவீதம் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்துள்ளாரே.... அதற்காகவா

நாகூர் தர்ஹா, ஏர்வாடி தர்ஹா என்று மன நிம்மதி இன்றி அலைந்து திரிந்த பல லட்சக்கணக்கான இஸ்லாமியரை ஐந்து வேளை தொழுகையாளிகளாக மாற்றி ஏகத்துவத்தின் பால் கொண்டு வந்துள்ளாரே.... அதற்காகவா?


இரண்டு எம் எல் ஏ சீட்டுக்கும் ஒரு எம் பி சீட்டுக்கும் தன் மானத்தை அடகு வைத்து கோபாலபுரத்திலும் போயஸ் தோட்டத்திலும் வீழ்ந்து கிடந்த நம் மக்களுக்கு உண்மையை விளக்கி திமுக அதிமுக தலைவர்களை அரண்மனைக் காரன் தெருவை நோக்கி வரவழைத்திருக்கிறாரே.... அதற்காகவா?

இந்தியா முழுக்க இந்துத்வா வளர்ந்து கொண்டிருக்க தமிழகத்தில் தேய்ந்து வருகிறது. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியை நடத்தி இந்து முஸ்லிம் முறுகல் நிலையை நீர்த்துப் பொகச் செய்துள்ளாரே..... அதற்காகவா?

காதியானிகள், கபுர் முட்டிகள், மத்ஹப் மாயையில் தவழும் சாதி வெறியர்கள் அனைவரையும் நேரடி விவாதத்துக்கு அழைத்து அனைவரையும் ஏகத்துவத்தின் பால் மண்டியிட வைத்துள்ளாரே.... அதற்காகவா?

எதற்காக எதிர்க்கிறீர்கள்? அதற்கான காரணத்தை சொல்லி விட்டு எதிர்க்க கிளம்புங்கள்..... உங்களின் இந்த எதிர்ப்பு ஏகத்துவத்தை மேலும் பலரிடம் கொண்டு சேர்க்கும். அதனை வருங்காலம் உணர்த்தும். இதனை நானும் நீங்களும் பார்க்கத்தான் போகிறோம் இறைவன் நாடினால்....

Friday, November 06, 2015

சமாதி வழிபாட்டினர் மத்ஹப் என்ற சாதி வெறியினரின் கூத்துக்கள்!



சமாதி வழிபாட்டினர், மத்ஹப் என்ற சாதிப் பிடியில் வீழ்ந்தவர்கள், புரோகிதத்தால் வயிறு வளர்ப்பவர்கள் என்ற ஒரு பெருங் கூட்டம் இலங்கையில் பிஜேவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவருக்கு அளித்த அனுமதியை இலங்கை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோஷமிட்டனர் மதியிழந்தவர்கள். ஆனால் இலங்கை அரசு அனுமதியை திரும்பப் பெறவில்லை. இறைவனின் மாபெரும் கிருபையினால் இன்று இலங்கை சென்றடைந்தார் சகோதரர் பி.ஜெய்னுல்லாபுதீன்.

அன்றிலிருந்து இன்று வரை ஏகத்துவ பிரசாரம் எதிர்ப்பில்தான் வளர்ந்துள்ளது. இலங்கையிலும் இறைவன் நாட்டப்படி ஏகத்துவ பிரசாரம் மேலும் தழைத்தோங்கும். அண்ணன் பிஜே அவர்களுக்கு இறைவன் பூரண உடல் நலத்தை தந்தருள்வானாக!

எல்லா புகழும் இறைவனுக்கே!

Saturday, September 05, 2015

பதவியை விட தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்த இலங்கை அமைச்சர்கள்!



நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் பதவி ஏற்பு விழாவுக்கு நல்ல நேரம் குறிக்கப்பட்டு அனைத்து அமைச்சர்களும் அரங்கத்துக்கு வந்து விட்டனர். ஆனால் முஸ்லிம் அமைச்சர்கள் மட்டும் எவருமே இன்று அந்த குறிப்பிட்ட நேரத்தில் பதவி ஏற்பு விழாவுக்கு வரவில்லை. ஏனெனில் பதவி ஏற்பு விழாவுக்கு குறிக்கப்பட்ட நல்ல நேரமும் ஜூம்ஆ தொழுகையும் 12:30 க்கு ஒரே நேரத்தில் வந்ததுதான் தாமதத்துக்கு காரணம். பதவி ஏற்பை விட ஜூம்ஆ தொழுகைதான் முக்கியம் என்பதால் முஸ்லிம் அமைச்சர்கள் நால்வருமே குறிப்பிட்ட அந்த நேரத்தில் வரவில்லை. ஜூம்ஆ தொழுகையை முடித்து விட்டு தாமதமாக 1:45 க்கு வந்து தங்களின் பதவியை ஏற்றுக் கொண்டனர்.

முதல்வர் ஜெயலலிதா முன்னால் வளைந்து நெளிந்து குழையும் நம் தமிழக அமைச்சர்களையும் இலங்கை முஸ்லிம் அமைச்சர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். விரக்தியே பதிலாக கிடைத்தது.

ரிஷாத் பதியுதீன் – கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர்

ரவுப் ஹகீம் - நீர் வழங்கள் மற்றும் நகர திட்டமிடல்.

கபீர் ஹசிம் – அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்

ஹலீம் - தபால் மற்றும் முஸ்லிம் விவகாரம்.

மேலும் இம்முறை இலங்கை நாடளுமன்றத்துக்கு 21 முஸ்லிம் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tuesday, September 02, 2014

பாகிஸ்தானிகள் தமிழில் சொற்பொழிவுகளை கேட்கலாமோ!



இலங்கையில் கிரிக்கெட் விளையாட பாகிஸ்தானிய அணிகள் வந்தபோது வெள்ளிக் கிழமை தொழுகை நேரமாகி விட்டது. உடனே பாகிஸ்தானிய அணிகள் அங்கிருந்த ஒரு ஜூம்ஆ பள்ளிக்கு தொழுகைக்காக சென்றனர். அந்த பள்ளியும் தமிழ் முஸ்லிம்களின் பள்ளி. மார்க்க சொற்பொழிவும் தமிழிலேயே சொல்லப்படும் பள்ளி.

இங்கு தொழுகைக்கு வந்த பாகிஸ்தானிகள் உர்து மொழியையும், பஞ்சாப் மற்றும் புஷ்து மொழிகளை பேசக் கூடியவர்கள். நமது தமிழ் மொழிக்கு சற்றும் சம்பந்தமில்லாதவர்கள்: நமது கலாசாரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லாதவர்கள். இப்படி பல மொழி பல கலாசாரம் கொண்ட அந்த மக்களை இந்த பள்ளியின் பக்கம் ஈர்தது இஸ்லாம். மொழி புரியாவிட்டாலும் தொழுகை, மற்றும் அந்த தொழுகையில் ஓதப்படும் குர்ஆன் வசனங்களும் அரபியிலேயே இருப்பதால் இவர்களுக்கு எந்த சிரமத்தையும் இங்கு எதிர் கொள்ள வாய்ப்பில்லை. எனவே தான் இஸ்லாம் தொழுகையில் மட்டும் உலகம் முழுவதற்கும் ஒற்றுமைக்காக அரபு மொழியை வைத்தது. அதே பள்ளியில் அந்த குர்ஆன் வசனங்களுக்கான மொழி பெயர்ப்புகளை பள்ளியின் உள்ளேயே தாய் மொழியான தமிழில் பிரசிங்கிக்கப்படுகிறது. குர்ஆன் அந்த மனிதனிடம் என்ன பேசுகிறது என்பதை அந்த மனிதன் அறிய வேண்டுமல்லவா? எனவேதான் தமிழில் பிரசிங்கிக்கப்படுகிறது. அதே போல் தொழுகைக்கான அழைப்பொலியும் அரபு இல்லாமல் தமிழில் இருந்திருந்தால் அந்த பாகிஸ்தானிகளும் 'ஏதோ பஜனை பாடுகிறார்கள்' என்று நினைத்திருக்கக் கூடும்.

தேவ மொழி அரபி என்றிருந்தால் பள்ளியின் உள்ளே தமிழ் நுழைந்திருக்க முடியாது. அந்த பாகிஸ்தானிகளும் தமிழில் தானே சொல்லப்படுகிறது நாம் ஏன் கேட்க வேண்டும் என்று வெளியில் காத்திருக்கவில்லை. சொல்லப்படுவது நம் அனைவரையும் படைத்த இறைவனின் வார்த்தை. நமக்கு புரியாவிட்டாலும் அதற்கு மரியாதை கொடுத்து நாம் அமர்ந்து செவி தாழ்த்தி கேட்போம் என்று அவர்களை உட்கார வைத்தது இஸ்லாம். இஸ்லாத்தைப் பொருத்த வரை உலக மொழிகள் அனைத்தையும் ஒரே தரத்தில் வைத்து பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. தாய் மொழிப் பற்று ஒருவனுக்கு இருக்கலாம். ஆனால் அந்த மொழிப் பற்று வெறியாக மாறிவிடக் கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. இதை நாம் சரியாக உள் வாங்கிக் கொண்டால் மொழியால் இனத்தால் நடக்கும் பல மோதல்களை தடுத்து விட முடியும்.

ஒரு முறை புசைலா என்ற சஹாபி பெண்மணி நபி அவர்களிடம் வந்து "இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா" என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் "தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இன வெறி அல்ல. மாறாக தன் சமூகத்தை சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி" என்றார்கள்.

- நூல்: அஹ்மத்

Thursday, August 21, 2014

இது தான் இஸ்லாம்! இவர்கள்தான் முஸ்லிம்கள்!



இன்று சென்னையில் இறங்கியவுடன் அதிர்ச்சி, ஆட்டோவில் ஆப்பிள் செல் தவறிவிட்டது. சென்னையில் செல் திரும்ப கிடைப்பது சந்தேகம்தான் என்ற சோகத்தோடு என் நம்பருக்கு கூப்பிட, அட என்ன ஆச்சரியம், சார் உங்க போன் என் ஆட்டோவிலதான் இருக்கு என்று சொல்லி இறக்கிவிட்ட இடத்திற்கே அரை மணியில் வந்து திருப்பிக்கொடுத்த ஆட்டோ ட்ரைவர் சாகுல் அமீதுக்கு நன்றி.

-சகோதரர் முத்துக் குமார்

https://www.facebook.com/photo.php?fbid=528845317243601&set=a.239505809510888.55360.100003544122281&type=1&theater

---------------------------------------------------------------------



இலங்கையின் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த மஹிஸரா என்ற முஸ்லிம் பெண் ஒருவர் அவசரமாக ஆட்டோவைப் பிடித்து பயணித்துள்ளார்.

ஆட்டோவில் ஒரு சிறிய ஹேன்ட்பேக் இருந்ததைப் பார்த்து அதை எடுத்துப் பிரித்ததில் மூன்று பவுன் செயினும், 38,560 ரூபாய் பணமும் இருந்ததைக் கண்டு இது தனக்கு சொந்தமில்லாதது என்பதால் அதை எடுத்துக்கொள்ள மனம் வராதவர் வாழைச்சேனை காவல் நிலையத்தில் ஒப்படைக்கச் சென்றுள்ளார்.

அதே காவல் நிலையத்தை நோக்கி ஹேன்ட் பேக்கை ஆட்டோவில் தவற விட்ட சகுந்தலா என்ற பெண் பதறிக்கொண்டு ஓடி வர, அப்பெண்ணின் பதஷ்டத்தை அறிந்த சகோதரி மஹிஸரா அவர்கள் அவரிடம் தவற விட்டப் பொருள்களின் விபரத்தை அறிந்து போலீஸ் உதவியுடன் சகுந்தலாவிடம் ஒப்படைத்துள்ளார்.

அல்ஹம்துலில்லாஹ் அடுத்தவர்களுடைய பொருளுக்கு ஆசைப்படாமல் இறைவன் தனக்கு கொடுத்ததைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளும் நல்ல உள்ளங்களை அல்லாஹ் அறிகிறான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் உங்களுடைய தோற்றத்தையோ.உடலையோ பார்க்க மாட்டான். மாறாக அவன் உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கிறான். (நூல்: முஸ்லிம் 460)

குறைத்து மதிப்பிட முடியாத இந்த உயர்நத செயலுக்காக அல்லாஹ் அவருக்கு இவ்வுலகிலும், மறு உலகிலும் உயர்ந்த வெகுமதிகளை வழங்குவான்.

https://www.facebook.com/photo.php?fbid=529020127233485&set=pcb.529021330566698&type=1&theater

“புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; தன் பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், அடிமைகள், கடனாளிகள் போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்இவையே புண்ணியமாகும்; இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் பயபக்தியுடையவர்கள்”

(அல்-குர்ஆன் 2:177)


Tuesday, May 13, 2014

சுவாமி ஆனந்தா பண்டிட் எனும் முஹிப்புல்லாஹ்...

சுவாமி ஆனந்தா பண்டிட் எனும் முஹிப்புல்லாஹ்...

மஹானாக இருந்த நான் மனிதன் ஆனேன்!

காவியில் தொடங்கி கலிமா வரை ....சுவாமி ஆனந்தா பண்டிட்
எனும் முஹிப்புல்லாஹ்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிறுநீரை மருந்தாக்கிய சாமியார்!
செருப்புக்காலால் ஆசி வழங்கிய மகான்!

பக்தியின் பெயரால் மக்களை ஏமாற்றி
கோடி கோடியாக பணம் சேர்த்தவர் !

தேடிய செல்வத்தை அங்கேயே விட்டு
இஸ்லாத்தை தேடி வந்தது ஏன் ?

அல்முஃமின் அழைப்பு மையத்தின் தஃவா நிகழ்ச்சியில்
சுவாமி ஆனந்தா பண்டிட் எனும் முஹிப்புல்லாஹ் உரை

சுவாமி ஆனந்தா பண்டிட் எனும் முஹிப்புல்லாஹ்வைப் பற்றிய ஒரு சில மிக முக்கியமான செய்திகள் சுருக்கமாக தந்துள்ளேன் ....

@ இவர் செல்வத்திலே பிறந்து சூழ்நிலையால் சாமியாரானவர்

@ இவர் காசேதான் கடவுளடா என்று எண்ணி வாழ்ந்தவர்

@ இவருடைய காலடியில் பணத்தை கோடிகளில் கொட்டினார்கள்

@ இவருடைய காலால் ஆசீர்வாதத்திற்கு 50 லட்சம் கொடுத்தார்கள்

@ இவருடைய ஸ்பெஷல் செருப்பு கால் ஆசீர்வாதத்திற்கு ஒரு கோடி

@ இவருடைய ஆசீர்வாதத்திற்கு அமைச்சர்கள் காத்து நின்றார்கள்

@ இவர் தங்க தாம்பாளத்திலே உணவு உண்பார்

@ இவர் எந்நேரமும் விமானத்திலேயேபறந்து கொண்டிருப்பவர்

@ இவர் உலகை மூன்றுமுறை விமானத்திலே சுற்றி வந்தவர்

@ இவருக்கு இஸ்லாம் விமானத்திலேயே கிடைத்தது

@ இவர் இப்போது எல்லா வசதிகளையும் இஸ்லாத்திற்காக துறந்துவர்

@ இஸ்லாத்தை ஏற்றதற்கு பின் எளிய வாழ்க்ககையை வாழ்பவர்

@ இன்றைக்கு இஸ்லாமிய மார்க்க தாஃவா பணியை செய்கிறார்

இப்படிப்பட்ட முஹிப்புல்லாஹ்வின் உரையை இந்த லிங்கில்
நீங்களும் கேட்டுப் பாருங்கள்



http://www.youtube.com/watch?v=_Lwx_emBW5w

தங்கத் தாம்பாளத்தில் உண்ட போது இல்லாத நிம்மதி இஸ்லாத்தில் இருக்கிறது! முன்னாள் பவுத்த மத குரு! சென்னை லாயிட்ஸ் சாலையில் தஃவா நிகழ்ச்சி!

அல் முஃமின் அறக்கட்டளை சார்பில் நேற்று சென்னை லாயிட்ஸ் சாலையில் நடந்த தஃவா நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் புத்த மதகுருவும் இந்நாள் அழைப்பாளருமான முஹிப்புல்லாஹ் அவர்கள் பேசிய போது

புத்த மதகுருவாக இருந்த காலத்தில் என்னிடம் ஆசி வாங்க லட்சக்கணக்கில் கொடுத்து காத்திருப்பார்கள் ! இதில் மத்திய மந்திரிகள் எல்லாம் அடக்கம்! அவர்களுக்கு எனது காலால் அவர்களது தலையில் மிதித்து ஆசி வழங்குவேன்! அதிலும் புத்த பாரம்பரிய தஙக செருப்பு எனக்கு இருந்தது! அதை அணிந்து செருப்புக் காலால் மிதித்தால் கூடுதல் லட்சங்கள்!

ஆனால் இன்றைக்கு கூட்டத்துக்கு வர என்னிடம் சரியான செருப்பு இல்லாமல் அறுந்து போனதால் கீழ் வீட்டில் உள்ளவரின் இரவல் செருப்பில் நின்று பேசிக் கொண்டு இருக்கிறேன். ஆனால் இரவல் செருப்பின் மூலம் இஸ்லாம் எனும் தூய பாதையில் நடந்து வந்து இருக்கிறேன்.

தங்கத் தாம்பாளத்தில் தான் சாப்பிடுவேன் ! ஆனால் இஸ்லாத்தை ஏற்றவுடன் ஒரு விருந்துக்கு அழைத்திருந்தார்கள் அங்கேயும் ஒரு தாம்பாளம் வைத்தார்கள்அதில் போய் உட்கார்ந்தேன்! என்னோடு அந்த ஊரில் உள்ள ஏழை பணக்காரர் எனும் பாகுபாடின்றி அனைவரும் கை போட்டு கலக்கிய போது குமட்டியது!


ஆனால் நாளடைவில் எல்லா நிலையிலும் இஸ்லாம் சமத்துவத்தை பேணும் செயலை எண்ணிய போது தங்கத் தாம்பாளத்தை விட எனக்கு இது உயர்ந்ததாக தெரிந்தது.

தீராத வயிற்று வலிக்கு மருந்தாக எனது சிறுநீரை பக்தன் ஒருவனுக்கு வழங்கிய போது நோய் தீர்ந்ததாக ஒரு கோடியை என் காலடியில் வைத்தான்.

குழந்தை இல்லாத பெண்ணை பூஜைக்கு வரச்சொல்லி கணவனின் அனுமதியுடன் எனது உறவின் மூலம் குழந்தை கொடுத்த போது 22 ஏக்கரை என் பெயரில் எழுதி வைத்தாள்!

ஆனால் 5 வயதில் மடத்துக்கு சென்ற நான் 50 வயது வரை சூரியனை பார்ததில்லை எனும் அளவுக்கு ஏசி யில் வாழ்ந்தேன் ! கால் படாத நாடு இல்லை எனுமளவுக்கு உலகை 3 முறை வலம் வந்து விட்டேன்! விமானத்தில் பறந்து கொண்டெ இருந்த எனக்கு இஸ்லாம் ஆகாயத்தில் தான் ஒருவரால் அறிமுகம் செய்யப்பட்டது!

ஆனால் இன்றைக்கு கூட்டம் வருவதற்கு தாமாதமாகி விட்டது ! காரணம் எனது மொபெட் வரும் வழியில் நின்று விட்டது! பெட்ரோல் போட பங்குக்கு உருட்டி சென்றேன்! 50 ரூபாய் மட்டும் தான் இருந்தது! 30 ருபாய்க்கு போட முடியுமா என்றேன் முடியாது என்றார்கள்! அதனால் என்னை தொடர்பு கொண்ட செங்கிஸ் கானிடம் நான் கடைசியில் பேசுகிறேன் என சொன்னேன்.

இன்று எனது பையில் சிறிதும் பணமில்லை ! ஆனால் இதயம் நிறைய இஸ்லாம் இருக்கிறது! அது எல்லாவற்றையும் விட உயர்ந்ததாக இருக்கிறது! தஙகத் தட்டும், பஞ்சணை மெத்தையும், பணமும், மதுவும், மங்கையும் தர முடியாத இன்பத்தை இஸ்லாம் எனக்களித்தது! அசுத்தமான பணத்தை எல்லாம் அங்கேயே விட்டு விட்டு, நிம்மதியுடன் இஸ்லாத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனப் பேசினார். தனது உரையால் அப்பகுதியில் இருந்த மக்களைக் கட்டிப் போட்டார்!
அல்ஹம்து லில்லாஹ்!

பணத்துக்காக , பெண்ணுக்காக, புகழுக்க்காக இஸ்லாத்தை துறக்கும் முஸ்லிம்களுக்கு, இவை எல்லாம் இருந்து இஸ்லாத்துக்காக இவற்றைத் துறந்த முஹிப்புல்லாஹ் அவர்களின் வாழ்க்கையில் படிப்பினை இருக்கிறது.

தகவல் : Sengis khan


Sunday, March 23, 2014

திக்குத் தெரியாத காட்டில் காங்கிரஸ் கட்சி!



வாய்ப்பிருந்தும் அதனை சரி வர பயன்படுத்தாத கூமுட்டைகள் என்றால் அது இந்த காங்கிரஸ் கட்சிதான். இன்று தமிழகத்தில் இலங்கை பிரச்னையை வைத்து காங்கிரஸை வறுத்தெடுக்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள். ஆனால் உண்மையில் இலங்கை தமிழர்களுடன் நான் பேசிய வகையில் காங்கிரஸை பலர் பாராட்டவே செய்கின்றனர். தற்போது யாழ்பாணம் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. முன்பு விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் எதற்கெடுத்தாலும் வரி கட்ட வேண்டும். இன்று அது போன்ற நிலை இல்லை. இலங்கை முழுவதும் சுதந்திரமாக எங்களால் செல்ல முடிகிறது. முன்பு காலையில் எனது பிள்ளை வீட்டை விட்டு வெளியேறினால் இரவு வீடு திரும்புவானா என்ற பயத்தில் வாழ்ந்தோம். இன்று அந்த பயம் இல்லை. ஆனால் போரின் கடைசியில் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டது ரணத்தை ஏற்படுத்தக் கூடியது. அது கூட வன்னி மக்களை விடுதலைப் புலிகள் மனித கேடயமாக பயன்படுத்தியதே என்று பலர் கூறுவதை நான் கேட்டேன்.

இலங்கை ராணுவத்தையும் ராஜபக்ஷேயையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். ஆனால் அதனை வைத்து வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் அரசியல் பண்ணி அந்த மக்களுக்கு மேலும் துன்பத்தைத்தான் தந்து கொண்டிருக்கிறார்கள். இன்று ராஜபக்ஷேயின் ஆதரவாளரான மோடியோடு கை கோர்த்து விட்டார் வைகோ. அவரது அரசியல் மறு வாழ்வுக்காக ஈழத் தமிழர் பிரச்னை சற்று மூட்டை கட்டி வைக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரை தற்போது நிம்மதியாக உள்ளனர். இந்திய அரசின் செலவில் பல கோடி ரூபாய் செலவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வீடுகளையும் அந்த மக்களையும் சோனியாவும் ராகுலும் சென்று சந்தித்து மற்ற அடிப்படை வசதிகளையும் பெருக்கிக் கொடுத்திருந்தால் காங்கிரஸின் மேலுள்ள கோபம் சற்றே தணிந்திருக்கும்.

மோடி வைகோ போன்றவர்களெல்லாம் வெறும் வாயால் முழம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்று விடுதலைபலிகள் ஒழிக்கப்படாமல் இருந்திருந்தால் இலங்கை பிரச்னை இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் தீரப் போவதில்லை. ஐநாவின் அச்சுறுத்தலுக்கு பயந்தாவது ராஜபக்ஷே தமிழர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் உள்ளார். சோனியா காந்தி ராஜபக்ஷேயிடம் மேலும் பல நெருக்கங்களை கொடுத்து தமிழர்களின் வாழ்வுரிமைக்கு கோரிக்கை வைத்து அதனை தமிழ் மக்களையும் சென்றடையுமாறு பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். காங்கிரஸூக்கு விடுதலைப்புலிகள் தான் எதிரிகளே யொழிய அப்பாவி இலங்கை தமிழ் மக்கள் அல்ல.

ப.சிதம்பரம் போன்றவர்கள் இதனை அழகாக சோனியாவிடம் எடுத்துரைத்து தமிழர்களின் நலனுக்கு ஏற்றவாறு காரியமாற்ற அறிவுரை வழங்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக காங்கிரஸ் செய்து வரும் நலத் திட்டங்களை தமிழக மக்களை சென்றடையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கல்விக் கடன் பெறாத குடும்பங்களே தமிழகத்தில் இல்லை எனும் அளவுக்கு ஏழை மக்களும் இன்று டாக்டராகவும் இன்ஜினியராகவும் பரிணமிக்க முடிகிறது என்றால் அதற்கும் காங்கிரஸே காரணம். இவை எல்லாம் மக்களிடம் சரியாக சென்றடையவில்லை.

மோடியின் தலைமையில் ஆட்சி அமையாமல் தடுக்கும் சக்தி ஆம் ஆத்மிக்கும் காங்கிரஸூக்கும் உண்டு. ஏனெனில் தேர்தலுக்கு பிறகு திமுகவும் அதிமுகவும் மோடிக்கு அதரவு தருவதில் எந்த வெட்கமும் பட மாட்டார்கள் என்பது நமக்கு தெரிந்ததே!

காங்கிரஸை ஆதரிப்பது ஒன்றுதான் முஸ்லிம்களுக்கு உள்ள ஒரே வழி என்ற மமதையில் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டில் அசட்டையாக இருந்தது காங்கிரஸ். ஆனால் இன்று மாற்று சக்தியாக ஆத் ஆத்மி விசுவரூபம் எடுத்துள்ளது. மோடியின் பிரதமர் கனவை கிட்டத்தட்ட தூரமாக்கி விட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். இதிலிருந்து பாடம் படித்து காங்கிரஸ் வருங்காலங்களில் இஸ்லாமியரின் இட ஒதுக்கீட்டில் கவனம் செலுத்த வேண்டும். காங்கிரஸின் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் வாக்கும் தற்போது ஆம் ஆத்மியின் பக்கம் திரும்பியுள்ளதை நோக்க வேண்டும். தமிழகத்தில் பாரம்பரிய காங்கிரஸ் வாக்கு வங்கி எப்போதும் உண்டு. இஸ்லாமியரின் வாக்கும் கணிசமாக காங்கிரஸூக்கு வரும். மோடியை ஆட்சிக் கட்டில் ஏற விடாமல் தடுக்கும் எண்ணம் உடையவர்களின் வாக்கும் காங்கிரஸூக்கு செல்லும்.

எனது கணிப்பின்படி காங்கிரஸ் 150 இடங்களிலும், பிஜேபி 100 இடங்களிலும், ஆம் ஆத்மி 100 இடங்களிலும் மற்ற பிராந்திய கட்சிகள் 150 இடங்களிலும் வரும் என்று நினைக்கிறேன். எனது கணிப்பு சரியாக இருந்தால் ஆம் ஆத்மி துணையோடு காங்கிரஸ் ஆட்சிக் கட்டில் ஏறும் என்றே நினைக்கிறேன். முடிவை பொறுத்திருந்து பார்ப்போம்.

Wednesday, January 01, 2014

இலங்கை மக்களுக்கு இந்திய உதவிகள்!



இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இலங்கையில் 2013 ஆம் ஆண்டின் இரண்டாவது கட்டத்தில் 10,250 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகம் கூறியிருக்கின்றது.

இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்போடும். கலந்தாய்வோடும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 43 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இதில் 2013 ஆம் ஆண்டில் பத்தாயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த இலக்கில் கணிசமான முன்னேற்றம் காணப்பட்டிருக்கின்றது என்று இந்திய துணைத்தூதரகம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் 10,184 வீடுகளும், கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 66 வீடுகளும் கடந்த வருடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

மேலதிகமாக இரண்டரை இலட்ச ரூபா செலவில் திருத்தியமைப்பதற்காக 100 வீடுகள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், இது வரையில் பயனாளிகளுக்கு இலங்கை ரூபா 7.8 பில்லியன் (ஏறத்தாள இந்திய ரூபா 355 கோடி) நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.

பிறந்துள்ள 2014 இல் மேலும் 16,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகுதி 17,000 வீடுகளும் 2015 இல் பூர்த்தியாக்கப்படும் என இந்திய துணைத்தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் வீடமைப்புத் திட்டம் உத்தியோகபூர்வமாக 2013 வைகாசி 22 இல் தான் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இம் மாகாணத்தில் முதலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு 66 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. மேலும் 400 வீடுகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. கிழக்கு மாகாணத்தில் மற்றைய மாவட்டங்களில் விரைவில் திட்டத்தை ஆரம்பிக்க முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இரண்டாம் கட்டத்தில் வடமாகாணத்தில் 39,000 வீடுகளும், கிழக்கு மாகாணத்தில் 4,000 வீடுகளும் கட்டி முடிக்கப்படும்.



மலையக வீடுகள்

இந்திய வீடமைப்புதிட்டத்தின் மூன்றாவது கட்டம், மத்திய, ஊவா மாகாணங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கான முகவர்கள் மூலம் நடைமுறைப்படுத்தும் முறையில் 4,000 வீடுகள் கட்டும் பணி சம்பந்தப்பட்ட தோட்ட கம்பனிகளினால் காணிகள் விடுவிக்கப்பட்டு, தேவையான காணி பண்படுத்தல் முடிவடைந்ததும் 2014 ஏப்பிரல் மாதமளவில் ஆரம்பிக்கப்படும்.

இந்திய அரசாங்கத்தால் மூன்றாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிபுணர் ஒருவர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார்.

நான்காவது கட்டம், முகவர்களினால் செயற்படுத்தும் முறை மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தாங்களே வீடுகளை கட்ட முடியாத நிலையிலுள்ள உள்ளுரில் இடம்பெயர்ந்தவர்களுக்கான 4,000 வீடுகளை 2014 இல் நிர்மாணித்தலைக் உள்ளடக்கியது.

முகவர்களினால் செயற்படுத்தும் முறை மூலம் வடமாகாணத்தில் 1000 வீடுகள் கட்டும் பரீட்சார்த்தமான திட்டம் இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணிகளில் 2012 ஜுலை மாதத்தில் செய்து முடிக்கப்பட்டது.

இம் முழுத்திட்டமும் இந்திய அரசின் முழுமையான மானிய உதவித்திட்டத்தின் கீழ் இந்திய ரூபா 1372 கோடியில் (இலங்கை ரூபா 30 பில்லியன்), நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இது இந்திய அரசாங்கத்தால் ஏனைய நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதி உதவியுடன் ஒப்பிடும் போது மிகப்பெரிய திட்டமாகும் என்றும் இந்தியத் துணைத் தூதரகம் கூறியிருக்கின்றது.

நன்றி பிபிசி!

----------------------------------------------

இலங்கை தமிழர்களுக்கு நமது அரசின் இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையை கட்சி பேதமின்றி அனைவரும் பாராட்ட வேண்டும். வைகோவைப்போல் 'தனி ஈழம்' என்று வெறும் வாயால் வெற்று வாக்குறுதிகளை கொடுப்பதை விடுத்து இது போன்ற நிரந்தர நல வாழவு பணிகளை முடுக்கி விடும் சோனியா அரசாங்கத்துக்கு நமது ஆதரவை அளிக்க வேண்டும். பூபோள ரீதியாக எந்த வகையில் பார்த்தாலும் தனி ஈழம் என்பது சாத்தியப்படாத ஒன்றே! மற்ற பல விஷயங்களில் காங்கிரஸ் அரசோடு எனக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும் இந்த திட்டத்தை பொறுத்த வரை மிக சரியான இலக்கிலேயே செல்வதாக நான் உணருகிறேன்.

Tuesday, September 17, 2013

சினிமாவிலிருந்து இஸ்லாத்தை நோக்கி..



சினிமாவிலிருந்து இஸ்லாத்தை நோக்கி..

"சசி விஜேந்திர" இது இவரது சினிமாப் பெயர்.

சினிமா மக்கள் மத்தியில் புரையோடிப்போயிருக்கின்ற ஒன்று. பலரும் பிரபல்யமாவதற்கு பயன்படுத்துகின்ற ஒரு முக்கிய ஊடகமே இந்த சினிமா. பணம் செழிக்கும் ஒரு முக்கிய வர்த்தகம் என்றுகூட சொல்லலாம். இப்பாதையில் பயணித்த ஒருவர்தான் இந்த ஷஷி விஜேந்திர. இலங்கையின் கமலஹாசன் என்று அழைக்கப்பட்டவர். முஸ்லிமாக இருந்தாலும் உலகவாழ்க்கையின் சினிமா சுகபோகத்துக்குள் நுழைந்தார். அழகு, நல்ல சாந்தமான குணம். தொடர் வெற்றிகள். தேசிய விருதும் கிடைத்தது. ஆனால், இந்த புகழின் உச்சியில் இருக்கும் போதுதான் சுமார் பதினேழு வருடங்களுக்கு முன்னர் தனது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டார். கைப்பிடித்தது ஒரு கிறிஸ்தவ பெண். இப்போது ஒரு இஸ்லாமிய பெண். நான்கு மகன்கள். ஒரு பெண் பிள்ளை. மூத்த மகன் ஒரு "ஹாபில்".

மிக நீண்ட இடைவேளைக்குப் பின்னர் மீடியா இவரைத் தேடிப்பிடித்திருக்கிறது. சுமார் 17 வருடங்கள் கழித்து ஒரு பேட்டி. பேட்டியின் போது சிறு வயதில் பார்த்த அந்த நடிகரா இவர் என்று யோசித்தே விட்டேன். பேட்டியின் போது பேட்டி காண்பவர் இது திரும்பவும் சினிமாவுக்குள் நுழைவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று சொல்கிறார். ஆனால், இஸ்லாமிய வாழ்வை விட்டு வெளியே திரும்பவும் வருவதற்கு விருப்பமில்லை என்கிறார். அவர் நடித்த சில படங்களின் பாடல் காட்சிகளை ஒளிபரப்பி இவற்றைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது என்று கேட்கப்படுகின்றது. அதற்கு அவருடைய பதில் "அக்காலத்தில் தனது பங்களிப்பை (சினிமாவில்) ஒழுங்காக செய்திருக்கின்றேன் என்று சொன்னாலும் நபிவழியை விட்டு விலகி இருந்தேனே என்று மனம் கவலைப்படுகிறது" என்று சொல்கிறார். ஸுப்ஹானல்லாஹ். மேலும், இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தி பல வெற்றிகளை பெற்றுக்கொண்ட இயக்குனர், இவருடன் நடித்த நடிகை மீண்டும் இவர் சினிமா உலகுக்குள் சங்கமிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்கள். அவை எல்லாவற்றுக்கும் சிரித்த முகத்துடனேயே எனது வாழ்க்கை நபிவழியாகவே இருக்கும், அதற்கு மாற்றமாக நடக்க மாட்டேன் என்று உறுதியாகச் சொல்கிறார்.

இப்போது தப்லீக் ஜமாத்தின் தான் சார்ந்திருக்கும் ஊரின் அமீராக செயல்படுகிறார்.

படிப்பினைகள்:

# முஸ்லிமாக இருந்தும் வாழ்வை ஜாஹிளிய்யத்துக்குள் நடைபயின்ற இவர் திரும்பவும் இஸ்லாமிய வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டார்.

# தொடர் வெற்றிகள், தேசிய விருது என்ற புகழின் உச்சியில் இருக்கின்ற போதே சினிமாவின் சுகபோக வாழ்வில் இருந்து விடுபடுகிறார்.

# திரும்பவும் ஜாஹிளிய்யத்துக்கான அழைப்புக்கள். அறிமுகப்படுத்திய இயக்குனர் மூலம் அழைப்பு. ஆனால், தவறுக்குள் நுழைய விருப்பமில்லை என்று மறுப்பு.

மாஷா அல்லாஹ்..அல்லாஹ் அண்ணாரின் கடந்த கால தவறுகளை மன்னித்து நல்லாடியார்களுள் ஒருவராக பொருந்திக் கொள்வாயாக...

-https://www.facebook.com/muhammad.himas.7?hc_location=stream

Friday, April 05, 2013

பொது பல சேனா எதிர்பார்ப்பது என்ன?

பொது பல சேனா அமைப்பில் முஸ்லிம் பிரிவொன்றை நிறுவுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக அவ்வமைப்பின் செயலாளர் பொதுபல சேனாவில் முஸ்லிம் பிரிவு - கலகொட அத்தே ஞானசார தேரர்
தெரிவித்தார்.

முஸ்லிம் அடிப்படைவாதிகளிடமிருந்து தமது சமூகத்தையும் நாட்டையும் மீட்டுத் தருமாறு சம்பிரதாய முஸ்லிம்கள் எம்மிடம் கோரிக்கை விடுக்கின்றனர். அவர்களை பொது பல சேனாவுடன் சேர்த்து செயற்பட நாம் அழைப்பு விடுக்கிறோம். எதிர்காலத்தில் பொது பல சேனாவில் முஸ்லிம் பிரிவொன்றை செயற்படுத்தவும் நாம் எதிர்பார்க்கிறோம் என்றார்.

பொதுபல சேனா நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

-http://www.jaffnamuslim.com/2013/04/blog-post_5642.html


பொதுபல சேனா இலங்கை முஸ்லிம்களிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை இந்த அறிக்கை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. அதாவது எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டில் முஸ்லிம்கள் பள்ளி வாசலுக்கும் போய் கொள்ளலாம: தர்ஹாவுக்கும் போய்க் கொள்ளலாம்: புத்த விகாரைக்கும் வரலாம்: கோவிலுக்கும் செல்லலாம். இப்படி எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டால் முஸ்லிம்கள் நிம்மதியாக தங்கள் வாழ்க்கையை இலங்கையில் ஓட்டலாம் என்பதை மிக நாசூக்காக தெரிவிக்கிறது பொதுபல சேனா என்ற அமைப்பு.

//முஸ்லிம் அடிப்படைவாதிகளிடமிருந்து தமது சமூகத்தையும் நாட்டையும் மீட்டுத் தருமாறு சம்பிரதாய முஸ்லிம்கள் எம்மிடம் கோரிக்கை விடுக்கின்றனர். அவர்களை பொது பல சேனாவுடன் சேர்த்து செயற்பட நாம் அழைப்பு விடுக்கிறோம். எதிர்காலத்தில் பொது பல சேனாவில் முஸ்லிம் பிரிவொன்றை செயற்படுத்தவும் நாம் எதிர்பார்க்கிறோம் என்றார்.//

இந்த வார்த்தைகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். 'சம்பிரதாய முஸ்லிம்கள்' என்பவர்கள் யார்? பள்ளிவாசலுக்கும் வருவார்கள்: தர்ஹாக்களுக்கும் செல்வார்கள்: மாரியம்மன் கோவிலுக்கும் செல்வார்கள்:புத்த விகாரைக்கும் செல்வார்கள். இது போன்ற முஸ்லிம்களைத்தான் நமது நாட்டு இந்துத்வாவாதிகளும் 'தேசபக்தி முஸ்லிம்கள்' என்று புகழாரம் சூட்டுகின்றனர். இது போன்ற பெயர்தாங்கி முஸ்லிம்களைத்தான் பொதுபல சேனாவில் சேருமாறு அதன் தலைமை அழைப்பு விடுக்கிறது.

அடிப்படைவாத முஸ்லிம்களிடம் இருந்து காக்க வேண்டுமாம். யார் இந்த அடிப்படைவாத முஸ்லிம்கள? குர்ஆனும் நபிமொழிகளும் மட்டுமே இஸ்லாமிய மார்க்கமாக முடியும் என்று மிகச் சிறந்த பிரசாரத்தை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி தற்போது 'ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்' என்ற பெயரில் இலங்கையிலும் தொடங்கப்பட்டுள்ள அமைப்பைக் குறித்தே பொதுபல சேனா பேசுகிறது. மற்ற அமைப்புகளைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. எல்லாம் பத்தோடு பதினொன்றாக கரைந்து விடும் என்பது அவர்களுக்கும் தெரியும். குர்ஆனையும் ஹதீஸையும் கையிலெடுத்திருக்கும் இந்த இளைஞர் பட்டாளத்தை வளர விட்டால் புத்த மதம் முற்றாக துடைத்தெறியப்பட்டு விடும் என்ற பயத்தினாலேயே தவ்ஹீத் ஜமாத்தை இவர்கள் எதிர்க்கிறார்கள். எனவேதான் சில நாட்களுக்கு முன்பு 'ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தை அரசு தடை செய்ய வேண்டும்' என்ற கோரிக்கையை இதே அமைப்பு வைத்தது. தவ்ஹீத் ஜமாத்தின் வரவால் பவுத்த மதத்தை சார்ந்தவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் மனமாற்றமடைந்து இஸ்லாத்தில் அதிகம் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்கின்றனர். சவுதியில் கூட இந்த மாற்றங்களை அவ்வப்போது நான் நிறைய பார்த்து வருகிறேன். சமீபத்தில் நடந்த மனமாற்றம்..

----------------------------------------------------------

சவூதியில் இஸ்லாத்தை தழுவிய இரு சிங்கள சகோதரர்கள்...........!!



இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சவூதி அரேபியா, தபூக் கிளையில் இலங்கை புத்த மதத்தை சேர்ந்த, சிங்கள மொழி பேசக்கூடிய இந்திக்கா, பிரசன்னா ஆகிய இரு சகோதரர்கள் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

இவர்களுக்காக ஏக இறைவனிடத்தில் பிரார்த்திப்பீர்.........!!

------------------------------------------------------------

தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற 3 சகோதரிகள்



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 14-03-2013 வியாழன் அன்று தபூக் பிரசவ மருத்துவமனையில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் மணிலாவை சேர்ந்த சகோதரி எமிலியும் இலங்கை கன்தலாவைச் பகுதியை சேர்ந்த புத்தமதத்தை சேர்ந்த சகோதரி சந்திரிக்கா சமந்தி பிரேராவும், இலைங்கை நெக்கம்போவை பகுதியை சேர்ந்த புத்தமதத்தை சேர்ந்த சகோதரி அனோமா தில்ஹனி சில்வவும், தூய இஸ்லாத்தை தழுவினார்கள். அவர்களுக்கு சுமையா இஸ்லாத்தின் கொள்கைகளை விளக்கிக் கூறினார்கள். அவர்களில் எமிலி,-அமல் என்றும், சந்திரிக்கா சமீரா என்றும், அனோமா ஈமான் என்றும் தங்களது பெயர்களை மாற்றிக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

--------------------------------------------------------------

ஒரு இலங்கை சகோதரரின் பின்னூட்டத்தையும் பார்த்து விடுவோம்.......


கலகொட அத்தே ஞானசார தேரர் ஒரு பயங்கரவாதியென்று பெளத்த பெரும்பீடங்களே தெரிவித்துவிட்டது. இது அனவருமறிந்தசெய்திதான் இருப்பினும் இவருக்கு தற்பொது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது, அதனால்தான் இப்படியான செய்திகளை அறிவிக்கின்றார், முஸ்லிம்கள் உன்போன்றா குடிகாரனிடமும் உன்போன்ற பயங்கரவாதியிடமும் ஒருபோதும் உதவிகேட்டு நிற்கமாட்டார்கள் ”லாஇலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமாவை வாயினால் மொழிந்த எந்தவொரு முஸ்லிமும் உன்போன்ற கயவர்களின் உன்போன்ற முனாபிக்குககளின் உதவியை நாடமாட்டார்கள் என்பதை நீ உணர்ந்துகொள்.

இதையும் தாண்டி கலகொட அத்தே ஞானசார காசுகொடுத்து முஸ்லிம்கள் சமுதாயத்தில் ஒட்டிவாழக்கூடிய இஸ்லாமியப் பெயரை மாத்திரம் கொண்ட யாரையாவது நீ உன்பக்கம் திருப்பவேண்டுமென்று முயற்சிக்கின்றாய் அது நன்றாகவே எமக்கு புரிகின்றது, நீ முயற்சி செய் கண்டிப்பாக மேற்குறிப்பிட்ட சிலர் உனக்கு கிடைப்பார்கள் இல்லாமலில்லை. அவர்கள் யாராக இருப்பார்களென்று நாமே உமக்கு விளக்குகிறோம். மிக இலகுவாக உன்னால் கண்டுபிடிக்கலாம். இதோ அவர்களின் விபரம் குறித்துக்கொள்:

எங்களைப்போல் இறைநம்பிக்கை வைத்து, இறைவனையே உதவிதேடும் கூட்டத்தினரல்ல அவர்கள். இன்னும் விரிவாக சொல்லவேண்டுமானால் உன்னைப்போன்ற பிறப்பாலும் வளர்ப்பாலும் இழிவானவர்களே அவர்கள், உன்னுடன் வந்து சேரக்கூடிய கூட்டம். அல்ஹம்துலில்லாஹ் உன்போன்ற நயவஞ்சகர்களின் மூலம் எங்கள் மத்தியில் வாழக்கூடியவர்களின் யாராவது குழப்பத்தை விருகின்றார்களா என்பதையும் எம்முடனேயிருந்து எமக்கெதிராக இறை மறுப்பாளர்களாக வாழ்ந்து எம்மை குழியிலிட நினைத்து யார் மறுமைக்காக அவர்களுகே குந்தகம் விளைவித்துக் கொண்டிருக்கின்றார்களே அவர்கள் யாரென்பதையும் பொதுபலசேனமூலமாக எல்லாம் வல்ல இறைவன் எமக்கு காட்டித் தரவிருக்கின்றான் அதையிட்டு நாம் எல்லாம் வ்ல்ல இறைவனுக்கு மீண்டும் நன்றிக்கடன்பட்டுள்ளோம்.

கலகொட அத்தே ஞானசார தேரா உமது செயல்பாட்டையும் உமது அருவருக்கத்தக்க இயல்புகளையும் நேரடியாகக் காணக் கிடைத்ததையிட்டு நாம் அல்லாஹ்வுக்கு நன்றிகூறி நாம் ஒவ்வொரு தொழுகையிலும் இன்னும் குனூத் ஓதி அல்லாஹ்விடம் பிரார்த்தித்த வண்ணமேயுள்ளோம்.

இன்னும் கலகொட அத்தே ஞானசார தேரா உமது பாசையில் சொல்லவேண்டுமானால் உனது பருப்பு முஸ்லிம்களாகிய எம்மிடம் வேகாது. இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள், பெளத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் உன்னைப்போல்தான் குறுகிய அறிவுகொண்டவர்களென்று நீ நினைப்பதில் தவறில்லை. காரணம் உனக்கு குறிப்பிட்ட எல்லையைத்தாண்டி யோசிக்க தெரியாது. நாம் உன்னைப் போன்றவர்களைப் பற்றிக் கவலைப்படுவதற்குப் பதிலாக இறைவனிடம் பிரார்திக்கின்றோம்.

-Renees MHM says

--------------------------------------------------------------



சமூகங்களுக்கு மத்தியிலான புரிந்துணர்வு, நல்லிணக்கத்தை நோக்காகக் கொண்டு தாயிப்ஃ அழைப்பு மற்றும வழிகாட்டல் மையத்தின் தமிழ், சிங்களப் பிரிவு ஏற்பாடு செய்யும் சிறப்பு கலாச்சார நிகழ்ச்சி. மாற்று மத சகோதரர்கள் பெருமளவில் பங்கு கொண்டு பயனடையுமாறு அழைப்பு வழிகாட்டல் மையம் கேட்டுக் கொண்டுள்ளது.



Thursday, March 21, 2013

தனி ஈழமும் தற்போதய அனுமார் சிலைகளும்!

தற்போது இலங்கையில் இந்துக்களை தாக்கியது போக இஸ்லாமியரின் பக்கம் பவுத்த ரவுடிகளின் பார்வை திரும்பியுள்ளது. தற்போது இந்த வேலையை ஆரம்பித்து வைக்க நமது நாட்டு இந்துத்வா வாதிகளின் ஆசியும் ஆதரவும் உள்ளதை பல நிகழ்வுகள் நமக்கு மெய்ப்பிக்கின்றன.

"இலங்கையில் சிங்களரை நாம் விட்டு கொடுக்க முடியாது. அவர்கள் ராமர் விட்டு வந்த அனுமன் படையின் வாரிசுகள்." - அத்வானி

அத்வானிக்கு சிங்களவர்களின் மேல் எத்தகைய பாசத்தைக் கொண்டுள்ளார் என்பது அவரது அறிக்கையிலேயே தெரிகிறது. இந்துத்வா வாதிகள் என்னதான் வேஷம் போட்டாலும் அவர்கள் நலன் அனைத்தும் மேல் தட்டு மக்களை காப்பாற்றுவதாகத்தான் இருக்கும். சூத்திரர்களைப் பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்பதுதான் இது போன்ற அறிக்கைகள் நமக்கு உண்மையை அப்பட்டமாக உணர்த்துகின்றன.



வட இலங்கையில், புத்தர் சிலைகளுடன் போட்டி போட்டுக் கொண்டு, அனுமார் சிலைகள் கட்டப் படுகின்றன. அதற்கு `விஷ்வ ஹிந்து பரிஷத்´ போன்ற இந்துத்துவா வாதிகள் நிதியளித்து வருகின்றனர். இந்து என்று அழைத்துக் கொள்ளும் தமிழர்களே, இந்துத்துவா வாதிகள் தமிழரின் எதிரிகள் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.

(படத்தில் உள்ள அனுமார் சிலை, அண்மையில் சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப் பட்ட யாழ்ப்பாணத்தில், இணுவில் என்ற ஊரில் கட்டப்பட்டது.)

தகவல் உதவி- கலையரசன்.

-------------------------------------------------------------



புத்த வெறியா்களிடமிருந்து இலங்கை முஸ்லீம்களை பா... by pjtamilnadu

தனி ஈழம் சாத்தியமா ?

(திமுக மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவிப்பதற்கு முன் இந்த பதில் உணர்வு பத்திரிக்கையில் வெளியானது என்பதைக் கவனத்தில் கொள்க)

இலங்கைப் பிரச்சினைக்காக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இவர்கள் எதிர்பார்க்கும் பலன் ஏற்படுமா ?

மசூது, கடையநல்லூர்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தங்களின் முதல் கோரிக்கையாக தனிஈழம் என்பதை முன்வைக்கின்றனர். அதாவது இலங்கையின் வடக்கு மாகாணத்தை இலங்கையிலிருந்து பிரித்து அதைத் தமிழர்களின் தனிநாடாக ஆக்கவேண்டும் என்பது முதல்கோரிக்கை.

அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கையாகும்.

இதில் முதலாவது கோரிக்கை எள்முனையளவும் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. எந்தநாடும் தனது நிலப்பரப்பைப் பிரித்து இன்னொரு நாட்டை ஏற்படுத்திவிட்டு ஒதுங்கிக்கொள்ள ஒப்புக் கொள்ளாது.

தனிநாடு கோருவோரின் கடுமையான பதிலடி காரணமாக, ராணுவமும் காவல்துறையும் சோர்வடைந்து இனிமேல் அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்ற அளவுக்கு பலவீனம் அடையும்போது மட்டுமே வேறுவழி இல்லாமல் தொலைந்து போகட்டும் என இதற்கு ஒப்புக் கொள்வார்கள்.

அல்லது உலகநாடுகள் அனைத்தும் அல்லது வல்லரசுநாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கடும்விளைவு ஏற்படும் என்று எச்சரிக்கும் அளவுக்கு ஒருநாடு தனிமைப்படுத்தப்பட்டால் அப்போது வேறுவழியில்லாமலும், எஞ்சிய பகுதியையாவது தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தனிநாடு கோரிக்கையை அந்தநாடு ஏற்றுக்கொள்ளும்.

இலங்கையில் பிரபாகரன் உயிருடன் இருந்து இலங்கை அரசுக்கு எதிராகக் கடுமையான பதிலடி கொடுத்துவந்த போதும், வடக்குப்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து இலங்கை ராணுவம் நுழையவிடாமல் தடுத்துக்கொண்டு இருந்தபோதும், வடக்குப் பகுதியைக் கடந்து கொழும்பு நகருக்குள் ஊடுருவி இலங்கைத் தலைவர்கள் மற்றும் இராணுவத் தளங்களைத் தாக்கிய போதும், வேறுநாடாக இருந்தால் தொலைந்து போகட்டும் என்று தனிநாடாக ஆக்கி இருப்பார்கள்.

ஆனால் விடுதலைப்புலிகளின் கடுமையான அனைத்து தாக்குதல்களுக்குப் பின்னரும், இலங்கையானது தனிநாடு கோரிக்கையை ஏற்கமறுத்து விட்டது. சில ராணுவவீரர்கள் ராணுவத்தைவிட்டு ஓட்டம்பிடிக்கும் அளவிற்கு நிலைமை இருந்தும், அந்தநாடு தனிநாடு கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

இன்று அங்கு விடுதலைப்புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளனர். சரணடைந்த புலிகள்கூட பெரும்பாலும் கொன்று குவிக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளின் குடும்பத்தில் இருந்த பெண்களும் சிறுவர்களும்கூட அழிக்கப்பட்டுவிட்டனர். தனிநாடு என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஒருவர் கூட இல்லாத அளவுக்கு துடைத்து எறியப்பட்ட பின்னர், தமிழகத்தில் உண்ணாவிரதம் இருப்பது இலங்கை அரசால் கோமாளித்தனமாகத்தான் பார்க்கப்படும். வேறு எந்தப் பயனையும் ஏற்படுத்தப் போவதில்லை.

விடுதலைப்புலிகளின் கடுமையான போராட்டத்தின்போது இலங்கைக்கு உலகநாடுகள் நெருக்கடி கொடுத்து இருந்தால், தனிஈழம் கிடைத்துவிடும் என்றநிலை ஒருகாலத்தில் இருந்தது. அப்போது இந்தியாவில் இருந்த ஐந்துகோடிக்கும் மேலான தமிழர்கள் மொழிஉணர்வின் காரணமாக ஒட்டுமொத்தமாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்தனர். அரசியல் கட்சியினர் பெருமளவில் அவர்களுக்கு நிதியுதவி அளித்தனர்.

தமிழக ஆட்சியாளர்கள் விடுதலைப்புலிகள் தங்கிட இங்கு அடைக்கலம் கொடுத்தனர். ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுதிரண்டு ஆதரிக்கிறது என்ற நிலைமை காரணமாக, மத்திய அரசும் இலங்கை விவகாரத்தில் தலையிட்டது. அமைதிப்படையை அனுப்பி விடுதலைப்புலிகள் முற்றிலும் அழிக்கப்படாமல் காப்பாற்றியது. இலங்கையின்மீது அத்துமீறிப் பறந்து தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணவுப்பொட்டலங்கள் போட்டு, இலங்கை அரசுக்கும் கடுமையான எச்சரிக்கையும் விட்டது.

அந்தநிலை நீடித்து இருந்தால், உலகநாடுகளின் ஆதரவுடன் தனிநாடு அமைய இந்திய அரசும் உதவுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அவற்றையெல்லாம் விடுதலைப் புலிகள் தங்களது செயல்களால் நாசமாக்கி விட்டனர்.

இந்தியாவிற்குள்ளேயே தங்களது பயங்கரவாதச் செயல்களை விடுதலைப்புலிகள் அரங்கேற்றினார்கள். முன்னாள் பிரதமராக இருந்த ராஜிவ்காந்தியை இந்திய மண்ணில் அதுவும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வந்த தமிழகத்தில் வைத்தே சமாதி கட்டினார்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயகநாடான இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக இவர்கள் நடத்திய போர் ஆறாதவடுவாக அதிகாரிகள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக யாரும் வாய்திறக்க முடியாதநிலை அப்போது தமிழகத்தில் ஏற்பட்டது. ஜெயலலிதா போன்ற சிலதலைவர்கள் விடுதலைப்புலிகளின் செயல்களை துணிவுடன் கண்டித்தனர். விடுதலைப்புலிகளின் கொலைப்பட்டியலில் ஜெயலலிதாவும் உள்ளார் என்ற உளவுத்துறையின் தகவலால், அவருக்கு இசட்பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் மன்னிக்க முடியாத பாதகத்தைச் செய்த புலிகளை ஒழித்துக் கட்ட மத்தியஅரசு முழுவீச்சில் களமிறங்கியது.

ராஜிவ்காந்தியின் மனைவியிடமும், அவரது மகனிடமும் முழுஅதிகாரமும் குவிந்துள்ள நிலையில் விடுதலைப்புலிகளின் கணக்கைத் தீர்க்க அவர்கள் நினைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. எனவே புலிகளை ஒழித்துக்கட்ட அனைத்து விதமான உதவிகளையும் இலங்கை அரசுக்கு மத்தியஅரசு செய்து கொடுத்ததிலும் ஆச்சரியம் இல்லை.

ஆயுத சப்ளை வழங்கி இந்திய ராணுவத்தின் உதவியுடன் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளித்தும், தேவையான வியூகங்களை வகுத்துக் கொடுத்தும், புலிகளை முற்றிலுமாக ஒழிக்க எல்லா உதவிகளையும் மத்திய அரசுசெய்து கொடுத்ததால்தான் இலங்கை ராணுவம் புலிகளை வேறோடு அழிக்கமுடிந்தது.

விடுதலைப்புலிகள் தங்களுக்கு பக்கபலமாக இருந்த மாபெரும் நாட்டை தங்களது கொடும் செயலால் எதிரியாக ஆக்கிக் கொண்டு இருக்கா விட்டால், தனிஈழம் இன்னேரம் அமைந்திருக்கலாம்.

அல்லது அதிகாரப் பகிர்வுடன் கூடிய தனிமாகாணம் இந்துத் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம். அதைக் கெடுத்து விடுதலைப்புலிகள் நாசமாக்கிக் கொண்டனர்.

மதத்தால் வேறுபட்டாலும், மொழியால் ஒன்றுபட்ட தமிழ்கூறும் முஸ்லிம்களைத் தங்களின் முதல்எதிரியாக இவர்கள் ஆக்கிக் கொண்டதாலும், முஸ்லிம்களை வேறோடு கிள்ளி எறிய அவர்கள் செய்த கொடுமைகளாலும், அவர்களின் பலம் குன்றியது. இந்துத்துவாவிற்கு நிகரான விடுதலைப்புலிகளை விட சிங்களபௌத்த வெறியர்கள் பரவாயில்லை என்ற நிலைமை இதனால் ஏற்பட்டது.

இவர்கள் போராளிகள் அல்ல பிறநாடுகளிலும் புகுந்து வன்முறையில் ஈடுபடும் பயங்கரவாதிகள் என்ற எண்ணம் (வல்லரசு நாடுகள் உட்பட) எல்லா நாடுகளுக்கும் ராஜிவ் கொலையால் ஏற்பட்டது. பலநாடுகளும் இவர்களைப் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கும் நிலை ஏற்பட்டது.

இதை நன்கு பயன்படுத்திக் கொண்ட சிங்களஅரசு அனைத்து நாடுகளின் ஆதரவுடன் செயல்பட்டு புலிகளை முற்றாக ஒழித்தே கட்டிவிட்டது.

புலிகளின் கொடூரமான ஆட்சிமுறையால் சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்து வந்த வடமாகாணத் தமிழர்கள் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். எப்போது என்ன நடக்குமோ என்று அஞ்சி வாழ்ந்த நிலை மாறியுள்ளது. எனவே விடுதலைப் புலிகளின் பாதையில் செல்லக் கூடாது என்று இலங்கைத் தமிழர்கள் உறுதியுடன்உள்ளனர்.

இவர்களின் விருப்பத்திற்கு நேர்மாறாகத்தான் இங்குள்ளவர்கள் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி தங்களைத் தாங்களே ஏமாற்றி வருகிறார்கள்.

இங்கே இந்தக் கோரிக்கை வைப்பதால் அங்குள்ள இலங்கைத் தமிழர்கள்மீது அடக்குமுறை அதிகரிக்கத்தான் செய்யும். சிங்களர்களின் கோபம் தமிழர்களுக்கு எதிராகத் திரும்பும்பட்சத்தில் ராஜபக்சேஅரசு அதை வேடிக்கை பார்க்குமே தவிர, தமிழர்களைப் பாதுகாக்காது.

திராவிடநாடு கேட்டு அண்ணாதுரை போராடினார். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்றெல்லாம் வாதங்களை எடுத்து வைத்தார். இந்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அதை அடக்கி விட்டது.

திராவிடநாடு கோரிக்கையை நாங்கள் கைவிடுகிறோம், ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியேதான் உள்ளன என்று அண்ணா அந்தர்பல்டி அடித்ததை நாம் மறந்துவிட முடியாது. காரணங்கள் இருந்தாலும் அதைக் கேட்டுப்பெற முடியாத அளவிற்கு அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் அது கைவிடப்பட்டது. தனிநாடு கோரிக்கைக்கு இதுதான் முடிவாகும்.

ஆந்திராவை இரு மாநிலங்களாகப் பிரிப்பதற்கே பல உயிர்களைப் பலிகொடுத்து போராட வேண்டியிருக்கிறது. இன்னும் தெலுங்கானா உருவானபாடில்லை.

பாகிஸ்தான் பிரிவினையின் போது இருநாடுகளையும் வெள்ளையர்களே பிரித்துத் தந்துவிட்டு சென்றதால் பாகிஸ்தான் சாத்தியமானது. அவ்வாறு செய்யாமல் அவர்கள் சென்றிருந்தால் இந்த இருநாடுகளும் ஒரே நாடாகத்தான் இன்றுவரை இருந்திருக்கும்.

பங்களாதேஷ் நாடானது முஜிபுர்ரஹ்மானின் அவாமிலீக் கட்சியின் போராட்டங்களாலும், கடும் பதிலடிகளாலும் மட்டுமே உருவானதல்ல. அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி இந்திய ராணுவத்தை அனுப்பியதால்தான் கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷாக மாறியது.

பாலஸ்தீனம் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்று சுதந்திரநாடாக ஐநாவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்றால், அவர்கள் தங்கள் மண்ணுக்கு வெளியே வேறுநாடுகளில் எந்தத் தாக்குதலிலும் ஈடுபடவில்லை என்பதும், முழு இஸ்ரேலும் பாலஸ்தீனியர்களிடத்திலிருந்து பிடுங்கப்பட்டது என்பதால் ஏற்பட்ட அனுதாபமும் காரணமாகஇருந்தது.

இது போன்ற எந்தச் சாதகமான அம்சமும் இலங்கையில் இல்லாத போது, இங்கிருந்து தனிநாடு கேட்பதற்கு நிகரான அறியாமை வேறு எதுவும் இருக்க முடியாது.

அடுத்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அபத்தமான ஒன்றே. அமெரிக்கா தீர்மான நகலை வெளியிட்டு, அதன் நகலை வாசித்துப் பார்த்துவிட்டு இப்படியான கோரிக்கையை தமிழீழ ஆதரவாளர்களும் மாணவர்களும் வைக்கவில்லை.

மனிதஉரிமை மீறல்களிலும், போர்க்குற்றங்களிலும் முதல்இடத்தில் உள்ள அமெரிக்காவைப் பற்றி இங்குள்ள அரசியல்கட்சித் தலைவர்களுக்கு எந்த அறிவும் இல்லை என்று தான் நமக்குத் தோன்றுகிறது.

தனது ஆதாயத்திற்காக உலகநாடுகளை மிரட்டுவதும், காரியம் சாதித்துக் கொள்வதும் அமெரிக்கவிற்கு கைவந்த கலையாகும். தீர்மானம் கொண்டு வரப்போகிறோம் என்று பயம்காட்டி புரோக்கர் சுப்பிரமணியசாமி மூலம் அமெரிக்காவுக்குச் சாதகமாகப் பேசவேண்டியதைப் பேசிமுடிக்கத்தான் அமெரிக்கா இந்த நாடகத்தை நடத்தியது.

இலங்கை அரசுடன் அரசியல் புரோக்கர் மூலம் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதால், உப்புசப்பு இல்லாத தீர்மானத்தைக் கொண்டு வந்து தமிழகப் போராளிகள் அனைவர் மீதும் கரியைப்பூசி விட்டது. ராஜபக்சே அரசு தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்தத் தீர்மானம் உள்ளது.

ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக்கி அவரைத் தூக்கில் போடப் போகிறோம் என்ற தமிழகத் தலைவர்களின் கனவு முற்றிலும் கலைந்து விட்டது. இப்போது அனைவரும் அந்தர்பல்டி அடித்து, அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியஅரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றுபுரண்டு பேசுகிறார்கள்.

ஒரு தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் கூறுவதற்கு முன் அந்தத் தீர்மானத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச பொறுப்புணர்வுகூட இவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

அறிவுஜீவிகளுக்கும், ஊடகங்களுக்கும் கூட இந்த அறிவு இல்லாமல் போய்விட்டது.

அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் ஒன்றே தனிஈழத்தைப் பெற்றுத்தரும், ராஜபக்சேயைத் தண்டிக்கும் என்று சிறுபிள்ளைத்தனமாக ஊடகங்களில் முகம் காட்டியவர்கள் வெட்கமின்றி பல்டி அடிக்கின்றனர்.

எமது கணிப்பு பிரகாரம், தமிழகமே கொந்தளித்தாலும், மத்திய அரசு இலங்கைக்கும் ராஜபக்சேவுக்கும் எதிராக ஒன்றுமே செய்யாது. ராஜிவ்காந்தி படுகொலைக்கு கணக்கு தீர்ப்பதற்காக எந்த விலையையும் காங்கிரஸ் தமிழகத்தில் கொடுக்கும். ராஜபக்சேவுக்கு வலிக்காத வகையில் தடவிக் கொடுக்கும் மத்திய அரசின் நிலையில் எந்தமாற்றமும் இருக்காது.

Saturday, February 09, 2013

சம்பிக்க ரணவக்கவின் சரித்திரப் புரட்டு!



இலங்கை முஸ்லிம்கள் மீது பெரும் பான்மை சமூகத்தினர் வெறுப்புக் கொள்ளும் விதத்தில் அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களில் அதிகமானனோர் நல்ல மக்களாவர். ஒரு சின்னஞ் சிறு குழுவினர் முஸ்லிம்கள் மீது வெறுப்பேற்றும் வண்ணம் அவதூறு பரப்பி முஸ்லிம்களுக்கு எதிராக நாடு தழுவிய இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

மஸ்ஜித்களுக்கு எதிராகச் செயற்படுதல், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் சிக்கலை உண்டுபண்ணுதல் என இவர்களது தேசத் தூரோகச் செயல்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவதை அண்மைய நிகழ்வுகள் மூலம் நாம் அறியமுடிகின்றது.

இந்த நாட்டின் எதிர்க்கட்சியினரும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பேசி சிங்கள இனவாத சக்திகளைக் கவரும் மனநிலைக்கு மாறியுள்ளனர். இஸ்லாமிய ஷரீஆ சட்டம் காட்டுமிராண்டித்தனமானது என்றும் முஸ்லிம்கள் விரும்பாத இன்னும் சில கருத்துக்களையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசிய பேச்சுக்கள் இதனையே உணர்த்துகின்றன. எனவே, இத்தகைய அவதூறுகளுக்கு எதிராக முஸ்லிம் சமூகம் ஓரணியில் திரண்டு நல்லெண்ணம் வளர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

ஜாதிக ஹெல உருமயவின் சிரேஷ்ட உறுப்பினரும் தற்போதைய பொதுஜன ஐக்கிய முன்னனி அரசாகங்கத்தின் அமைச்சருமான பாடலீ சம்பிக ரணவக்க எழுதியுள்ள “அல் ஜிஹாத், அல் கைதா இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் கடந்த காலம், தற்காலம், எதிர்காலம்” என்ற நூலில் பெரும் சரித்திரப் புரட்டைச் செய்துள்ளார்.

“வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களது சொத்துக்களை புலிகள் கைப்பற்றிக் கொண்டது போல் தப்பி வந்த அந்த முஸ்லிம்கள் புத்தளத்திலும் கல்பிட்டியிலும் உள்ள சிங்களவர்களது சொத்து, செல்வங்களைக் கைப்பற்றிக் கொண்டார்கள். (பக்கம் 278)”

இப்படி ஒரு அண்டப்புழுகை தனது நூலில் அமைச்சர் என்ற உயர் அந்தஸ்தில் இருந்து கொண்டு பதிவு செய்துள்ளார். புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் உண்ண உணவில்லாது அடுத்தகட்ட வாழ்க்கைக்கே வழிதெரியாமல் வந்தவர்கள். எப்படி சிங்கள மக்களது சொத்துக்களை அபகரித்தார்கள்? புலிகள் ஆயுத முனையில் முஸ்லிம்களை வெளியேற்றியது போல் சிங்கள மக்களை முஸ்லிம்கள் எதைக் கொண்டு வெளியேற்றினார்கள்? புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதை உலகமே அறியும்! சிங்கள மக்களது சொத்துக்களை முஸ்லிம்கள் அபகரித்தார்கள் என்று இவர் மட்டும்தான் சொல்கின்றார். அப்படி முஸ்லிம்கள் அபகரித்திருந்தால் சிங்களவர்கள் சும்மா இருந்திருப்பார்களா? பிரச்சினை வந்திருக்காதா? குறைந்த பட்சம் பொலீஸிலாவது முறைப்பாடு செய்யாமல் இருந்திருப்பார்களா? நமது கண்ணுக்கு முன்னால் நடந்த உண்மை நிகழ்வுகள் குறித்தே இப்படி பொய்யை அவிழ்துவிட்டவர் கடந்த காலம், எதிர்காலம் பற்றிப் பேசினால் எவ்வளவு பெரிய பொய்களையும், கற்பனைகளையும் வெளியிடுவார் என்பதை எவரும் எளிதாக யூகிக்கலாம்.

புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை ஒத்துக்கொள்ளும் இவர், புலிகளுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் தொடர்பிருந்ததாக சித்தரிக்க முற்படுவது அடுத்த அண்டப்புழுகாகும்.

தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் புலிகளுடன் இணையாமல் நாட்டுக்கு விசுவாசமாகவே நடந்து கொண்டனர். முஸ்லிம்கள் புலிகளுக்கு உதவாத காரணத்தினால்தான் வடக்கிலிந்து முழுமையாக விரட்டப்பட்டார்கள். இந்தத் தியாகத்தை சம்பிக்கவோ, அவர் சார்ந்த அமைப்பினரோ இந்த நாட்டுக்காக செய்திருப்பார்களா?

புலிகள் கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற முற்பட்டனர். அதற்காக காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை என முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். கடத்தல், கப்பம் கோரல், கொலை செய்தல் என எல்லா இன்னல்களையும் தாங்கிக் கொண்டு கிழக்கிலேயே முஸ்லிம்கள் வாழ்ந்தனர். அன்று முஸ்லிம்கள் உயிருக்குப் பயந்து வெளியேறியிருந்தால் புலிகளின் தமிழ் ஈழக் கனவு நனவாகியிருக்கும். பிரபா-கருணா பிரிவும் தவிர்க்கப்பட்டிருக்கும். இன்று வடகிழக்கு தனி நாடாக மாறியிருக்கும். முஸ்லிம்களது உயிர்த் தியாகத்தால்தான் இன்று இது ஒன்றுபட்ட ஒரு தனி தேசமாக திகழ்கின்றது. இந்தத் தியாகத்தைச் செய்த முஸ்லிம்களைத்தான் புலிகளுடன் சேர்ந்தவர்கள் என்றும் தேசப் பற்றில்லாதவர்கள் என்றும் சம்பிக்க சாடி வருகின்றார்.

இந் நாட்டில் புலிகள் நடாத்திய முக்கியமான பல தாக்குதல் சம்பவங்களுக்குப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பலரும் துணை போயுள்ளனர். பணத்துக்காக பல முக்கிய அதிகாரிகளே புலிகளுக்கு உதவியுள்ளனர். ஆனால், முஸ்லிம்கள் இத்தகைய ஈனச் செயல்களில் ஈடுபட்டதில்லை. ஒரு கட்டத்தில் “சிங்கள கொட்டியா” (சிங்களப் புலிகள்) என்ற சொல் பயன்படுத்தப்படும் அளவுக்கு சிங்கள மக்கள் சிலரது உதவி புலிகளுக்குக் கிடைத்துள்ளது. இப்படியிருக்க முஸ்லிம்களுக்குப் புலிகளுடன் தொடர்பிருந்ததாகவும் முஸ்லிம்கள் தேசத் துரோகிகள் என்றும் சம்பிக்க கூறுவது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.

கடாபி இலங்கை வந்த போது இலங்கையை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்று பேசினாராம். கடாபி நாற்பது வருடம் ஆட்சி செய்த லிபியாவையே அவர் இஸ்லாமிய நாடாக மாற்றாத போது இலங்கையை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்று அவர் எப்படிப் பேசுவார் என்றெல்லாம் யோசிக்காமல் சம்பிக்க போன்றவர்கள் கிணற்றுத் தவளைகள் போல் சிந்திப்பது கேள்விக்குறியாயுள்ளது.

முஹம்மத் இப்னு காஸிம் இந்தியா வந்த போது 5000 பிக்குகளைக் கொன்றார் என்றொரு தகவலையும் அவர் குறிப்பிட்டு முஸ்லிம்கள் மீது வெறுப்பேற்றுகின்றார். இந்தியாவை முஸ்லிம்கள் 800 வருடங்கள் ஆண்டுள்ளார்கள். இருந்தும் அங்கே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக மாறவில்லை. இந்தியா வந்த முஹம்மத் இப்னு காஸிம் பிக்குகளைக் கொன்று குவித்திருந்தால் ஆலயங்களை அழித்திருந்தால் 800 வருடங்கள் இது நடந்திருந்தால் எச்ச சொச்சங்கள் கூட இல்லாத அளவுக்கு அங்கு சிலை வணக்கம் அழிக்கப்பட்டிருக்குமே! ஏன் அப்படி நடக்கவில்லை? என்று இந்த சிந்தனைச் சூனியங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

உண்மை என்னவென்றால், இந்தியாவை ஆண்ட முஸ்லிமல்லாத மன்னர்களை விட முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்திய மக்களுடன் நல்ல முறையில் நடந்து கொண்டதால்தான் சிறு தொகையினராக இருந்த முஸ்லிம்கள் பெரும்பான்மை மக்களை 800 வருடங்கள் ஆள முடிந்தது. இல்லையென்றால் பிரிட்டிஷை விரட்டியதை விட வேகமாக முஸ்லிம் ஆட்சியாளர்களை இந்திய மக்கள் விரட்டியிருப்பார்கள். ஆயுத பலத்தை விட ஆள்பலமே மேலோங்கியிருந்த அந்தக் காலகட்டத்தில் முஸ்லிம்களது ஆட்சியை அவர்கள் அங்கீகரிக்கும் அளவுக்கு முஸ்லிம் மன்னர்கள் நாட்டு மக்களுடன் நல்ல முறையில் நடந்து கொண்டனர் என்பதுதான் உண்மை வரலாறாகும்.

இஸ்லாம் பரவுவதற்கு காமமும் பணமும் தான் காரணம் என்று வக்கிர வார்த்தையால் தாக்கியுள்ளார் சம்பிக்க!

“சிலருக்கு அரபிகளது வியாபார மற்றும் காம கலாசாரத்துடன் இணைவதற்கு பாரம்பரிய பௌத்த மதம் தடையாக இருந்தது. உதாரணமாக மலாயாவின் அரசன் (1400 ஆம் வருடம்) பல மனைவியரை வைத்துக் கொண்டு காம சுமகம் பெற பௌத்தம் தடையாக இருந்ததனால் அவன் இஸ்லாத்திற்குள் சென்றான். இஸ்லாம் அப்பகுதிகளில் அப்படித்தான் பரவியது.” (பக்கம் 55)

இது அப்பட்டமான பொய் என்பதற்கு நடைமுறை உலகே சான்றாகும். சில பௌத்த துறவிகள் துறவி ஆடையை அணிந்து கொண்டே காம லீலைகளில் ஈடுபட்ட நிகழ்வுகள் பத்திரிகைகளில் வெளிவருகின்றன. இப்படியிருக்கும் போது ஒரு மன்னன் காமத்துக்காக மதத்தை மாற்ற வேண்டுமா? சம்பிக்க கூட பல பெண்களுடன் வாழ்க்கை நடாத்த விரும்பினால் சட்டபூர்வமாக திருமணம் செய்யாமல் எத்தனை பெண்களுடனும் வாழ எந்த நாட்டிலும் தடையில்லை. இதிலிருந்து இது இவரது கீழ்த்தரமான வக்கிர புத்தியால் எழுந்த கற்பனை என்பது வெள்ளிடை மழை.

இவர் சொல்வது உண்மையென்றால் இஸ்லாத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் பலதார மணம் புரிந்து வாழ்ந்திருக்க வேண்டும். அப்படியும் நடக்கவில்லை. இன்று ஐரோப்பாவில் வெகு வேகமாக இஸ்லாம் பரவி வருகின்றது. அங்கு காமத்துக்கு எந்தத் தடையும் இல்லை. ஆட்டம், பாட்டு, கூத்து, ஆபாசம் என்று அலைபவர்களைக் கூட இஸ்லாம் கவருகின்றது. அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்னர் பழைய காம வாழ்க்கை வாழ முடியாது என்று நன்றாகத் தெரிந்திருந்தும் வருகின்றார்கள்! இப்படியிருக்க சம்பிக்க கூறும் கூற்று எவ்வளவு பெரிய பொய்யென்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

காமத்தைக் காட்டி மதத்தைப் பரப்புவதென்றால் முஸ்லிம்களும் ஆண்-பெண் வேறுபாடின்றி அரைகுறை ஆடையுடன் கலந்து கொஞ்சிக் குலாவும் மதக் கிரியைகளையும் அங்கீகரித்திருப்பர். வேறெந்த மதத்திலும் கடைப்பிடிக்கப்படாத அளவுக்கு ஆண்-பெண் கலப்பில்லாத, கவர்ச்சியான ஆடையமைப்பில்லாத ஆட்டம், பாட்டு, கூத்து போன்றவற்றை அங்கீகரிக்காத சமூகமாக முஸ்லிம் சமூகம் இருப்பதை நடுநிலை மக்கள் சிந்தித்துப் பார்த்து இவரின் கோர முகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இவர் தனது நூலில் அரபு மத்ரஸாக்கள், குர்ஆன் மத்ரஸாக்களைக் கூட தீவிரவாதத்தின் மையங்களாகச் சித்தரித்துள்ளார். இத்தகைய கருத்துக்கள் இனங்களுக்கு மத்தியில் தப்பெண்ணங்களை வளர்ப்பதினாலும் எதிர்காலத்தில் இனக்கலவரங்களுக்குக் காரணமாக அமைவதாலும் இது போன்ற கருத்துக்களையுடைய நூற்களை அரசு தடைசெய்ய வேண்டும்.

தேசிய ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் சீர்குலைக்க எத்தணிக்கும் இத்தகைய தேசத் துரோகக் குற்றவாளிகள் மீது நீதித்துறை தமது கவனத்தைத் திருப்ப வேண்டும்.

இவரது இந்த சிந்தனையை உள்வாங்கிய ஒரு குழு முஸ்லிம்களது கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் எனப் பிரச்சாரம் செய்து வருகின்றது. ஒரு கலவரத்தை உண்டுபண்ண சதி செய்து வருகின்றது. கல்விக் கூடங்களில் கூட சில நெருக்கடிகளை முஸ்லிம் மாணவர்கள் சந்திக்கும் இக்கட்டான நிலையும் ஏற்பட்டு வருகின்றது.

எனவே, முஸ்லிம் சமூகப் புத்திஜீவிகள், அரசியல் தலைமைகள் இது குறித்து நிதானமான தூரநோக்குப் பார்வையுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.

சம்பிக்கவின் இது போன்ற கருத்துக்கள் ஐம்பது அல்லது நூறு வருடங்களின் பின் சரித்திரமாக மாறலாம். இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் கூட இந்நூல் இனக்கலவரங்களை உண்டுபண்ணும். எனவே, இக்கருத்துக்களுக்கான மறுப்புக்களைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இது போன்ற நூற்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்து அதையும் ஒரு பதிவாக்க வேண்டியுள்ளது. இராமர் கோயிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது என்ற தவறான சரித்திரம்தான் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட அடித்தளமானது. இது போன்று எதிர்காலத்தில் இலங்கையில் பிரச்சினைகள் எழாமல் இருக்க மறுப்புக்களும் பதியப்பட வேண்டும். இது குறித்து முஸ்லிம் புத்திஜீவிகள் கவனம் செலுத்த வேண்டும் என பணிவாய் வேண்டிக் கொள்கின்றோம்…..

இவ்விடயத்தில் அனைத்துத் தரப்பினரையும் அல்லாஹ் ஒன்றிணைப்பானாக!

- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
– ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்

சிங்கள மொழி தெரிந்தவர்கள் இந்த கட்டுரையை மொழி பெயர்த்து சிங்களவர்கள் மத்தியில் பரப்ப வேண்டும். ஒரு பொய்யை இன்று பதிந்து விட்டால் இன்னும் 10 வருடங்களில் அது வரலாறாக பதியப்பட்டு விடும் கொடுமையை பல இடங்களில் பார்த்து வருகிறோம். சிங்கள மக்களுக்கு தேவையற்ற அச்சத்தை உண்டு பண்ணி குழப்பம் விளைவிக்க பலர் முயன்று வருகின்றனர். இந்துக்களும், முஸ்லிம்களும், கிறித்தவர்களும், பவுத்தர்களும் பகையை மறந்து நட்பு சூழல் உருவாவதை சில நாச காரா சக்திகள் விரும்புவதில்லை. அதற்கு பலியாகி விடாமல் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது.

--------------------------------------------------------------------

//நீங்கள் நினைப்பதுபோல் கிறிஸ்தவ பாதிரி எவரும் எரித்துக் கொல்லப்படவில்லை. நீங்கள் குறிப்பிடுவது ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு வந்து வனவாசிகளிடையே மத மாற்றம் செய்வதில் ஈடுபட்டவர் தமது மகனுடன் வண்டிக்குள் உறங்குகையில் தீப்பற்றி எரிந்த சம்பவம். அவரது பிரசார வேனில் வெப்பத்தைத் தணிப்பதற்காகக் கூரையிலும் வேனுக்குள் தரையிலும் வைக்கோல் பரப்பப்பட்டிருக்கும்.//

இவ்வளவு அப்பட்டமாக நடந்த ஒரு கொலையை மலர் மன்னன் என்ற ஒருவரால்தான் விபத்து என்று சமாளித்து எழுத முடியும். இதையே மாற்றி எழுதுபவர்கள் 2000 வருடங்களுக்கு முன்பு எந்த மாதிரியான சரித்திர புரட்டுகளை அரங்கேற்றியிருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. வாழ்க பாரதம். வெல்க மலர்மன்னனின் சமாளிப்புகள்.:-(

திண்ணையில் மலர் மன்னன் எழுதிய ஒரு கருத்துக்கு நான் இட்ட பின்னூட்டமே இது. இந்துத்வா வாதிகள் எந்த அளவு தங்கள் தவறை மறைக்க எவ்வளவு பெரிய பொய்களை வேண்டுமானாலும் அரங்கேற்ற துணிய மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

அடுத்து அப்சல் குருவை தூக்கில் போட்டாகி விட்டது. அவன் உண்மையிலேயே எனது நாட்டின் பாராளுமன்றத்தை தாக்க வந்திருந்தால் தூக்கில் போட மிக தகுதியான நபரே. ஆனால் சமூக ஆர்வலர்கள் சொல்வது போல் இது பிஜேபி செய்த அரசியல் நாடகம் என்றால் இதற்கான விலையை இந்த உலகத்தில் பெறா விட்டாலும் மறுமையில் பெற்றுக் கொள்வார்கள். நாம் அனைவரும் கண்டிப்பாக அங்கு சமூகமளித்திருப்போம்.

----------------------------------------------------------

அப்சல் குரு மீதான விசாரணை மற்றும் நீதிமன்ற தீர்ப்பு குறித்து அருந்ததி ராய் எழுப்பிய பதிமூன்று கேள்விகள்.

http://www.guardian.co.uk/world/2006/dec/15/india.kashmir

கேள்வி 1 : இந்த தாக்குதல் நடப்பதற்கு பல மாதங்கள் முன்பிருந்தே பாராளுமன்றத்தின் மீது பெரும் தாக்குதல் நடக்க விருக்கிறது என்று காவல்துறையும் அரசாங்கமும் சொல்லிக் கொண்டேயிருந்தது. 12 டிசம்பர் 2001 அன்று பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஒரு தனிப்பட்ட கூட்டத்தில் பாராளுமன்றம் மீது பெரும் தாக்குதல் நடக்கவிருக்கிறது என்று கூறினார். டிசர்பர் 13 அன்று பாராளுமன்றம் தாக்கபட்டது. இத்தனை எச்சரிக்கைகள், பாதுகாப்பு நடைமுறைகள் அங்கு இருந்தபோதும், எப்படி வெடிப் பொருட்களுடனான அம்பாசிடர் கார் பாராளுமன்ற வளாகத்துல் நுழைந்தது?


கேள்வி 2 : இந்த தாக்குதல் நடந்த சில தினங்களில் டெல்லி காவல்துறை இந்த தாக்குதல் ஜைஸ்-ஏ-முகம்மது மற்றும் லக்சர் ஏ தோய்பா ஆகிய இரு இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை என்று அறிவித்தது. இந்த தாக்குதலை 1998 காந்தகார் விமான கடத்தலில் ஈடுபட்ட முகமது தான் செய்தார் என்று காவல்துறை மிக துள்ளியமாக தெரிவித்தது. (இதனை பின்பு சிபிஐ மறுத்தது) இவைகளில் எவையும் நீதிமன்றத்தில் நிறுபிக்கபடவில்லை. இப்படி கூறிய காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவிடம் என்ன சான்றுகள் இருந்தது?

கேள்வி 3: இந்த மொத்த தாக்குதல்களும் பாராளுமன்றத்தின் கண்கானிப்பு காமிராக்களில் பதிவாகியிருந்தது. காங்கிரஸ் எம்பி கபில் சிபில் அவர்கள் இந்த தாக்குதல்களில் பதிவுகள் எல்லாம் பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் காட்டப்பட வேண்டும் என்றார். அவரது வாதத்தை ராஜ்ய சபாவின் துணை தலைவர் நஜ்மா ஹெப்பதுல்லா ஆதரித்தார், மேலும் இந்த தாக்குதல்கள் தொடர்பான விபரங்கள் அனைத்திலும் பல குழப்பங்கள் உள்ளது என்றார் அவர். பாராளுமன்ற காங்கிரஸ் அவை தலைவர் ப்ரியரஞ்சன் தாஸ்முன்சி அவர்கள் , “நான் அந்த காரில் இருந்து ஆறு பேர் இறங்கியதை பார்த்தேன், ஆனால் ஐந்து பேர் மட்டுமே சுட்டுக் கொல்லப்பட்டனர், கண்கானிப்பு காமிராவின் பதிவில் ஆறு பேர் இறங்கியது பதிவாகியுள்ளது.” என்றார். தாஸ்முன்சி கூறுவது சரி என்றால் ஏன் காவல்துறை ஐந்து பேர் தான் இருந்தார்கள் என்று கூறுகிறது? அப்படி என்றால் யார் அந்த ஆறாவது நபர்? அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்? அந்த கண்கானிப்பு காமிராவின் பதிவு ஏன் இந்த வழக்கு விசாரனையில் சாட்சியமாக அளிக்கபடவில்லை? இந்த பதிவை ஏன் பொதுமக்கள் பார்வைக்கு அவர்கள் வெளியிடவில்லை?

கேள்வி 4 : இப்படியாக சில கேள்விகளை பாராளுமன்ற் உறுப்பினர்கள் எழுப்பியவுடன் ஏன் அவை ஒத்திவைக்கபட்டது?

கேள்வி 5 : டிசம்பர் 13 தாக்குதல் நடந்து சில தினங்கள் கழித்து இந்திய அரசு இந்த தாக்குதல்களில் பாகிஸ்தானின் தலையீடு இருப்பது தொடர்பாக மறுக்கமுடியாத சாட்சியஙக்ள் உள்ளது என்று அறிவித்தது. அதனால் உடன் இந்திய பாகிஸ்தான் எல்லையில் ஐந்து லட்சம் ராணுவ துருப்புகளை அனுப்பினார்கள். பெரும் அணு ஆயுத போர் சூழல் நோக்கி இந்திய துணை கண்டமே நகர்த்தப்பட்டது. அப்சலை சித்தரவதை செய்து பெற்ற வாக்குமூலங்கள் (இந்த வாக்குமூலங்களை கூட அதன் பின் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது) தவிர்த்து அப்படி எந்த அசைக்க முடியாத சாட்சியம் அரசிடன் இருந்தது?

கேள்வி 6 : எல்லை நோக்கிய இந்த படைகள் அனுப்புதல் என்பது தாக்குதல்களுக்கு வெகு முன்பாகவே தொடங்கப்பட்டதா?

கேள்வி 7: இந்த ராணுவ படைகள் எல்லையில் குவிப்பு ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்தது, அதற்கு மொத்தம் எவ்வளவு செலவானது? இந்த நடவடிக்கைகளில் எத்தனை ராணுவ வீரர்கள் பலியானார்கள்? கண்ணிவெடிகள் கையாண்டதில் மொத்தன் எத்தனை ரானுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் இறந்தார்கள்? தொடர் ராணுவ வாகணங்கள் இந்த கிராமங்களில் வழியே சென்றதால் எத்தனை கிராமவாசிகள் தங்களின் வீடுகளை, வயல்களை இழந்தார்கள்? இந்த விவசாயிகளின் வயல்களில் எத்தனை கண்ணிவெடிகள் புதைக்கபட்டது?

கேள்வி 8 : ஒரு குற்றப்புலனாய்வில் சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த தடையங்கள் எவ்வாறு குற்றம் சாட்டபட்டவருடன் தொடர்புடையவை என்பதை நிறுவுவது காவல்துறையின் பணி. காவல்துறை எவ்வாறு அப்சல் குருவை வந்தடைந்தது? கிலானியின் வாக்குமூலங்களின் வழிதான் நாங்கள் அப்சல் குருவை நெருங்கினோம் என்றது சிறப்பு புலனாய்வு பிரிவு. ஆனால் கிலானியை கைது செய்வதற்கு முன்பாகவே ஸ்ரீநகர் காவல்துறை அப்சல் குருவை தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டது. எந்த வகையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அப்சல் குருவையும் டிசம்பர் 13 அயும் இனைத்தது?

கேள்வி 9 : அப்சல் குரு ஒரு சரணடைந்த தீவிரவாதி அவர் தொடர்ச்சியாக இந்திய ராணுவத்துடன் (STF-J&K)தொடர்பில் இருந்தவர் என்பதை நீதிமன்றமே ஆமோதித்தது, இந்திய ராணுவத்தின் நேரடி கண்காணிப்பில் இருந்த ஒருவர் எப்படி இத்தனை பெரும் தாக்குதல் நடவடிக்கையை திட்டமிட்டார்?

கேள்வி 10 : லக்சர் ஏ தோய்பா, ஜைஸ் ஏ முகம்மது போன்ற அமைப்புகள் இந்தியா மீது ஒரு தாக்குதலை தொடுக்க STF-ன் நேரடி தொரட்பில், கண்காணிப்பில் உள்ள ஒருவரை இந்த பெரும் சதியின் முக்கிய தொடர்பாளராக தேர்வு செய்யுமா?

கேள்வி 11 : தன்னிடம் தாரிக் என்பவர் முகமத் என்பவரை அறிமுகம் செய்து “இவரை நீ தில்லிக்கு அழைத்து செல்” என்று கூறியதாக நீதிமன்றத்தில் அப்சல் குரு தெரிவித்தார். தாரிக் காஷ்மீர் STF-ல் பணியாற்றியவர், தாரிக்கின் பெயர் காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளது. யார் இந்த தாரிக், அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்?

கேள்வி 13 : டிசம்பர் 19, 2001, தாக்குதல் நடந்து ஆறு தினங்கள் கழித்து மகாராஷ்டிரத்தின் தானே பகுதி காவல்துறை கண்கானிப்பாளர் எஸ்.எம்.சாங்காரி பாராளுமன்ற தாக்குதல்களில் கொல்லபட்ட ஒருவரை லக்‌ஷர் ஏ தோய்பாவின் முகமத் யாசின் ஃபதே என்று அடையாளம் காண்பித்தார், இவரை மும்பையில் நவம்பர் 2000ல் கைது செய்த்தாகவும், கைது செய்தவுடன் முகமத்தை ஜம்மு காஷ்மீர் காவல்துறை வசம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்தார். இதற்கு சான்றாக அவர் மிக விரிவான விவரனைகளையும் அளித்தார். காவல்துறை கண்காணிப்பாளர் சாங்கிரி கூறுவது சரி என்றால் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒருவர் எப்படி பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டிருக்க முடியும்? அவர் சொல்வது தவறு என்றால், முகமத் யாசின் இப்பொழுது எங்கே இருக்கிறார்?

கேள்வி 13 : பாராளுமன்ற தாக்குதலில் கொல்லபட்ட ஐந்து தீவிரவாதிகள் யார் என்பது பற்றிய விபரங்கள் ஏன் இன்றுவரை வெளியிடப்படவில்லை?

இந்த கேள்விகள் எல்லாம் மிக நியாயமான கேள்விகள், இந்த பாராளுமன்ற தாக்குதல்கள் தொடர்பான அருந்ததி ராய் அவர்களின் முழு கட்டுரையை வாசித்தால் இந்த விஷயங்கள் இன்னும் குவிமையம் பெறும். இவை பெரும் ஆய்வு செய்து கேட்கபட்ட கேள்விகள் அல்ல மாறாக அந்த நேரத்தில் இந்திய பத்திரிக்கைகள் மற்றும் அரசியல் வாதிகளில் பேச்சுகளை தொடர்ந்து கேட்கும் எவருக்கும் இந்த கேள்விகள் கொஞ்சம் யோசித்தாலே வருபவையே. பாராளுமன்ற தாக்குதல் தொடர்பான இந்த கேள்விகளுக்கு இன்று வரை எந்த பதிலும் இல்லாமல் அவை இந்தியாவின் மீது மிதந்தவண்ணம் உள்ளது, இன்று அந்த கேள்விகள் எல்லாம் ஒரு கருமேகமாக தில்லியின் திகார் சிறைச்சாலை மீது ஒரு சாரல் மழையாக பொழியக்கூடும்.

http://www.amuthukrishnan.com/index.php?option=com_content&view=article&id=259%3A-13--13-&catid=22%3A-1&Itemid=52

Friday, September 21, 2012

இலங்கை கிழக்கு மாகாண முதல்வராக அப்துல் நஜீப்.ஏ.மஜீத்!



இலங்கையில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த நஜீப் ஏ.மஜீத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த ஒரு வார காலமாக ஆளும் கூட்டணிக்கும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கும் இடையே நடந்த இழுபறியுடன் கூடிய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை அவரது தேர்வு முடிவானது.


இந்தப் பேச்ச்சுவார்த்தைகளுக்குப் பின்னர்,கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் இந்நிகழ்வு நடைபெற்றது. மாகாண சபை முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட 25 வருட காலத்தில் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார்

நடை பெற்று முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெற்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி மீண்டும் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்கின்றது.



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்குமிடையில் இடம் பெற்ற பேச்சுவார்ததையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே நஜீப் ஏ மஜீத் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி வேட்பாளர் பட்டியலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தபட்ட இவர் 11,726 விருப்பு வாக்குகளைப் பெற்று மாகாண சபைக்கு உறுப்பினராக தெரிவானார்.

வளமான மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்றுவேன் என கிழக்கு மாகாண புதிய முதலமைச்சரான நஜீப் ஏ.மஜீத் தெரிவித்தார்.

"ஏனைய எட்டு மாகாணங்களை விட வளமான மாகாணமாக கிழக்கு மாகாண சபை எதிர்காலத்தில் மாற்றப்படும். இதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்படவுள்ளேன்" என கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் மாகாண சபையிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள உறுப்பினர்களுடன் இணைந்து மாகாணத்தை கட்டியொழுப்ப உள்ளேன் என அவர் குறிப்பிட்டார்.

"அரசியலுக்கு நான் புதியவனல்ல. கடந்த 1994ஆம் ஆண்டிலிருந்து நான் அரசியலில் ஈடுபட்டு வருகின்றேன். இதனால் கிழக்கு மாகாணத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும்" என முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாண புதிய முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை இரவு அமைச்சர் ஹக்கீமின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண முதலமைச்சராக அப்துல் நஜீப் ஏ. மஜீத்தின் பெயர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷாவினால் முன்மொழியப் பட்டபோது அதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக் கொண்டதன் பெயரில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்து, முஸ்லிம், கிறித்தவ, பவுத்த மக்கள் அனைவரையும் ஒன்றாக பாவித்து அந்த மக்களின் வாழ்வில் மேலும் அமைதியையும் அபிவிருத்தியையும் இந்த அரசியல் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். அன்று ஜனாதிபதி உமர் எவ்வாறு மாற்று மத நண்பர்களோடு நடந்து கொண்டார்களோ அதை முன்னுதாரணமாக வைத்து இவர் தனது ஆட்சியை நடத்தினால் கண்டிப்பாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு சீரமையும். அதுதான் நமக்கு வேண்டியது.

-தகவல் உதவி பிபிசி

--------------------------------------------------

ஒரு முறை நஜ்ரான் தேசத்திலிருந்து கிறிஸ்தவக் கூட்டமொன்று நபி அவர்களைக் காண வந்தது. பள்ளியில் இருந்த நபி அவர்களைக் கண்டு பேசிவிட்டு தங்கள் பிரார்த்தனையை நிறைவுற்றுவதற்காக வெளியில் செல்ல முனைந்த சமயம், நீங்கள் உங்கள் பிரார்த்தனையை இந்தப் பள்ளியிலேயே நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கூறினார்கள் என்றால் மாற்று மதத்தவருக்கு எத்தகைய கண்ணியம் கொடுக்கின்றது இஸ்லாம் என்பதை சொல்லத் தேவை இல்லை.

இதுபோன்றே மற்றொரு சந்தர்ப்பத்தில் தன்னுடைய தொழுகையை வெளியே நிறைவேற்றிக் கொண்டிருந்த கலீபா உமர் அவர்களை சர்ச்சுக்குள் வந்து நிறைவேற்றிக்கொள்ளுமாறு பாதிரியார் அழைக்க "வேண்டாம், நான் உள்ளே வந்து என்னுடைய தொழுகையை நிறைவேற்ற, அதன் விளைவாக இந்த சர்ச் நாளை பள்ளி வாயிலாக முஸ்லிம்களால் ஆக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்" என்று மறுமொழி கூறினார்கள் என்றால் எத்தகைய கண்ணியத்தையும், பெருந்தன்மையையும் இஸ்லாம் போதிக்கின்றது என்பதை அறியலாம்.

அதோடு மட்டுமில்லாமல் 2:256 வசனம் இறக்கப்பட்ட வரலாற்றை அறிந்து கொண்டால் இஸ்லாத்தின் உண்மை நிலை இன்னும் தெளிவாகும்.

அன்ஸார்களில் ஸாலிமுபின் அல்ஃபு என்னும் கோத்திரத்தில் ஒருவருக்கு இரு குமாரர்கள் இருந்தார்கள். அவ்விருவரும் கிறிஸ்தவர்களாயிருந்து கொண்டிருந்தனர். தாம் முஸ்லிமாயிருந்து, மக்கள் இருவரும் கிறிஸ்தவர்களாயிருந்து கொண்டிருந்தனர். தாம் முஸ்லிமாயிருந்து, மக்கள் இருவரும் கிறிஸ்தவர்களாயிருப்பது அவருக்கு விருப்பமில்லாமல் இருந்தது. நபி அவர்களிடம் வந்து "நான் எனது மக்கள் இருவரையும் கிறிஸ்தவ நிலையிலிருந்து மாற்றி பலவந்தப்படுத்தி முஸ்லிம்களாக்க விரும்புகிறேன். இவ்வாறு நான் செய்வது பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்" என்று கேட்டார். அப்போதுதான் “மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை” என்ற இறைவசனத்தை ஓதிக்காட்டி, அவர்கள் அவ்வாறு செய்வதை நபி அவர்கள் தடுத்துவிட்டார்கள். ஒரு ஆட்சித் தலைவராக இருக்கும் நபி அவர்கள் எந்த அளவு மென்மையான போக்கோடு நடந்து கொண்டனர் என்பதை இதிலிருந்து அறியலாம்.

'இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது.'
-குர்ஆன் 2:256

---------------------------------------------




Tuesday, September 11, 2012

இலங்கை தேர்தல் முடிவுகள் தரும் படிப்பினை!

இலங்கை கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரை எவருக்கும் அருதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 19 இடங்கள் பெற்றாலே ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில் தற்போது எவருமே இந்த இடங்களை பெறவில்லையாதலால் கூட்டணி ஆட்சியே நடைபெறும் என்று தெரிகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 14 இடங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 இடங்களையும் சேர்த்து 21 இடங்கள் ஆகின்றன. தற்போது பேச்சு வார்த்தை நடந்து வந்தாலும் இந்த கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது. முதல்வராக தமிழ் முஸ்லிம் வருவாரா? அல்லது தமிழ் இந்து வருவாரா என்பதே நம் முன் உள்ள கேள்வி. யார் வந்தாலும் ஒரு ஸ்திரமான ஆட்சியமைத்து அந்த மக்கள் நிம்மதியான வாழ்வை தொடரட்டும். விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற சந்திரகாந்தன் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது மக்கள் தீவிரவாத்தையும் தனி நாட்டு கோரிக்கையும் ஆதரிக்க வில்லை என்றே தெரிகிறது.

எனவே தனி நாடு கோரிக்கையை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கை விட்டு தேசிய நீரோட்டத்தில் கலந்து தமிழ் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும். இதனையே பெரும் பான்மையான தமிழ் மக்களும் விரும்புவதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தழிழர்கள் அனைவரும் இந்து முஸ்லிம் கிறித்தவம் நாத்திகம் என்று பிரிந்து கிடக்காமல் ஒரு குடையின் கீழ் வந்தால் மேலும் பல நன்மைகள் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்துக்கும் கிடைக்கும். இது நடைபெறுமா என்பதை வருங்காலங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள 35 பேரில் 15 பேர் தமிழ் முஸ்லிம்கள்.

இந்து தமிழர்கள் 12 பேரும் சிங்களவர்கள் 8 பேரும் இம் முறை மாகாண சபைக்கு இன ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட 11 வேட்பாளர்களில் முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மட்டுமே இம்முறை வெற்றி பெற்றுள்ளார்.

தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தேர்தல் நேரங்களில் சற்று பதட்டமாக இருந்ததாகவும் இதனாலேயே பலர் வாக்களிக்க வராமல் இருந்து விட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவின் ஆபாச கார்ட்டூனை வரைந்து சிங்கள ஊடகத்துறை தனது கோபத்தைக் காட்டியுள்ளது. சிங்கள பத்திரிக்கைகள் எந்த அளவு தரம் தாழ்ந்து சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு இவை சிறந்த எடுத்துக் காட்டுக்கள். தமிழக முதல்வரின் பல நடவடிக்கைகளில் எனக்கு நிறைய மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் ஆபாச கார்ட்டூன் போன்ற ஒரு அருவறுக்கத் தக்க செயலை வன்மையாக நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும்.

----------------------------------------------------------

பிபிசி யின் தமிழோசை சங்கரண்ணா மறைந்தார்!




நான் படிக்கும் காலங்களில் சிறந்த பொழுது போக்குகளில் ஒன்று லண்டன் தமிழோசையை தினமும் கேட்பது. அப்பொழுதே பிபிசிக்கு கடிதம் எழுதி அதை பிபிசியில் படித்தபோது இனம் புரியாத ஆனந்தத்தில் தவழ்ந்தேன். சென்ற ஞாயிறன்று அவர் மறைந்து விட்டார். கணீரென்ற குரலில் அவரது ஓசை இன்றும் எனக்கு கேட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது ஆனந்தி, விமல் சொக்க நாதன் என்று பலர் வந்தாலும் அவரது நிர்வாகத்தில் தமிழோசை மிக சிறப்பாக செயலாற்றி வந்தது.

தமிழக செய்திகளாகட்டும். உலக செய்திகளாகட்டும். அனைத்தையும் அழகாக வாசித்து, பல கதம்ப நிகழ்ச்சிகளையும் தந்து அரை மணி நேரம் போனதே தெரியாத அளவுக்கு நிகழ்ச்சியை கொண்டு செல்வார். எனது சிறு வயதில் பல உலக விஷயங்களை தெரிய வைத்தது பிபிசி தமிழோசை என்றால் மிகையாகாது. நாதஸ்வர மிருதங்க ஒலிகளுக்கிடையே இவரது குரலும் சேர்ந்து வரும் அன்றைய நாட்களை மறக்க முடியாது. இருக்கும் ஒரு மர்ஃபி ரேடியோவில் யார் கேட்பது என்பதில் என் தம்பி தங்கைக்குள் முன்பு நிறைய சண்டைகளும் வந்துள்ளது. :-)


அவரது குரலை சற்று நாமும் கேட்போம். இனி பிபிசி தரும் செய்தியையும் பார்ப்போம்.


தமிழோசையின் முன்னாள் துறைப் பொறுப்பாளரும் பிரபல ஒலிபரப்பாளருமான ஷங்கரன் சங்கரமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை லண்டன் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.

அந்தக் கம்பீரமான குரலை தமிழோசையின் நீண்ட நாள் நேயர்கள் மறந்திருக்க முடியாது.
சுமார் இரண்டரை தசாப்தங்கள் தமிழோசை மூலமாக வானலைகளில் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலிருந்தும் தமிழோசையைக் கேட்டு வந்த அந்தக்கால நேயர்களை மயக்கிய அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான ஷங்கரன் சங்கரமூர்த்தி மறைந்துவிட்டார்.
கடந்த சில மாதங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்த சங்கரமூர்த்தி, லண்டன் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரக மற்றும் இருதய நோயால் காலமானார். அவருக்கு வயது 82.
மறைந்த சங்கரமூர்த்தி, 1966லிருந்து 1991 வரை தமிழோசையில் பணியாற்றினார். அவர் பணியாற்றிய காலப் பகுதியில் தமிழோசை வாரமிருமுறை என்ற நிலையிலிருந்து வாரம் ஐந்து நாட்கள் ஒலிபரப்பு என்ற அளவுக்கு வளர்ந்தது.

தமிழோசையில் 1970கள் மற்றும் 80களில் பெரும்பாலும் சஞ்சிகை வடிவில் இருந்த நிகழ்ச்சி, சங்கரமூர்த்தியின் தமிழ்ப் புலமைக்கு ஒரு பெரிய களத்தைத் தோற்றுவித்துத் தந்தது.

ஆழ்ந்த தமிழ்ப் புலமை கொண்ட சங்கரமூர்த்தி, அந்தக் காலகட்டத்தில் ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் பிரபல நாடகங்கள் பலவற்றையும், கிரேக்க மகாகவி ஹோமரின் இதிகாசங்களான இலியட், ஒடிசி போன்றவற்றையும், தமிழில் கவிதை நாடக வடிவிலேயே தந்து, அவை நேயர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.

மற்றொரு பிரிட்டிஷ் நாடகாசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் புகழ் பெற்ற நாடகமான “பிக்மேலியன்” என்ற நாடகத்தையும் ஷங்கர் தமிழில் மொழிபெயர்த்து, அதில் தமிழ் திரைப்பட நடிகை ராதிகா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர அவரே சொந்தமாக பல வானொலி நாடங்கங்களையும் இயற்றியிருக்கிறார்.

வயோதிகத்தில்...



தமிழோசை நேயர்கள் அடிக்கடி கேட்ட அந்தப் பாடல் கூட அவர் இயற்றி சீர்காழி கோவிந்தராஜன் இங்கே லண்டன் வந்தபோது பாடி ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒன்றுதான்.
சங்கரின் மொழிபெயர்ப்புத் திறன் மற்றும் அவரது குரல் வளம், அவருக்கு பல்லாயிரக்கணக்கான விசிறிகளைப் பெற்றுத்தந்தது.

தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் அவர் பல முறை சென்று நிகழ்ச்சிகளைத் தந்திருக்கிறார்.

நன்றி: பிபிசி தமிழ் பிரிவு

------------------------------------------

டார்வினின் பரிணாமக் கொள்கை எந்த அளவு அபத்தமானது என்பதற்கு சகோதரர் ஆஷிக் கொடுத்திருக்கும் புதிய பதிவை இங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.



Wednesday, September 05, 2012

இலங்கை சுற்றுலா பயணிகளிடம் ஏனிந்த வெறுப்பு?



ராஜபக்ஷேவும் அவரது ராணுவமும் இலங்கை தமிழர்களை கொன்று குவித்ததை நாம் அவ்வளவு லேசில் மறந்து விட முடியாது. போரில் ஈடுபடாத அப்பாவி மக்களை குண்டுகள் வீசி அழித்ததையும் நாம் மறந்து விட வில்லை. அதற்கான சர்வதேச விசாரணைகள் நடந்து வருகின்றன. இன்றில்லா விட்டாலும் சில காலம் கழித்தாவது அவர்கள் தண்டனையை அனுபவிப்பார்கள். இது ஒரு புறம் இருக்க இறை வழிபாட்டுக்காக வந்த பல குடும்பங்களை விரட்டி அடிப்பதும் அவர்கள் வந்த வேனின் மீது கற்களை வீசி மிரள வைப்பதும் ஏற்புடைய செயல்தானா? இங்கு வந்த விளையாட்டு வீரர்களைக் கூட திருப்பி அனுப்பியது அறிவுடைய செயல்தானா? என்று சிந்திக்க வேண்டும்.



மீனவர்கள் இலங்கைப் படையினரால் தாக்கப்படுவதற்கு நாம் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறோம். கடல் மார்க்கத்தில் எல்லைகளை நிர்ணயித்து மிதவை பாலங்களை அமைத்தால் நம் மீனவர்கள் தவறாக இலங்கை கடற்பரப்பில் நுழையும் சாத்தியங்கள் தவிர்க்கப்படும். இரு நாட்டு கடற்கரை ரோந்து படையினரை நிறுத்தி இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வும் காண முடியும். இதை எலலாம் விடுத்து அப்பாவி மக்களை துன்புறுத்துவதால் ராஜபக்ஷேயின் ஆதரவை சிங்களவர் மத்தியில் இன்னும் அதிகமாக்குகிறோம் என்பதை ஏன் நாம் உணருவதில்லை. இது அங்குள்ள தமிழர்களுக்கு எதிர் மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை போராட்டக்காரர்கள் ஏன் உணருவதில்லை. இதைச் சொல்வதால் என்மீது சிலர் கோபப்படலாம். தூர நோக்கோடு சிந்தித்தால் எனது வாதத்தில் உள்ள நியாயத்தை பலரும் விளங்கிக் கொள்வர். என் இனமான தமிழ் இனம் மேலும் இன்னலுறுவதை காண சகிக்காமலேயே இந்த பதிவை எழுதுகிறேன். இனப் பற்று இருக்கலாம். அதுவே இன வெறியாக மாறி விடக் கூடாது. இதனால் சிறுபான்மையினராக இலங்கையில் அல்லல் படும் தமிழர்களை மேலும் சிக்கலில் ஆழ்த்துகிறோம். இதுவே நான் சொல்லிக் கொள்வது.

------------------------------------------------

இநத பிரச்னை சம்பந்தமாக கலைஞர் அவர்கள் விடுத்த அறிக்கையினை பார்ப்போம்..


இலங்கை தமிழர்களிடம், மிகுந்த அக்கறையோடு இருப்பதைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தமிழகம் வந்த இலங்கை விளையாட்டு வீரர்களை, தமிழக அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இதனால், தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், சுற்றுலாவாகவும், கோவில்களுக்கும் வந்த இலங்கைப் பயணிகள் மீது, தாக்குதல் நடந்துள்ளது. இலங்கை வெளியுறவு அமைச்சகம் விடுத்த வேண்டுகோளில், "இலங்கை மக்கள், தமிழகத்திற்கு சுற்றுலாவாகவும், மத ரீதியாகவும், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்காகவும், தொழில் ரீதியான பயிற்சிக்காகவும் செல்ல வேண்டாம்' என, அறிவுறுத்தியுள்ளனர். திடீரென, விளையாட்டு வீரர்களைத் திருப்பி அனுப்புவதும், தமிழகத்திற்கு வரும் இலங்கையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளைத் தாக்குவதும், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை, கெடுக்கக் கூடியது. இனப் படுகொலைக்கு எதிரான தீர்மானம், ஐ.நா., சபையின், ஜெனீவா மாநாட்டில் நிறைவேற்றப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, வரும், 14ம் தேதி, ஐ.நா., மனித உரிமைகள் கமிஷனர் நவிபிள்ளை தலைமையில், தொழில்நுட்பக் குழு ஒன்று, இலங்கைக்குச் செல்கிறது; போரில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கிறது.



மறு குடியமர்த்த மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும், போர் காரணமாக, அந்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழும், மக்களின் பிரச்னைகள் குறித்தும் ஆய்வு செய்கிறது. தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் குறித்து, இலங்கை அரசுக்கு ஆலோசனைகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த நேரத்தில், தேவையில்லாமல் ஒரு பிரச்னையை, நாமே உருவாக்குவது, இலங்கையிலே உள்ள தமிழர்களுக்கு, மேலும் இன்னலையும், மறுவாழ்வுப் பணியிலே குந்தகத்தையும் ஏற்படுத்தும் செயலாகவே அமைந்து விடும். தமிழக மக்கள், எந்த வகையிலான எதிர்மறை உணர்ச்சிகளுக்கும், தூண்டுதல்களுக்கும் இடம் கொடுத்து விடாமல், அமைதி காத்து, அரவணைப்போடு நடந்து கொள்ள வேண்டும். வாழை இலை, முள் மீது பட்டாலும் அல்லது முள் வாழை இலையில் பட்டாலும், சேதம் வாழை இலைக்குத் தான் என்பதை, மறக்கக் கூடாது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

---------------------------------------



தமிழ்நாட்டுக்கு மதவழிபாட்டுக்காக சென்றிருந்த இலங்கையர்கள் வன்முறையான முறையில் பலவந்தமாக திருப்பி அனுப்பப்பட்டதை கண்டித்து இலங்கை தலைநகர் கொழும்பு வர்த்தகர்கள் வியாழன்று கண்டனப் பேரணி நடத்தினார்கள். இதன் ஒருபகுதியாக தங்கள் வர்த்தக நிறுவனங்களையும் இவர்கள் திறக்கவில்லை.

பேரணியின் முடிவில் இலங்கைக்கான இந்திய தூதரிடம் வர்த்தகர்கள் சார்பில் கோரிக்கை மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அந்த மனுவில் இலங்கையிலிருந்து சென்ற விளையாட்டு அணியினர் தமிழ்நாட்டிலிருந்து பலவந்தமாக திருப்பியனுப்பப்பட்டதையும், இலங்கையிலிருந்து மத வழிபாட்டுக்காக சென்ற 184 யாத்திரிகள் வன்முறை கலந்த ஆர்பாட்டங்கள் காரணமாக பலவந்தமாக இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டதையும் தாங்கள் சுட்டிக்காட்டியிருந்ததாக கொழும்பு வர்த்தகர் சங்கத்தைச் சேர்ந்த பழனியாண்டி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த சம்பவங்களுக்கான தங்களின் கண்டனத்தை தெரிவித்திருந்ததுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கா வண்ணம் இந்திய அரசு தேவையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று கோரியிருப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தின் சில அரசியல் கட்சிகளின் இதுபோன்ற செயல்கள், இலங்கை தமிழர்களை, குறிப்பாக இந்திய வம்சாவளி தமிழர்களை எதிர்மறையாக பாதிக்கக்கூடும் என்றும் அச்சம் தெரிவித்தார் பழனியாண்டி.

மேலும், இத்தகைய தாக்குதல்கள் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தையும் பாதிக்கக்கூடும் என்றும், அந்த பாதிப்பு கொழும்பு வர்த்தகளில் பெரும்பான்மையாக இருக்கும் தமிழர்களையே அதிகம் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/09/120906_colomborally.shtml

------------------------------------------------------------

தின மலர் வாசகர் கடிதத்தில் வந்த ஒரு கடிதம்.
Sathiya Moorthi - Singapore,சிங்கப்பூர்
05-செப்-2012
இலங்கைத் தமிழர்களுக்கு இலங்கை ராணுவம் அநீதி இழைக்கிறது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வழியில்லை. இலங்கை அரசின் மீதான நமது கோபம் நியாயமானது. அதுக்கஹா சுற்றுலா வந்தவங்க மேலே அத கட்டுன்ன அதன் எதிவினை என்னவாக இருக்க முடியும்? சரியான நடவடிக்கையாக இருக்க முடியாது. இலங்கைத் தமிழர் மீது மிக வன்மையான தாக்குதல் நடைபெற்ற நாளில், இலங்கை கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் விளையாடியது. அவர்களைத் திருப்பி அனுப்பவில்லை. இந்திய அணி இலங்கையில் விளையாடியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த ஆட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்று நாம் கேட்கவும் இல்லை. இந்திய-இலங்கை அணியின் கிரிக்கெட் விளையாட்டைத் தமிழ்நாட்டிலுள்ள தொலைக்காட்சிச் சேனல்கள் ஒளிபரப்பக்கூடாது என்று தடை விதிக்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதிகள், திரைப்பட நட்சத்திரங்கள் டி.எம். கிருஷ்ணா உள்ளிட்ட கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் இலங்கைக்குச் சென்று வந்ததை யாரும் தவறாகக் கருதவில்லை.

அப்படியிருக்கும்போது, இத்தகைய தேவையற்ற எதிர்வினைகளால் நாம் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் ஒருசேரத் துன்பத்தைக் கூட்டிக்கொண்டிருக்கிறோம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்க வேண்டாம் என்று கேட்கிறோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே பயிற்சி அளிக்கக் கூடாது என்கிறோம். இதனால் நாம் பெறும் பயன் என்ன? ஒன்றுமில்லை. தமிழக மீனவர்களைத் தாக்கத்தான் இந்தப் பயிற்சி பயன்படும் என்று இங்குள்ள சில சிறிய அமைப்புகள் சொல்கின்றன. நாம் வேண்டாம் என்று சொன்னால், இலங்கை ராணுவ வீரர்கள், பெய்ஜீங் போவார்கள். இந்தியர்களைத் தாக்க மிகச் சிறப்பான பயிற்சியை சீனா வழங்கும். தமிழர்களை வெறியுடன் இலங்கை ராணுவம் தாக்கும். பரவாயில்லையா? இதுதான் நமது ராஜதந்திரமா? இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு, பிறகு அவர்களுடன் எப்படி பேச்சு நடத்துவது? ராஜீய உறவுகளுக்கு என்ன அர்த்தம்?

இலங்கைக் கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை மீட்டுவர, விடுவித்துவர வேண்டுமானால் இலங்கையில் உள்ள இந்தியத் தூதர்தான் போய் நின்றாக வேண்டும். ஒரு ராணுவப் பயிற்சிக்கான ராஜிய உறவுகளைக் கூட சகித்துக்கொள்ள முடியாவிட்டால், இலங்கைவாழ் தமிழர்களின் பிரச்னைக்கும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்கும் எவ்வாறு தீர்வு காண்பது? இலங்கையுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்துக்கொள்வது என்பது சாத்தியமே இல்லை. எல்லையில் சுரங்கப்பாதை அமைத்தும், கடல் வழியாக தீவிரவாதிகளை நமது எல்லைக்குள் நுழைத்தும், இணையத்தின் வழியாகப் பீதியையும் கிளப்பும் பாகிஸ்தானிடம்கூட இந்தியா நட்புடன்தான் இருந்தாக வேண்டும். அருணாசலப் பிரதேசம் எங்களுக்குத்தான் சொந்தம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் சீனாவுடன் இந்தியா அடுத்த ஆண்டு கூட்டு ராணுவப் பயிற்சி நடத்தவுள்ளது. ராஜீய உறவுகளைத் தக்கவைக்க இதைச் செய்தாக வேண்டியுள்ளது. அதே நிலைமைதான் இலங்கை அரசுடனான இந்திய அரசின் உறவும். இவை ராஜீய உறவுகள். இதை உணர்வுபூர்வமாகப் பார்ப்பது தவறு.

ராஜபட்ச குடும்பத்தினர் திருப்பதி கோயிலுக்கு வந்தால், அவர்களை அனுமதித்த ஆந்திர அரசு மீது நாம் ஆத்திரப்படவா முடியும்? ராஜபட்ச உறவுகள் இங்கே ராமநாதபுரம் வந்தாலும் பாதுகாப்புடன் தரிசனம் செய்ய அனுமதிப்பதுதானே பண்பாடு. அதுதானே ராஜிய உறவுகளை மேம்படுத்தும் வழிமுறை. ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு என்பது ஒருபுறம் இருக்கட்டும். திருச்சி, கலைக்காவிரி கல்லூரியில் நடனத்துக்காக வந்த இலங்கை மாணவர்களைத் திரும்பிப் போ என்று ஓர் அமைப்பு குரல் கொடுக்கிறது. பூண்டி மாதாக்கோவில் விழாவுக்கு வந்த சிங்களர்கள் வெளியேற வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்கிறது. அப்படியானால் இலங்கைத் தமிழரைத் தவிர வேறு யாரும் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரக்கூடாதா? பயிற்சிக்காக இலங்கை மருத்துவர்கள் இங்கே வரக்கூடாது. சிகிச்சைக்காக சிங்களத்தவர் வரக்கூடாது. படிப்புக்காக மாணவர்கள் வரக்கூடாது. விளையாட வரக்கூடாது. சாமி கும்பிட வரக்கூடாது. புத்தகயாவில் சிங்களவர் நுழையத் தடை விதிக்க வேண்டும். ஆனால், ஈழத்தமிழர்களின் வாழ்வைக் குலைத்த ராஜபட்சயும் அவரது குடும்பத்தினரும் சிங்கள அதிகாரிகளும் பாதுகாப்புடன் வந்து செல்லலாம், அப்படித்தானே?

முன்பாகிலும் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கவும், எதிர்த்துப் போராடவும் வலுவாக இருந்தது. இப்போது ஒரு வெற்றிடம் நிலவுகிறது. நாம் திருப்பி அனுப்பினால் அவர்கள் திருப்பி அடிப்பார்கள். அடிவாங்கப் போவது இங்கே ஆர்ப்பாட்டம் நடத்தும் சிறு அமைப்புகளோ அல்லது அரசியல் தலைவர்களோ அல்ல சாதாரண இலங்கைத் தமிழனும், தமிழக மீனவனும்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. இங்கு வரும் இலங்கைவாழ் அனைவரையும் துன்புறுத்துவோம்...ஆனால் அங்கிருக்கற என் இனமக்கள் எதையும் செய்ய கூடாது நியாயம் தானே? சர்வதேச அரசியலில் உணர்ச்சிக்கு இடமில்லை. நிதானமாகச் செயல்பட்டு நமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். ராஜபட்சக்குத் தெரிந்திருக்கும் இந்த உண்மை நமக்குத் தெரியாமல் இருப்பது ஏன்? இன்றைய தேவை, நிதானம்.... நிதானம், பண்பு, மனிதாபிமானம் மட்டுமே. ஆத்திரமும், அவசரமும், அரசியலும் அல்ல....தயவு செய்து சிந்தித்து பாருங்கள்