'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, September 07, 2015
அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 2
எந்த குறியீடும் இல்லாத அரபு மெய் எழுத்துக்களை மேலே முதல் படத்தில் பார்க்கிறோம். இதோடு உயிர்க் குறிகள் மூன்றை சேர்த்தால் என்ன நிகழ்கிறது என்பதை இனி பார்போம்.
அரபு மொழியில் குறில் உயிர்க் குறிகள் மூன்று வகைப்படும். அவையாவன
1. ஃபதஹ
2. கஸ்ர
3. தம்மஹ்
அரபு எழுத்துக்களின் மேல் குறுக்காக ஒரு கோடு படத்தில் உள்ளது போல் இட்டால் அதனை ஃபதஹ என்கிறோம்.
அதனை படம் இரண்டு நமக்கு விளக்குகிறது. அவை முறையே அ, ப, த, த, ஜ, ஹ, த, ர, ஜ, ஸ, ல, த, ல, அ, க, ஃப, க, ல, ம, ந, ஹ, வ, ய என்ற உச்சரிப்புகளைப் பெறும்.
ப் + அ = ப
த் + அ = த
ம் + அ = ம
இப்போது இந்த வார்த்தைகள் எவ்வாறு உரு மாறுகிறது என்பதை விளங்கியிருப்பீர்கள். அதாவது தமிழில் மெய் எழுத்தும் உயிர் எழுத்தும் இணைந்து எவ்வாறு உயிர் மெய் எழுத்தாக மாறுகிறதோ அதே அடிப்படையில் இங்கும் இரண்டு எழுத்துக்கள் சங்கமித்து ஒன்றாகின்றன. குர்ஆனை ஓதுவதற்கு இந்த உயிர்க் குறிகள் முக்கியமானது. ஆனால் கடிதம் எழுதும் போதோ பத்திரிக்கைகளை படிக்கும் போதோ இந்த குறிகள் எழுதப்படாது. வாக்கியத்தின் அமைப்பை வைத்து அங்கு என்ன குறி இடப்பட்டிருக்கிறது என்பதை நாமாகவே விளங்கிக் கொள்வோம். பாடங்களை தொடர்ந்து படித்து வந்தால் போகப் போக உங்களுக்கே இது புரிய ஆரம்பிக்கும்.
படம் இரண்டில் உள்ள எழுத்துக்களை தினமும் எழுதி பழகுங்கள். 10 முறை படிப்பதும் ஒரு முறை எழுதுவதும் ஒன்றுதான். அந்த அளவு எழுதும் போது எழுத்துக்கள் மனதில் பதியும். இன்று இது போதும். நாளை இறைவன் நாடினால் மேலும் தொடர்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment